கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தர்மபுரம் முதல் நிலை ஊராட்சியில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஊராட்சித் தலைவராக இருந்தவர் குமரி மாவட்ட பா.ஜ.க. முன்னாள் தலைவர் கணேசன். இவரது பதவிக்காலத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, வீட்டு வரி, சாலை மேம்படுத்துதல், தெரு விளக்கு எனப் பல்வேறு பணிகளில் முறைகேடுகள் செய்வதாக அப்போதைய வார்டு உறுப்பினர்களும், அரசியல் கட்சியினரும் புகார்கள் அனுப்பியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்நிலையில் கடந்த முறை, சுழற்சி முறையில் தர்மபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் கணேசன் தனது மனைவி ரெங்கநாயகியை நிறுத்தி தலைவராக்கினார். இவர் பதவியிலிருந்த 5 ஆண்டுகளில், நான்கரைக் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக துறை ரீதியாக நடந்த தணிக்கையில் தெரிய வந்திருப்பதால் அவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறி

இதுகுறித்து தர்மபுரம் ஊராட்சி மா.கம்யூனிஸ்ட் மா.செ. குழு உறுப்பினர் கண்ணன், "தர்மபுரம் ஊராட்சியில் அவர் பதவியேற்ற முதல் ஆண்டான 2020-21-ல் ரூ.70,84,118-ம், அதன்பிறகு தொடர்ந்து நான்கு ஆண்டு களாக சேர்த்து ரூ.3,52,18,876 எனவும், ஆக 5 ஆண்டுகளும் சேர்த்து ரூ.4,23,02,994 அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார். இதை ஊராட்சியில் நடத்தப்பட்ட ஆடிட்டிங் அறிக்கை சொல்கிறது. முதல் தணிக்கை யின் படி ஊழல் தொகை ரூ.70,84,118-ஐ வசூலிக்க ஊராட்சித்தலைவிக்கு 4.1.2023 அன்று தண்டத்தீர்வை நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு ரூ.3,52,18,876-ஐ வசூலிக்க 22.8.2024 அன்று இரண்டாவது தண்டத்தீர்வை நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/19/dharmapuram1-2026-01-19-17-13-11.jpg)
இந்நிலையில் அதிகாரிகள் ஆலோசனைப் படி ரெங்கநாயகி மேல்முறையீடு செய்ய, இராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலு வலர் விசாரணை மேற்கொண்டு, ரெங்கநாயகி யின் ஊழல்களை, போலி பில்கள், வவுச்சர்கள் தயாரித்து, ஊழல் தொகையை குறைத்துக் காட்டியுள்ளனர். அதன்படி, ஊழல் கணக்கீட் டில் 2.77 கோடி ரூபாய் வெட்டிக் குறைக்கபட்டு, மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையினை ஏற்றுக்கொண்டார் ஆட்சியர். இதனால் அந்த அதிகாரிகளும், ஊராட்சித் தலைவியும் பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் ரெங்கநாயகியின் பதவிக்காலம் முடிவதற்கு ஒருநாள் முன்பு, அதாவது 4.1.2025 அன்று, அரசு விதிகளுக்கு புறம்பான செயலால் ஊராட்சிக்கு ஏற்படுத்திய நிதியிழப்புத் தொகையை 15% வட்டியுடன் கட்ட மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டார். ஆனால் 7 மாதங்களாகியும் அவர் கட்டவில்லை, அரசும் கண்டுகொள்ளவில்லை'' என்றார்.
மா.கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.பி. பெல் லார்மின் கூறும்போது, "பா.ஜ.க. ஊராட்சித் தலைவியின் இந்த மெகா ஊழலில் உச்சபட்ச அதிகாரிகளுக்கும் தொடர்பிருக்கிறது. அதனால் தான் ஊராட்சித் தலைவியை காப்பாற்றியிருக் கிறார்கள். ஊராட்சித் தலைவியின் வருமானத் துக்கு அதிகமாக சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும். தணிக்கையில் கண்டுபிடித்த ஊழல் தொகையினை வட்டியுடன் செலுத்த ஆட்சியர் சர்சார்ஜ் நோட்டீஸ் கொடுத்தும் 7 மாதங்களாகியும் செலுத்தவில்லை. இதை கண்டித்து 20க்கும் மேற்பட்ட போராட்டங் களை காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் நடத்தியுள் ளது. கடந்த 8ஆம் தேதி ஆட்சியர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் கூட நடத்தினோம். இதுவரை ஊராட்சித்தலைவி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சியர் ஆணையிட்டும், அதை செயல்படுத்தவிடாத அதிகாரம் படைத்தவர்கள் யார்? உடனடியாக ஊழல் பணத்தை பறிமுதல் செய்வதோடு, அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/19/dharmapuram2-2026-01-19-17-13-25.jpg)
தர்மபுரம் ஊராட்சி யை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் சிலர், "15 உறுப்பினர்களை கொண்ட இந்த ஊராட்சி யில், ஊராட்சித் தலைவியின் கணவர் கணேசன் தலைவராக இருந்த காலத்தில் செய்த முறைகேடுகளை ஆதாரத் துடன் கொடுத்தும் அந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்க வில்லை. இப்போது அவர் மனைவி ரெங்க நாயகி செய்த முறைகேடுகள் மீதும், இப்போ துள்ள தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்க வில்லை. மனைவி பொறுப்பிலிருந்தபோது, கணேசன் தான் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு அதிகாரம் செலுத்தினார். எந்த வார்டிலும் பணிகள் நடக்காமலேயே நடந்ததாகக் கணக்கு காட்டினார்.
கொரோனா காலகட்டத்தில் முறை கேட்டில் உச்சத்தை தொட்டார். அதன்பின்னர் ஊழல் முறைகேடுகள் வெளிவர, மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தோம். புகாரின்பேரில் உடந்தையாக இருந்த சிலரை இடமாற்றம் செய்ததோடு, ஊராட்சித்தலைவிக்கு காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்தார். பின்னர் கோர்ட் மூலம் மீண்டும் அந்த அதிகாரத்தை பெற்றார். பா.ஜ.க. எம்.எல்.ஏ. காந்தியுடன் நெருக்கத்தை வைத்துக்கொண்டு, அவர்கள் மூலம் அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டார் கணேசன். இப்போது ரெங்கநாயகியை எதிர்த்த 3 உறுப்பினர்கள்மீது பொய் கேஸ் போட்டதில் தற்போது அவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள்'' என்றனர்.
இதுகுறித்து ரெங்கநாயகியிடம் பேசிய போது, "தணிக்கை அறிக்கைக்கு பிறகு என்னு டைய விளக்கத்தை ஏற்று மேல் விசாரணை செய்து, நியாயமாக உத்தரவு வழங்கப்பட்டுள் ளது'' என முடித்துக்கொண்டார்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us