டப்பு பாராளுமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் கிடைக்கும் வெற்றி தோல்விகள் நாடே கவனிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள சிவமொக்கா தொகுதி, அனைவராலும் பேசப்படும் தொகுதியாக மாறியிருக்கிறது. இத்தொகுதியில் பா.ஜ.க. சார்பாக, ஏற்கெனவே எம்.பி.யாக இருக்கும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா மீண்டும் களமிறங்கியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 56.86% வாக்குகளை அறுவடை செய்து 2 லட்சத்துக் கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். எனவே தற்போதும் எளிதாக வெல்லக்கூடும் என்று எதிர்பார்த்த நிலையில், இவருக்கு எதிராகக் களமிறங்கிய வலுவான வேட்பாளர் மற்றும் அதிருப்தி வேட்பாளரால் இவரது வெற்றி கேள்விக்குறி யாகியுள்ளது.

ss

ஹாவேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் எனக் கூறப்பட்ட தனது மகன் கே.இ.காந்தேஷுக்கு தேர்தலில் வாய்ப்பளிக்காமல் ஓரங்கட்டியதால் வெகுண் டெழுந்த முன்னாள் துணை முதல்வரான ஈஸ்வரப்பா, தனது மகனுக்கெதிராகச் செயல்பட்ட எடியூரப்பாவை பழிதீர்க்க, அவரது மகன் களமிறங்கியுள்ள சிவ மொக்கா தொகுதியில் சுயேட் சையாகக் களமிறங்கி யுள்ளார். இவருக் கான ஜாதி பின் புலம் மற்றும் அரசியல் செல்வாக்கு காரணமாக, பா.ஜ.க. வாக்குகளில் கணிசமான பகுதியை பிரித்து விடுவார்.

பா.ஜ.க. வேட்பாளருக்கு எதிராக காங்கிரஸ் சார்பாக, முன்னாள் முதல்வர் எஸ்.பங்காரப்பாவின் மகளும், பிரபல நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமார் களமிறங்கியுள்ளார். இவர் ஏற்கெனவே 2014ஆம் ஆண்டில் மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். ஆனால் இம்முறை வெற்றிபெற முடியுமென்ற தீவிர நம்பிக்கை யுடன் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடுகிறார். கர்நாடகாவில் இரண்டாவது கட்டமாக நடைபெறும் தேர்தலில் இத்தொகுதி வருவ தால், மே 7ஆம் தேதி நடந்த தேர்தலில், ரேவண்ணா குடும்பத்தினரின் ஆபாச வீடியோ விவகாரம் காரணமாக பா.ஜ.க.வுக்கு வாக்கு சதவிகிதத்தில் ஓரளவு அடிவிழுமென்று எதிர் பார்க்கப்படுகிறது. இதுவும், கீதா சிவராஜ் குமாருக்கு சாதகமாக அமையக்கூடும்.

Advertisment

ee

உத்தரப்பிரதேசத்தில், பீம் ஆர்மி நிறுவனரும் ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ஆசாத், உத்தரபிரதேசத்தின் நாகினா தொகுதியில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி கூட்டணி சார்பாகப் போட்டி யிடுகிறார். உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை, வலுவான தலித் தலைவராக வலம்வந்த முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, தலித் வாக்குகளைப் பிரிப்பது, காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த தலைவலியாக உருவெடுத்து, உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸின் சரிவுக்கு அதுவும் ஒரு காரணமானது. இந்நிலையில், வளர்ந்துவரும் தலித் தலைவரான சந்திரசேகர் ஆசாத்துடனான கூட்டணி, ராகுல் - அகிலேஷ் யாதவ் கூட்டணிக்கு வலுச் சேர்ப்பதாக உள்ளது. சந்திரசேகர் ஆசாத்தும் சரியான அரசியல் நிலைப்பாட்டில் இல்லாததால் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து ஒரு தொகுதியைப் பெற்று, அதில் தானே போட்டியில் இறங்கியுள்ளார்.

ee

Advertisment

இதன்மூலம், நாகினா தொகுதியில் கணிசமான அளவிலுள்ள பட்டியலின, இஸ்லாமிய வாக்காளர்களின் வாக்குகளைக் கவர்ந்திடலாமென்ற அகிலேஷின் கணக்கு பலிக் குமா என்பதை தேர்தல் முடிவு சொல்லும். உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. அசைக்கமுடியாத தாக வலுவாக உள்ள நிலையில், அகிலேஷ் யாதவின் கூட்டணி உத்தி, பா.ஜ.க.வை ஆட்டம் காண வைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணிக்கு பெருகிவரும் ஆதரவின் காரணமாக சந்திரசேகர் ஆசாத் இம்முறை கவனிக்கத்தக்க வேட்பாளராக உருவெடுத்தார். இத்தொகுதியில் முதல்கட்டத்திலேயே தேர்தல் நிறைவடைந்த நிலையில், இவர் வெற்றிபெற்றால், உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் தலித்து களின் எழுச்சியாக அவ்வெற்றி பார்க்கப்படும்.

மகாராஷ்டிரா வில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே களமிறங்கியுள்ள பாராமதி தொகுதியில் அதிகார பலமிக்க பணக்காரக் குடும்பத்தின் குஸ்திப்போட்டி நடக்கிறது. இங்கே இவரை எதிர்த்து, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவா ரின் மனைவியும், சரத் பவாரின் மருமகளு மான சுனேத்ரா பவார், பா.ஜ.க. கூட்டணி சார்பாகக் களமிறங்கியுள்ளார். இத்தொகுதி யில் சுப்ரியா சுலே மூன்று முறை எம்.பி.யாக இருந்தவர். எனவே இத்தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள கடும் போட்டியை சந்திக்கிறார். மகள் சுப்ரியா சுலேவுக்கு ஆதர வாகப் பிரச்சாரம் செய்யும் சரத் பவார், "சுப்ரியாவின் வெற்றி, எனது மகளின் வெற்றி யாக மட்டுமல்லாது, மோடிக்கு எதிரணியில் ஒரு எம்.பி. எண்ணிக்கையை அதிகரிக்கும் வாய்ப்பாகவும் உள்ளது'' எனக் குறிப்பிட்டார். "என்னை வீழ்த்துவதன்மூலம், சரத்பவாரின் அரசியலை முடிவுக்கு கொண்டுவர பா.ஜ.க. திட்டமிடுகிறது. பா.ஜ.க.வின் திட்டம் கனவாகப் போகும்'' என்று சுப்ரியா குறிப்பிட் டார். இத்தொகுதியின் வெற்றி தோல்வியை தேசமே கூர்ந்து கவனிக்கிறது.