மிழக அரசியல் கட்சிகள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி தனது தயாரிப்பு வேலைகளை துவக்கி விட்டன. எந்தக் கட்சியை அணுகினாலும் அங்கு நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பேச்சுக்கள்தான் அதிகமாகக் கேட்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தி.மு.க.வே!

தேர்தல் வியூகங்களை அமைப்பதற்காக ஐபேக் பாணியில் டஊச என்கிற அமைப்பைத் துவக்கி இருக்கிறார் சபரீசன். ஐபேக் அமைப்பில் வேலை செய்தவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், சமூக வலைத்தளங்களில் பயணிப்போர் ஆகியோ ருடன் தி.மு.க.வின் இணையதளத்தையும் இணைத்து இந்த அமைப்பு செயல்படுகிறது. ஏற்கெனவே பூத் கமிட்டிகளை தி.மு.க. அமைத்து விட்டது. சமூக வலைத்தளங்களில் வரும் கருத்துக்களை எதிர்கொள்வதற்கு தி.மு.க.வினருக்கு பூத் கமிட்டி வாரியாகப் பயிற்சி அளிக்கப்படும் சமூக வலைத்தளப் பயிற்சியையே பூத் கமிட்டி அடிப்படையில் செய்வதாக மு.க.ஸ்டாலின் அறிவிக்கும் அளவிற்கு தி.மு.க.வில் தேர்தல் வேலைகள் வேகம் பிடித்துள்ளன.

pp

சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை உருவாக்குவதில் சபரீசனின் டஊசஅமைப்பு முன்னிலை வகிக்கிறது. மணிப்பூரில் நடந்த கலவரம் பற்றி புதிய முகங்களை இறக்கி தி.மு.க. செய்த பிரச்சாரம் கவனத்தைக் கவர்ந்தது. அத் துடன் தி.மு.க. அரசின் பலம், பலவீனங்கள் பற்றி அடிக்கடி சர்வே எடுக்கப்படுகிறது. இரண்டரை வருட தி.மு.க. ஆட்சியின் பலவீனங்கள் எதுவும் பாராளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு வியூகங்கள் அமைக்கப்படுகிறது. அந்த வியூகங்களில் ஒன்று மத் திய அரசின் முடிவையே ஆட்டிப் படைத்திருக்கிறது.

Advertisment

pp

சமீபத்தில் அமலாக்கத்துறையின் ரெய்டுக்கு உள்ளான பொன்முடி நள்ளிரவு வரை விசா ரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரைக் கைது செய்வதற்கு அமலாக்கத்துறை தயாராக இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் மத்திய அரசு வேண்டாம் என்று சொல்லி விட்டது. அமலாக்கத் துறை அரசியல் ரீதியாக மத்திய அரசின் பழிவாங் கும் துறையாக செயல்படுகிறது என கோர்ட்டிலும் பொது வெளியிலும் கடுமையாக கண்டனத்தைப் பதிவு செய்தது தி.மு.க. அகில இந்திய அளவில் ஒலித்த இந்தக் கண்டனங்களை பார்த்துப் பயந்துபோன மத்திய அரசு, செந்தில் பாலாஜியின் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ள சூழ்நிலையில் பொன்முடியைக் கைது செய்ய வேண்டாம் என முடிவெடுத்தது. அதேபோல, ஆட்சியின் வியூகம் அனைத்தும் தேர்தலை நோக்கியே அமையும் வகையில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் செயலை, தி.மு.க. கையில் எடுத்துள்ளது. தலைமைச் செயலாளர் முதல் தாசில்தார் வரை ஒட்டுமொத்த அரசு எந்திரம் முழுவதும் உரிமைத் தொகை வழங்கும் விவகாரத் தில் கவனத்தை செலுத்தும் வகையில் முடுக்கி விடப்பட்டுள்ளது. அத்துடன் முதியோர் உதவித் தொகை 200 ரூபாய் உயர்த்திக் கொடுக்க அமைச்ச ரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இவையெல்லாம் தேர்தலை எதிர்நோக்கிய நடவடிக்கைகள். அத்துடன் அரசியல் ரீதியாக தி.மு.க. கூட்டணிக்கு வலுச் சேர்க்க மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க.வுடன், தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் ம.நீ.ம. தி.மு.க. கூட்டணி யில் இணைகிறது. தே.மு.தி.க. திரிசங்கு நிலையில் நிற்கிறது. பா.ம.க.வுடன் துரைமுருகன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது.

Advertisment

இப்படி தி.மு.க. தேர்தலுக்காக தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, அ.தி.மு.க. கூட்டணியிலும் தேர்தல் வேலைகள் சூடுபிடித்துள்ளன. டெல்லி யில் அமித்ஷா உடன் பேசிய எடப்பாடியிடம், பி.ஜே.பி.க்கு ஒன்பது சீட்டுகளைத் தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதில் தேனி தொகுதியில் ஓ.பி.எஸ்.சின் மகன், சிவகங்கை தொகுதியில் டி.டி.வி., தென் சென்னை நீலகிரி, கன்னியாகுமரி, மதுரை, இராம நாதபுரம், வேலூர், திருவள்ளூர் என தொகுதிகளை இறுதி செய்யும் நிலையில் பா.ஜ.க. பேசிவருகிறது.

அ.தி.மு.க.விற்கும், பா.ஜ.க.விற்கும் நெருடலாக இருப்பவர் அண்ணாமலை. அத்துடன் டி.டி.வி., ஓ.பி. எஸ்., சசிகலா ஆகியோர் பா.ஜ.க.வுக்கு வேண்டியவர் களாகவும், அ.தி.மு.க.விற்கு அலர்ஜியாகவும் இருக்கிறார் கள். இதற்காக திவாகரன் மூலமாக சசிகலாவிடம் எடப் பாடி பேசினார். “"நான் அ.தி.மு.க.வுக்கு வர வேண்டும் என்றால் வேட்பாளர் யார் என முடிவு செய்து கையெழுத்துப்போடும் அதிகாரம் உள்ள பதவி எனக்கு வேண்டும்'’என சசிகலா நிபந்தனை விதிக்கிறார். அதற்கு எடப்பாடி ‘நோ’ சொல்லிவிட்டார்.

அகில இந்திய அளவில் உத்தரப்பிரதேசத்தில் எழுபது தொகுதிக்கு மேல் ஜெயித்துவிட முடியும் என நம்பும் பா.ஜ.க., நானூறு தொகுதிகளைக் குறிவைத்து, ஒரு தொகுதிக்கு நூறு கோடி என நாற்பதாயிரம் கோடியை தயார் செய்து வைத்துள் ளது. இதுதவிர, மோடியின் விளம்பரத்திற்கு பத்தாயிரம் கோடி என ஐம்பதாயிரம் கோடியை பா.ஜ.க. தேர்தலுக்காக இறக்குகிறது. தமிழகத்தில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாயை தேர்தல் செலவு களுக்காக பா.ஜ.க. தயார் செய்து வைத்துள்ளது. தி.மு.க.வும் தேர்தல் செலவுகளுக்காக நிதி திரட்டி தயாராக வைத்துள்ளது. அ.தி.மு.க.வில் பணபலம் உள்ளவர்கள்தான் இந்தத் தேர்தலில் எம்.பி.யாக முடியும் என எடப்பாடி அறிவித்து விட்டார்.

இப்படி பெரிய கட்சிகள் எல்லாம் தேர்தலுக்குத் தயாராக, தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வியூகங்களை அமைத்து வருகின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளில் பாரிவேந்தரின் கட்சி மட்டும் புதிதாகச் சேர்ந்த கட்சியாக உள்ளது. மற்ற கட்சிகளுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தரப்படும் என்பதை பா.ஜ.க., அ.தி.மு.க. இரண்டும் சேர்ந்து முடிவு செய்யும்.

இதற்கிடையே, “அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி இந்தத் தேர்தல் பேரங்களில் சிக்கி ஊசலாடிக் கொண்டிருக்கிறது” என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.