கட்சிகள் அலட்சியம்! மக்கள் அக்கறை! -ஒரு தேர்தல் அதிகாரியின் அனுபவம்!

v

"போட்டாச்சு... போட்டாச்சு... எல்லோரும் ஓட்டுப் போட்டாச்சு. எங்க தொகுதி எம்.பி. யாராக இருக்கும்?'' இந்த பட்டிமன்ற விவாதம் தமிழகம் முழுக்க நடந்துகொண்டிருக்க, மனிதர்களால் வாக்களிக்கப்பட்டு மின்னணு இயந்திரங்களால் அறிவிக்கப்படும் எம்.பி.யானவர் மே 23-ந் தேதிதான் வெளியே வருவார்.

இந்த தேர்தல் பலருக்கும் பல அனுபவங்களை கொடுத்துள்ளது. அப்படித்தான் ஒரு வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரியாக பணிபுரிந்த அரசு அலுவலர் ஒருவர், தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ஓய்வுபெறும் வயதில் உள்ள அவர், தனது படமோ பெயரோ வேண்டாம் என்று தவிர்க்கச் சொல்லிவிட்டு, தகவலைச் சொன்னார். ""எனது பணிக்காலத்தில் பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளேன். தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தமிழ்நாட்டில் பிரதானமாக இரண்டு கட்சிகள்தான் உள்ளன. அவர்களிடம் மட்டுமே முழு ஏற்பாடு இருக்கும். ஆனால்

"போட்டாச்சு... போட்டாச்சு... எல்லோரும் ஓட்டுப் போட்டாச்சு. எங்க தொகுதி எம்.பி. யாராக இருக்கும்?'' இந்த பட்டிமன்ற விவாதம் தமிழகம் முழுக்க நடந்துகொண்டிருக்க, மனிதர்களால் வாக்களிக்கப்பட்டு மின்னணு இயந்திரங்களால் அறிவிக்கப்படும் எம்.பி.யானவர் மே 23-ந் தேதிதான் வெளியே வருவார்.

இந்த தேர்தல் பலருக்கும் பல அனுபவங்களை கொடுத்துள்ளது. அப்படித்தான் ஒரு வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரியாக பணிபுரிந்த அரசு அலுவலர் ஒருவர், தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ஓய்வுபெறும் வயதில் உள்ள அவர், தனது படமோ பெயரோ வேண்டாம் என்று தவிர்க்கச் சொல்லிவிட்டு, தகவலைச் சொன்னார். ""எனது பணிக்காலத்தில் பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளேன். தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தமிழ்நாட்டில் பிரதானமாக இரண்டு கட்சிகள்தான் உள்ளன. அவர்களிடம் மட்டுமே முழு ஏற்பாடு இருக்கும். ஆனால் இந்த தேர்தலில் கூடுதலாக அ.ம.மு.க.வும் நடிகர் கமல்ஹாசனின் "மக்கள் நீதி மய்ய'மும் களத்தில் இருந்ததை நாங்கள் கண்டோம்.

வாக்காளர்களை நேரில் சந்தித்து அவர்களை வாக்களிக்க அழைத்து வருவது, வாக்காளர்களை இனம் காண்பது இந்தப் பணிகளில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எப்பொழுதும் முன்னணியில் இருக்கும். பூத் கமிட்டி என்ற பெயரில் அந்தந்த கட்சிகளின் நிர்வாகிகள் குழு அமைத்து பணிபுரிகிறார்கள். இதில் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் அ.தி.மு.க 100% தனது பூத் கமிட்டியை வெளிப்படையாக இயக்கியது. ஆனால் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட இடங்களில் பூத் கமிட்டிகள் இயங்கியதாக தெரியவில்லை. நாங்கள் பணிபுரிந்த தொகுதி திருப்பூர் நாடாளுமன்றம். இதில் பவானி சட்டமன்றத்திற்கு உட்பட்ட கவுந்தப்பாடி முதல் அந்தியூர் வரை பணிபுரிந்த எங்கள் நண்பர்கள் பகிர்ந்துகொண்டது இதுதான்.

v

இந்த தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. அந்தக் கட்சியின் சின்னமாக கதிர் அரிவாள் இருந்தது. தேர்தலுக்கு முன்பு பெரும்பாலும் தி.மு.க. கூட்டணிக் கட்சி இங்கு மக்களிடம் செல்லவில்லை என்பதை வெளிப்படையாக தெரிந்துகொண்டோம். சிறு கிராமங்கள் உள்ள பட்டகாளிபாளையம், மாரப்பன் பாளையம் இங்கெல்லாம் தி.மு.க.வினரோ, கம்யூனிஸ்ட் கட்சியினரோ மக்களை கூட சந்திக்கவில்லை என்று தெரிந்தது. தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட முழுமையாக வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரியவில்லை.

ஒரு சிறு கிராமம்; அந்த கிராமத்தில் 700 ஓட்டுக்கள்.

அங்கு பதிவானவை 580. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அங்கு ஒரு நபர் கூட கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லை. தி.மு.க.வில்தான் ஓரிருவர் இருந்தனர். இங்கு தேர்தல் நாளன்று அ.தி.மு.க.வினருக்கு பிரியாணி உட்பட செலவுக்கு 500, 1000 என பணம் கொடுக்கப்பட்டது. இதையெல்லாம் நாங்கள் நேரிலேயே கண்டோம். இது அமைச்சர் கருப்பணன் சொந்த ஊர். ஆகவே இங்கு அ.தி.மு.க. கூடுதலான ஓட்டுக்கள் பெறவேண்டுமென்று அமைச்சர் கருப்பணனின் ஆட்கள் கடுமையாகச் சுற்றி வந்தனர். ஆனால் நடந்தது என்னவென்றால் எந்த சின்னம் மக்களுக்கு தெரியாதோ அந்தச் சின்னத்திற்குத்தான் குறைந்தபட்சம் 400 ஓட்டுகளாவது விழுந்திருக்கும்.

இது எங்களுக்கு எப்படித் தெரியும் என்று நீங்கள் கேட்கலாம். நாங்கள் அரசு அலுவலர்கள், எந்தக் கட்சிக்கும் ஆதரவானவர்கள் கிடையாது. ஆனால் எங்களிடமே மக்கள் வெளிப்படையாகப் பேசினார்கள். "சின்னம் எங்கே இருக்குது' என்றெல்லாம் கேட்டார்கள். வாக்குப்பதிவு முடிந்தபிறகும் அந்தக் கிராமத்தில் இருந்து நாங்கள் திரும்பும்போது முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அரசியல் சூழலைப் பேசினார்கள். ஒரு கட்சியின் வெற்றி-தோல்வி என்பது வாக்கு எண்ணிக்கையில்தான் தெரியும் என்றாலும் ஒரு கூட்டணிக் கட்சியான அது மக்களிடம் போதுமான அளவில் உள்ளே செல்லாமல் இருந்தாலும் மக்கள் தாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள்.

இந்த ஒரு கிராமத்தை வைத்து தேர்தல் முடிவை சொல்ல முடியாது என்பது உண்மைதான்; ஆனால் இப்போதைய விஞ்ஞான யுகத்தில் படிக்காத பாமர மக்கள் கூட உலக நடப்புகளை தெரிந்து வைத்திருக்கிறார்கள். எந்தக் கட்சி எந்த கட்சியோடு கூட்டணி வைத்துள்ளது; அந்த கட்சியின் சின்னம் என்பது எது என்பதையும் அவர்களாகவே தெரிந்து வைத்துத்தான் வாக்களிக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொண்டோம்'' என்றார் அவர்.

பணபலம் மலையாக கூட்டினாலும் ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் ஆயுதத்தை மக்கள் மிகச் சரியாகவே பயன்படுத்தி இருப்பார்கள் என்று இந்த தேர்தல் உணர்த்தும் என்பது மே 23 தேர்தல் முடிவில் வெளிப்படலாம்.

-ஜீவாதங்கவேல்

nkn030519
இதையும் படியுங்கள்
Subscribe