பாதிரியாருடன் உள்ள கள்ளத்தொடர்பை மூடி மறைப்பதற்காக பிஷப் எடுத்திருக்கும் அஸ்திரத்தால் ஆடிப்போயிருக் கிறது திருச்சி சி.எஸ்.ஐ. திருச்சபை.
அண்மையில் தாராபுரத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவரை திருச்சி தனிப்படை போலீஸ் தீவிரமாக தேடிவந்தது. போலீசுக்கு பயந்து தாராபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்த ஜெயப்பிரகாஷை, ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்தனர் திருச்சி போலீசார். விசாரணையின்போது, "சாமுவேல் ராஜதுரை, முன்னாள் பிஷப் பால்வசந்தகுமாரின் மகன் சாம் நிமலன் ஆகியோர்தான் உன்னை இது மாதிரி செய்யச் சொன்னார்கள் என்று எழுதிக் கொடுத்துட்டு போயிடு. இல் லேன்னா நீ நடமாடவே முடியாது. என்கவுண்டர் போடச் சொல்லி கமிஷனர் சொல்லிட்டார்'’என்று போலீசார் மிரட்டி யிருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷ் மீது இந்த அளவுக்கு போலீஸ் கடுமை காட்டுவதற்கு முக்கியப்புள்ளி கொடுத்த புகார்தான் காரணம் என்று தெரியவந்ததும், அவரைப்பற்றி தெரிந்துகொள்ள முயன்றபோது, அவர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ திருச்சபையின் தலைமை பிஷப் சந்திரசேகரன் என்பத
பாதிரியாருடன் உள்ள கள்ளத்தொடர்பை மூடி மறைப்பதற்காக பிஷப் எடுத்திருக்கும் அஸ்திரத்தால் ஆடிப்போயிருக் கிறது திருச்சி சி.எஸ்.ஐ. திருச்சபை.
அண்மையில் தாராபுரத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவரை திருச்சி தனிப்படை போலீஸ் தீவிரமாக தேடிவந்தது. போலீசுக்கு பயந்து தாராபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்த ஜெயப்பிரகாஷை, ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்தனர் திருச்சி போலீசார். விசாரணையின்போது, "சாமுவேல் ராஜதுரை, முன்னாள் பிஷப் பால்வசந்தகுமாரின் மகன் சாம் நிமலன் ஆகியோர்தான் உன்னை இது மாதிரி செய்யச் சொன்னார்கள் என்று எழுதிக் கொடுத்துட்டு போயிடு. இல் லேன்னா நீ நடமாடவே முடியாது. என்கவுண்டர் போடச் சொல்லி கமிஷனர் சொல்லிட்டார்'’என்று போலீசார் மிரட்டி யிருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷ் மீது இந்த அளவுக்கு போலீஸ் கடுமை காட்டுவதற்கு முக்கியப்புள்ளி கொடுத்த புகார்தான் காரணம் என்று தெரியவந்ததும், அவரைப்பற்றி தெரிந்துகொள்ள முயன்றபோது, அவர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ திருச்சபையின் தலைமை பிஷப் சந்திரசேகரன் என்பதும், இவர் குறித்து முகநூலில் எழுதியதால்தான் ஜெயப்பிரகாஷ் போலீசில் சிக்கியுள்ளார் என்பதும் தெரியவந்தது.
சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ஜெயப்பிரகாஷிடம் இதுகுறித்து நாம் பேசியபோது, ’""சி.எஸ்.ஐ. அமைப்பில் நான் ஒரு சாதாரண உறுப்பினர். இந்த அமைப்பில் நடக்கும் தவறுகளை வெளிப்படையாகக் கேள்வி கேட்டவன் நான் மட்டுமே. அப்படிக் கேள்வி கேட்டதால் தான் என் மனைவியையும், குழந் தையையும் என்னைவிட்டுப் பிரித்துவிட்டார்கள். இந்த அமைப்பில் நடக்கும் முறைகேடுகளை எனக் குச் சிலர் தனிப்பட்ட முறையில் போன் பண்ணி தகவல் சொல்லு வார்கள். சிலர் கடிதங்களாக எழுதி இரவு நேரங்களில் என் வீட்டு வாசலில் கொண்டு வந்து போட்டுச் செல்வார்கள். இது குறித்த உண்மைத் தன்மையை விசாரித்து, அதை முகநூலில் எழுதுவேன்.
இதே போன்று இந்த முறை நடைபெற்ற பிஷப் தேர்தலில், வெற்றிபெற வேண்டிய சாமுவேல் ராஜதுரையைப் பின் னுக்குத் தள்ளிவிட்டு குறுக்கு வழியில் சந்திரசேகரன் பிஷப் பாக அறிவிக்கப்பட்டார்.
குறுக்குவழியில் பிஷப் ஆன சந்திரசேகரன், தேர்தலில் தனக்கு ஆதரவு தராத அத்தனை பேரையும் பழி வாங்க ஆரம்பித்தார். பால் ஞான நித்திலன், உபதியா ஆகிய பாதிரியார் களுக்கு டார்ச்சர் கொடுத்து அவர்களை பதவி விலக வைத்துவிட்டார். சி.எஸ்.ஐ. அமைப்பில் பணிபுரிந்தவர் களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி டிரான்ஸ்பர் போட்டு நெருக்கடி கொடுத்தார்.
இந்த நேரத்தில்தான் சந் திரசேகரனுக்கும், புதுக் கோட்டை பாதிரியார் மேரி ஜெசிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பது தெரியவந் தது. மேரிஜெசியை பாதிரியார் ஆக்கியதே சந்திரசேகரன்தான்.
திருமணம் ஆகாத மேரி ஜெசி வீட்டிற்கு நள்ளிரவில் அடிக்கடி ஒரு கார் வந்து போகும் விஷயம் அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. இத னால் அவர்கள் மேரிஜெசியை கண்டித்தனர். உடனடியாக வீட் டையும் காலிசெய்ய வைத்து விட்டனர். இது மாதிரியான தொந்தரவுகள் வரக்கூடாது என்பதற்காக, மேரிஜெசிக்கு தானே முன்நின்று திருமணத்தை நடத்தி வைத்தார் சந்திரசேகரன். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவருக்கும் மேரிஜெசிக்கும் திருமணமாகி ஒரு குழந்தையும் பிறந்தது. இப்போது நித்தியானந்தம் விவாகரத்து கேட்டு திருவாரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். "பிஷப் சந்திர சேகரன் என் மனைவியுடன் வைத்துள்ள கள்ளத் தொடர்பு காரண மாகவே விவாகரத்து கேட்கிறேன்' என்று மனுவில் குறிப்பிட்டுள் ளார். இதன்பிறகுதான் இவர்கள் விவகாரம் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தது. இந்த விவகாரம் குறித்து என்வீட்டு வாசலுக்கு வந்த புகார் கடிதத்தை நான் முகநூலில் பதி விட்டேன். இதனால் தான் நான் கைது செய்யப்பட்டேன்''’ என்று கொட்டித் தீர்த்தார்.
இது சம்பந்தமாக நித்தியானந்தம் தரப் பில் விசாரித்தபோது, "விவாகரத்து கேட்ட தால் பிஷப் ஆட்கள் மிரட்டுவது, அவர்களுக்கு பயந்து நித்தியா னந்தம் தலைமறைவாக இருப்பதும்' தெரியவந்தது. மேலும், தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தம் பேசி அனுப்பிய ஆடியோவும் நமக்கு கிடைத்தது. அந்த ஆடியோவில், ""தஞ்சை செயலாளர் சிடி.சாம் காரில்தான் என் மனைவியை அழைத்துக்கொண்டு செல் வார் பிஷப். விவாகரத்து கேட்டதால் என்னை கடத்திச் சென்று கொலை செய்து விடுவோம் என்று பிஷப் ஆட்கள் மிரட்டுகிறார்கள். இது குறித்து பேசவே பயமா இருக் குங்க...''’என்று அமைதியா கிறார்.
பிஷப் சந்திரசேகரன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நாம் அவரிடமே கேட்ட போது, ""நான் பொதுவாழ்க் கையில் இருக்கிறேன். அதனால் என்மீது வீண் அவ தூறு பரப்புகிறார்கள். புதுக்கோட்டை பாதிரியார் குடும்ப பிரச்சினையில் விவா கரத்துக்குச் சென்றி ருக்கிறார்கள். இந்தக் குற்றசாட்டுகளை பிஷப் தேர்தல் நேரத் திலேயே என்மீது சுமத்திவிட்டார்கள். அதன்பிறகுதான் பிஷப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
என்னைப்பற்றி முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுத்ததால் திருச்சபையில் உள்ள சிலர் அவரை முன்ஜாமீன் எடுக்க முயற்சி செய்தார்கள். அதனால் திருச்சபையில் சில ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். நான் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் மேலிடத் திற்கு தெரியப்படுத்திவிட்டுத் தான் செய்கிறேன். இதை பெரிதுபடுத்த வேண்டாம்'' என்றார்.
-ஜெ.டி.ஆர்.