ஹலோ தலைவரே, கடந்த 14-ந் தேதி அ.தி. மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி டென்ஷனாகவும் கோபமாகவும் இருந்தாராம்?''
""ஏன்? என்ன காரணம்?''
""அ.தி.மு.க.வின் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மா.செ.க்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ்., ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 75 உறுப்பினர்கள் இருக்கணும்னு சொல்லியிருந்தும், பல இடங்களில் வெறும் 25 நபர்களை மட்டும் காட்டுறீங்கன்னு நிர்வாகிகளிடம் குரலை உயர்த்தினாரு. எடப்பாடியும் நிர்வாகிகள்கிட்ட, 15 நாட்கள் டைம் தர்றோம். ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 75 உறுப்பினர்களை நியமிச்சாகனும் என்று கறார்க் குரலில் சொல்லியிருக்கார். அப்போது ஓ.பி.எஸ், அதில் 25 பேர் பெண்களாக இருக்கனும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருக்காரு.''
""இது எல்லா தேர்தலின்போதும் நடப்பதுதானே, இதற்காக ஏன் எடப்பாடி ரொம்ப கோபப்படணும்?''
""உள்ளுக்குள்ளே அவருக்கு நிறைய சந்தேகம் இருக்குதாம். அதனாலதான் அவர் பேசுறப்ப, நிறைய பேரிடம் அசட்டை தெரியுது. ஒன்றை நீங்கள் எல்லோரும் புரிஞ்சிக்கனும். வரப்போகும் தேர்தல் தி.மு.க.வுக்கு மட்டுமல்ல, நமக்கும் இது வாழ்வா சாவா போராட் டம்தான். மறந்துடாதீங்க. ஆட்சியை தக்க வைக்கலைன்னா நம் எதிர்காலம் சூனியமாயிடும். தலைமை யாருக்கு சீட் கொடுத் தாலும், அவங்களை ஜெயிக்க வைக்க, அர்ப்பணிப்போட வேலை செய்யுங்க. ஆட்சிக்கு வரலைன்னா, எல்லோருக்கும் சிக்கல்தான்னு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.''’
""எதற்காக சந்தேகத்துடனான இந்த எச்சரிக்கை?''
""அ.தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களில் 10-க்கும் மேற்பட்டோர், ரஜினியின் புதுக்கட்சியில் சேரும் மூடில் இருக்காங்கன்னு உளவுத்துறை கொடுத்திருக்கும் ரிப்போர்ட்டில் வெடிகுண்டு இருந்திருக்குது. இது எடப்பாடியை ரொம்ப அப்செட் பண்ணிடிச்சி. சித்தா மருத்துவக் கல்லூரி ஒன்றில் சீட் வேணும்னு, எடப்பாடியின் உறவினர் ஒருவர், துறை அமைச்சரான விஜயபாஸ்க ரிடம் போயிருக்கார். அவர் தரப்பினர் 5 "எல்'லை மொய்யா எழுதினாத்தான் சீட் உண்டுன்னு சொல்லியிருக்காங்க.''’
""அட… எடப்பாடியின் உறவினர்னு சொல்லியுமா இப்படி?''
""இது மட்டும் இல்லீங்க தலைவரே, ச

""இது மட்டும் இல்லீங்க தலைவரே, சி.எம். பெயரைச் சொல்லியும் மந்திரி தரப்பிடமிருந்து அவமரியாதையான வார்த்தை கள்தான் வந்திச்சாம். அதிர்ச்சியான அந்த உறவினர், எடப்பாடியிடம் நடந்ததை எல்லாம் அப்படியே சொல்ல, அதைக்கேட்டுப் பல்லைக் கடித்த எடப்பாடியின் பல்ஸ் ரேட், தாறுமாறா உயர்ந்துடுச்சாம். அதோடு, அமைச்சர் விஜயபாஸ்கர், வழக்கமான விராலிமலைக்குப் பதில், புதுக்கோட்டையில் போட்டியிட்டால் எப்படி இருக்கும்னு சர்வே எடுக்கச் சொல்லி, ரிசல்ட் சரியா இல்லாததால் விராலிமலையிலேயே மறுபடியும் நிற்க முடிவு பண்ணி, வேறு யாரும் சீட் கேட்காதபடி காய் நகர்த்திட்டாராம். இப்படியான பவர் சென்டர்கள் உருவாவதை விரும்பாத எடப்பாடி ரொம்ப அப்செட்.''
""அவருக்கு நம்பிக்கையான மணியான மந்திரிகள் இருக்காங்களே?''
""அந்த நம்பிக்கையும் தகர்ந்துக்கிட்டிருக்குதாம். சென்னைக்கு வந்த அமித்ஷாவை, ரொம்பவும் சீக்ரெட்டா அமைச்சர் வேலுமணி சந்திச்சதா ஒரு தகவல் எடப்பாடிக்கு லேட்டா தெரியவந்திருக்கு. தஞ்சையைச் சேர்ந்த ஒரு மொழிபெயர்ப்பாளரும் வேலுமணிகூட இருந்தாராம். அறப்போர் இயக்கம் தன்மீது தொடுத்திருக்கும் வழக்குச் சிக்கலை சரி பண்ணித் தரணும்னு அமித்ஷாகிட்ட வேலுமணி சொல்ல, எரிச்சலான அமித்ஷா, "என்ன மிஸ்டர், அந்த வழக்கு என் பாக்கெட்டிலா இருக்கு'ன்னு கேட்டதோடு, உள்ளாட்சித் துறை தொடர்பா வேலுமணி மேலே உள்ள புகார்களை எல்லாம் அமித்ஷா அடுக்கினாராம். அதைகேட்டு, வேலுமணியோடு போன டிரான்ஸ்லேட்டரே நடுங்கிப்போயிட்டாராம். இந்த சந்திப்பு விவகாரமும் எடப்பாடியை சூடாக்கியிருக்கு. இது சம்பந்தமா டெல்லியில் இருந்தும் ஒரு ஷாக் தகவல் எடப்பாடிக்கு வந்திருக்கு.''
""என்ன செய்தி?''
""அ.தி.மு.க அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஸ்ட்ராங்கா இருக்குன்னும், விரைவில் நடவடிக்கை இருக்குன்னும் சொல்லப்பட்டி ருக்கு. தேர்தல் நேரத்தில் இப்படி நடந்தால், அது கட்சிக்கு பெரிய நெருக்கடியாயிடும்னு எடப்பாடி அப்செட்டாயிட்டாராம். சில அமைச்சர்களுக்கு மறுபடியும் சீட் கொடுப்பதான்னுகூட யோசிக்கிறாராம். அதோடு, ஜெயிலிலிருந்து ரிலீஸாகப் போகும் சசிகலாவை அ.தி.முக.வில் சேர்த்துக்கொள்ள வேண்டும்னு டெல்லி சொல்வதும் எடப்பாடியைக் கடுப்பேத்தி இருக்கிறதாம். இப்படி பல்வேறு சங்கடத்தில் எடப்பாடி இருக்கும் நிலையில், தே.மு.தி.க. சார்பில் பேச்சு வார்த்தைக்கு வந்த சுதீஷ், தங்கள் கட்சிக்கு 41 சீட் கேட்க, 15 சீட் மட்டும்தான் தரமுடியும். விருப்பம் இருந்தா கூட்டணியில் இருங்கன்னு சொல்லி, அவரைத் திருப்பி அனுப்பிவிட்டாராம் எடப்பாடி.''
""எடப்பாடி அப்செட்டில் இருப்பது இருக்கட்டும். அவரால் தமிழக டி.ஜி.பி. சங்கடத்தில் தவிக்கிறாராமே?''
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, காவல்துறை தலை வரான டி.ஜிபி. திரிபாதி, துறை சார்ந்த டிரான்ஸ்பர் லிஸ்ட்டுக்கு ஓகே வாங்க, முதல்வர் எடப்பாடியைச் சந்திச்சிருக்கார். எடப் பாடியோ, இதையெல்லாம் அவருக்குக் கீழ் இருக்கும் சிறப்பு டி.ஜி.பி.யான ராஜேஸ்தாஸிடம் காட்டி ஓ.கே வாங்கும்படி சொல்லிவிட்டாராம். இதனால் ஷாக்கான திரிபாதி, மனதைத் தேற்றிக்கொண்டு ராஜேஸ்தாஸைத் தொடர்புகொள்ள, "கொஞ் சம் வெயிட் பண்ணுங்க. கூப்பிடறேன்'னு அவரைக் காக்க வச்சி, அப்புறம்தான் சந்திச்சாராம். வி.ஆர்.எஸ்.சில் கிளம்பிவிடலாமாங் கிற அளவுக்கு திரிபாதி யோசிக்கிறாராம். அதேபோல் டி.ஜி.பி. பதவிக்காகக் காத்திருந்த தீயணைப்புத் துறையின் கூடுதல் டி.ஜி.பி. யான ஜாபர்சேட், அந்த ஆசை நிறைவேறாமலேயே, டிசம்பர் இறுதியில் ஓய்வுபெற இருக்கிறார். அவரும் இப்ப விடுப்பில் சென்றுவிட்டாராம். இது காவல்துறை வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்படுது.''
""தேர்தல் ஆணையம்மீது கமல் கடுப்பாகியிருக்கிறாராமே?''
""உண்மைதாங்க தலைவரே, கமலின் மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்தில் டார்ச் லைட் சின்னத்தைக் கேட்டுக்கொண் டிருந்தது. ஆனால் அ.ம.மு.க.வுக்கு குக்கரும், நா.த.க.வுக்கு உழவனும், சின்னச் சின்ன கட்சிகளுக்குகூட கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டி ருக்கும் நிலையில், கமல் கேட்ட டார்ச் லைட் சின்னத்தை, எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி என்ற கட்சிக்கு பொதுச் சின்னமாக ஒதுக்கிவிட் டது ஆணையம். இதுகுறித்து முன்னாள் தேர்தல் ஆணையர்கள் சிலரிடம் விவாதித்துள்ள கமல், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்குப் போடலாமா என்ற ஆலோசனையில் இறங்கியிருக்கிறாராம்.''
""ம்...''
""அ.ம.முக.வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதும் பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கு. சசிகலாவை அ.தி.மு.கவில் சேர்க்கணும்ங்கிறதுதான் அமித்ஷா ப்ளான். அப்புறம் எதுக்கு, தேர்தல் ஆணையம் அ.ம.மு.க.வுக்கு தனி சின்னம் ஒதுக்கியிருக்கு? தினகரன் தனி ரூட்டில் போறாரா, அல்லது டெல்லி வேற ப்ளான் பண்ணுதான்னு குழம்புறாங்க.''
""தேர்தல் ஆணையத்திடம் ஆட்டோ சின்னத்தைப் பெற்றி ருக்கும் மக்கள் சேவைக் கட்சியை, ரஜினி தத்தெடுத்துக்கொள்ளப் போகிறார்னு பரபரப்பா செய்திகள் அடிபட, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகமோ வெயிட் பண்ணுங்கன்னு ரசிகர்களுக்கு சொல்லியிருக்குதே?''
""1996-தேர்தலின் போது கடைசி நேரத்தில் காங்கிரசிலிருந்து வெளியேறி, த.மா.கா.வை உருவாக்கிய மூப்பனார், 48 மணி நேரத்தில் கட்சியைப் பதிவு செய்து, சைக்கிள் சின்னத்தையும் வாங்கினார். இதற்கு சட்ட ரீதியாக உழைத்தவர் ப.சிதம்பரம். அவருக்கு உறுதுணையாக இருந்து கட்சியை பதிவு செய்து கொடுத்தது அப்போதைய தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன். ஆனால், அப்படிப் பட்ட சூழல் இப்போது இல்லை.''
""தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சியைப் பதிவு செய்யவே, 6 மாத காலம் ஆகிறது. கட்சியின் தலைமை யகம் செயல்படும் இடம், கட்சியின் சட்ட திட்டம், கட்சிக்காகத் தாக்கல் செய்யப்படும் 100 பேரின் பிரமாண பத்திரங்கள் உள்ளிட்டவைகளை சரிபார்க்கத்தான் இவ்வளவு காலம் ஆகிறது. இதனால் தேர்தலுக்கு முன்பாக தனது கட்சியைப் பதிவு செய்வதற்கு போதுமான நேரம் ரஜினிக்கு இல்லை. அதனால்தான் மக்கள் சேவைக் கட்சியை ரஜினி தத்து எடுக்கப்போகிறார்ன்னு டாக் அடிபடுது.''
""அது யாருடைய கட்சி? விபரமாச் சொல்லுப்பா?''
""தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற தலைவர் ஸ்டாலின் என்பவர் பதிவு செய்து வைத்திருக்கும் கட்சி அது. ஏற்கனவே தனது கட்சியில் அகில இந்திய என்கிற வார்த்தைகளை இணைத்தே பதிவு செய்திருந்த அவர் கடந்த செப்டம்பரில், அதனை மக்கள் சேவை கட்சின்னு மாற்றியிருக்கிறார். அந்த கட்சிக்கு எர்ணாவூர் முகவரி கொடுக்கப்பட்டிருக்கு, அந்த இடம் இப்போது வீட்டு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறதாம். ஸ்டாலின் மீது சில வழக்குகள் பெண்டிங்கில் இருப்பதை உளவுத்துறை சேகரித்திருக்கிறதாம். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நண்பர்களோடு இணைந்து நாக்பூரில் சில பிஸ்னெஸ்களையும் இவர் நடத்தி வருகிறாராம். தனது பிஸ்னெஸ்சில் இருக்கும் ஊழியர்கள் பலரையும் பிரமாணபத்திரம் கொடுக்க வைத்திருக்கிறார்.''
""இந்தக் கட்சியைத் தனது கட்சியாக ரஜினி அறிவிக்க முடியுமா?''
""சரியான கேள்விங்க தலைவரே, இந்த கட்சியை ரஜினி எடுப்பதாக இருந்தால், அதில் அவர் உறுப்பினராக சேர வேண்டும். அதன்பிறகு அக்கட்சியின் பொதுக்குழு வைக் கூட்டி, கட்சியின் பொதுச் செயலாளராகவோ, தலைவ ராகவோ அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்புறம் தான், அந்த கட்சி ரஜினிக்கு உரியதாக மாறும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் நடப்பதற்கான அறிகுறிகள் எது வும் இதுவரை தென்படவில்லை. ரஜினியின் கட்சி தொடங்கு றதுக்கு முன்னாடி இத்தனை சிக்கல்களான்னு ரசிகர்களும் மன்றத்தினரும் கவலைப்படறாங்க. ஆனால் ரஜினியோ இது பற்றியெல்லாம் கவலைப்படாமல், தன்னோட ஸ்டைலில், "அண்ணாத்தே' பட ஷூட்டிங் கிற்குக் கிளம்பி போய்விட்டார்’’
""ஷூட்டிங் எப்படி போகு தாம்?''
""ஷூட்டிங்கையொட்டி ஹைதராபாத்துக்கு சென்னையிலிருந்து தனியார் விமானத்தில் ரஜினி புறப்பட்டுச் சென்றார். அப்போது விமானத்தில் அவரது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கிறார். இதன் வீடியோ பதிவுகள் ரகசியமாக பகிரப்பட்டு வருகின்றன. அந்த பதிவு மத்திய உள்துறையின் கவனத்துக்குப் போக, இப்படியொரு கொண்டாட்டத்தை எப்படி அனுமதிக்கலாம்னு விமான போக்குவரத்துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறதாம். விமான போக்குவரத்து துறையோ, சம்மந்தப்பட்ட தனியார் விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி யிருப்பதாகத் தகவல்.''
""நானும் ஒரு முக்கிய தகவலைச் சொல்றேன். உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் பி.ஏ.க்களில் ஒருவரான வினோத் குமார், தனியார் கல்லூரி நிறுவனங்களிடம் பேரம் பேசுவதாகவும், கல்லூரிகளில் வலுக்கட்டாயமாக சீட்டுக்களை வாங்கி லாபம் பார்ப்பதாகவும் முதல்வர் அலுவலகத்துக்குப் புகார்கள் போய்க்கொண்டிருக்கிறது.''’’