Advertisment

மா.செ. பதவி?  ஏக்கத்தில் மகளிரணி நிர்வாகிகள்

Kani DS

Kani D S

அரசியல், ஆண்களுக்கான களமாகவே வைக்கப்பட்டுள்ளது. கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு சமபங்கு இல்லையென்றாலும் ஓரளவாவுது தந்து உயர்த்தவேண்டும் என்கிற கோரிக்கை அரசியல் கட்சிகளில் எழத்துவங்கியுள்ளது. ஆளும்கட்சியான தி.மு.க.வில் அந்த குரல் அதிகமாகவே கேட்கிறது.

Advertisment

தி.மு.க.வில் 72 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். தற்போது இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ. நியமிக்கலாமா என ஆலோசனை நடத்திவருகிறது தி.மு.க. தலைமை. புதிதாக மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படும்போது எங்கள் மகளிரணியில் இருந்தோ அல்லது கட்சியின் மற்ற பிரிவுகளில் இருந்து திறமையான, தகுதியான பெண் நிர்வாகிகளை தேர்வுசெய்து மா.செ.வாக நியமித்தால் சிறப்பாக இருக்கும் என கோரிக்கை வைக்கின்றனர் தி.மு.க. மகளிர்.

Advertisment

இதுகுறித்து நம்மிடம் பேசிய புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க. பெண் நிர்வாகிகள், ""தலைவர் கலைஞர் பெண்களுக்கான இடஒதுக்கீடு, சொத்தில் பங்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, சட்டமன்ற, பாராளுமன்ற, உள்ளாட்சி பதவிகளில்

Kani D S

அரசியல், ஆண்களுக்கான களமாகவே வைக்கப்பட்டுள்ளது. கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு சமபங்கு இல்லையென்றாலும் ஓரளவாவுது தந்து உயர்த்தவேண்டும் என்கிற கோரிக்கை அரசியல் கட்சிகளில் எழத்துவங்கியுள்ளது. ஆளும்கட்சியான தி.மு.க.வில் அந்த குரல் அதிகமாகவே கேட்கிறது.

Advertisment

தி.மு.க.வில் 72 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். தற்போது இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ. நியமிக்கலாமா என ஆலோசனை நடத்திவருகிறது தி.மு.க. தலைமை. புதிதாக மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படும்போது எங்கள் மகளிரணியில் இருந்தோ அல்லது கட்சியின் மற்ற பிரிவுகளில் இருந்து திறமையான, தகுதியான பெண் நிர்வாகிகளை தேர்வுசெய்து மா.செ.வாக நியமித்தால் சிறப்பாக இருக்கும் என கோரிக்கை வைக்கின்றனர் தி.மு.க. மகளிர்.

Advertisment

இதுகுறித்து நம்மிடம் பேசிய புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க. பெண் நிர்வாகிகள், ""தலைவர் கலைஞர் பெண்களுக்கான இடஒதுக்கீடு, சொத்தில் பங்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, சட்டமன்ற, பாராளுமன்ற, உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு போதிய இடம் வழங்கி கௌரவமாக வைத்திருந்தார். அதுபோல் கட்சியிலும் பதவியும் வழங்கினார். 1990-களில் முதன்முதலாக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மனைவி விஜயலட்சுமியை கோவை மாவட்டச் செயலாளராக நியமித்தார் கலைஞர். அதற்கடுத்ததாக 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் கரூர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு வாசுகி முருகேசன் போட்டியிட்டு தேர்வானார். "ஒரு பொம்பள என்ன பெருசா கட்சி நடத்திடும் என ஏளனம் செய்தவர்கள் முகத்தில் கரியைப் பூசினாங்க வாசுகி. யாருமே எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சிகளை லெப்ட் ஹேண்டில் டீல் செய்து மாவட்டத்தில் கட்சியை வளர்த்தார். 10 ஆண்டுகள் மா.செ.வாக இருந்தவர் பதவியில் இருக்கும்போதே 2009-ல் விபத்தில் இறந்துவிட்டார்.

கட்சியில் கழக நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டபோது கள்ளக்குறிச்சி தெற்கு மா.செ.வாக முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, திருப்பத்தூர் மா.செவாக வழக்கறிஞர் முத்தமிழ்செல்வி போன்றோர் மா.செ.வாக்கப்பட்டனர். 2017-ல் தூத்துக்குடி மா.செவாக இருந்த முரட்டு பக்தர் பெரியசாமி மறைவால் அவரது மகள் கீதாஜீவனை வடக்கு மா.செ.வாக நியமித்தார் கலைஞர். ஆளும்கட்சியாக அ.தி.மு.க. வந்த நிலையில்... அ.தி.மு.க.வினரை எதிர்த்து கட்சிப்பணி செய்தனர். அதன்பின் சில காரணங்களைக் கூறி கள்ளக்குறிச்சி அங்கயற்கண்ணி, திருப்பத்தூர் முத்தமிழ்ச்செல்வியை பதவியிலிருந்து எடுத்தனர். எல்லா கட்சியிலும் ஒருவரை பதவியிலிருந்து நீக்கும்போது, அதே சாதி, அதே மதப்பின்னணி கொண்டவரை நியமனம் செய்வர்கள். பெண்களை மா.செ.வாக இருந்து நீக்கினால் மற்றொரு பெண்ணுக்கு இங்கு வாய்ப்பு வழங்குவதில்லை. அந்த இடத்தில் ஆண்களையே மா.செ.வாக்குகின்றனர். தற்போது 72 மா.செ.களில் அமைச்சர் கீதாஜீவன் மட்டுமே மா.செ.வாக உள்ளார்.

ஒவ்வொரு தேர்தலிலும் கட்சியிலும் பெண் நிர்வாகிகளான எங்களின் பங்கு அதிகமாவே உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பணியில் சரியாக செயல்படாத மா.செ.க்கள் மாற்றம் செய்யவும், கட்சியை வலுப்படுத்த இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மா.செ. நியமிக்கவும் தலைவர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அப்படி மா.செ.க்களை அதிகப்படுத்தும்போது பெண்களை கூடுதலாக மா.செ.வாக்குவார் என்ற நம்பிக்கையுள்ளது. தற்போதுள்ள 72 மாவட்டங்களை நூறாக்கும்போது பெண்களுக்கான 30 சதவித இடஒதுக்கீடு கடைப்பிடித்தால்கூட 30 பெண் மா.செ.க்களை நியமிக்கவேண்டும். அவ்வளவுகூட வேண்டாம், குறைந்தது பத்து பெண்களையாவது நியமிக்கவேண்டும். கட்சியில் ஒ.செ.வாக, மகளிர் இருக்கிறார்கள், திறமையாகச் செயல்படுகிறார்கள், கட்சி நிர்வாகிகள் அவர்களுக்கு ஒத்துழைத்து பணியாற்றுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் ஒ.செ.வாக உள்ள ஒன்றியத்தில் அதிக வாக்குகளை வாங்கித் தந்துள்ளார்கள். மா.செ. பதவி தந்தாலும் திறமையாகப் பணியாற்றுவார்கள், எதிர்வரும் தேர்தல்களில் கூடுதல் வெற்றியை காணமுடியும்.

பெண் விடுதலை, பெண்களுக்கு சொத்தில் சமபங்கு, சமூகநீதியை நிலைநாட்டிய தலைவர் கலைஞர் வழியில் கட்சித் தலைவர் தளபதியும், புதிய மா.செ. பதவியை மாநிலம் முழுவதுமுள்ள பெண் நிர்வாகிகளுக்கு வழங்குவார் என்ற நம்பிக்கையில் உள்ளோம். துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான கனிமொழி அக்கா எங்களுக்காக தலைவரிடம் பேசுவார் என்ற நம்பிக்கையுள்ளது''’என்கின்றனர்.

அ.தி.மு.க.வில் தற்போது 82 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். அதில் திருவண்ணாமலை மத்திய மா.செ.வாக முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதா உள்ளார். அ.தி.மு.க. வரலாற்றில் முதல் மா.செ. இவர் என்பது குறிப்பிடதக்கது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக 25 ஆண்டுகள் ஜெயலலிதா இருந்தபோதும் அவர் ஒரு பெண் மா.செ.கூட நியமனம் செய்யவில்லை. பா.ம.க., வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளில் பெண் மா.செ.க்கள் இருந்துள்ளனர். தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளான தி.மு.க. -அ.தி.மு.க. போன்றவை பெண்களை மா.செ.வாக வைத்துக்கொள்வதில் தயக்கம் காட்டிவருகின்றன. அந்த தயக்கத்தை உடைத்து பெண் மா.செ. அதிகளவு நியமிக்கும்போது மற்ற கட்சிகளும் இன்னும் அதிகமாக நியமிக்கும். பெண்கள் அதிகாரத்துக்கு வரும்போது பெண்கள் மீதான வன்முறை குறையும், சாதாரண பெண்களுக்கும் நம்பிக்கை வரும்'' என்கிறார்கள்.

nkn220624
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe