ஊராட்சிகள். இணைப்பு! மக்கள் எதிர்ப்பு!

ss

மிழகத்தில் கூடுதலான மாநகராட்சிகளை உருவாக்கவும், நகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆங்காங்கே உள்ள மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறார்கள்.

pp

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியுடன் குப்ப நாயக்கன் பாளையம், ஆண்டிகுளம் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படு வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். அதேபோல் வேதாரண்யம் நகராட்சியுடன் கடிவயல் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி தலைவர் வைத்தி லிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். விருதுநகர் நகராட்சியுடன் சிவஞானபுரம் ஊராட்சியை இணைப்பதை எதிர்த்து சின்னமூப்பன்பட்டி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ. சீனிவாசனை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை தெரிவித்துள்ளனர். திருத்தணி நகராட்சியுடன் கார்த்திகேயபுரம் ஊராட்சியை இணைக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்து திருத்தணி அரக்கோணம் நெடுஞ்சாலையில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை ம

மிழகத்தில் கூடுதலான மாநகராட்சிகளை உருவாக்கவும், நகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆங்காங்கே உள்ள மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறார்கள்.

pp

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியுடன் குப்ப நாயக்கன் பாளையம், ஆண்டிகுளம் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படு வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். அதேபோல் வேதாரண்யம் நகராட்சியுடன் கடிவயல் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி தலைவர் வைத்தி லிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். விருதுநகர் நகராட்சியுடன் சிவஞானபுரம் ஊராட்சியை இணைப்பதை எதிர்த்து சின்னமூப்பன்பட்டி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ. சீனிவாசனை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை தெரிவித்துள்ளனர். திருத்தணி நகராட்சியுடன் கார்த்திகேயபுரம் ஊராட்சியை இணைக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்து திருத்தணி அரக்கோணம் நெடுஞ்சாலையில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். வந்தவாசி நகராட்சி யுடன் பாதிரிக்குப்பம் கிராம ஊராட்சியை இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்துள்ள னர். ராமேஸ்வரம் நகராட்சியுடன் தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய ஊராட்சிகளை இணைப்பதற்கு தங்கச்சிமடம் பாம்பன் ஊராட்சி களைச் சேர்ந்த மீனவ மக்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பேட்ரிக், மீனவர் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் சேனாதிபதி தலைமையில் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இப்படி தமிழகமெங்கும் போராட்டங்கள் நடக்கின்றன.

"மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டம், பசுமை வீடுகள், கலைஞர் வீடுகள் போன்ற திட்டங்கள் கிராமசபைத் தீர்மானத் தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தகுதி அடிப்படையில் கிடைக்கும். ஆனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இணைத் தால் இதுபோன்ற சலுகைகள் கிடைக்காது. மேலும் வீட்டு வரி, தண்ணீர் வரி ஆகியவை உயரும். எங்கள் தேவைகளை கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் வார்டு பிரதிநிதிகளைச் சந்தித்துப்பேசி செய்துகொள்ள முடியும். ஆனால் நகராட்சி, மாநகராட்சியில் இதுபோல் சந்தித்துப்பேச வாய்ப்பு கிடைக் காது'' என்கிறார் பொன்னேரி இந்திரபால்.

"ஆயிரக்கணக்கான கிராம ஊராட்சிகள் இன்னும் தன்னிறைவு பெறவில்லை. இந்த நிலையில் கிராம ஊராட்சிகளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைத்தால் எங்கள் வாழ்க்கை பின்தங்கிய நிலையிலேயே இருக்கும். ஏற்கெனவே பெரிய ஊராட்சிகளாக இருக்கும் பகுதி களை தனித்தனி கிராம ஊராட்சி களாக பிரிக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவர்கள் கோரிக் கையை நிறைவேற்றும்விதமாக அதிக ஊராட்சிகளை உருவாக்கி னால் மட்டுமே கிராமங்கள் வளம் பெறும்'' என்கிறார் செங்கமேடு முன்னாள் வார்டு உறுப்பினர் வேல்முருகன்.

oo

தங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாகப் பிரித்துத் தரக்கோரி நீதிமன்றத்தின் கதவு களைத் தட்டிவருகிறார் திண்டி வனம் அருகே நெடி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன். "மேழிய னூர் ஊராட்சியில் எங்கள் கிராமம் உள்ளது. எங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் முதல் முதல்வர் வரை பல்வேறு மனுக்கள் மற்றும் ஊராட்சி தீர்மானங்கள் அனுப்பியும் எங்கள் ஊராட்சி பிரிக்கப்படவில்லை. இதையடுத்து 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இரண்டு வார காலத்திற்குள் நெடி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இன்றுவரை அதிகாரிகள் அதை செயல்படுத்தவில்லை'' என குற்றஞ்சாட்டுகிறார் வெங்கடேசன் "கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்திலுள்ள பெ.பொன் னேரியை பெண்ணாடம் பேரூராட்சியில் இணைக்க அரசு தீவிரங்காட்டி வருகிறது. இவ்வூரின் மக்கள் தொகையில் சுமார் 85 சதவீதம் பேர் நூறு நாள் வேலைத்திட்டத்தில் உள்ளனர். நகரத்தோடு இணைக்கப்படும் போது இந்த வாய்ப்பை இவர்கள் இழப்பார்கள். இதையெல்லாம் உணர்ந்துதான் கிராம சபையில் 'பேரூராட்சியோடு இணைய விருப்பம் இல்லை' என்று தீர்மானம் போட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அந்தத் தீர்மானத்தை குப்பையில் போட்டுவிட்டது அரசு. தொடர்ந்து தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஊராட்சி மன்றத் தலைவராக வருவது சாதி இந்துகளுக்கு நெருட லாக இருப்பதுவும் இப்பிரச்ச னைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இவை அனைத்தும் எளிய மக்களின் அதிகாரத் தையும், வாழ்வாதாரத்தை யும் பலியாக்குகின்றன'' என்கிறார் சமூக ஆர்வலர் ஸ்டாலின் "சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செங் கோட்டையன், "நகராட்சி, பேரூராட்சிகளில் ஊராட்சி களை இணைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனை எந்த அடிப்படை யில் செயல்படுத்துகிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் கே.என். நேரு, "தமிழகத்திலுள்ள ஊராட்சிகளில் 371 ஊராட்சி கள் மட்டுமே நகர அமைப்பு களுடன் இணைக்கப்படு கின்றன. இணைப்பதில் விருப்பமில்லை என்றால் அதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் 120 நாட்களுக் குள் எழுத்து மூலம் புகார் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். தொளார் ஊராட்சியில் 5 கிராமங்கள் அடங்கியுள் ளன. அதில் செங்கமேடு கிராமத்தை தனி ஊராட்சி யாக அறிவிக்கக்கோரி மனு அனுப்பியுள்ளோம், அதை நிறைவேற்ற வேண்டும்'' என்கிறார் செங்கமேடு கந்தசாமி. மக்களின் தேவைக்கேற்ப புரிதலோடு அரசாங்கம் செயல்படுவதே இவ்விவ காரத்தில் மக்களுக்கும் அரசுக்கும் நன்மை பயக்கும்!

nkn220125
இதையும் படியுங்கள்
Subscribe