ராணி மங்கம்மாளின் படையில் இருந்த இஸ்லாமிய வீரர்களின் தொழுகைக்காக 1736-ல் திருச்சிராப் பள்ளியில், டவுன்ஹாலுக்கு எதிரில் கட்டப்பட்ட சௌக் பள்ளிவாசல் மிகவும் பழமையானதாகும். நத்ஹார்வலி தர்கா பகுதியைச் சுற்றியுள்ள நிலங்கள் அனைத்தையும் படை வீரர்களாக இருந்த இஸ்லாமியர் களுக்கே ராணி மங்கம்மாள் கொடுத்துள்ளார். அதேபோல், சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த இஸ்லாமியர்களுக்கும் இலவசமாக இடங்கள் வழங்கப்பட்டது,

rr

தமிழ்நாட்டில் இருந்த ஆட்சியாளர்கள், 1954-ம் ஆண்டு, வக்பு வாரியச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தனர். இஸ்லாமியர்களின் வக்பு சொத்துக் களை மேலாண்மை செய்வதற்கும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், மாநிலங்களின் மேற்பார்வையில் வக்பு வாரியம் செயல்பட்டது. தற்போது, திருச்சி நத்ஹர்வலி தர்காவுக்கு சொந்தமான சொத்துக்களை அறங் காவலர்களாக இருக்கக்கூடியவர்கள் பரிவர்த்தனை செய்துகொண்டதாக, ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி தர்கா வம்சா வழி பங்காளிகள் நலச்சங்கம் சார்பில், வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மானிடம் புகாரளித்துள்ளனர்.

அந்தப் புகாரில், நத்ஹர்வலி தர்காவிற்குச் சொந்தமான பனையக்குறிச்சி கிராமத்தில் உள்ள நஞ்சை நிலம் 9.85 ஏக்கர் உள்ள இடத்தை, பங்காளி அறங்காவலராக இருந்து வரும் சையத் அமீனுதின் என்பவர், தனது மகன்களான சையத் ஷாகபுதீன், சையத் நியாஸ்தீன் ஆகிய இருவருக்கும் பட்டா மற்றும் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். அதற்கு ஆதரவாக கடந்த 09-02-2019-ல் தலைமை அறங்காவலர் ஹாஜா மொஹிதீன், பொது அறங்காவலர் அப்துல்லா ஷா, பொது அறங்காவலர் மருத்துவர் அலீம், பரம்பரை அறங்காவலர் சையத் அக்பர் ஹசேன் ஆகியோர், கடந்த 27-02-2018 அன்று இணைந்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை தங்களுடைய பெயருக்கு மாற்றிக்கொண்டு, குறைந்த மதிப்புள்ள இடத்தை தர்காவிற்கு கொடுத்துள்ளனர். இப்பிரச்சினையை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அறங்காவலர் தேர்தல் நடத்தவேண்டுமென்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisment

rr

இதுகுறித்து தற்போது பங்காளி அறங்காவலரான சையத் அமீனுதினிடம் விசாரித்ததில், "நாங்கள் அறங் காவலர்களாக வந்தபிறகு, தர்காவில் சுவிங்கத்தின் மூலம் காசு திருடும் கும்பலின் உண்டியல் திருட்டைத் தடுத்ததால், இதைச் செய்துவந்த பங்காளிகளில் சிலர், காழ்ப்புணர்ச்சியால் இப்பிரச்சினையை எடுத்துள்ளனர்.

தற்போது பனையக்குறிச்சியில் இருக்கும் இடம், டெனன்ட் ஆக்ட்டின்கீழ் உள்ளது. எனவே குத்தகைதாரர்களிடம் இருந்து அந்த இடத்தை மீட்க முடியவில்லை. அந்த இடத்தால் எந்தவித வருமானமும் தர்காவிற்கு இல்லை. முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சரான வெல்லமண்டி நடராஜன், தர்காவிற்கு வருபவர்களுக்கு தங்குமிடம் கட்டித் தருகிறோம் என்று கூறினார். எனவே 120 வருடத்திற்கு முன்பிருந்து பாரம்பரியமாக எங்களிடமுள்ள சொத்தை என்னுடைய மகன்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டேன். மற்ற அறங்காவலர்கள், என்னுடைய மகனின் இடத்தை முறைப்படி கடிதம் மூலம் தர்காவிற்கு தருவதற்கு சம்மதமா என்று கேட்டார்கள். அந்த இடத்தைத் தருகிறோம் என்றும், அதற்கான குத்தகை பாத்தியத்தையும், பதிவுச் செலவுகளையும் நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டு மென்றுகூறி வழங்கினோம். அதன்பிறகு சட்டரீதியாக அந்த இடம் பதிவுசெய்து கொடுக்கப்பட்டது.

Advertisment

rr

புதிய நிர்வாகிகள் தேர்வில், தங்களுக்கு ஆதரவானவர்களை நியமிக்கவே இதை இப்போது பிரச்சினையாக்குகிறார்கள். எல்லா பங்காளிகளும் இதில் ஈடுபடவில்லை. குறிப்பிட்ட 7 பங்காளிகள் மட்டுமே இப்படிச் செய்கிறார்கள். எங்களுக்குச் சொந்தமான 12,500 சதுர அடி இடத்தை நாங்கள் தர்காவிற்கு என்று கொடுத்துள்ளோம். சட்ட திட்டத்தின்படி, பங்காளியாகிய எனக்கு சொந்தமான இடத்தைத்தான் பரிவர்த்தனை செய்துள்ளோம். ஆனால் அந்த இடம் வழக்கில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். முன்சீப் நீதிமன்றத்திலும், கீழ் நீதிமன்றத்திலும் வழக்கு தோல்வியை சந்தித்துள்ளது. மூலப்பத்திரம் என்னிடம் உள்ளது. இந்த வழக்கை போட்டதும், என்னுடைய தாத்தாவின் அண்ணன் வழி உறவினர்தான். எனவே அவருக்கும் இந்த சொத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

rrஇந்த இடத்தை நாங்கள் பரிவர்த்தனைதான் செய்திருக்கிறோம். அதிலும் அரசாங்கம் என்ன மதிப்பு கொடுத்துள்ளதோ அந்த மதிப்பில்தான் இந்த இடம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு செலவுகளை நீங்களே செய்து கொள்ள வேண்டும், நான் படிக்கும் குரானின்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த பரிவர்த்தனைக் காக நான் ஒரு ரூபாய் கூட அவர்களுக்கு கொடுக்கவில்லை. அவர்களும் 1 ரூபாய் கூட கேட்கவில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழில் செய்து வருகிறோம். எங்களை அல்லா நன்றாக வைத்துள்ளார். எங்களுக்கு எந்த குறைவும் இல்லை. தர்காவுக்கு உரியதில் இருந்துதான் நாங்கள் வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை.

தற்போது வக்பு வாரியத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அவர்கள் வந்து விசாரிப்பார்கள், அதில் உள்ள உண்மை தன்மையைத் அறிந்துகொண்டு நாங்கள் செய்தது சரி என்றால் ஏற்றுக்கொண்டு வேலையை பார்ப்போம். தவறு என்றால் அதற்கு என்ன நடவடிக்கையை வக்பு எடுக்கிறதோ அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்'' என்று தெரிவித்தார்.