பொதுக்குழுக் கூட்டத்துக்கு அடுத்தபடியாக டெல்லி சென்ற ஓ.பி.எஸ். அங்கிருந்து திரும்பியதும், மதுரையிலிருந்து தேனிவரை 7 மணி நேரம் தொண்டர்களின் ஆரவாரத்தோடு இல்லம் திரும்பினார். வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ்., “"நம் கட்சி நம் கையில்'’என்ற புதிய வியூகத்தைக் கையிலெடுத்திருக்கிறார்.
ஜூன் 26 ஞாயிறு மதியம் 1:30-க்கு மதுரை வந்திறங்கிய ஓ.பி.எஸ்., பத்திரிகையாளர்களிடம் பேசியபோது “"புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் உயிரிலும் மேலான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். தொண்டர்களுக்காகவே நான் இருப்பேன்.
இன்றைக்கு இந்த அசாதாரணமான சூழ்நிலை யாரால், எப்படி ஏற்பட்டது? எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டது என்பது குறித்து கூடிய விரைவில் ம
பொதுக்குழுக் கூட்டத்துக்கு அடுத்தபடியாக டெல்லி சென்ற ஓ.பி.எஸ். அங்கிருந்து திரும்பியதும், மதுரையிலிருந்து தேனிவரை 7 மணி நேரம் தொண்டர்களின் ஆரவாரத்தோடு இல்லம் திரும்பினார். வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ்., “"நம் கட்சி நம் கையில்'’என்ற புதிய வியூகத்தைக் கையிலெடுத்திருக்கிறார்.
ஜூன் 26 ஞாயிறு மதியம் 1:30-க்கு மதுரை வந்திறங்கிய ஓ.பி.எஸ்., பத்திரிகையாளர்களிடம் பேசியபோது “"புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் உயிரிலும் மேலான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். தொண்டர்களுக்காகவே நான் இருப்பேன்.
இன்றைக்கு இந்த அசாதாரணமான சூழ்நிலை யாரால், எப்படி ஏற்பட்டது? எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டது என்பது குறித்து கூடிய விரைவில் மக்க ளுக்கு தெரியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இதயத்திலிருந்து என்னை யாராலும் நீக்க முடியாது. கடந்த 2002-ல் மீண்டும் தமிழகத்தில் முதலமைச்சராக அரியணை ஏறுவதற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு புரட்சித் தலைவி பேட்டியளித்தார். அப்போது "பன்னீர் செல்வம் போன்ற ஒரு தூய தொண்டனைப் பெற்றது எனது பாக்கியம்' என சான்றிதழ் கொடுத்திருக்கிறார். இதைத் தவிர வேறு சான்றிதழ் எனக்குத் தேவையில்லை. எனது எதிர்காலத்தை அ.தி.மு.க.வின் உண்மைத் தொண்டர்களும், மக்களும் நிர்ணயிப்பார்கள்''’என்றார்.
மதுரை விமான நிலையத்தில் அவரை வரவேற்க நகர், புறநகர் நிர்வாகிகள் 5000-க்கும் மேற்பட்டவர்கள் மேளதாளங்களோடு வந்திருந்தனர். மிகுந்த உற்சாகத் தோடு வேனின் மீது ஏறி தொண்டர்களுக்கு கையசைத்துக் கொண்டே சென்றவர், திருமங்கலம் செக்கானூரணி தாண்டி உசிலம்பட்டி வந்தார். அங்கு எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் கூட்டம் இருக்க மகிழ்ச்சியில் கீழே இறங்கி தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். அவரின் கையில் வாளைக் கொடுத்தபோது தொண்டர்களின் கரகோஷம் அடங்க வெகுநேரம் ஆகியது
அங்கிருந்து ஆண்டிப்பட்டி, தேனி செல்ல இரவு 7:00 மணி ஆகியது. அங்கு தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஒன்றிய நகரச் செயலாளர்கள் மற்றும் சையதுகான் போன்ற ஆதரவாளர்களோடு இரவு 12:00 மணிவரை ஆலோசனையில் இருந்திருக்கிறார்.
அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது ஓ.பி.எஸ். ஸைப் பார்த்ததும் நிர்வாகிகள் கண்கலங்க அதற்கு ஓ.பி.எஸ்., "நம் கட்சி நம் கையில்''’என்றவர் மேலும், "மேலிடம் எதிலும் தலையிடமாட்டோம் என்று உறுதி சொல்லிவிட்டார்கள். எல்லோரும் தைரியமாக இருங்கள். இன்னும் சில வாரங்களில் கட்சி நம் கட்டுப்பாட்டில் வந்துவிடும். டெல்லி விசிட் நமக்கு சாதகமாக அமைந்துள் ளது. அவர்களால் பொதுக்குழு நடத்த முடியாது. அதற்குள் கட்சி இரண்டாக உடையும். நம் கோடிக்கணக்கான தொண்டர்களின் உயிரோடு கலந்த எம்.ஜி.ஆர்., அம்மா வின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை அவர்களுக் குப் போகாது. மீண்டும் ஒன்றிணைந்து போராடி நம் கழகத்தையும் சின்னத்தையும் மீட்டெடுப்போம்''’என்றார்.
அப்போது சென்னை அ.தி.மு.க. தலைமைச் செயலகத்திலிருந்து சுற்றறிக்கை வருகிறது. அதில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் என்று அதைப் படித்துக் காட்டுகிறார். அதைச் சுட்டிக்காட்டி, “"நான் போகவா... வேண்டாமா''’என்க... கூட்டத்திலிருந்தவர்கள் "கட்டாயம் போவோம். நம் தலைமை அலுவலகம் யார் தடுக்க முடியும்?' என்றதும் "கட்டாயம் போகிறேன்'' என்றார்.
ஓ.பி.எஸ். ஆதரவாளர் ஒருவரை மடக்கி அடுத்து என்ன என கேட்டோம். "தென் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கவிருக்கிறார் ஓ.பி.எஸ். அதேசமயம் திருத்தணியில் சசிகலா சுற்றுப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். தினகரன் தனது முக்கிய நிர் வாகிகளோடு ஆலோசனையில் இருக்கிறார். எல்லாவற் றையும் கூட்டிக் கழித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும். இன்னும் சில வாரங்களில் தமிழகத்தில் அரசியல் பிரளயமே ஏற்படப்போகிறது. இது ஒரு சமுதாயத்திற்கு நடந்த அவமரியாதை மட்டுமல்ல. இவ்வளவுகாலம் கட்டிக் காத்த ஒற்றுமை, அதிகாரம், பலம், சமுதாய முன்னேற்றம், எதிர்காலம் என்று எல்லாம் அடங்கியிருக்கு இதை லேசில் விடமாட்டோம்''’என்றார் இறுக்கமான முகத்துடன்.