சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வி கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம்மீது, மாணவி கள் பாலியல் புகாரளித்துள்ள விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியாவிலேயே மிகப் பெரிய உடற்கல்வி கல்லூரி ஒய்.எம்.சி.ஏ. பள்ளி மற்றும் கல்லூரி. சென்னை நந்தனத்தில் இயங்கிவரும் இக்கல்லூரியில் மட்டும் 600 மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள். இதன் முதல்வரான ஜார்ஜ் ஆபிரகாம், மாணவிகளிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டது தற்போது வெளியாகியுள்ளது. கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவரும் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் பேசிய இரண்டு ஆடியோ வெளியாகி பரபரப்பாகியுள்ளது. அதிலொன்றில், “"நீ மட்டும் என்னைச் சந்திக்க தனியாக என் ரூமுக்கு வா'’என அழைக்கிறார்.

cc

Advertisment

பாதிக்கப்பட்ட மாணவி, கடந்த டிசம்பர் மாதம் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தன் வழக்கறிஞருடன் சென்று புகாரளித்திருந்தார் வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை போலீசார், அதன்பேரில் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தும் சட்டம் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த ஜார்ஜ் ஆபிரகாம் ஒரு மாதம் கழித்து கல்லூரிக்கு வந்து, தன் மீது புகாரளித்த மாணவிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகாரெழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நூற்றுக் கணக்கான பேர் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி கல் லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம், "சட்டப்படி நான் வழக்கை சந்திப் பேன்'” என்று தெரிவித்தார்.

கல்லூரியைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத மாணவிகளை சந்தித்துப் பேசினோம். “"நக்கீரனை நம்பி நாங்கள் பேசுகிறோம். ஜார்ஜ் ஆபிரகாம் முதல்வராக வந்ததிலிருந்து மாணவிகளுக்கு உதவுவதுபோல விளையாட்டுப் பயிற்சியில் தனிப்பட்ட முறையில் பயிற்சியளிப்பார். பின்னர் அவருக்கு பிடித்த மாணவியின் செல்போன் நம்பரை பெற்று முதலில் குறுஞ்செய்தி அனுப்பு வார். வாட்ஸ்அப்பில் உரிமையோடு பேசுவது போல பழகுவார். டபுள் மீனிங்கில் பேச ஆரம்பிப் பார். பிறகு அந்த மாணவிக்கு போனில் பேசி வலை விரிப்பார். ஒத்துவராத நிலையில் அந்த மாணவி களுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ, அந்த அளவு மெண்டல் டார்ச்சர் கொடுப்பார். அவருடைய ஒத்துழைப்பு இல்லாமல் இங்கு பட்டம் பெற முடியாது என்பார். இவரால் சில மாணவிகள் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். சரியான நபர்கள் தலைமையில் விசாரணைக் கமிட்டி அமைத்து விசாரணை நடத்தினால் பலரும் பேச முன்வருவார்கள்''’என தெரிவித்தனர்.