திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் தொகுதியில் உடையார்கள், வன்னியர்கள், பட்டியலின சமூக மக்கள் அதிகம் வசிக்கின்றனர். தி.மு.க.வின் வலிமையான தொகுதிகளில் ஒன்றாக இத்தொகுதி இருந்தது. 1972 தேர்தலில் தி.மு.க. எஸ்.முருகையன் இத்தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார்.
வெளியூரைச் சேர்ந்தவருக்கு எப்படி சீட் தரலாம் என கலசப்பாக்கம் தி.மு.க.வில் பிரபலமாகயிருந்த சுந்தரேசன் அதிருப்தியாகி எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வில் சேர்ந்து வேட்பாளரானார். தி.மு.க. சார்பில் பெ.சு.திருவேங்கடம் என்ற இளைஞரை களமிறக்கினார் கலைஞர். கடும் போட்டியில் திருவேங்கடம் வெற்றிபெற்றார். அதன்பின் 1980, 1989, 1996 என நான்கு முறை இத்தொகுதியில் வெற்றிபெற்றார்.
இதே காலகட்டத்தில் அ.தி.மு.க. சுந்தரேசன் தனது மகன் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை அரசியலில் நுழைத்தார். 2006, 2011-ல் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கலசப்பாக்கம் தொகுதியில் நிறுத்தப்பட்டார். அப்போது தி.மு.க.வில் கூட்டணிக்கு ஒதுக்கியதால் தி.மு.க.விலுள்ள சாதிப் பற்றாளர்களின் ஆதரவில் வெற்றிப
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் தொகுதியில் உடையார்கள், வன்னியர்கள், பட்டியலின சமூக மக்கள் அதிகம் வசிக்கின்றனர். தி.மு.க.வின் வலிமையான தொகுதிகளில் ஒன்றாக இத்தொகுதி இருந்தது. 1972 தேர்தலில் தி.மு.க. எஸ்.முருகையன் இத்தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார்.
வெளியூரைச் சேர்ந்தவருக்கு எப்படி சீட் தரலாம் என கலசப்பாக்கம் தி.மு.க.வில் பிரபலமாகயிருந்த சுந்தரேசன் அதிருப்தியாகி எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வில் சேர்ந்து வேட்பாளரானார். தி.மு.க. சார்பில் பெ.சு.திருவேங்கடம் என்ற இளைஞரை களமிறக்கினார் கலைஞர். கடும் போட்டியில் திருவேங்கடம் வெற்றிபெற்றார். அதன்பின் 1980, 1989, 1996 என நான்கு முறை இத்தொகுதியில் வெற்றிபெற்றார்.
இதே காலகட்டத்தில் அ.தி.மு.க. சுந்தரேசன் தனது மகன் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை அரசியலில் நுழைத்தார். 2006, 2011-ல் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கலசப்பாக்கம் தொகுதியில் நிறுத்தப்பட்டார். அப்போது தி.மு.க.வில் கூட்டணிக்கு ஒதுக்கியதால் தி.மு.க.விலுள்ள சாதிப் பற்றாளர்களின் ஆதரவில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாகி, அமைச்சரானார் அக்ரி. பின்னர் அரசு அதிகாரி தற்கொலை விவகாரத்தில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி சிறைக்குப் போனதால் அரசியலில் ஒதுக்கப்பட்டு 2016-ல் அ.தி.மு.க. பன்னீர்செல்வத்துக்கு சீட் தரப்பட்டது. அப்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நின்றது, அ.தி.மு.க. பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து நான்காவது முறையாக அ.தி.மு.க. வெற்றிபெற்றதால் 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தொகுதிப் பொறுப்பாளராக தனது மகன் டாக்டர்.கம்பனை களமிறக்கினார் தி.மு.க. மா.செ. வேலு. சீனியரான பெ.சு.திருவேங்கடம், துரிஞ்சாபுரம் ஒ.செ.வாக உள்ள தன் மகன் சரவணனுக்கு, கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிட சீட் வாங்கித் தாங்க என வேலுவிடம் கெஞ்சிக் கேட்டதால் சரவணனுக்கு சிபாரிசு செய்து சீட் வாங்கித் தந்து வெற்றி பெறச்செய்தார்.
தற்போது இத்தொகுதி எம்.எல்.ஏ.வாகவுள்ள சரவணன், கலசப்பாக்கம், ஜம்னாமரத்தூர், புதுப்பாளையம் ஒன்றியங்களில் சில பணிகளைச் செய்திருந்தாலும் சாதி பார்த்தே செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுள்ளது. மீண்டும் அவர் போட்டியிட்டால் தோல்வி யடைவார் எனச் சொல்லுமளவுக்கு நிர்வாகிகளிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ளார். புதுப்பாளையம் ஒன்றியக் குழு தலைவராக பொதுப்பிரிவு, பட்டியலினப் பிரிவில் நான்கு முறை பதவியி லிருந்த தி.மு.க. ஒ.செ. சுந்தரபாண்டியனுக்கு பல நெருக்கடிகளைத் தந்தவர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரே ஆண்டில் 3 முறை பி.டி.ஓ.க் களை மாற்றி சேர்மனை டார்ச்சர் செய்துள்ளார். உச்சமாக பெண் ஊழியர் ஒருவர்மூலம் சேர்மன் மீது பொய்யாக பாலியல் புகார் தர முயற்சி செய்து அவரின் பலத்த எதிர்ப்பை சம்பாதித் துள்ளார்.
ஜம்னாமரத்தூர், கலசப்பாக்கம் ஒ.செ.க்களை கேவலமாக நடத்துகிறார். சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேலான ஒப்பந்தப் பணிகளை எம்.எல்.ஏ.வுக்கு தந்துள்ளார் அமைச்சர் வேலு. அதில் 80 சதவிகித வேலைகளை எம்.எல்.ஏ.வும், அவரது பினாமிகளுமே செய்துள்ளனர். ஆனால் சம்பாதிக்கவில்லை எனச் சொல்லி கட்சிக்காக பெரியதாக எதையும் செலவுசெய்யவில்லை என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.
தொகுதி நிலவரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்குச் சென்ற ரிப்போர்ட்களின் அடிப்படையில் இத்தொகுதி ரெட் பட்டியலில் இருப்பதால் சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர் வேலு, கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை அழைத்துப்பேசியுள்ளார். அப்போது சரவணன் - சுந்தரபாண்டியன் இடையே பஞ்சாயத்து பேசி சமாதானம் செய்துள்ளார். தனக்குதான் சீட் என தலைமை சொல்லிவிட்டது எனச் சொல்லி இப்போதே மக்களிடம் அக்ரிக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார் சரவணன். எனக்கொரு வாய்ப்பு வாங்கித் தாங்க என தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர், முன்னாள் சேர்மன் ஸ்ரீதரன் அமைச்சரிடம் கேட்கும் முடிவில் உள்ளதாகக் கூறுகின்றனர். கலசப்பாக்கம் வடக்கு ஒ.செ. படவேடு சேகரிடம் சீட் கேட்கச்சொல்லி சிலர் கூறிவருகின்றனர். கலசப்பாக்கம் முன்னாள் சேர்மன் அன்பரசியின் கணவர் ராஜசேகரன் தனது மனைவி பெயரில் கேட்கவுள்ளார் என்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் போளூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, தனக்கு கலசப்பாக்கம் வேண்டுமென முயற்சிக்கிறார். அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் நான் வலிமையான அமைச்சர், எதிர்த்தரப்பு வெற்றிபெற்றால் வெறும் எம்.எல்.ஏ. யாருக்கு ஆதரவுங்கறதை நீங்களே யோசிங்க என தன் சாதியின் முக்கிய பிரமுகர்களிடம் பேசிவருகிறார். கடந்த தேர்தலின்போது இத்தொகுதியில் நின்ற பன்னீர்செல்வத்தை, அக்ரியின் ஆதரவாளர்கள் தேர்தல் வேலைசெய்யாமல் ஒதுங்கியதால் தோற்றுப்போனார். என்னை தோற்கடிச்சதே அக்ரிதான் என தலைமையிடம் புகார் சொன்னார். இந்தமுறை நான் கண்டிப்பா ஜெயிப்பேன் எனக்கு சீட் தாங்க என இ.பி.எஸ்.ஸிடம் போராடிவருகிறார்.
இத்தொகுதியில் மூன்று முறை காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. கணிசமாகயாதவர் வாக்குகள் உள்ளதால் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் செங்கம் குமார் இத் தொகுதி மீது கண்வைத்துள்ளார். வன்னியர் அதிகமுள்ள இத்தொகுதியில் நாம் நிற்கலாம் என பா.ம.க. நிர்வாகிகள் அன்புமணியிடம் கூறியுள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அதிகம் ஓட்டு வாங்கிய தொகுதி கலசப் பாக்கமாம். பா.ஜ.க. இத்தொகுதியை ஒதுக்கக் கேட்டு அ.தி.மு.க.விடம் பட்டியல் தந்துள்ளது. எம்.பி தேர்தலில் தோற்ற வழக்கறிஞர் அஸ்வத்தாமன் நிற்க வாய்ப்புள்ளது.
படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்