Advertisment

பாலியல்! பலியான மீனவப் பெண்... சிக்கலில் வட மாநில தொழிலாளர்கள்!

dd

"அத்தாச்சியின் இந்த நிலைமைக்கு அவங்கதான் காரணம். தினசரி கேலி செய்துகிட்டு இருப்பானுக. அன்னைக்கு இத தட்டிக் கேட்டிருந்தா அத்தாச்சிக்கு இந்த நிலைமை வந்திருக்காது' என அரைகுறை ஆடையுடன் கிடந்த உயிரற்ற சடலத்தைப் பார்த்து உறவுப் பெண்கள் அலறி அரற்ற... அடுத்த அரை நொடிக்குள் அங்கிருந்த இறால் பண்ணைக்கு தீ வைத்து அங்கிருந்த வட மாநிலத்தவர்களை துவம்சம் செய்தனர் மீனவ இளைஞர்கள்.

Advertisment

எனினும், அவர்களுடன் போராடி காயம்பட்ட இளைஞர்களை மீட்டு, துரித விசாரணையில் இறங்கியது ராமநாதபுர மாவட்ட காவல்துறை.

Advertisment

dd

ராமேஸ்வரம் ஏற்காடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த பாலு, "வடகாடு அருகிலுள்ள நரிக்குழி யிலுள்ள பவளப்பாறை மத்தியில் வளரும் பாசிகளை சேகரித்து தொழில் செய்துவந்தவர் என்னுடைய மனைவி சந்திரா. தினசரி காலை 9 ம

"அத்தாச்சியின் இந்த நிலைமைக்கு அவங்கதான் காரணம். தினசரி கேலி செய்துகிட்டு இருப்பானுக. அன்னைக்கு இத தட்டிக் கேட்டிருந்தா அத்தாச்சிக்கு இந்த நிலைமை வந்திருக்காது' என அரைகுறை ஆடையுடன் கிடந்த உயிரற்ற சடலத்தைப் பார்த்து உறவுப் பெண்கள் அலறி அரற்ற... அடுத்த அரை நொடிக்குள் அங்கிருந்த இறால் பண்ணைக்கு தீ வைத்து அங்கிருந்த வட மாநிலத்தவர்களை துவம்சம் செய்தனர் மீனவ இளைஞர்கள்.

Advertisment

எனினும், அவர்களுடன் போராடி காயம்பட்ட இளைஞர்களை மீட்டு, துரித விசாரணையில் இறங்கியது ராமநாதபுர மாவட்ட காவல்துறை.

Advertisment

dd

ராமேஸ்வரம் ஏற்காடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த பாலு, "வடகாடு அருகிலுள்ள நரிக்குழி யிலுள்ள பவளப்பாறை மத்தியில் வளரும் பாசிகளை சேகரித்து தொழில் செய்துவந்தவர் என்னுடைய மனைவி சந்திரா. தினசரி காலை 9 மணிக்கு மதியச் சாப்பாட்டுடன் பணிக்குச் செல்லுபவர் மாலை வேளையில் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருப்பார். இரவாகியும் இன்று திரும்பவில்லை' என்று புகாரளிக்க, எஸ்.ஐ. சதீஷும் புகாரை வாங்கிக்கொண்டு மீனவ இளைஞர்கள் துணையுடன் தீவிரமாகத் தேடிய நிலையில், நரிக்குழி கடற்கரைப் பகுதியில் அரைகுறை ஆடையுடன் பிணமாக மீட்கப்பட்டுள்ளார் சந்திரா.

"இந்த பக்கம் ஒரு பிரேதம் கிடக்கின்றது என தகவல் வந்த நிலையில் அடையாளம் காண்பிப்பதற்காக எஸ்.ஐ. சாருடன் அந்தப் பக்கம் போனோம். அது காணாமல் போன சந்திரா என்பது தெரியவர... உறவுக்காரர்களை வர வழைத்தோம்.

அதேநேரத்தில் எஸ்.ஐ. சதீஷ் அருகிலிருந்த இறால் பண்ணைக்குச் சென்று பார்க்கையில் அங்கிருந்த வட மாநிலக்காரனுக தங்களுடைய ஊருக்குப் போறதுக்காக அவசர அவசரமாக ஆன்லைனில் டிக்கெட் போட்டுக்கொண்டி ருந்தது தெரியவந்தது. விசாரிக்கையில் அவர் கள் முன்னுக்குப் பின் முரணாகக் கூற.... அவங்களை அங்கேயே உட்கார வைச்சிட்டாரு எஸ்.ஐ.

ff

இந்த வேளையில்தான்... பிணத்தை அடையாளம் காட்ட உறவுக்காரங்க வந்த நிலையில், கொலையுண்ட சந்திராவிடம், "இன்னைக்கு மீன் குழம்பு சமைச்சு கொண்டுவாறீயா..?" என்பதுபோல் தினசரி இவனுக கேலி செய்த விவரமும் தெரிய ஆரம்பிக்க, ஆத்திரத்தில் அவங்களை அடிக்க ஆரம்பித்தோம். எங்களைத் தடுத்து எஸ்.ஐ. அவனுகளை அங்கிருந்த இறால் பண்ணையில் பூட்ட ஆத்திரத்தில் தீ வைத்தோம். இருந்தாலும் போலீஸார் வந்ததால் அவனுக தப்பிட்டானுக'' என்றார் அங்கிருந்த வடகாடு மீனவ இளைஞர் ஒருவர்.

உடனடியாக மாவட்ட எஸ்.பி. கார்த்திக் தலைமையிலான போலீஸார் களத்திலிறங்க நிலைமை கட்டுக்குள் வந்தது.

காயம்பட்ட வட மாநில இளைஞர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியது காவல்துறை. அப்போதைக்குப் பிரச்சனை சமாதானம் ஆனாலும் நீறுபூத்த நெருப்பாக, "குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டும்' என மறுநாள் புதன்கிழமையன்று ராமேஸ்வரம் -மதுரை தேசிய நெடுஞ்சாலை யில் டயர் உள்ளிட்ட பொருட்களை எரித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர் மீனவ மக்கள்.

தொடர்ச்சியாக இறால் பண்ணையும் சீல்வைக்கப்பட... உள்ளூர் எம்.எல்.ஏ. முத்து ராமலிங்கம், அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், 6 மணி நேர மறியலைக் கைவிட்டு இயல்பிற்கு திரும்பினர் அங்குள்ள மக்கள்.

ff

"இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக கைது செய்யப்பட்டிருக்கும் விகாஷ், பிரகாஷ், ராகேஷ், பிரசாத், ரஞ்சன்ராணா மற்றும் பிண்டு உள்ளிட்ட ஆறு நபர்களும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த பெயர்களே உண்மையில்லை என்பது எங்களுக்குத் தெரியும். கடந்த 16 நாட்களுக்கு முன்னதாகத்தான் இங்குள்ள இறால் பண்ணைக்கு கூலி வேலைக்கு வந்துள்ள 3 நபர்களுக்கு மட்டுமே தமிழ் பேசத் தெரியும். மதிய சாப்பாடு அங்கேயே இருப்பதால், மதிய வேளைக்கு முன்பு இந்த சம்பவம் நடந்திருக்க லாம்.

அதுபோல் மூன்று அல்லது நான்கு நபர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததும், கொலை செய்யப்பட்ட பிறகும் பலாத்காரம் நடந்திருக்கலாம் என்பதும் புலனாகியுள்ளது. ஆனால், அந்த பெண் எரிக்கப்படவில்லை என்பது உண்மை. தொடர்ச்சியாக மாவட்டம் முழு மைக்கும் பணியாற்றி வரும் அனைத்து வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்தும், அவர் களது குற்றப் பின்னணி குறித்தும் விசாரணை செய்து வருகின்றோம்'' என்கிறது மாவட்ட காவல்துறை.

படங்கள்: விவேக்

nkn010622
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe