தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்ததாக ஈ.வி.பி நிறுவனத்தின் உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மீது பெங்களூரை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் புகார் கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஈ.வி.பி. பிலிம் சிட்டி, சென்னை - பெங்க ளூர் தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கத்தில் அமைந் துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளரான சந்தோஷ் ரெட்டி, பிக்பாஸ் போன்ற பல நிகழ்ச்சிகளுக்கும், திரைப்பட படப்பிடிப்பிற்கும் அரங்குகளை வாடகைக்கு விட்டுவரு கிறார். இவரது முதல் மனைவி, விவாகரத்து செய்துள்ள நிலையில், இரண்டாவது மனைவியும் தற்போது இவர்மீது புகார் கொடுத்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், மதுவுக்கு அடிமையாகி வலம்வந்த சந்தோஷ் ரெட்டி, தன்னுடைய முதல் மனைவியின் மகள் பாவன்யாவுடன் வசித்துவந்துள்ளார். அவரும் தந்தையின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் சந்தோஷ் ரெட்டியை விட்டுச் சென்றுள்ளார். இந்த சூழ்நிலையில்தான், தன்னு டைய மகளின் நண்பரான பெண் ஆடை வடிவமைப்பாளர் பார்வதியை தொடர்புகொண்டு, மகள் தன்னை விட்டுவிட் டுச் சென்றதாகவும், அவரிடம் பேசி என்னோடு பேச வையுங்கள் என்றும் உதவி கேட்டு சென்றுள்ளார். அது தொடர்பாக, பெங்களூரிலுள்ள ஆடை வடிவமைப்பாளர் பார்வதியின் வீட்டிற்கு சென்ற சந்தோஷ், அவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முற்பட்டுள்ளார். அவரை பார்வதி கண்டிக்கவும், "என்னை மனைவியும், மகளும் விட் டுச் சென்றுவிட்டார்கள். அதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் மன உளைச்சலில் இப்படியாகிவிட்டேன். இனி நீ தான் எனக்கு எல்லாமே. உன்னை நல்லபடியாக வைத்துக் கொள்வேன்'' என்றெல்லாம் தன்மீது இரக்கம் வரும்படி உருக்கமாகப் பேசியுள்ளார். பார்வதி அவரது பேச்சை நம்பாமல் கண்டிக்க வும், "என்னை நீ ஏத் துக்கலைன்னா உங்க குழந்தைகளை கொலை செய்துவிடு வேன்'' எனவும் மிரட்டி யுள்ளார்.
தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்ததாக ஈ.வி.பி நிறுவனத்தின் உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மீது பெங்களூரை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் புகார் கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஈ.வி.பி. பிலிம் சிட்டி, சென்னை - பெங்க ளூர் தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கத்தில் அமைந் துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளரான சந்தோஷ் ரெட்டி, பிக்பாஸ் போன்ற பல நிகழ்ச்சிகளுக்கும், திரைப்பட படப்பிடிப்பிற்கும் அரங்குகளை வாடகைக்கு விட்டுவரு கிறார். இவரது முதல் மனைவி, விவாகரத்து செய்துள்ள நிலையில், இரண்டாவது மனைவியும் தற்போது இவர்மீது புகார் கொடுத்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், மதுவுக்கு அடிமையாகி வலம்வந்த சந்தோஷ் ரெட்டி, தன்னுடைய முதல் மனைவியின் மகள் பாவன்யாவுடன் வசித்துவந்துள்ளார். அவரும் தந்தையின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் சந்தோஷ் ரெட்டியை விட்டுச் சென்றுள்ளார். இந்த சூழ்நிலையில்தான், தன்னு டைய மகளின் நண்பரான பெண் ஆடை வடிவமைப்பாளர் பார்வதியை தொடர்புகொண்டு, மகள் தன்னை விட்டுவிட் டுச் சென்றதாகவும், அவரிடம் பேசி என்னோடு பேச வையுங்கள் என்றும் உதவி கேட்டு சென்றுள்ளார். அது தொடர்பாக, பெங்களூரிலுள்ள ஆடை வடிவமைப்பாளர் பார்வதியின் வீட்டிற்கு சென்ற சந்தோஷ், அவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முற்பட்டுள்ளார். அவரை பார்வதி கண்டிக்கவும், "என்னை மனைவியும், மகளும் விட் டுச் சென்றுவிட்டார்கள். அதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் மன உளைச்சலில் இப்படியாகிவிட்டேன். இனி நீ தான் எனக்கு எல்லாமே. உன்னை நல்லபடியாக வைத்துக் கொள்வேன்'' என்றெல்லாம் தன்மீது இரக்கம் வரும்படி உருக்கமாகப் பேசியுள்ளார். பார்வதி அவரது பேச்சை நம்பாமல் கண்டிக்க வும், "என்னை நீ ஏத் துக்கலைன்னா உங்க குழந்தைகளை கொலை செய்துவிடு வேன்'' எனவும் மிரட்டி யுள்ளார். மேலும், அவருக்கு வாட்ஸ்அப் சாட் மூலமாகவும், போன் மூலமாகவும் ஆபாசமாகப் பேசி மிரட்டி யுள்ளார். இதனால் அச்சத்திலிருந்த பார்வதி, பெங்களூரிலுள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/10/evp1-2025-11-10-17-42-28.jpg)
ஈ.வி.பி.சந்தோஷ் ரெட்டியின் மகளுக்கு பார்வதி எப்படி அறிமுகமானார், பார்வதியோடு இவருக்கு எப்படி பிரச்சனையானது என்பதை விரிவாகப் பார்ப்போம். இந்த ஈ.வி.பி.சந்தோஷ் ரெட்டியின் மீது வழக்கு தொடுத்துள்ள ஆடை வடிவமைப்பாளரான பார்வதி, தொடக்கத்தில் சென்னையில் தன் குடும்பத்தோடு வசித்துவந்துள் ளார். இவர் பிரபல நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிமைப்பாளராக இருந்துவருகிறார். அப்படி யாக, பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் திரு மணத்திற்காக ஆடை வடிவமைத்துக் கொடுத்துள் ளார். நிக்கி கல்ராணியின் பக்கத்து வீட்டில் ஈ.வி.பி. சந்தோஷுடைய அக்கா ரதிதேவி வசித்துவந்துள் ளார். ரதிதேவியின் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றுவந்த நிலையில், நிக்கி கல்ராணியிடம், திருமண உடை எங்கே வாங்கினீர்கள் என்று விசா ரித்துள்ளனர். அவர், உடையை வடிவமைத்துக் கொடுத்த ஆடை வடிவமைப்பாளரான பார்வதி குறித்து கூறியிருக்கிறார். நிக்கி கல்ராணியின் மூல மாக, தனது பெண்ணின் திருமண உடையை தைத் துத்தர பார்வதியை நாடியுள்ளார் ரதிதேவி. அப்படி யான சூழலில் தனது அக்கா ரதிதேவி வீட்டுத் திருமணத்திற்கு வந்த ஈ.வி.பி.சந்தோஷ், அங்கே பார்வதியை சந்திக்கிறார். அதன் தொடர்ச்சியாக, தனது முதல் மனைவி மகள் பாவன்யாவிற்கும் ஆடை தயாரித்துக் கொடுக்கும்படி பார்வதியிடம் சந்தோஷ் கேட்டிருக்கிறார். அப்படியாக, சந்தோஷ் குடும்பத்தில் பாவன்யாவுக்கும் பார்வதிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஈ.வி.பி.சந்தோஷ், ஷீலா என்ற நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்துள் ளார். ஆனால் இரண்டு மாதங்களிலேயே இருவருக் கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்த பிரச்சினை நீதிமன்றத்திற்கு வந்த சூழலில், ஈ.வி.பி.சந்தோஷின் அக்கா ரதிதேவி, இவ்வழக்கு தொடர்பாக ஆடை வடிவமைப்பாளரான பார்வதி யை நாடுகிறார். அதாவது, ஷீலாவுக்கு பலரோடு தொடர்பு இருப்பதாகவும். அதில், பார்வதியின் நிறு வனத்தில் பணிபுரியும் சுரேஷ் என்பவரோடும் நடிகை ஷீலாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் ரதிதேவி பார்வதியிடம் கூறியிருக்கிறார். எனவே, ஷீலாவுக் கும் சுரேஷுக்குமான தொடர்பு குறித்து ஏதேனும் ஆதாரம் கிடைத்தால் அந்த வழக்கிற்கு உறுதுணை யாக இருக்குமென்றும் அதற்கு உதவும்படியும் பார்வதியிடம் ரதிதேவி கேட்டிருக்கிறார். பார்வதி யோ, "இதுபோன்ற விஷயங்களில் நான் உதவ முடியாது. என்மீது நீங்கள் கோபித்துக்கொள்ள வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிûலையில், பாவன்யா தன்னுடைய அப்பாவிற்கு நீங்கள் ஆடை வடிவமைத்துத் தர வேண்டும் எனக் கேட்கவே, சரி எனக்கூறி வரச் சொல்லியுள்ளார் பார்வதி. அதையடுத்து வளசர வாக்கத்திலுள்ள ஆடை வடிவமைப்பகத்தில் வைத்து சந்தித்துள்ளனர். இங்குதான் ஈ.வி.பி. சந்தோஷ், பார்வதி அடுத்தகட்ட சந்திப்பு நடந்துள் ளது. அப்போது ஈ.வி.பி.சந்தோஷ், பார்வதியை பார்த்து, "நீங்க ரொம்ப திறமை வாய்ந்தவராக இருந்துவருகிறீர்கள். உங்களை நிச்சயம் அமைச்சரிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன். அதன்மூலமாக உங்களின் இந்த ஆடை வடிவமைப்புத் தொழில் மேலும் உச்சத்தை தொடும்" என்றெல்லாம் பெருமைப்படுத்திப் பேசி, அடையாரிலுள்ள எம்.ஆர்.சி. கிளப்புக்கு பார்வதியை வரவழைத்து பேசியுள்ளார். ஆனால் அமைச்சரை அறிமுகம் செய்து வைக்கவேயில்லை. இந்த சூழ்நிலையில் ஆடைவடிவமைப்புப் பணிக்காக பார்வதி பெங்களூர் சென்றுள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/10/evp2-2025-11-10-17-42-42.jpg)
பெங்களூரில் பணிபுரிந்துவந்த பார்வதியை 2024, டிசம்பரில், ஈ.வி.பி.சந்தோஷிடமிருந்து பிரிந்துவாழும் முதல் மனைவி தொடர்புகொள் கிறார். "என் மகளுக்கு பிரபலமான ஒரு தனியார் நிறுவன அதிபரின் மகனை திருமணம் பேசினோம். ஆனால் இவருடைய மகள் என்பது தெரிந்ததும் வரன் கொடுக்க மறுத்துவிட்டார்கள். நீங்கள் இதில் தலையிட்டு எங்களுக்காக பேசி முடிக்க முடியுமா?'' என்று கேட்டிருக்கிறார். இவரும் பேசிப்பார்க்க, ஆனால் அவர்கள் ஒத்துவராது எனக்கூறி வேண்டாமென்று மறுத்ததை கூறியிருக்கிறார். இந்த காலகட்டத்தில் ஈ.வி.பி.சந்தோஷ் மகள் பாவன்யாவும் தனது அப்பாவின் நடவடிக்கை சரியில்லை எனக்கருதி, தனது அம்மாவுடனேயே சென்றுவிட் டார். சந்தோஷ் தன் மகளை தொடர்புகொண்டாலும் அவர் பேசுவதில்லை. இதனால் மன வருத்தத்தோடு இருந்த சந்தோஷ், அப்போதுதான் தனது மகளோடும், முதல் மனைவியோடும் நட்பிலிருக் கும் பார்வதியை தொடர்பு கொண்டிருக்கிறார்.
அவரிடம், "என் மகளை எப்படியாவது என்னோடு பேச வையுங்கள்'' என சந்தோஷ் பரிதாபமாகக் கேட்க, பார்வதி யும் பாவன்யாவிடம் இது தொடர்பாக பேசியிருக்கிறார். பாவன்யாவோ, "எங்கள் அப்பாவோடு பேச இஷ்ட மில்லை'' என்று மறுத்திருக் கிறார். இதையடுத்து, இது தொடர்பாக விரிவாகப் பேசு வதற்கு நான் பெங்களூருக்கு வருகிறேன் என்று பார்வதி யிடம், சந்தோஷ் கேட்டிருக்கிறார். சரியென்று சொல்லவும், பார்வதியை பெங்களூரிலுள்ள ஹோட்டலில் சந்திக்க அழைத்திருக்கிறார் சந்தோஷ். "அதெல்லாம் முடியாது, உங்கள் மகள் குறித்து பேசத்தானே போறீங்க... எங்கள் வீட்டுக்கு வாருங்கள்'' எனக் கூறியிருக்கிறார் பார்வதி. இங்குதான் பிரச்சினையே தொடங்கியுள்ளது.
பார்வதியின் வீட்டிற்கு 12-07-2025ஆம் தேதி வந்த சந்தோஷ், "என்னுடைய மகளுக்கு எனது ட்ரஸ்ஸிங் பிடிக்காததால்தான் பேச மறுக்கிறாள். அவளுக்கு பிடித்த மாதிரி மாறினால் பேசுவாள்'' எனக் கூறவும், அதேபோல் தனது நண்பர்கள் சிபாரிசால் உயர்தர உடையாகத் தேர்வுசெய்து கொடுத்துள்ளார். சந்தோஷோ, அதன்பின் நண்பர்களோடு குடித்துவிட்டு, இரவில் பார்வதியின் வீட்டிற்கு போதையில் வந்து, அவரை காதலிப்பதாகவும், அவர் இல்லாவிட்டால் செத்துவிடுவதாகவும் பிரச்சினை செய்திருக்கிறார். மறுநாளில் போதை தெளியவும் பார்வதியிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
அதன்பின்னர் மீண்டும் இருவரும் பேசிய போது, "நான் துபாயில் இருக்கிறேன், பெங்களுரில் இல்லை' என்று பார்வதி சொல்லவே, அதற்கு, "என்னுடைய நண்பருக்கு கிப்ட் தரணும், அதற்காக வாட்ச் ஒன்று வாங்கிட்டு வாங்க'' எனக்கூறி அதற் கான பணத்தை வங்கிக் கணக்கில் போட்டுள்ளார். இந்த விவகாரம் பார்வதி கணவருக்கு தெரியவந்து விசாரிக்கவே, நடந்ததை எடுத்துச்சொன்ன பார்வதியிடம், "இதனால் டேக்ஸ் ப்ராப்ளம் வரும், பணத்தை திருப்பியனுப்பிவிடு' எனக் கணவர் கூற, உடனே திருப்பியனுப்பியுள்ளார்.
இதன்பிறகு சந்தோஷ், பார்வதிக்கு வாட்ஸ்ஆப் மூலமாக தகாத வார்த்தைகளாக அனுப்பி யிருக்கிறார். மேலும், "நீ என்னை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் உன் குழந்தைகளை கொன்றுவிடு வேன்' என மிரட்டியுள்ளார். இணையதளத்திலும் உனது படங் களை மார்பிங் செய்து வெளி யிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த பார்வதி, பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், ஈ.வி.பி.சந்தோஷ் தரப்பில் பார்வதி மீது தனது துணி, காலணிகள் உள்ளிட்ட பொருட்களை பார்வதி பிடுங்கி வைத்துள்ளதாக சென்னை நசரத்பேட்டையில் சந்தோஷ் வழக்கு தொடுத்துள்ளார்.
இதுகுறித்து பார்வதியிடம் கேட்டபோது, "தனது பெண்ணுக்காக பேசும்படிதான் என்னை சந்தோஷ் தொடர்புகொண்டார். அவர்கள் குடும்பத்துக்கு உதவச் சென்ற என்னிடம் பாலியல் ரீதியாக மிரட்டியதாலும், என் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாலும்தான் சந்தோஷ் மீது புகாரளித்தேன். அவர்மீது புகாரளித்தது தெரிந்ததும், என்மீது பல்வேறு பொய் வழக்குகளை போடுகிறார். அவரது பொருட்கள் அனைத்தும் அவரிடமேதான் இருக்கின்றன. தனது பணபலத்தால் போலீஸ் மூலம் என்னை அச்சுறுத்தி முடக்குவதற்காகவே இப்படியெல்லாம் செய்கிறார். தன்மீது தவறில்லையென்றால் போலீசில் ஆஜராகி தன் தரப்பு நியாயத்தை சொல்லலாமே?'' என்றார்.
இதுதொடர்பாக சந்தோஷை தொடர்பு கொண்டால் போனை எடுக்கவேயில்லை.
-சே
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us