ந்தியாவைக் குறிவைத்து பாகிஸ்தான் ஹேக்கர்கள் எலிஸாரேட் எனும் நவீன வைரஸை உருவாக்கியிரு க்கிறார்கள். ட்ரான்ஸ்பரன்ட் ட்ரைப் அல்லது ஏ.பி.டி.36 என்ற பெயரால் அழைக்கப்படும் இந்தக் குழுவினர், இந்திய நிறுவனங்களைக் குறிவைத்து இந்த வைர ஸைச் செலுத்தி தகவல்களைத் திருடுவதாக இந்தியா எச்சரிக்கை செய்துள்ளது.

எலிஸாரேட் வைரஸ் 2023-லேயே இந்தியாவில் அடையாளம் காணப்பட்டது. ஆனால் இப்போது வந்திருப்பது அதே வைரஸல்ல. அதன் நவீன, மேம்படுத்தப்பட்ட வைரஸ் என எச்சரிக்கிறார்கள். அதாவது ஆன்டிலிவைரஸ் மென்பொருளை ஏய்க்கக் கூடிய நுட்பங்களை உள்ளடக்கியது.

இந்த ஹேக்கர்கள் இதுவரைக்கும் எலிஸாரேட் வைரஸிலே மூன்று வகையை உருவாக்கிவிட்டார்கள். ஒவ்வொன்றும் முந்தைய வைரஸைவிட நவீனமானது. திறன் மிக்கது. முக்கியமாக, இந்திய நிறுவனங்களைக் குறிவைத்தே இந்த வைரஸ் உருவாக்கப்பட் டுள்ளது. இந்திய நேர மண்டல (Time Zone) அமைப்புடன் பொருந்திச் செயல்படுமாறு இந்த வைரஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளதே அதை உறுதிசெய்கிறது. தாக்குதல் நடத்தியவர் கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுத் தொடர்புக்கு ஸ்லாக் சேனல்களையும், டெஸ்க்டாப் கோப்புகளில் ஊடுருவி அவற்றைச் சேகரிப்பதற்கு அப்போலா ஸ்டீலார் எனும் புதிய பேலோடையும் பயன்படுத்தியுள்ளனர்.

இப்போதைய புதிய எலிஸாரேட் வைரஸ், கூகுள் ட்ரைவ், டெலிகிராம் போன்றவற்றின் வழியாக கணினியில் ஊடுருவி மிகக் குறுகிய நேரத்தில் தகவல்களைச் சேகரித்து ஹேக்கர்களுக்கு அனுப்பிவிடும் என்கிறார்கள். இதற் காக சிறப்புவாய்ந்த தகவல் திருடும் பேலோடுகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

பாகிஸ்தானிய ஹேக்கர்கள் மிகக் குறிப்பாக, இந்திய அரசாங்க அமைப்புகள், ராணுவ கேந்திரங்கள், வியாபார நிறுவனங்கள் போன்றவற்றைக் குறிவைத்திருக்கின்றனர். இதையடுத்து சைபர்செக்யூரிட்டி செக் பாய்ண்ட் ரிசர்ச் எனும் அமைப்பு உஷாராகி இதுகுறித்து உரிய அமைப்புகளை எச்சரிக்கை செய்திருப்பதோடு, எலிஸாரேட் ஊடுருவலைத் தடுப்பதற்கான வைரஸ் தடுப்பு நடவடிக்கை களை துரிதப்படுத்தி வருகிறது.

இந்தியா மீது ஏவிவிடப்படும் எலிஸாரேட் வைரஸ் ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் தனது நாட்டில் குழந்தைகளை முடக்கி ஊன மாக்கும் போலியோ வைரஸுக்கு எதிராகப் போராடிவருகிறது. இதற்காக போலியோ விழிப்புணர்வு முகாம்கள் நாடெங்கும் நடத்தப் பட்டு வருகிறது. பாகிஸ்தானில் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டதாக நம்பப்பட்ட போலியோ வைரஸின் மாதிரிகள் 16 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக செய்தி வருகிறது.

பாகிஸ்தானின் ஹேக்கர்கள், இந்தியாவுக் குள் ஊடுருவும் வைரஸ்களை உருவாக்குவதில் காட்டும் அக்கறையை ஒரு குழந்தையையும் தவறவிடாமல் போலியோ சொட்டு மருந்து விடுவதில் காட்டியிருந்தால், இந்நேரம் போலியோ வைரஸ் இல்லாத தேசமாக பாகிஸ்தான் மாறியிருக்கும்.

வினை விதைத்தால் வினை அறுக்க வேண்டியிருக்கும்கிறது இதுதானோ!