முடங்கிய கோடிகள்! கல்வித்துறை குறட்டை!

dd

த்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மூலமாக இந்தியா முழுவதிலும் கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் கணக்கர், கணக்கு மேலாளர், கல்வி மேலாண்மை முகமை, கணினி விவர பதிவாளர்கள் என நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி தமிழகத்தில் 765 பேர் கணக்கர், 323 பேர் கணினி விவர பதிவாளர், 73 பேர் கல்வி மேலாண்மை முகமை, கணக்கர் மேலாளர் 30 பேர், இதர பணியாளர்கள் 120 பேர் என 1,512 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளமாக 8,400 முதல் 10 ஆயிரம் வரை வழங்கப்பட்ட

த்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மூலமாக இந்தியா முழுவதிலும் கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் கணக்கர், கணக்கு மேலாளர், கல்வி மேலாண்மை முகமை, கணினி விவர பதிவாளர்கள் என நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி தமிழகத்தில் 765 பேர் கணக்கர், 323 பேர் கணினி விவர பதிவாளர், 73 பேர் கல்வி மேலாண்மை முகமை, கணக்கர் மேலாளர் 30 பேர், இதர பணியாளர்கள் 120 பேர் என 1,512 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளமாக 8,400 முதல் 10 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்தது.

dd

கடந்த 2015-ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் நியமிக்கப் பட்ட இந்த பணியாளர்களுக்கு மனித வள வேம்பாட்டுத்துறை திட்ட ஒப்புதல் வாரியம் மூலம் 16 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை தொகுப்பூதியம் உயர்த்தப் பட்டது. மற்ற மாநிலங்களில் பணியாளர்கள் பயனடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் ஊதிய உயர்வு இன்ன மும் வழங்கப்படவில்லை. அப் படியானால், அந்தப் பணத்தை தமிழக அரசு என்னதான் செய் தது? என்று பார்த்தால், 2015ஆம் ஆண்டில் இருந்து 2020 வரை யிலும் (2015-16 ரூ.12,75,25,446, 2016-17 ரூ.5,62,10,952, 2017-18 ரூ.6,37,54,352, 2018-19 ரூ.24,67,28,649, 2019-20 ரூ.1,67,6910) அந்தப் பணத்தை அப்படியே நிலுவை யில் வைத்திருப்பது தெரியவரு கிறது. நிலுவையில் இருக்கும் கோடிகளை dபணியாளர்களுக்கும் கொடுக்காமல் மத்திய அரசுக்கும் திருப்பி அனுப்பாமல், வேறு எந்த திட்டங்களுக்கும் செயல்படுத்தாமல் வைத்திருப்பது கல்வித்துறை அமைச்சரின் மெத்தனப்போக்கை காட்டுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர் பாக கணக்கர் வினோத் நம்மிடம் பேசியபோது, ""நான் 2014-ஆம் ஆண்டில் இருந்து இத்துறையில் பணியில் இருக்கிறேன். ஊதிய உயர்வு இல்லாததால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசு கொடுக்கும் நிதியை எங்களுக்கு கொடுக்காமல் ஏன் இந்த அரசு எங்களை வஞ்சிக் கிறது?''’’என்று கேள்வி எழுப்பினார்.

ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இள மாறனிடம் நாம் இது குறித்து பேசியபோது, ‘’""இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில் இதே பதவியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 16 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 4 ஆண்டுகளாக எவ்வித ஊதியமும் வழங்காமல் அவர் களின் வாழ்வாதாரம் சுரண்டப் படுகிறது. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தொகையை உடனடியாக இந்த அரசு வழங்கவேண்டும்''’’என்று வலியுறுத்தினார்.

மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணனிடம் முடங்கி யிருக்கும் கோடிகள் குறித்து கேட்டபோது, ""மத்திய அரசு கொடுக்கும் நிதியை நாங்கள் 3 சத வீதத்தில் இருந்து 5 சதவிகிதமாக பிரித்து தருகிறோம். மற்ற மாநி லத்திற்கும் நமக்கும் வேறுபாடு கள் இருக்கின்றன. இதற்குமேல் இது குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது''’’என்கிறார்.

-அருண்பாண்டியன்

nkn070320
இதையும் படியுங்கள்
Subscribe