Advertisment

ஆசிரமத்தில் பாலியல் தொல்லையா? - கும்பகோணம் அவலம்!

ss

கும்பகோணம் அருகேயுள்ள கிராமத்தில் ஆதரவற்றோர்களுக்கான ஆசிரமத்தில் பாலியல் ரீதியான கொடுமைகள் நடப்பதாக நமது அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று வந்ததைத்தொடர்ந்து விசாரணையில் இறங்கினோம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே யுள்ள மருதாந்தநல்லூர் கிராமத்தில் யூ.ஆர்.குடில் என்கிற சிவசக்தி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தை ஜோதி லோகநாதன் என்பவர் நடத்திவருகிறார். 30-க்கும் அதிகமான பெண்பிள்ளை களும், ஒருசில ஆண்பிள்ளைகளும் தங்கியுள்ளனர். பதினெட்டு வயதைத் தாண்டிய பெண் பிள்ளைகளும் ஆசிரமத்தின் ஆதரவோடு வெளியூர்களில் படிக்கின்ற னர். கோவையிலுள்ள ஜக்கி ஆசிரமத்தைப்போலவே ஆசிரமத்தின் வாசலில் வானுயர சிவன் சிலையை நிறுவி, சித்தர்கள் வழியில்வந்தவன் எனச் சொல்லிக்கொள்கிறார்.

Advertisment

ss

அந்த ஆசிரமம் குறித்து நமது அலுவலகத்திற்கு வந்த புகாரில், "நான் ஒரு அனாதை, என்னை ஜோதி லோகநாதன் நடத்தும் அந்த ஆசிரமத்தில் சேர்த்துவிட்டாங்க. அங்கு முப்பதுக்கும் அதிகமான பருவ வயதை அடைந்த பெண்பிள்ளைகளும், ஒருசில ஆண்பிள்ளை

கும்பகோணம் அருகேயுள்ள கிராமத்தில் ஆதரவற்றோர்களுக்கான ஆசிரமத்தில் பாலியல் ரீதியான கொடுமைகள் நடப்பதாக நமது அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று வந்ததைத்தொடர்ந்து விசாரணையில் இறங்கினோம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே யுள்ள மருதாந்தநல்லூர் கிராமத்தில் யூ.ஆர்.குடில் என்கிற சிவசக்தி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தை ஜோதி லோகநாதன் என்பவர் நடத்திவருகிறார். 30-க்கும் அதிகமான பெண்பிள்ளை களும், ஒருசில ஆண்பிள்ளைகளும் தங்கியுள்ளனர். பதினெட்டு வயதைத் தாண்டிய பெண் பிள்ளைகளும் ஆசிரமத்தின் ஆதரவோடு வெளியூர்களில் படிக்கின்ற னர். கோவையிலுள்ள ஜக்கி ஆசிரமத்தைப்போலவே ஆசிரமத்தின் வாசலில் வானுயர சிவன் சிலையை நிறுவி, சித்தர்கள் வழியில்வந்தவன் எனச் சொல்லிக்கொள்கிறார்.

Advertisment

ss

அந்த ஆசிரமம் குறித்து நமது அலுவலகத்திற்கு வந்த புகாரில், "நான் ஒரு அனாதை, என்னை ஜோதி லோகநாதன் நடத்தும் அந்த ஆசிரமத்தில் சேர்த்துவிட்டாங்க. அங்கு முப்பதுக்கும் அதிகமான பருவ வயதை அடைந்த பெண்பிள்ளைகளும், ஒருசில ஆண்பிள்ளைகளும் இருந்தனர். அந்த போலிச் சாமியார் அந்த பெண்பிள்ளைகளுக்குத் தெரியாம லேயே அவர்களை சீரழித்துள்ளார். அந்த சாமியார் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டுக்கருகில் உள்ள மோதிலால் தெருவில் வசித்துவந் தார். அங்கு விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை ஏமாற்றி அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி, அவ ரிடம் இருந்த நகை, பணம் அனைத்தை யும் எடுத்துக்கொண்டு சில மாதங்கள் தலைமறைவாகி, மருதாநல்லூர் கிராமத்திற்கு சாமியார் வேஷத்தில் வந்து இவ்வளவு அட்டூழியங்களைச் செய்துவருகிறார்'' எனத் தொடர்கிறது.

ஆசிரமத்திற்கு சென்று அங்குள்ளவர் களிடமும், ஆசிரமத்துக்கு நெருக்கமாக இருக்கும் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலரிடமும் விசாரித்தோம், "ஜோதி லோகநாதன் முப்பது ஆண்டுகளுக்கு முன்னாடியே வந்தார். ஒரு இடத்தை வாங்கி அதுல ஆசிரமம் தொடங்கினார். அவ்வப்போது ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி பிரச்சனை போலீஸ் ஸ்டேசன்வரை போகும். ஆனால் வழக்காகாமல் பேசிமுடித்துவிடுவார். இதில் பாலியல்ரீதியான பிரச்சனைகளும் உண்டு.

பக்கத்தில் செங்கல் சூளையில் வேலைபார்த்த பெண் ஒருவரோடு நெருக்க மாக இருந்ததாக பிரச்சனையாகி பேசி முடிச்சாங்க. தங்கியிருந்த பிள்ளைகளைக் கொடுமைப்படுத்தியதாகவும், சில பெண் பிள்ளைகளிடம் சில்மிஷம் செய்ததாகவும், அனுமதியே வாங்காம ஆசிரமம் நடத்திய தாகவும், 18 வயதிற்கு உட்பட்ட 27 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், 2017-ல் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு புகாராகி, அதிகாரிகள் குழந்தைகளை மீட்டனர். லோகநாதன் ஒருமாதிரியான ஆள்தான். எல்லாரையும் மிரட்டி பணியவைப்பதில் கில்லாடி. பகல் முழுவதும் மக்கள் புழக்கம் அதிகம். அதோட அங்கு வாழைத் தோட்டம், செங்கல் சூளை என இருப்பதால் ஆளுங்க எப்பவுமே இருப்பாங்க. ஆனால் இரவு நேரத்துல உள்ள என்ன நடக்குதுன்னே வெளியில் தெரியாது''’என்கிறார்கள்.

ஆசிரமத்திலிருந்து வெளியேறிய ஒருவர் நம்மிடம், "அவரது கடந்தகால வாழ்க்கையை விசாரித்தால் ரொம்பவே மோசமா இருக்கும். கும்பகோணத்திலுள்ள காவல்நிலையம், நாச்சியார்கோயில் காவல் நிலையங்களில் இவர்மீது புகார்கள் நிறைய போகும். ஆனால் பேசி மூடிமறைச்சிடுவாங்க, அதுல பாலியல் ரீதியான விவகாரங்களும் உண்டு. ஆசிரமத்தில் நடக்கும் சல்லாப பிரச்சனைகள் குறித்து சக தோழிகளிடம் பேசிய ஒருசிலரை மிரட்டி விரட்டிய சம்பவங்களும் உண்டு. இங்கிருந்து தப்பித்துச் சென்றவர்களும் உண்டு. இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு நிறைய மனுக்கள் அனுப்பியுள்ளோம், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை''’என்கிறார்.

திருவிடைமருதூர் டி.எஸ்.பி. அலுவலக அதிகாரி ஒருவரிடம் பேசினோம், "அந்த ஆள் எல்லாரையும் மிரட்டுற மாதிரியே பேசுவார், சாமியார் போர்வையில் இருப்பார். சாமியாருக்கான எந்தவித குவாலிட்டியும் இருக்காது. அவர்மீது கடந்த காலங்களில் அடிக்கடி புகார்வரும். சமீப காலமாக எதுவும்வரல. இதுவரை எதுவுமே வழக்காகல''’ என்கிறார்.

இதுகுறித்து ஆசிரமத்தின் நிறுவனர் ஜோதி லோகநாதனிடமே கேட்டோம்... "எனக்கு பிடிக்காதவங்க ஆயிரம் சொல்லு வாங்க. என்னை போட்டோவெல்லாம் எடுக்கா தீங்க. இதுவரை பத்திரிகையில வந்ததில்லை, விளம்பர பேனர்கூட நான் வைத்தது இல்ல. எனக்கு திருக்கடையூரிலிருந்து ஓர் ஓலைச் சுவடி மூலம் சிவன் சிலை அமைக்கணும்னு வந்துச்சு, அதனால அமைச்சேன். யாரோ உதவுறாங்க, பிள்ளைங்களை நல்லபடியா கவனிச்சிக்கிறேன். இங்க இருக்கிற பிள்ளைங் கள நீங்களே விசாரிங்க, இவங்களுக்காக கல்யாணமே செய்துக்காம அர்ப்பணிக்கிறேன். கும்பகோணத்தில் என்னோட சொந்தக்கார பெண் திருமணமே வேணாம்னு வேலை பார்த்தாங்க. பிறகு அவங்க மனசு மாறி திருமணம் செய்துக்கிட்டுப் போயிட்டாங்க, அது மாதிரிதான் பிரச்சனையே தவிர பிள்ளைங்களால பிரச்சனையே இல்ல. 2017 பிரச்சனையில் அரசுக்கும் எனக்கும் வழக்கு நடக்கிறது''’என்றவர், திடீரென "நீங்க என்னவேணும்னாலும் எழுதிக்கோங்க, சாகப்போற காலத்துல நீங்க எழுதி என்ன ஆகப்போகுது. என் வழக்கறிஞர் டீம் பார்த் துக்கும்''’என மிரட்டும் தொனியில் முடித்தார்.

அங்கிருந்து கிளம்பியதுமே கும்ப கோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மதிவாணன் உள்ளிட சிலர் போன்செய்து, “"குடிலுக்குப் போனீங்களா, ஏதோ பாலியல் விவகாரம்னு சொல்லி மிரட்டுறீங்களாம், பார்த்துக்க லாம்...''’என மிரட்டுவது போலவே பேசி போனை துண்டித்தார்.

நெருப்பில்லாமல் புகையாது.

Advertisment

nkn070525
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe