பழனி முருகனுக்கு முதல்வர் எடுத்த மாநாடு! - அசத்திய அமைச்சர் சேகர்பாபு

ss

மிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று சிறப்புரையாற்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்த மாநாடு, திடீரென நடத்தப்படும் மாநாடு அல்ல. கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வர் ஸ்டா லின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏராளமான சாதனைகளை செய்துவிட்டுத்தான் இந்த மாநாட்டை நடத்துகிறது. தி.மு.க. அரசைப் பொறுத்தவரை யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காத அரசு. எல்லோருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கும் அரசு. குன்றக்குடி அடிகளார் தந்த விபூதியை நெற்றி நிறைய பூசிக் கொண்டவர்தான் தந்தை பெரியார்.

dd

பேரறிஞர் அண்ணா ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று முழங்கினார். ஓடாத திருவாரூர் தேரை ஓடவைத்தவர்தான் கலைஞர். இப்படிப்பட்ட தலைவர்கள் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறநிலையத்துறை சார்பில் ஏராளம

மிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று சிறப்புரையாற்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்த மாநாடு, திடீரென நடத்தப்படும் மாநாடு அல்ல. கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வர் ஸ்டா லின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏராளமான சாதனைகளை செய்துவிட்டுத்தான் இந்த மாநாட்டை நடத்துகிறது. தி.மு.க. அரசைப் பொறுத்தவரை யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காத அரசு. எல்லோருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கும் அரசு. குன்றக்குடி அடிகளார் தந்த விபூதியை நெற்றி நிறைய பூசிக் கொண்டவர்தான் தந்தை பெரியார்.

dd

பேரறிஞர் அண்ணா ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று முழங்கினார். ஓடாத திருவாரூர் தேரை ஓடவைத்தவர்தான் கலைஞர். இப்படிப்பட்ட தலைவர்கள் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறநிலையத்துறை சார்பில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த மாநாடு, ஆன்மிக மாநாடாக மட்டுமின்றி, தமிழக பண்பாட்டு மாநாடாகவும் நடைபெறுகிறது'' என்று பெருமிதத் துடன் குறிப்பிட்டார். அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் பழனியில் நடத்துவதென, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அறநிலையத்துறை சார்பில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதையடுத்து, தொடர்ச்சியாகப் பலமுறை பழனிக்கு விசிட் அடித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரியில் மாநாட்டு ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தார். முதல் நாளான 24ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு 100 அடி உயரக் கம்பத்தில் மாநாட்டுக் கொடியை தவத்திரு பால முருகனடிமை சுவாமிகள் ஏற்றினார். அதைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பழனி எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமார், பழனி எம்.பி. சச்சிதானந்தம் உள்பட ஆதீனங்களும், முக்கிய பிரமுகர்களும் கண்காட்சிகளைப் பார்வையிட்டனர்.

அறுபடை வீடுகளைக் குறிக்கும் வகையில் 6 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. பிரதான நுழைவாயிலில், கைலாய மலையில் சிவபெருமான், பார்வதி, கங்காதேவி அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. முருகனின் வரலாற்றைக்காண 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய திரையரங்கம், வி.ஆர். தொழில்நுட்பத்துடன் கூடிய அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன. கண்காட்சியைத் தொடங்கிவைத்த மூன்று அமைச்சர்களும், வி.ஆர். தொழில்நுட்பக் கண்ணாடி யையும், 3டி கண்ணாடிகளையும் போட்டு முருகனின் ஆறுபடை வீடுகளைத் தத்ரூபமாக பார்த்து ரசித்தனர். அதைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் மேடையில் அமர்ந்ததும், காலை 9.40 மணிக்கு சீர்காழி சிவசிதம்பரம் இறை வணக்கப்பாடலை பாடினார். இதனைத் தொடர்ந்து 9.45க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கிவைத்து வாழ்த்துரையாற்றினார். அதில், "செயல்பாபு என்று என்னால் அழைக்கப்படும் சேகர்பாபு அறநிலையத்துறை அமைச்சராக வந்தபிறகு இந்த துறை மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று எல்லோருடைய பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். கோவில்களை கவனித்துக் கொள்ளுங்கள் என்று நான் அறநிலையத் துறையை அவரிடம் கொடுத்தேன். ஆனால் கோவிலில் குடியிருக்கும் ஒருத்தராக அமைச்சர் இருந்துவருகிறார். அந்த அளவுக்கு ஆன்மிகப் பெரியோர்களே அவரைப் பாராட்டி வருகிறார்கள்'' என்று அமைச்சரை பாராட்டிய முதல்வர், பழனி, திருச்செந்தூர் உட்பட முருகனின் திருத்தலங்களில் நடைபெற்ற பல்வேறு திட்டப்பணிகள் குறித்து எடுத்துக்கூறிவிட்டு, "கோவில் வளர்ச்சிக்கு திராவிட மாடல் துணையாக உள்ளது. யாரின் நம்பிக்கைக்கும் தடையாக இருந்ததில்லை. பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியை தி.மு.க. வழங்குகிறது'' என்று குறிப்பிட்டார்.

ff

முதல்வரின் வாழ்த்துரைக்குப்பின், முருகனின் ஆய்வுக்கட்டுரை மலரை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்க, அதை நீதியரசர் பாலசுப்பிரமணி பெற்றுக்கொண்டார். இதையடுத்து, அமைச்சர்கள், ஆதீனங்கள், நீதியரசர்களுக்கு அறநிலையத்துறை சார்பாக அமைச்சர் சேகர்பாபு நினைவுப்பரிசுகளை வழங்கினார்.

மேலும், ஆதின பெருமக்களான சுப்பிரமணியன், புகழேந்தி, சிவஞானம், வேல்முருகன் ஆகிய நீதியரசர்கள், மாநாட்டில் முருகனின் புகழைப் பற்றி பேசியதுடன், சித்த மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களைக் கொண்டுவர வேண்டும் என்பது உட்பட சில கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்தனர். அதைக்கேட்ட அமைச்சர் சேகர்பாபு, "நீதியரசர்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் சொல்லி முடிந்த அளவுக்கு நிறைவேற்றித் தருகிறேன்'' என்று மேடையிலேயெ உறுதியளித்தார்.

இம்மாநாட்டில் ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள், வெளிநாட்டினர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். மாநாட்டில் கலந்துகொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

(மாநாடு பற்றிய தொடர்ச்சி வரும் இதழில்...)

-சக்தி

nkn280824
இதையும் படியுங்கள்
Subscribe