றண்ட பூமியில் பெய்த கோடைமழை போல, ஆனைகுடிக் கிராமத்தை திக்குமுக்காட வைத்திருக்கிறார் தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி.

Advertisment

நெல்லை மாவட்டத்தின் தென்கோடியில், உவரிக்கும் திசையன்விளைக்கும் கொஞ்சம் தொலைவில், நாதியற்றுக் கிடக்கும் ஓர் ஊர் ஆனைகுடி. ஆயிரத்தி அறுநூறு மக்களைக் கொண்ட, அடிப்படை வசதிகளற்ற ஒரு கிராமம்.

இந்த ஊரில் பிறந்து, சென்னையில் செட்டிலான வீனஸ் வீர அரசு என்பவர், தன் ஊர் மக்களுக்கு சில நலத்திட்ட உதவிகளைச் செய்ய விரும்பினார். இந்த உதவிகளை தன் கரங்களால் வழங்குவதற்காக கனிமொழியை அழைத்தார்.

kanimozhli

Advertisment

""ஆனைகுடி ஒரு பட்டிக்காடு. அங்கெல்லாம் சென்று உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்'' என முட்டுக்கட்டை போட்டுப் பார்த்தார் தி.மு.க. மா.செ. ஆவுடையப்பன். கேட்கவில்லை கனிமொழி. உடனே, ஆனைகுடிக்கு அருகிலுள்ள பொட்டைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க. உறுப்பினர் முருகன் என்பவரை அழைத்து, ""தலைவர் மகள் கனிமொழி வருகிறார். அவரை வைத்து உன் பொட்டைக்குளத்தில் தி.மு.க. கொடியேற்று; விழாவை நடத்து, ஆனைகுடி மக்கள் அங்கே வந்து உதவிகளைப் பெறட்டும்'' என்று தூண்டிவிட்டார்.

இதைக் கேள்விப்பட்ட ஒன்றியச் செயலாளர் கேசவன், மா.செ. ஆவுடையப்பனிடம் ""வீனஸ் வீர அரசு நம் கட்சிக்காரர்தான். போன மாதம் கனிமொழி வருகிறார் என்று நிறைய செலவு செய்தார். கனிமொழி நிகழ்ச்சி ரத்தாகிவிட்டது. இரண்டாவது முறையாக எக்கச்சக்கம் தன் கைக்காசை செலவு செய்து ஏற்பாடுகளை செய்திருக்கிறார். உங்கள் பெயரையும் நிர்வாகிகள் பெயர்களையும்கூட போட்டு போஸ்டரெல்லாம் அச்சடித்திருக்கிறார். கனிமொழியை போகவிடாமல் செய்து வீனஸ் வீரஅரசுவை சங்கடப்படுத்தாதீர்கள். மீறி ஏதாவது நீங்கள் செய்தால் உங்களை மீறி நானே முன்னின்று அந்த விழாவை நடத்துவேன்'' என்று எச்சரித்தபிறகே முட்டுக்கட்டையை நீக்கியிருக்கிறார் மா.செ.

ஏப்ரல் முதல் தேதி ஆனைகுடிக்கு வந்தார் கனிமொழி.

ஆனைகுடிக்கு வந்த முதல் தலைவர் கனிமொழிதான். ஆனைகுடி மக்கள் அத்தனை பிரியங்களோடு அவரை வரவேற்றார்கள்.

Advertisment

வீனஸ் வீர அரசு, தன் அறக்கட்டளை சார்பாக வாங்கி வைத்திருந்த பொருட்கள் கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டன.

40 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, 500 தாய்மார்களுக்கு சேலைகள், 300 ஆண்களுக்கு வேட்டிகள் என உதவிகளை கனிவோடு வழங்கிய கனிமொழி ""உங்கள் கிராமத்தின் வறண்ட நிலை கண்டு நான் அதிர்ந்துவிட்டேன். இன்னும் ஆறு மாதத்தில் தி.மு.க. ஆட்சி ஏற்படும். இந்த ஆனைகுடி கிராமத்தின் அடிப்படை வசதிகள் பூர்த்தியாகும். அதற்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளையும் நானே முன்னின்று செய்வேன்'' அழுத்தமாகச் சொன்னார்.

கனிமொழி விடைபெற்ற பிறகு நம்மிடம் பேசிய பரிமளம் உள்ளிட்ட ஆனைகுடி பெண்கள், ""பக்கத்தில்தான் வெங்கடேசபுரம். அதைத் தத்தெடுத்து நிறையச் செஞ்சிருக்காங்க கனிமொழியம்மா. எங்க ஊருக்கும் கட்டாயம் செய்வாங்க'' நம்பிக்கையோடு சொன்னார்.