நிர்வாகத்தை விமர்சித்தால் பணியிடை நீக்கம், பணி நீக்கம் உள்ளிட்ட அஸ்திரங்களைக் காட்டி அச்சுறுத்துவதாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் பேசியபோது, "பெரியார் பல்கலையில் ஊழல் முறைகேடுகளும், ஊழியர் விரோதப் போக்கும் தலைவிரித்தாடுகிறது. நிர்வாகத்திற்கு பணிந்து நடந்தால் புரமோஷனும், எதிர் விமர்சனம் செய்தால் சஸ்பென்ஷன் ஆர்டரும் கொடுக்கின்றனர். கடந்த ஆண்டு இங்கு பதிவாளர் பொறுப்பில் இருந்த பேராசிரியர் கோபி, ஆராய்ச்சி மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர், சில மாதங்களில் மீண்டும் பணியில் சேர்ந்துவிட்டார்.
இதேபோன்ற பாலியல் புகாரில் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்ட உதவி பேராசிரியர் பிரேம்குமார் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் அவர் மீதான விசாரணை நடத்
நிர்வாகத்தை விமர்சித்தால் பணியிடை நீக்கம், பணி நீக்கம் உள்ளிட்ட அஸ்திரங்களைக் காட்டி அச்சுறுத்துவதாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் பேசியபோது, "பெரியார் பல்கலையில் ஊழல் முறைகேடுகளும், ஊழியர் விரோதப் போக்கும் தலைவிரித்தாடுகிறது. நிர்வாகத்திற்கு பணிந்து நடந்தால் புரமோஷனும், எதிர் விமர்சனம் செய்தால் சஸ்பென்ஷன் ஆர்டரும் கொடுக்கின்றனர். கடந்த ஆண்டு இங்கு பதிவாளர் பொறுப்பில் இருந்த பேராசிரியர் கோபி, ஆராய்ச்சி மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர், சில மாதங்களில் மீண்டும் பணியில் சேர்ந்துவிட்டார்.
இதேபோன்ற பாலியல் புகாரில் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்ட உதவி பேராசிரியர் பிரேம்குமார் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் அவர் மீதான விசாரணை நடத்தி முடிக்கப்படவில்லை. சஸ்பெண்டில் உள்ளவருக்கு முதல் 6 மாதத்திற்கு அவருடைய ஊதியத்தில் 50 சதவீதமும், அதன்பின்னும் சஸ்பெண்ட் காலம் நீட்டிக்கப்பட்டால் ஊதியத்தில் 75 சதவீதமும் வழங்க வேண்டும். அதையும் அவருக்கு வழங்காமல் இழுத்தடிக்கிறது பல்கலை நிர்வாகம். இந்நிலையில், தற்போதைய பதிவாளர் தங்கவேலை வாட்ஸ்ஆப் குழுவில் விமர்சனம் செய்ததாக பிரேம்குமாரிடம் விளக்கம் கேட்டு "மெமோ' அளித்துள்ளனர். முன்னாள் பதிவாளர் கோபியிடம் மென்மை காட்டும் இதே பல்கலைதான் பிரேம்குமாரிடம் கடுமை காட்டுகிறது.
பொருளியல் துறை உதவி பேராசிரியர் வைத்தியநாதன், பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கத் தலைவராக இருக்கிறார். ஏப்ரல் 9ஆம் தேதி, இந்தப் பல்கலையின் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வைத்தியநாதனும் கலந்துகொண்டார். அந்த ஆர்ப்பாட்டத்தில், பல்கலை முறைகேடுகளை விசாரிக்க தமிழக அரசு குழு நிர்ணயித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துப் பேசினார். அவர் பல்கலை சாசன விதிகளை மீறிவிட்டதாக விளக்கம் கேட்டு "மெமோ' கொடுத்துள்ளனர். அவரது விளக்கத்தை ஏற்காமல் சஸ்பெண்ட் செய்யத் திட்ட மிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. வைத்தியநாதனின் மனைவியும், பொருளியல் துறை இணைப் பேராசிரியருமான சுகிர்தாராணிக்கும் பேராசிரியர் பதவி உயர்வு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
பல்கலையை விமர்சித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததாகக்கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சக்திவேல், கிருஷ்ணவேணி, கனிவண்ணன், செந்தில்குமார் ஆகியோர்மீது புகார் நிரூபிக்கப்படாதபோதும் அவர்களுக்கு பணி வழங்காமல் இழுத்தடிக்கிறார் துணைவேந்தர் ஜெகநாதன். அதேபோல், அன்பரசி என்ற ஊழியரையும் முறையான விசாரணையின்றி டிஸ்மிஸ் செய்துவிட்டனர்.
தங்கவேல் என்பவரை முறைகேடாகப் பணி நியமனம் செய்துள்ளனர். அவர் மீது லட்சக்கணக்கான ரூபாய் ஊழல் புகார் இருந்தும் அவரை பதிவாளர் பொறுப்பில் வைத்திருக்கிறார்கள். சைக்காலஜி பேராசிரியர் கதிரவன், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பொறுப்பில் நான்கரை ஆண்டுக்கு மேலாகவும், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் பேராசிரியர் பிரகாஷ் 4 ஆண்டுக்கு மேலாகவும் இருக்கின்றனர். ஜால்ரா தட்டும் பேராசிரியர்களுக்கு இப்படி பதவி வழங்குகிறார்கள்'' எனக் கொந்தளிக்கிறார்கள்.
இது தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க (ஏ.யு.டி.) மாநிலத் தலைவர் திருநாவுக்கரசுவிடம் பேசினோம். "உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன், பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கத் தலைவர் என்ற ரீதியில்தான் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். நிர்வாக அனுமதி பெற்றபிறகே போராட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும். பல்வேறு ஊழல் புகார் பிரச்சனைகளில் வைத்தியநாதன் முக்கிய சாட்சியாக உள்ளார். பதிவாளர் தங்கவேல் மீதும் ஊழல் புகார்கள் உள்ள நிலையில், அவரே வைத்தியநாதனிடம் விளக்கம் கேட்டு "மெமோ' அளித்திருப்பது, சாட்சியை மிரட்டுவதாக உள்ளது. ஆசிரியர் சங்க பொதுச்செயலாளராக கருத்து தெரிவித்த உதவிப் பேராசிரியர் பிரேம்குமாரை விளக்கம் அளிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் சஸ்பெண்ட் செய்தனர். தங்கவேலை விமர்சனம் செய்ததாக அவரிடமும் விளக்கம் கேட்டிருப்பது கண்டிக்கத்தக்கது,'' என்றார்.
பெரியார் பல்கலை உதவிப் பேராசிரியர்கள் வைத்தியநாதன், பிரேம்குமார் ஆகி யோர் கூறுகையில், "எங்களை பழி வாங்கும் நோக்கத்துடன் பல்கலை நிர்வாகம் விளக்கம் கேட்டு 'மெமோ' அளித்துள்ளது. வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து விட்டு, உரிய விளக்கம் அளிப்போம்'' என்றனர்.
பெரியார் பல்கலை துணைவேந் தர் ஜெகநாதனிடம் கேட்டபோது, "பல்கலை சாசன விதிகளின்படி, நிர்வாக அனுமதி பெறாமல் போராட்டத்தில் கலந்து கொண்டதால் வைத்தியநாதனுக்கு "மெமோ' தரப் பட்டுள்ளது. முந்தைய குற்றச் சாட்டுகளில் விசாரணைக்கு அழைத்த போது அவர் சரியாக ஆஜராகவில்லை. உதவி பேராசிரியர் பிரேம்குமார் குறித்த விவகாரம், இப்போது சிண்டிகேட் குழுவில் உள்ளதால் அதைப்பற்றி பேசுவது சரியாக இருக்காது'' என்றார்.
ஊழியர்விரோதப் போக்கும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும், ஒரு கண்ணில் வெண்ணெய்யும் தடவுவதும் பெரியார் பெயரில் அமைந்துள்ள பல்கலை நிர்வாகத்திற்கு அழகல்ல என்பதை துணைவேந்தர் உணர வேண்டும்.