Advertisment

பாவிகளின் பிடியில் பணிக்கர் சமுதாயச் சொத்துகள்! விருதுநகர் வில்லங்கம்!

Panikar community's property in sinner's hold at Virudhunagar

Panikar community's property in sinner's hold at Virudhunagar

தாங்கள் சார்ந்துள்ள சமுதாய மக்களின் முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில்கொண்டு, எந்தப் பிரதிபலனும் பாராமல், தங்களின் சொத்துகளை பொதுக்காரியங்களுக்காக எழுதிவைத்த முன்னோர்கள், ஒவ்வொரு சமுதாயத்திலும் இருந்துள்ளனர். விருதுநகரில் அப்படியொரு நற்செயல், பணிக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நாராயணன் மற்றும் அவருடைய மகள் லட்சுமியம்மாள் மூலம் நடந்திருக்கிறது. மேலும், பணிக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த பரஞ்சோதி, மிக்கேல், முத்துக்காளி, மைதீன் ஆகியோரும் தங்களின் சொத்துகளைத் தந்துள்ளனர். அந்தவகையில் கிடைத்த சொத்துகளாக, விருதுநகர், திருமங்கலம், பாலையம்பட்டி, கோவிலாங்குளம், பெரிய கரிசல்குளம் ஆகிய ஐந்து ஊர்களிலும் கடைகள், வீடுகள், கல்யாண மண்டபம் மற்றும் காலியிடங்கள் உள்ளன. இவையனைத்தும் ராமநாதபுரம் சப்-கோர்ட் அளித்த ஸ்கீம் டிகிரி 15/1945 பிரகாரம், அந்த ஐந்து ஊர் பணிக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பாத்தியப்பட்ட பொதுச்சொத்துகளாக பராமரிக்கப்பட்டு, அச்சமுதாய முன்னேற்றத்திற்கான காரியங்கள் நடந்துவருகின்றன.

Advertisment

இந்நிலையில், முன்னாள் டிரஸ்டிகள் பொன்ராஜ், மோகன்தாஸ், துரைப்பாண்டி ஆகியோரும், சமுதாய உறுப்பினர் பெரியசாமியும் நம்மைச் சந்தித்து ""பரிபாலன டிரஸ்ட்டுங்கிற பேருல ஊரை அடிச்சு உலையில போடுற கொடுமைதான் இங்கே நடந்துக்கிட்டிருக்கு.. பொய்க் கணக்கு எழுதி லட்ச லட்சமா சுருட்டுறாங்க. தொடர்ந்து போராடிட்டு இருக்கோம். வேணும்னே கோர்ட், வழக்குன்னு இழுத்தடிக்கிறாங்க. எங்க சமுதாயத்துக்கு நியாயம் கிடைத்தபாடில்லை. டிரஸ்டிகளானதும் நெறய சொத்து சேர்த்துட்டாங்க. இந்த டிரஸ்டிகள் தெரிந்தே பாவம் செய்கிறார்கள். பாவிகளின் கையில் சமுதாயச் சொத்துகள் சிக்கியிருக்கின்றன''’என்று புகார் வாசித்தனர்.

Advertisment

என்ன விவகாரம் இது?

இலங்கையிலிருந்து வந்தவர்கள் ஈழவர் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் கேரளாவில் பணிக்கர் என்ற பெயரில் முற்பட்ட வகுப்பினராக உள்ளனர். தமிழ்நாட்டிலோ பணிக்கர் சமுதாயத்தினர் பிற்பட்ட வகுப்பினர். நெசவை பூர்வீகத் தொழிலாகக் கொண்ட பணிக்கர் சமுதாயத்தினர் விருதுநகர், திருமங்கலம், பாலையம்பட்டி, கோவிலாங்குளம், பெரிய கரிசல்குளம் ஆகிய ஐந்து ஊர்களில் வசிக்கிறார்கள். சுமா

Panikar community's property in sinner's hold at Virudhunagar

தாங்கள் சார்ந்துள்ள சமுதாய மக்களின் முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில்கொண்டு, எந்தப் பிரதிபலனும் பாராமல், தங்களின் சொத்துகளை பொதுக்காரியங்களுக்காக எழுதிவைத்த முன்னோர்கள், ஒவ்வொரு சமுதாயத்திலும் இருந்துள்ளனர். விருதுநகரில் அப்படியொரு நற்செயல், பணிக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நாராயணன் மற்றும் அவருடைய மகள் லட்சுமியம்மாள் மூலம் நடந்திருக்கிறது. மேலும், பணிக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த பரஞ்சோதி, மிக்கேல், முத்துக்காளி, மைதீன் ஆகியோரும் தங்களின் சொத்துகளைத் தந்துள்ளனர். அந்தவகையில் கிடைத்த சொத்துகளாக, விருதுநகர், திருமங்கலம், பாலையம்பட்டி, கோவிலாங்குளம், பெரிய கரிசல்குளம் ஆகிய ஐந்து ஊர்களிலும் கடைகள், வீடுகள், கல்யாண மண்டபம் மற்றும் காலியிடங்கள் உள்ளன. இவையனைத்தும் ராமநாதபுரம் சப்-கோர்ட் அளித்த ஸ்கீம் டிகிரி 15/1945 பிரகாரம், அந்த ஐந்து ஊர் பணிக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பாத்தியப்பட்ட பொதுச்சொத்துகளாக பராமரிக்கப்பட்டு, அச்சமுதாய முன்னேற்றத்திற்கான காரியங்கள் நடந்துவருகின்றன.

Advertisment

இந்நிலையில், முன்னாள் டிரஸ்டிகள் பொன்ராஜ், மோகன்தாஸ், துரைப்பாண்டி ஆகியோரும், சமுதாய உறுப்பினர் பெரியசாமியும் நம்மைச் சந்தித்து ""பரிபாலன டிரஸ்ட்டுங்கிற பேருல ஊரை அடிச்சு உலையில போடுற கொடுமைதான் இங்கே நடந்துக்கிட்டிருக்கு.. பொய்க் கணக்கு எழுதி லட்ச லட்சமா சுருட்டுறாங்க. தொடர்ந்து போராடிட்டு இருக்கோம். வேணும்னே கோர்ட், வழக்குன்னு இழுத்தடிக்கிறாங்க. எங்க சமுதாயத்துக்கு நியாயம் கிடைத்தபாடில்லை. டிரஸ்டிகளானதும் நெறய சொத்து சேர்த்துட்டாங்க. இந்த டிரஸ்டிகள் தெரிந்தே பாவம் செய்கிறார்கள். பாவிகளின் கையில் சமுதாயச் சொத்துகள் சிக்கியிருக்கின்றன''’என்று புகார் வாசித்தனர்.

Advertisment

என்ன விவகாரம் இது?

இலங்கையிலிருந்து வந்தவர்கள் ஈழவர் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் கேரளாவில் பணிக்கர் என்ற பெயரில் முற்பட்ட வகுப்பினராக உள்ளனர். தமிழ்நாட்டிலோ பணிக்கர் சமுதாயத்தினர் பிற்பட்ட வகுப்பினர். நெசவை பூர்வீகத் தொழிலாகக் கொண்ட பணிக்கர் சமுதாயத்தினர் விருதுநகர், திருமங்கலம், பாலையம்பட்டி, கோவிலாங்குளம், பெரிய கரிசல்குளம் ஆகிய ஐந்து ஊர்களில் வசிக்கிறார்கள். சுமார் 400 தலைக்கட்டுகள் உள்ள இச்சமுதாய மக்களில் பாதிப்பேர் கிறிஸ்தவர்கள். அடிப்படையில் உறவினர்கள் என்பதால், இந்துக்களும், கிறிஸ்தவர்களும் மதவேறுபாடின்றி சம்பந்தம் செய்துகொள்கின்றனர். அதனாலேயே, டிரஸ்ட் நிர்வகித்துவரும் சுமார் ரூ.500 கோடி பெறுமான பொதுச்சொத்துகள், இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பாத்தியப்பட்டவையாக இருந்துவருகின்றன.

மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துவரும் இச்சமுதாயத்தில் தற்போதைய டிரஸ்டிகளால் ஏதேதோ நடந்து புயல் வீசுகிறது. ‘இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பாத்தியப்பட்ட’ என்ற வார்த்தைகளை நீக்கிவிட்டு, ஸ்ரீமான் நாராயணமடம் பணிக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த சொத்துகளின் பரிபாலன டிரஸ்ட் என்று பெயரை மாற்றிவிட்டனர். ஸ்கீம் டிகிரி 15/1945 படி, 5 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, 3 இந்துக்கள், 3 கிறிஸ்தவர்கள் டிரஸ்டிகளாகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். முதல் 3 மாதங்களுக்கு ஒரு இந்து டிரஸ்டியும், அடுத்த 3 மாதங்களுக்கு ஒரு கிறிஸ்தவ டிரஸ்டியும் மேனேஜிங் டிரஸ்டியாக இருந்து சுழற்சி முறையில் நிர்வாகம் பண்ணவேண்டும். இதில் கொடுமை என்னவென்றால், கடந்த 18 ஆண்டுகளாக மகாசபைக் கூட்டத்தை நடத்தவில்லை.

2004ல் மேனேஜிங் டிரஸ்டியாகப் பொறுப்பேற்ற பழனிச்சாமி, 26-1-2023 அன்று இறக்கும்வரையிலும் அதே பொறுப்பினை வகித்தார். இந்த விதிமீறலுக்கு உடந்தையாக இந்து டிரஸ்டிகளான தாஸýம், ஜெயபாண்டியனும் இருந்துள்ளனர். பழனிச்சாமி இறந்தவுடன் ‘நானே மேனேஜிங் டிரஸ்டி’ என்று அந்த நாற்காலியில் தாஸ் அமர்ந்துகொண்டார். 500 கோடி ரூபாய் டிரஸ்ட் சொத்துகள் மூலம் மாதம்தோறும் சுமார் ரூ.10 லட்சம் வரை வருமானம் வருகிறது. நன்கொடை, அட்வான்ஸ், வாடகை அனைத்தையும் கையில் வைத்துக்கொண்டு ஏகபோகமாகச் செலவழிக்கிறார்கள். வழக்குச் செலவு, அரசுத்துறையினருக்குச் செலவு, இதர செலவு எனப் பல லட்சங்களை வாரியிறைக்கிறார்கள். இதெல்லாம் காசோலை மூலமாகவோ, சஊஎப பரிவர்த்தனையாகவோ நடப்பதில்லை. இந்து மற்றும் கிறிஸ்தவர் இணைந்து கையெழுத்திடும் ஜாய்ன்ட் அக்கவுன்ட் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. 2004ல் இருந்து எந்த வரவு செலவும் வங்கி மூலமாக வைத்துக்கொள்ளாமல் தன்னிச்சையாகவே செலவழிக்கிறார்கள். கட்டிடங்கள் கட்டும் செலவையும் இதேரீதியில் பண்ணுகிறார்கள்.

டிரஸ்ட் பதிவு செய்யும் நடைமுறை பொதுவாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. டிரஸ்ட்டை முறையாகப் பதிவு செய்துவிட்டால், எல்லாவற்றுக்கும் சரியான கணக்குக் காட்டியாக வேண்டும். அதனால்தான், பதிவு பண்ணாமலே, பணிக்கர் டிரஸ்ட்டை நடத்திவருகிறார்கள். இந்து உறுப்பினர்களிடம் டிரஸ்ட்டைப் பதிவு செய்யாததற்குக் காரணம் ஒன்றைச் சொல்லிவருகின்றனர். "நமது டிரஸ்ட் சொத்தில் இந்துக்களுக்கென்று கோவில் இருக்கிறது. இந்தச் சொத்து இந்துக்களுக்கு மட்டுமே பாத்தியமானதாக இருக்கவேண்டும். பதிவு செய்துவிட்டால், சமுதாயத்தின் பொதுப்பெயரால் கிறிஸ்தவர்கள் சம உரிமை கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களுடைய சொத்துகளைப்போல் முழுமையாக அனுபவிப்பார்கள்..'’என்று மதரீதியாக தூபம் போடுகின்றனர்..

ஒருகட்டத்தில் ‘"பணிக்கர் சமுதாயத்தைக் காப்போம்'’என்ற முழக்கத்துடன் டிரஸ்டிகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக விருதுநகர் வட்டாட்சியர் தலைமையில் 12-6-2018 அன்று நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில், ஸ்ரீமான் நாராயணமடம் டிரஸ்ட்டை விருதுநகர் மாவட்ட பதிவாளரிடம் பதிவு செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

2009ல் விருதுநகர் சார்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் "டிரஸ்ட்டின் பெயரில் மாற்றம் செய்தது ஏற்கத்தக்கதல்ல. பெயர் மாற்றம் செல்லாது. இது பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஒரு தரப்பினருக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். டிரஸ்டிகள் காலம் கடத்தவேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கு தொடுத்துள்ளது நன்கு தெளிவாகிறது'’என்று தாஸ் உள்ளிட்ட இந்து டிரஸ்டிகள் மூவருக்கும் குட்டு வைத்துள்ளது. ஆனாலும், டிரஸ்ட்டை பதிவு செய்யாமல் இழுத்தடிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் தாஸின் உடன்பிறந்த தம்பி பகத்சிங் மூலம் 2023ல் மகாசபையைக் கூட்டவேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. உறுப்பினர்கள் யாரும் கேள்வி கேட்டால் ‘கோர்ட்டில் வழக்கு இருக்கிறது’ என்று இதைச் சுட்டிக்காட்டியே சமாளித்துவிடுகிறார்கள். இந்த நிலையில்தான், "பணிக்கர் சமுதாயப் பொதுச் சொத்துகளின் வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.1.5 கோடிக்கு மேல் வருகிறது. முறைகேடுகள் நடக்கின்றன. நடவடிக்கை எடுக்கவேண்டும்'’என்று 212 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இந்திய வருமானவரித்துறைக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

இன்றைய டிரஸ்டிகள் செய்துவரும் முறைகேடுகளுக்குச் சின்னதாக ஒரு எடுத்துக்காட்டு. பணிக்கர் சமுதாய டிரஸ்ட், ஸ்ரீமான் நாராயணமடம் காம்ப்ளக்ஸ் என்ற பெயரில் 8 கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளது. அந்தக் கட்டிடத்துக்கு வரிக்குறைப்பு செய்வதற்காக விருதுநகர் நகராட்சி அலுவலகத்துக்கு ரூ.4 லட்சம் தந்ததாக, இனாம் கணக்கு என்ற தலைப்பில் பற்று கணக்கு வவுச்சர் எழுதி கையெழுத்தும் போட்டிருக்கிறார் மேனேஜிங் டிரஸ்டி தாஸ். இதுகுறித்து விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் முன்னாள் டிரஸ்டிகள் விசாரித்தபோது, ரூ.50000 தந்துவிட்டு ரூ.4 லட்சத்துக்குப் பொய்க்கணக்கு எழுதியிருக்கிறார்கள்' என்று கூலாகச் சொல்லியிருக்கின்றனர்.

முன்னாள் டிரஸ்டிகள் சுமத்தும் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை, ஸ்ரீமான் நாராயணமடம் பணிக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த சொத்துக்களின் பரிபாலன டிரஸ்ட்டின் மேனேஜிங் டிரஸ்டி தாஸிடம் முன்வைத்தோம்.

"பெருவாரியான சொத்துகளை நாராயணனும் அவருடைய மகள் லட்சுமி அம்மாளும்தான் பணிக்கர் சமுதாயத்திடம் ஒப்படைத்தார்கள். ஸ்கீம் டிகிரி பிரகாரம், இந்தச் சொத்துகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தில், நிர்வாகச் செலவு போக மீதியிருக்கும் பணத்தில் ஐந்தில் ஒரு பங்கினை, சமுதாயக் கோவிலில் பூஜை, அன்னதானம் போன்றவற்றை நடத்துவதற்காகச் செலவு செய்கிறோம். 1948-49 காலக்கட்டத்திலேயே பிரச்சனை தொடங்கிவிட்டது. அப்போது நிர்வாகிகளாக இருந்த கிறிஸ்தவ டிரஸ்டிகள், நாராயணமடம் என்ற பெயரை நீக்கிவிட்டு, இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பாத்தியப்பட்ட சொத்துகள் என்று மாற்றிவிட்டார்கள். சர்ச் கட்டவேண்டுமென்று பிரச்சனை செய்தார்கள். ஸ்கீம் டிகிரி பிரகாரம், கிறிஸ்தவர்களுக்கென்று எதுவும் கிடையாது. அதனால், நீதிமன்றத்தில் முறையிட்டு பரிகாரம் தேடிக்கொள்ளுங்கள் என்று கூறினோம். அவர்களோ நீதிமன்றத்தை அணுகாமல், டிரஸ்டிகளுக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தினார்கள். காவல்நிலையம் சென்றார்கள்; வட்டாட்சியர் அலுவலகம் போனார்கள். வருமானவரித்துறைக்கு புகார் அனுப்பினார்கள். மதப்பிரச்சனையைக் கிளப்புகிறார்கள். இந்துக்களோ, கிறிஸ்தவர்களோ உறுப்பினர்கள் அனைவரும் பணிக்கர் சமுதாயத்தினர்தான். அதனால்தான், டிரஸ்ட்டின் பெயரில் இருந்த ‘இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பாத்தியப்பட்ட’ என்றிருந்ததை எடுத்துவிட்டு, பெருவாரியான சொத்துகளைக் கொடுத்தவர் என்பதால், ‘ஸ்ரீமான் நாராயணமடம்’ என்ற பெயரைச் சேர்த்தோம். டிரஸ்ட்டுக்கு ரூ.500 கோடி சொத்தெல்லாம் இல்லை. சுமார் ரூ.100 கோடிக்குத்தான் இருக்கும்.

இது பப்ளிக் டிரஸ்ட் கிடையாது. கோவில் செலவு, சமுதாயக் குழந்தைகளுக்கு படிப்புச் செலவு, ஈமக்கிரியை போன்ற காரியங்களுக்குச் செலவழிக்கிறோம். இதற்கெல்லாம் கணக்கு எழுதுகிறோம். உள் தணிக்கை உண்டு.

டிரஸ்ட்டை பதிவு பண்ணவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. சட்டமீறலாக டிரஸ்ட் நடத்தினால், கட்டிடம் கட்டி, மண்டபம் கட்டி வாடகைக்கு விடமுடியுமா? அரசுத்துறையினர் விட்டுவைப்பார்களா? இது சிவன் சொத்து. இங்கே கைவைப்பவர்கள் குடும்பம் விளங்காது. மகாசபைக் கூட்டம் நடத்தினால் பிரச்சனை வரும். கைகலப்பு நடக்கும். உறவினர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வார்கள். அதனால்தான் நடத்தவில்லை. நீதிமன்றத்தின் மூலம் ரிசீவர் நியமிக்கப்பட்டு மகாசபைக் கூட்டத்தையும், டிரஸ்டிகள் தேர்தலையும் நடத்துவதே பாதுகாப்பானது''’என்றவரிடம்...

"விருதுநகர் நகராட்சிக்கு ரூ.4 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகக் கணக்கு எழுதியிருக்கின்றீர்களே?''’எனக் கேட்டோம்.

"ஆமாங்க.. இன்னைக்கு உள்ள காலகட்டத்துல என்ன நடக்குது? சில விஷயங்களைச் செய்துதான் ஆகவேண்டும். காம்ப்ளக்ஸில் உள்ள 8 கடைகளுக்கு சதுரஅடியைக் கணக்கிட்டு 8 லட்ச ரூபாய் தீர்வை போடுவோம் என்றார்கள். தீர்வையைப் பாதியாகக் குறைப்பதற்காக ஒரு கடைக்கு ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.4 லட்சம் கொடுத்தோம். அதனால்தான், ஆறு மாதத் தீர்வையாக ரூ.67,000 செலுத்துகிறோம். அவர்கள் கேட்ட ரூ.4 லட்சத்தைக் கொடுக்காவிட்டால், ‘கமர்சியல்’ என்று குறிப்பிட்டு, தீர்வையை டபுள் மடங்கு ஆக்கியிருப்பார்கள். லஞ்சம் கொடுத்ததை உள்ளது உள்ளபடி கணக்கில் எழுதியிருக்கிறோம்''’என்று விளக்கமளித்தார்.

இந்திய அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் பணிக்கர் சமுதாயச் சொத்துகளை நிர்வகிக்கும் டிரஸ்ட்டை கொண்டுவந்து, முறையாகக் கணக்கு எழுதி, இந்து மற்றும் கிறிஸ்தவ பணிக்கர் சமுதாய மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில், இந்த டிரஸ்டிகளுக்கு உடன்பாடு இல்லாதது ஏனோ?

nkn290624
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe