னுஷ் நடித்த "அசுரன்' படம் பஞ்சமி நிலமீட்பு குறித்துப் பேசியது. இதைப் பார்த்து விட்டு, “"அது படம் அல்ல, பாடம்' என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டார். “"அந்தப் பாடத்தை ஏற்று முரசொலி அலுவலகத் திற்காக வளைத்துப்போட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களுக்கே ஒப்படைப்பார் என்று நம்பு வோம்' என்று அந்தப் பதிவிற்கு பதிலளித்து விவாதத்தைக் கிளப்பிவிட்டார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.

முரசொலி அலுவலகத்துக்கான 1985 ஆம் ஆண்டு பட்டா நகலை ஸ்டாலின் வெளியிட்ட போதும், மூலப்பத்திரத்தை வெளியிடச் சொல்லி ராமதாஸ் தீவிரப்படுத்தினார். பா.ஜ.க.வும் தீவிரமாகக் கையிலெடுத்துக்கொண்டது. பா.ஜ.க. மாநிலச்செயலாளர் சீனிவாசனும், தடா பெரிய சாமி என்பவரும் கொடுத்த மனுவின்பேரில், நவம்பர் 19-ல் விசாரணையைத் தொடங் கியது தேசிய தாழ்த்தப்பட் டோர் ஆணையம்.

mm

அரசு, தி.மு.க. மற்றும் மனுதாரர் தரப்புகளை ஆணை யத்தின் துணைத்தலைவர் முருகன் விசாரித்தார். இந்த விசாரணையில், சென்னையில் பஞ்சமி நிலமே கிடையாது என்று அரசுத்தரப்பு முடித்துக்கொண் டது. பா.ஜ.க. சீனிவாசன், “"முரசொலி இருக்கும் இடம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சொந்தமான இடம் என்று தெரியவருகிறது. ஆகையால், மனுவை விசாரித்து முடிவெடுக்க வேண்டும்' என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisment

அடுத்ததாக பேசிய தடா பெரியசாமி, “சென் னையில் பஞ்சமி நிலமே இல்லை எனச்சொல்லும் இதே அரசுதான், மதராஸ் (வடக்கு) செங்கல்பட்டு என 1932 கெசட்டில் குறிப்பிட்ட ஆவணத்தை, ஆர்.டி.ஐ. மூலம் தந்திருக்கிறது. அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், நெற்குன்றம் வரை ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப் பட்ட ‘கண்டிஷனல் அடமான நிலங்கள்’-அதாவது பஞ்சமி நிலங்கள் உள்ளன என கொடுக்கப்பட்டுள் ளது. முரசொலி அலுவலகம் இருக்கும் இடத்தில் தான், 1973 வரை ஆதிதிராவிடர் விடுதி செயல் பட்டுள்ளது. அதேபோல், 1973-ல் தி.மு.க. ஸ்ரீபெரும் புதூர் முன்னாள் எம்.பி. சிவசங்கரன் அங்கு இரவுநேர பாடசாலை நடத்தியுள்ளார். எனவே, இதில் முறையாக விசாரித்தால் உண்மை தெரியவரும்'' என்று கூறியுள்ளார்.

இறுதியாக பதிலளித்த தி.மு.க. தரப்பு, "இது பற்றி ஆதிதிராவிடர் ஆணையம் விசாரிக்க அதி காரமில்லை' என வாதத்தை முடித்துக்கொண்டது. ஆணையம், விசாரணையை ஒத்திவைத்தது.

இதற்கிடையே, ஆணையத்தில் விசாரிப்பவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். அரசியல் காழ்ப்புணர்ச்சி யுடன் செயல்படுகிறார். அதனால், அவர் விசாரிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார் தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி. நீதிமன்றம் இதனை ஏற்றுக் ppகொண்டது. இந்நிலையில், 27-ந் தேதி நடைபெற்ற விசாரணையில் கலந்துகொண்ட தி.மு.க. தரப்பு, “""அஞ்சுகம் பதிப்பகத்திடம்தான் வாடகைக்கு இருக் கிறோம். இதில் எங்களுக்கு சம்மந்தமில்லை. மேலும், மனுதாரர் சீனிவாசன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதால், வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டது.

Advertisment

தடா பெரியசாமியோ, ""நான் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவன்தான். நானும் மனு செய்துள் ளேன்'' என்று கூறிய பிறகு, மீண்டும் புதுப்பித்த மனு வாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்போது பேசிய தடா பெரியசாமி, ""அஞ்சுகம் பதிப்பகத்திடம் வாட கைக்கு இருந்தால், அதற்கான ஆவணங்களை தி.மு.க. தரப்பு சமர்ப்பிக்க வேண்டும். முரசொலி இருக்கும் இடத்தில் ஆதிதிராவிடர் விடுதி இருந்துள்ளது எனும் போது, இவர்கள் முழு ஆதாரத்தையும் மறைப்பது தெரிகிறது'' என்றார். இதையடுத்து, விசாரணையை தேதி அறிவிக்காமல் ஒத்திவைத்தது ஆணையம்.

ஒரு நிலத்தைப் பற்றிய முழுவிவரத்தையும் அறியவேண்டும் என்றால், முதற்கட்டமாக ‘அ’ பதிவு பார்க்கவேண்டும். அதில்தான், குளமா, மனையா என்பது தெரியவரும். எஸ்.எல்.ஆர்., டி.எஸ்.எல்.ஆர்., ரீpp செட்டில் மெண்ட் ரெக்கார்ட், கெசட் ஆகியவற்றை வைத்து ஒரு அரசுநிலம் இருந்ததைக் கண்டு பிடிக்கமுடியும். அதற்கான விவரங்கள் இல்லை யென அரசு அதிகாரிகளே கூறுகிறார்கள்.

முரசொலி கட்டிடம் இருக்கும் இடத்தில் தான், 1971 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்த லுக்கான பூத் செயல்பட்டதாகவும், ஆதி திராவிடர் விடுதி இருந்ததாகவும், வேப்பேரி சிலேட்டர் விடுதியில் தங்கியிருந்த மாணவர் களை இந்த விடுதிக்கு மாற்றியதாகவும் தகவல் கிடைத்தது. அதன்படி, 1972-73-ல் அந்த விடுதி யில் தங்கிப்படித்த மாணவரான அம்பேத்கர் பிரியன் என்பவரைக் கண்டுபிடித்து பேசி னோம். ""நான் உட்பட, நூறுபேர் அங்கு படித் தோம். திடீரென 1974-ல் எங்களை எம்.சி. ராஜா விடுதிக்கு மாற்றினார்கள். காரண மெல்லாம் தெரியாது'' என்றார்.

இதற்கிடையே, முரசொலி விவகாரம் தொடர்பாக, தி.மு.க. கொடுத்துள்ள பத்திரத் தில், “"1934-ல் பெஸ்ட் அண்ட்கோ கம்பெனி யின் பாருக்குட்டி மாதவன் நாயர் 22 ஏக்கர் நிலம் வைத்திருந்தார். அதனை அவரது மகன் களுக்கு 1957-ல் தானமாகக் கொடுத்தார். அவர் கள், அந்த நிலத்தை அஞ்சுகம் பதிப்பகத்திற் காக, தியாகராஜ சுந்தரம் (முரசொலி மாறன்) என்பவரிடம் 1974, ஜூன்22-ல் விற்றார்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மனுதாரர் தடா பெரியசாமியிடம் பேசியபோது, ""பஞ்சமி நிலத்தை ஆதிதிராவிடர் அல்லாதோர் வைத்திருப்பது சட்ட விதிமீறல். அதைப் பறிமுதல் செய்ய வேண்டிய அரசு, பஞ்சமி நிலமே சென்னையில் இல்லை எனும்போது எப்படி நியாயம் கிடைக்கும். தி.மு.க.விற்கு ஆளும் அரசு துணைபோகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது'' என்றார்.

ஒரு குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை ஆதாரங்களின் மூலமே நிரூபிக்கமுடியும். ஆனால், அப்படி எதுவுமில்லை என்கிறது அரசுத்தரப்பு. தி.மு.க. சமர்ப்பிக்கும் ஆவணங் கள் போதுமானதாக இல்லை என்கிறது மனு தாரர் தரப்பு. தி.மு.க. தரப்போ, உரிய ஆவணங் களை சமர்ப்பித்துவிட்டோம் என்கிறது. திரைக்குப் பின்னால் இருக்கும் உண்மை வெளி வரும்வரை இந்தச் சர்ச்சைக்கு முடிவிருக்காது.

-அ.அருண்பாண்டியன்