ஒரு பெண்ணையும் அவருக்குப் பிறந்த குழந்தையையும் அலைக்கழியவிடுகிறார் அந்தப் பாதிரியார் என்று நமக்கொரு அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.
சென்னை பள்ளிக்கரணையை அடுத்த சித்தாலப்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ளது புனித அந்தோணியார் தேவாலயம். அதை ஒட்டிய குடியிருப்பில் வசித்துவருபவர் சகாயமாதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ""நான் எம்.சி.ஏ. படிச்சிட்டு ஐ.டி .கம்பெனில வேலை செய்துட்டிருந்தேன். நாங்க ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். வீட்டுப் பக்கத்திலே புனித அந்தோணியார் சர்ச் இருக்கு. எந்த பாதிரியார் வந்தாலும் எங்க வீட்டுல இருந்துதான் டீ, காபி போகும். சில நேரத்துல சாப்பாடுகூட கொடுப்போம்.
இந்த சமயத்துல வளன்நகர்ல இருந்து இந்த தேவாலயத்துக்கு புது பாதிரியார் ஜான்கென்னடி வந்தார். எங்க பூர்வீகம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அணை ஏரி. பாதிரியார் ஜான் கென்னடிக்கோ பக்கத்து ஊரான வரிகல். இதனால தினமும் (வழிபாடு) முடிச்சிட்டு சாப்பாடு, டீ, காபி சாப்பிட வீட்டுக்கே வர ஆரம்பிச்சாரு.
எனக்கு நைட் ஷிப்டுங்கிறதால பகல்ல வீட்டுல இருப்பேன். அம்மா, அப்பா, தம்பி பகல்ல வேலைக்குப் போயிடுவாங்க. பாதிரியார் ஜான்கென்னடி இதைப் பயன்படுத்தி என்னோட நெருக்கமானாரு. ஒருகட்டத்துல காதலிப்பதா சொன்னாரு. நானோ இதெல்லாம் தப்பு நீங்க கடவுளின் ஊழியர். தேவாலயத்திற்கு வருபவர்களை நல்வழி நடத்தும் நீங்க திருமணம் செய்யமுடியாது என கூறியதற்கு, "எனக்கு கடவுளுக்கு ஊழியம் செய்யவெல்லாம் பிடிக்காது. நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் எம்.எல். படிச்சிருக்கேன். திருச்சபை உதவில படிச்சதால பாதிரியாரா ஆயிட்டேன். நீ மட்டும் என்னை ஏத்துக்கிட்டா... எல்லாத்தையும் விட்டுட்டு வந்துடுவேன்'னு விடாம என் மனசைக் கரைக்கும் வேலைகளைச் செஞ்சாரு.
ஒருகட்டத்துல நாங்க வரம்புமீறிட்டோம். ஜான் கென்னடியோ ஒண்ணும் ஆகாதுன்னு சொல்லிட்டாரு. என்னோட வயித்த பாத்ததும் எங்கம்மாவுக்கு சந்தேகம் வந்து செட்டிநாடு ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போனாங்க, அங்க செக்கப் பண்ண டாக்டர் டெஸ்ட் ரிப்போர்ட்ட பாத்துட்டு நான் ஏழுமாத கர்ப்பமா இருக்கறதா சொல்லிட்டாரு,
எங்கம்மா என்ன அங்கேயே அடிச்சித்திட்டினாங்க. யாரு காரணம்னு கேட்டப்போ பாதிரியார் ஜான்கென்னடினு சொன்னேன். உடனே போன் போட்டு வரச்சொல்லுனு அம்மா சொன்னாங்க. நானும் போன் போட்டு சொன்னா, முதல் கேள்வி யார் காரணம்னு கேட்டாரு..! அந்த நிமிஷமே நான் செத்துப்போயிட் டேன்''’’என்று கதறியழுதார்!
தொடர்ந்து பேசிய சகாயமாதாவின் அம்மா, ""அந்தப் பாவிக்கு வீட்டுல சாப்பாடு போட்டதுக்கு என் பொண்ணாட வாழ்க்கை யையே நாசமாக்கிட்டான். "ஒரு மருந்து அனுப்பி வைக்கிறேன். அதை சாப்பிட்டா கரு கலைந்துவிடும். அதை ஒரு கவர்ல போட்டு எங்கேயாச்சும் புதைச் சிடுங்க'னு போன்ல சொன்னான்.
நீ வரலைனா பேராயர் கிட்ட புகார் கொடுப்போம்னு சொன்னேன், எங்களுக்கு தெரிந்த நெமிலிச்சேரி தேவாலயத்தின் பாதிரியார் இமானு வேல்கிட்ட சொன்னா, "வெளியே தெரிஞ்சா சபையோட பெயர் கெட்டுவிடும். ஏழு மாத குழந்தைய கருக்கலைப்பு செய்தால் தாய் உயிருக்கு ஆபத்து, குழந்தை பிறந்ததும் நான் சொல்ற ஆசிரமத்துல விட்டுட்டா பிரச்சனையே வராது'னு ஜான்கென்னடிக்கு ஆதர வாவே பேசினார்''’’என்றார் கோபமும் கண்ணீருமாக.
சகாயமாதாவின் தம்பியோ """ஒருகட்டத்துல செங்கல்பட்டு ஆயர் நீதி நாதனுக்கு புகார் மனு கொடுத்தோம், திருச்சி பாதிரியார் தலைவர் நேசமணிகிட்ட புகார் கொடுத்தோம். ஒரு நடவடிக்கையும் இல்லை. திடீர்னு ஒருநாள் அட்வகேட் செந்தமிழன் சிவானு சொல்லிட்டு வீட்டுக்கு சிலரோட வந்து மிரட்டல்தொனில செட்டில் மெண்ட் பேசினாரு. நாங்க ஒத்துக்கல! மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துல புகார் கொடுத்தோம். பத்துப் பதினைந்து நாள் அலைக்கழித்து எஃப்.ஐ.ஆர். போட்டாங்க ரெண்டு பிரிவுல வழக்குப் பதிவு செய்தும் இதுவரைக்கும் அவனைக் கைதுசெய்யல. கடந்த 2020, செப்டம்பர் 1-ஆம் தேதி அக்காவுக்கு ஆண் குழந்தை பிறந்துடுச்சு. இதுவரைக்கும் நீதி கிடைக்கல. மெடிக்கல் டெஸ்ட், டி.என்.ஏ. டெஸ்ட் எல்லாம் எடுத்தாச்சு அந்த பாவிய எதுவும் செய்யமுடியல, போலீஸ்ல பேசினா அந்த எஸ்.ஐ. பத்மா எங்க மேல கேஸ்போடு வோம்னு மிரட்டு றாங்க'' ’என தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
இதுதொடர்பாக பாதிரியார் நேசமணியிடம் பேசினோம் ""கென்னடி மீது சபை ரீதியில் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம். பெண் குடும்பத்தார் போலீசில் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்து கென்னடி ஜாமீன் பெற்றுள்ளதாகத் தெரிகிறது, தற்சமயம் அவர் திருச்சபை பணிகளிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளார்''’என்றார்.