தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்துவரும் நடவடிக்கைகள், கட்சியில் நீண்ட நாட்களாக பல மாவட்டங்களில் இருந்துவந்த தீராத தலைவலியைக் குணப்படுத்தி வருகிறது. சில மாவட் டங்களிலோ தலைவலி போய் திருகு வலி வந்த கதையாகவும் இருக்கிறது. அப்படி திருகுவலி வந்த மாவட்டம்தான் கிருஷ்ணகிரி. இம்மாவட்ட தி.மு.க.வின் மா.செ.வாக இருப்பவர் தளி தொகுதியின் எம்.எல்.ஏ.வான ஒய்.பிரகாஷ்.

hosur-dmk

அறிவாலயத்தில் நடந்த களஆய்வுக் கூட்டத்தின்போது, மா.செ.பிரகாஷ் மீது சரமாரியாக புகார்களை எழுதி, புகார்ப் பெட்டியில் போட்டனர். ரகசியம் காக்கப்படும் என புகார்ப் பெட்டி குறித்து ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியையும் மீறி, பிரகாஷ் மீதான புகார்கள் பிரகாஷ் கைகளுக்கே போய்ச் சேர்ந்தன என்கிறார்கள் மாவட்ட உ.பி.க்கள். அதன்பின் தனது அதிரடி வேலை யைக் காட்டத் தொடங்கினார் பிரகாஷ்.

ஓசூர் நகரச் செயலாளராக இருந்த மாதேஸ்வரனுக்கு கல்தா கொடுத்துவிட்டு, மா.செ. பிரகாஷின் பரிந்துரையின் பேரில் சத்யா என்பவரை ந.செ.வாக்கியிருக்கிறார் ஸ்டாலின். இது குறித்து விவரமாக சொல்லத் தொடங்கினர் உடன்பிறப்புகள்.

Advertisment

""இப்ப ந.செ.வாகியிருக்கும் சத்யா ஏ.டி.எம்.கே.வுல இருந்தபோது ஜெய லலிதாவால் நீக்கப்பட்டு எங்க கட்சிக்கு வந்தவரு. 302 செக்ஷன்ல கேஸ் இருக்குற அளவுக்கு சர்ச்சைக்குரிய ஆளு இவரு. இன்னும் பல வழக்குகளும் இருக்கு. போன எலெக்ஷன்ல ஓசூர் தொகுதியில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் போட்டியிட்டபோது, சுயேட்சையா நின்னதால தலைமையால கட்டம் கட் டப்பட்டவரு. தலைமையின் குடும்பம் ஒன் றின் மூலம் மீண்டும் கட்சிக்குள் என்ட்ரியாகி இப்ப மறு படியும் நகரச் செயலாளர் ஆகியிருக்காருன்னா என்னத்த சொல்றது?'' என்கிறார்கள்.

மற்றொரு உ.பி.யோ, ""ஓசூர்ங்கிறது தமிழ்நாடு- கர்நாடகா பார்டர். அப்படி யிருந்தும்“காவிரிப் பிரச்சினை உட்பட எந்தப் பிரச்சினைக் காவும் கட்சி அறிவிக்கும் போராட்டங்களை எழுச்சி யுடன் நடத்திக் காட்டியவர் மாதேஸ்வரன். இதுக்காக தனது கைக்காசை ஏராளமாக செலவிட்டவர். களஆய்வுக் கூட்டத்தின் போது, மாதேஸ் மீது யாருமே புகார் சொல்லாத நிலையில்... அவரை நகரச் செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றியதில் ஷாக்தான். எங்க மா.செ. லேசுப்பட்ட ஆளில்லை.

2011 சட்டமன்றத் தேர்தலில், கட்சியின் விதிமுறையை மீறி கூட்டணிக் கட்சியை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டதால தலைமையால் நீக்கப்பட்டவருதான். இந்த மாதிரி நிலைமை மற்ற மாவட்டங்களுக்குப் பரவாமல் தடுக்கவேண்டியது தளபதியோட கையில தாங்க இருக்கு''’என்கிறார், கட்சி மீதான அக்கறையுடன்.

Advertisment

-கிஷோர் & பரமேஷ்