Advertisment

கோஷ்டி மோதல்! தர்ணா! கடலூர் தி.மு.க. களேபரம்!

ss

டந்த இரண்டாம் தேதி, கடலூர் மாநகர மேயர் திருமதி சுந்தரி ராஜா தலைமையில் மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் சுந்தரி பேசும்போது, "வரும் 15-ஆம் தேதி முதல் பள்ளி மாணவ, மாணவி களுக்கு சிற்றுண்டி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவி களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கிவைக்க உள்ளார். அனைத்து கவுன்சிலர் களும் அவரவர் வார்டு களில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகளைச் செய்ய வேண்டும்'' என்றார்.

Advertisment

அப்போது தி.மு.க. கவுன்சிலர் கீதா குணசேகரன், "கடலூர் செம்மண்டலம் சாலையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தாலும் நடக்கவில்லை'' என்று குற்றம்சாட்டினார். அதேபோல் மேலும் சில தி.மு.க. கவுன்சிலர்களும் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினர்.

cc

அப்போது மேயர் ஆதரவு கவுன்சிலர்கள் எழுந்து, "மாநகர மேயர் சுந்தரி தலைமையில் மாநகராட்சி சிறப்பாகச் செயல்படுகிறது'' என்று பதில் கூற, அப்போது எ

டந்த இரண்டாம் தேதி, கடலூர் மாநகர மேயர் திருமதி சுந்தரி ராஜா தலைமையில் மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் சுந்தரி பேசும்போது, "வரும் 15-ஆம் தேதி முதல் பள்ளி மாணவ, மாணவி களுக்கு சிற்றுண்டி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவி களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கிவைக்க உள்ளார். அனைத்து கவுன்சிலர் களும் அவரவர் வார்டு களில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகளைச் செய்ய வேண்டும்'' என்றார்.

Advertisment

அப்போது தி.மு.க. கவுன்சிலர் கீதா குணசேகரன், "கடலூர் செம்மண்டலம் சாலையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தாலும் நடக்கவில்லை'' என்று குற்றம்சாட்டினார். அதேபோல் மேலும் சில தி.மு.க. கவுன்சிலர்களும் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினர்.

cc

அப்போது மேயர் ஆதரவு கவுன்சிலர்கள் எழுந்து, "மாநகர மேயர் சுந்தரி தலைமையில் மாநகராட்சி சிறப்பாகச் செயல்படுகிறது'' என்று பதில் கூற, அப்போது எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆதரவு கவுன்சிலர்கள் சிலர், "நாங்கள் கேட்ட கேள்விக்கு மேயர் அல்லது அதிகாரிகள் பதில் கூற வேண்டும்'' என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். இப்படி இருதரப்பு கவுன் சிலர்களிடையே வாக்கு வாதம் மோதலானது. அப்போது எம்.எல்.ஏ. ஆதரவாளரான பாரூக் அலியை ஒரு பெண் கவுன்சிலரின் கணவர் செந்தில்குமார் என்பவர் தாக்கியதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, குணசேகரன், தமிழரசன், பிரகாஷ், சரத், தினகரன் உள்ளிட்ட 12 கவுன் சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது மேயர் சுந்தரி, "அந்த சம்பவம் வெளியே நடந்ததால் அதுகுறித்து புகார் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார். அப்போது பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் செய்தனர். அதன்பிறகு கோஷமிட்டபடி 12 கவுன்சிலர்கள் மன்றத்தை விட்டு வெளியேவந்து மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் மன்றத்தில் சில தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு கிளம்பினார் மேயர் சுந்தரி.

Advertisment

cc

மன்றக்கூட்டத்தில் மரியாதைக்குறைவாக நடந்துகொண்ட எம்.எல்.ஏ. ஆதரவு கவுன்சிலர் கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, மேயர் ஆதரவு கவுன்சிலர்களான இளையராஜா, ஹேமாவதி, பார்வதி, சாய்ந்துன்னிஷா, சசிகலா உள்ளிட்ட 19 கவுன்சிலர்கள் பாரதி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இப்படி தி.மு.க. கவுன்சிலர்கள் இரு கோஷ்டியாகப் பிரிந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டவுன் டி.எஸ்.பி. கரிகால் பாரிசங்கர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, கவிதா, உதயகுமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினர். இந்தக் களேபரத்துக்கிடையே பி.ஜே.பி. கவுன்சிலர் சக்திவேலும் மேயரைக் கண்டித்து, தனது கட்சியினருடன் சாலை மறியலில் ஈடுபட்டார். இப்பிரச்சனை குறித்து ஐயப்பன் எம்.எல்.ஏ. ஆதரவு கவுன்சிலர்கள் சிலரிடம் கேட்டோம். "மாநகர மேயர் தேர்தலின்போது, மேயராக வி.எல்.எஸ்.குணசேகரன் மனைவி கீதாவுக்குத்தான் மேயர் பதவி என்று உறுதியோடு பிரச்சாரத்தை கையில் எடுத்தனர். அதனால் தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகள் பெரும்பான்மை பெற்றன. அந்த நேரத்தில் திடீரென நகரச் செயலாளர் ராஜாவின் மனைவி சுந்தரி, மாநகர மேயர் என்று கட்சி மேலிடம் அறிவித்தது. இது தி.மு.க. கவுன்சிலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. கவுன்சிலர்களில் ஒரு கோஷ்டியினர், மேயர் தேர்தலன்று புதுச்சேரி கடற்கரைச் சாலையிலுள்ள சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். மேயர் தேர்தலில், சுந்தரி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சித் தலைமை அறிவித்த மேயர் வேட்பாளருக்கு எதிராக, பல கவுன்சிலர்களை எம்.எல்.ஏ. ஐயப்பன் தனிமைப்படுத்தியதற்குக் காரணம், கீதாவின் கணவர் குணசேகரனும் ஐயப்பனும் நீண்டகால நண்பர்கள் என்பதாலாகும். இதையடுத்து ஐயப்பனை பொதுச்செயலாளர் துரைமுருகன் கட்சி நடவடிக்கைகளிலிருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தார். சில மாதங்களுக்குப் பிறகு தற்போதுதான் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது தனக்கு எதிராக வாக்களித்த கவுன்சிலர்களை மேயர் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுவதால் எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தோம்'' என்கிறார்கள்.

இதுகுறித்து மேயர் தரப்பில் கேட்டபோது, "மேயர் தேர்தலில் எதிராக வாக்களித்தவர்கள், தங்கள் தவறை உணர்ந்து, மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான எம்.ஆர்.கே.வைச் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். அவரும் பெருந்தன்மை யாக மன்னித்தார். அவர்கள் தங்கள் கோரிக்கை களை முறையாகத் தெரிவித்தால் மேயர் நடவடிக் கை எடுப்பார். ஆனால் அவர்கள் தவறான வழியில் தொடர்ந்து செயல்பட்டு, கூட்டத்தை நடத்தவிடா மல் மேயருக்கு இடைஞ்சல் கொடுக்கப் பார்க்கிறார் கள். மாநகரக் கூட்டத்தை சுமூகமாக நடத்தவிடக் கூடாது என்று அவர்கள் தான் முதல்நாளே ரகசியக் கூட்டம் போட்டு பேசி முடிவெடுத்து கூட்டத்தில் பிரச்சினை செய்தனர்'' என்கிறது மேயர் தரப்பு. இந்த கோஷ்டிப் பூசலைப் பயன்படுத்தி பி.ஜே.பி., தி.மு.க. கவுன்சிலர்களைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.

nkn100922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe