Advertisment

கர்நாடகாவில் பாகிஸ்தான்! நீதிபதி சர்ச்சை பேச்சு!

ss

ர்நாடக உயர்நீதிமன்றத்தில், மைசூர் சாலை மேம்பாலம் அருகே ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் குறித்த விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய நீதிபதி ஸ்ரீஷானந்தா, "மைசூர் சாலை மேம்பாலத்திற்குச் செல்லுங்கள், ஒவ்வொரு ஆட்டோ ரிக்ஷா விலும் 10 பேர் வரை பயணிக்கிறார்கள். கோரி பால்யாவிலிருந்து மார்க்கெட்டுக்கு விடப்பட்ட மைசூர் மேம்பாலம் இந்தியாவிலேயே இல்லை. அது பாகிஸ்தானில் இருப்பதால் இங்கே விவாதிப்பதற்கு பொருந்தாது'' என்று குறிப்பிட்டார். கோரி பா

ர்நாடக உயர்நீதிமன்றத்தில், மைசூர் சாலை மேம்பாலம் அருகே ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் குறித்த விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய நீதிபதி ஸ்ரீஷானந்தா, "மைசூர் சாலை மேம்பாலத்திற்குச் செல்லுங்கள், ஒவ்வொரு ஆட்டோ ரிக்ஷா விலும் 10 பேர் வரை பயணிக்கிறார்கள். கோரி பால்யாவிலிருந்து மார்க்கெட்டுக்கு விடப்பட்ட மைசூர் மேம்பாலம் இந்தியாவிலேயே இல்லை. அது பாகிஸ்தானில் இருப்பதால் இங்கே விவாதிப்பதற்கு பொருந்தாது'' என்று குறிப்பிட்டார். கோரி பால்யா பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அங்குள்ள இஸ்லா மியர்களை பாகிஸ்தானியர்களென்று ஒரு நீதிபதியே நையாண்டி செய் திருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

Advertisment

ss

இதேபோல், வங்கிக் காசோலை பவுன்ஸ் தொடர்பான வழக்கொன்றில் வாதாடிய பெண் வழக்கறிஞரிடம், “"அவரது கட்சிக்காரர் என்ன உள்ளாடைகளை அணிந்துள்ளார் என்பதையும் நாளை காலையில் கூறக்கூடும்''’என்று அதே நீதிபதி மோசமாக கமெண்ட் அடித்தும் சர்ச்சை யைக் கிளப்பியது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் லைவ்வாக ஒளிபரப்பப்படுவதால், நீதிபதியின் மோசமான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவ, பலரும் கண்டனங்களைப் பதிவுசெய்தனர். அதையடுத்து, இவ்விவ காரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 பேர் அரசியல் சாசன அமர்வு நடத்திய விசாரணையில், "நீதிமன்ற நடவடிக்கைகளை சமூக ஊடகங்கள் உன்னிப்பாகக் கவனித்து வரும் இக்காலத்தில், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் கண்ணியமாகச் செயல்பட வேண்டும். இதுதொடர்பாக அவர் இரண்டு நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும்'' என அறிவுறுத்தியதோடு, விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில் நீதிபதி ஸ்ரீஷானந்தா, "எனது கருத்தில் யாருடைய மனதாவது புண் பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள் கிறேன்'' என்று வீடியோ வெளியிட்டார். அதையடுத்து புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை யின்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வானது, "இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நீதிபதி ஸ்ரீஷானந்தா மன்னிப்புக் கோரியுள்ளதால், நீதித்துறையின் கண்ணியத்தை கருத்தில்கொண்டு உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்புவதைத் தவிர்த்துவிட்டோம். நீதிபதி ஸ்ரீஷானந்தாவின் மன்னிப்பை ஏற்கிறோம். இந்தியாவின் எந்தப் பகுதியையும் பாகிஸ்தான் என்று அழைப்பது தேசத்தின் ஒருமைப் பாட்டிற்கு எதிரானது'' எனக்கூறி, நீதிபதி ஸ்ரீஷானந்தாவுக்கு எதிரான விசாரணையைக் கைவிடுவதாக தெரிவித்தது.

Advertisment

nkn021024
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe