புதுச்சேரி முதல்வர் ரங்க சாமி பெயரைப் பயன்படுத்தி தொழி லதிபர்கள், ஒப்பந்ததாரர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்துள்ளது. இதுகுறித்து எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் வைத்திய நாதன், பி.ஜே.பி. கல்யாணசுந்தரம், தி.மு.க. சம்பத், சுயேட்சை எம்.எல். ஏ.க்கள் சிவசங்கர், பிரகாஷ்குமார் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை நேரடியாக சந்தித்து முறையிட்டு நடவடிக்கை எடுக்க வைத்துள்ளனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மிகவும் எளிமையானவர். எனவே முதல்வரின் எளிமை யைப் பயன்படுத்தி பல்வேறு நபர்கள் கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் என்று பணம் சம்பாதிப்பதில் இறங்குகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pondy_45.jpg)
இதுகுறித்து நாம் விசாரணை யில் இறங்கினோம். ரெட்டியார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கபிலன். இவர், கருங்கல் பிசினஸில் ஈடுபடும் கருணாகரன் என்பவரிடம் 20 லட்சம் மதிப்பிலான தனது வீட்டுப்பணியைச் செய்யுமாறு கொடுத்துள்ளார். அவர் வேலையை முறையாக செய்யாததால் வேறொரு வரை வைத்து வேலை செய்ய முற்படுகிறார் கபிலன். அப்போது கருணாகரன், ராம்முனுசாமி என்பவர் மூலம் கபிலனை மிரட்டி சுமார் 20 லட்சம் ரூபாய்வரை பணம் பெற்றுள்ளார். மேலும் பணம் கேட்டுக் கொடுக்க மறுத்ததால், கபிலனிடம் முன்னர் வேலை செய்தவர்களையெல்லாம் கபிலனுக்கு எதிராகக் காவல்துறையில் புகாரளிக்கச் செய்யும் அளவுக்கு சென்றுள்ளனர். அதோடு, முதல்வருக்கு நெருக்கமானவர்களாகக் கூறியும் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்காவிட்டால் உங்களைப் பற்றி போஸ்டர் அடித்து ஒட்டுவோம், பத்திரிகைகளில், மீடியாக்களில் செய்தி வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அதோடு, கபிலனின் மகனுக்கு திருமணம் நடத்தவிருந்த நிலையில், திருமணத்திற்கு முதல் நாளில் சந்தித்து, திருமணத்தையே நிறுத்திவிடுவோம் என்றெல்லாம் மிரட்டியிருக்கிறார்கள். இதன்பிறகே எம்.எல்.ஏ.க்கள் கவனத்திற்கு இந்த பிரச்சனையைக் கொண்டுசென்றுள்ளார்.
இப்படி பல்வேறு நபர்கள், ஒப்பந்தக்காரர்களையும், தொழிலதிபர்களையும், புதிதாக வீடு கட்டுபவர்களையும் மிரட்டிப் பணம் பறிக்கும் சம்ப வங்கள் தலையெடுத் துள்ளன. இந்த சம்பவங்கள் மேற்படி எம்.எல்.ஏ.க்கள் கவனத்திற்கு சென்றதும் அவர்கள் ஐந்து பேரும் சட்டமன்றத்திற்கு சென்று முதல்வர் ரங்கசாமியை நேரடியாக சந்தித்து தகுந்த ஆதாரங்களுடன் மிரட்டல் பேர்வழிகள் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதனிடம் கேட்டோம். "முதல்வர் எளிமையானவர், எல்லோரையும் சந்திப்பவர் என்பதாலேயே அவரோடு யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இந்த எளிமையை சாதகமாகப் பயன்படுத்தி சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். எனக்கு தெரிந்த கபிலன் என்பவரின் மகன் திருமணத்தை நிறுத்தும் அளவிற்கு கட்டப்பஞ்சாயத்து கும்பலால் மிரட்டப்பட்டுள்ளார்.
இவ்விவகாரம், மக்கள் பிரதிநிதிகளான எங்கள் கவனத்திற்கு வந்தது. இதை நாங்கள் எப்படி கண்டுகொள்ளாமல் இருக்க முடியும்? இதுகுறித்து முதல்வரிடம் புகாரளிக்க முடிவு செய்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் எங்களிடம் நேரடியாகப் பேசி, இதை பெரிது படுத்த வேண்டாம் என்று கூறினார் கள். ஆனாலும் இந்த நிலை இனிமேலும் தொடரக்கூடாது என்பதற்காக காவல்துறை அதிகாரி களிடம் முறைப்படி தெரிவித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஐந்து எம்.எல்.ஏ.க் களும் ஒன்றுசேர்ந்து முதல்வரைச் சந்தித்து தகுந்த ஆதாரங்களுடன் கட்டப்பஞ்சாயத்து நபர்கள் குறித்து எடுத்துக் கூறினோம். 'நான் அப் படிப்பட்ட யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டேன். எனக்கு இரண்டு உதவியாளர்கள் மட்டுமே உள்ளனர். மற்றபடி யார் எனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி னாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை' என்று கூறிய முதல்வர், உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
ஆர்வ மிகுதியால் முதல்வ ருடன் நின்று பலதரப்பட்டவர்கள் படம் எடுத்துக் கொள்கிறார்கள். அதில் சிலர் முதல்வர் பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். முதல்வருடன் எடுத்துக்கொண்ட படத்தை பெரிதாக விளம்பரப்படுத்துவது, அதைக் காட்டி அதிகாரிகளை, தொழிலதிபர்களை, ஒப்பந்ததாரர்களை மிரட்டி பணம் பறிப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற போக்கு களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தான் முதல்வரை சந்தித்து முறையிட்டோம். அவரும் நடவடிக்கை எடுத்துள்ளார்'' என்றார்.
ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்த கபிலன் என்பவரை மிரட்டி பணம் கேட்டதாக ராம் முனுசாமி மற்றும் அவரது நண்பர் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டு அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது. "முதல்வர் எளிமையாக இருப்பதில் தவறில்லை. அதே நேரத்தில் நல்லவர், கெட்டவர் யாரென்பதை ஆராய்ந்து, தன்னை அணுக அனுமதி அளிக்கவேண்டும். மேலும் தன் பெயரைப் பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லா மல் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இதுபோன்று முதல்வர் பெயரை கூறி மோசடி வழியில் பணம் பறிக்கும் நோக்கத்தில் ஈடுபடுபவர் களுக்கு முதல்வர் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்'' என்கிறார்கள் எம்.எல்.ஏ.க் கள்.
-சக்கரை
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/pondy-t.jpg)