Advertisment

அதிகாரிக்கு எதிராக பாலியல் புகார்! -பரபரப்பில் வாணியம்பாடி

ss

பிரியாணிக்குப் புகழ்பெற்ற வாணியம்பாடியில், நகராட்சி ஆணையாளர் மீது இரண்டு பெண் ஊழியர்கள் பாலியல் புகார் தந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்த, இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது திடுக் தகவல்கள் ஏகத்துக்கும் கிடைத்தன.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளராக இருப்பவர் ஸ்டாலின் பாபு. இவரை மையம் கொண்டுதான் சர்ச்சை சூறாவளி.

dd

இவர்மீது புகார் தந்தவர் களில் ஒருவரான பிரேமா விடம் நாம் பேசிய போது, “"நகராட்சி உயர்நிலைப்பள்ளி யில் சத்துணவு அமைப்பாளராக நான் இருக்கன். இங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களை, இதன் ஆணையாளர் ஸ்டாலின் பாபு, அலுவலகம் முடிந்த பின் 6 மணிக்கு மேல் தனது கேபினுக்கு அழைத்து நிற்க வைத்தே இரவு 9 மணி வரை பேசுவார். இரட்டை அர்த்தத் திலும் பேசி நெளிய வைப் பார். இது குறித்து, கவுன்சிலர் சாரதிகுமாரிட

பிரியாணிக்குப் புகழ்பெற்ற வாணியம்பாடியில், நகராட்சி ஆணையாளர் மீது இரண்டு பெண் ஊழியர்கள் பாலியல் புகார் தந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்த, இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது திடுக் தகவல்கள் ஏகத்துக்கும் கிடைத்தன.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளராக இருப்பவர் ஸ்டாலின் பாபு. இவரை மையம் கொண்டுதான் சர்ச்சை சூறாவளி.

dd

இவர்மீது புகார் தந்தவர் களில் ஒருவரான பிரேமா விடம் நாம் பேசிய போது, “"நகராட்சி உயர்நிலைப்பள்ளி யில் சத்துணவு அமைப்பாளராக நான் இருக்கன். இங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களை, இதன் ஆணையாளர் ஸ்டாலின் பாபு, அலுவலகம் முடிந்த பின் 6 மணிக்கு மேல் தனது கேபினுக்கு அழைத்து நிற்க வைத்தே இரவு 9 மணி வரை பேசுவார். இரட்டை அர்த்தத் திலும் பேசி நெளிய வைப் பார். இது குறித்து, கவுன்சிலர் சாரதிகுமாரிடம் சொன் னேன். அவர் இதுகுறித்து தட்டிக்கேட்டார். இதன்பின் ஒரு நாள் ஆணையர் என்னைக் கூப் பிட்டு, "என்னைப் பற்றி கவுன்சில ரிடம் புகார் சொன்னியே, அவரால் என்னை என்ன பண்ணமுடி யும்?'ன்னு கேட்டதோடு, "இந்த நாயை வெளியே அனுப்புங்கள்'னு சத்தம் போட்டார். இது குறித்து போலீஸில் புகார் கொடுத்தும் அவங்க விசாரிக்கலை. பிறகு கலெக்டரிடம் புகார் கொடுத்த பிறகு, சமூக நலத்துறை அதிகாரி கள் என்னை அழைத்து விசா ரணை நடத்தி இருக்காங்க'' என்றார்.

Advertisment

மற்றொரு புகார்தாரரான நந்தினி சிவக்குமாரை சந்தித்த போது, "நான் 9 வருடமா நகராட்சி யில் டெங்கு ஒழிப்பு பணியில் பணி புரிகிறேன். ஸ்டாலின்பாபு இங்கே கமிஷனராக வந்த பத்தாம் நாளிலேயே, பீல்டு ஆபிஸர் சரவணன் என்னைக் கூப்பிட்டு, சாரோட குவாட்டர்சுக்கு போய் வேலை செய்யணும்னு சொன்னார். நான் மறுத்துட்டேன். தேர்தல் நேரத்தில் ஒருநாள், அவர் என்னை ஸ்டாலின்பாபு சார் கூப்பிட்டு ஆபிஸ் ரூம்ல சாப்பாட்டை எடுத்துவைக்கச் சொன்னார். அப்போதிலிருந்தே அவர் டார்ச்சர் ஆரம்பிச்சிடுச்சி. அதோட நக ராட்சி எஸ்.ஐ. செந்தில் என்னிடம், சாரை அனுசரிச்சி போ. இல்லைன்னா வேலைக்கு வராதேன்னு சொல்லிட்டார்'' என்றார் அழுத்தமாய்..

நந்தனியின் கணவர் சிவக்குமாரோ, "கமிஷனர் ஸ்டாலின் பாபு வீட்டுக்கு தினமும் நகராட்சியில் இருந்து 5 பேர் வேலைக்குப் போகனும். அவர் செய்ற டார்ச்சரால், 60 பேர் வேலை செய்த இடத்தில் இப்போ 25 பேர் தான் இருக்காங்க. அங்க வேலை செய்யறவங்களைத் தன் ஆசைக்கு பயன்படுத்திக்கப் பார்க்கறார்'' என்றார் எரிச்சலாய்.

இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள், நகராட்சி ஆணையாளரை விசாரிக்கவேண்டும் என்று அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

dd

குற்றச்சாட்டுகள் குறித்து நகராட்சி ஆணையாளர் ஸ்டாலின் பாபுவிடமே நாம் கேட்டபோது, "மேற்கண்ட அவர்கள், சரிவர வேலைக்கு வருவதில்லை. அதனால் அவர்கள் மேல் சூப்பர்வைஸர் நடவடிக்கை எடுத்துள் ளார். இவர்கள் தேவையில்லாமல் என்மீது பொய்ப் புகார் சொல்கிறார்கள். அதுகுறித்து விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது. என் மீதான குற்றச்சாட்டுகளில் கடுகளவு உண்மை இருந்தாலும் நான் என் வேலையை விட்டுச் செல்லத் தயார்''’ என்றார் கவலையாய்.

அங்கே என்ன நடக்கிறது என நகராட்சித் தரப்பில் நாம் விசாரித்தபோது, "புகார் கூறியவர்களில் ஒருவரான பிரேமா சத்துணவு அமைப்பாளராக இருந்தாலும், பக்கா தி.மு.க.காரர். தினமும் பள்ளிக்குப் போய்விட்டு அப்படியே நகராட்சி அலுவலகம் வந்துவிடு வார். அதற்கு காரணம், அங்கு புரோக்கராக செயல்பட்டு, புதுவீடு கட்ட அப்ரூவல், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட விவகாரங்களை முடித்துக் கொடுப்பார். முறையற்ற சில காரியங்களையும் முடித்துக்கொடுத்து லட்சக்கணக்கில் அவர் கல்லா கட்டியிருக்கிறார். இதனால் நகராட்சி ஆணையர் ஸ்டாலின் பாபு, பிரேமாவை இனி நகராட்சி அலுவலத்துக்கே வரக்கூடாது என்று விரட்டிவிட்டார். அதேபோல் நந்தினி, தனக்குத் திரும்பவும் வேலைகொடுத்தால், ஆணையர் மீதான புகாரை வாபஸ் பெறுகிறேன்னு சொல்கிறார். அதனால் இவர்கள் இருவரின் பேச்சையும் நம்ப முடியாது. அங்கு வாணியம்பாடி நக ராட்சியில் தி.மு.க.வுக் குள்ளேயே நடக்கும் கோஷ்டி யுத்தத்தால் தான் இப்படியொரு புகார்'' என்கிறார்கள் புன்னகையோடு.

நகராட்சி ஆணையர் மீதான புகார் குறித்து விசாரித்து ஆட்சியரிடம் அறிக்கை கொடுத்துவிட்டோம் என்கிறது சமூக நலத்துறைத் தரப்பு. அதன் விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

வாணியம்பாடியை பரபரப்பாக்கி வருகிறது நகராட்சி கமிஷனர் மீதான பாலியல் புகார்.

-கிங்

nkn170822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe