தமிழக எல்லையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குளத்துப்புழா வனப்பகுதி சாலை. இந்த சாலையில் பயணித்த ஜோஷி மற்றும் அவருடைய நண்பர் அஜீஸின் பார்வையில்பட்டது அந்த பார்சல்.
பார்சலை பிரித்துப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் உள்ளே இருந்தது பாகிஸ்தான் முத்திரை பதித்த தோட்டாக்கள். இதுவரை பாகிஸ்தான் ஆதரவு பிட் நோட்டீஸ், டைரி என்றுதான் சிக்கியிருக்கின்றன. ஆனால், முதன்முறையாக பாகிஸ்தான் முத்திரை பதித்த தோட்டாக் கள் சிக்கியது போலீஸுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
அந்த பார்சலுடன், தென்காசி மின் வாரியத்தில் கட்டணம் செலுத்திய ஒருவரின் ரசீதும் இருந்ததால் கேரள பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ., ஐ.பி., ரா மற்றும் கேரள மாநில உளவு அமைப்பு கள் அத்தனையும் ஸ்பாட்டுக்கு வந்து ஆஜராயின. பார்சலில் வைக்கப்பட்டிருந்த தோட்டாக்களை ஆய்வு செய்ததில் அவற்றில் 12 தோட்டாக்களில் ட.ஞ.எ. என்றும் 1980-1982 Made என்று முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் ஆர்னல் ஃபேக்டரி என்பதன் சுருக்கமே பி.ஓ.எஃப். என்று அதிகாரிகள் கூறினார் கள். இந்த தோட்டாக்கள் ஏ.கே.47க்கு உரியவை என்றும் தொலைதூரத்தையும் குறிவைத்து தாக்கக்கூடியவை என்றும் கூறப்படுகிறது. ராணுவம், ஸ்ட்ரைக்கிங் போலீஸ் ஃபோர்ஸ் ஆகியவை மட்டுமே பயன்படுத்தக்கூடியவை என்று தெரிய வந்தது. இவற்றை யார், எப்படி கொண்டு வந்து வனப்பகுதி சாலையில் போட்டுச் சென்றது என்பதே கேள்விக்குறியானது.
ஆனால் கேரள தீவிரவாத தடுப்புப்படையின் டி.ஐ.ஜி.யான அனுப் குருவிளா சோர்ந்துவிடவில்லை. தீவிரவாதப் புலனாய்வில் முதன்மையானவரான இவர் தனது விசாரணையை தீவிரப்படுத்தினார்.
களியக்காவிளையில் எஸ்.எஸ்.ஐ. வில்ஸன் சுடப்பட்ட ஐந்து தினங்களுக்கு பிறகு ஜனவரி 13 ஆம் தேதி மதியம் பாலருவியில் குளித்து விட்டு திரும்பிய 5 பேரை சந்தேகத்தின் அடிப் படையில் போலீஸ் கைதுசெய்தது. பிறகு அவர்களிடம் நடத்திய விசாரணை முடிவில் தமிழக போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டனர். தமிழக போலீஸ் நடத்திய விசாரணையில் செய்யது ராஜா கரீமிடம் உபா சட்டத்தின் படியும், மற்ற 4 பேர் மீது வேறு செக்ஷன்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வுக்குப் பிறகே இந்த பார்சல் வீசப்பட்டிருக்கிறது. ஆனால், வனப்பகுதியில் ஏதேனும் மறைவான பகுதியில் வீசாமல், சாதா ரணமாக பார்வையில் படும் வகையில் வீசப்பட்டது ஏன் என்ற சந்தேகம் எழத்தான் செய்தது. அதிலும், வில்சன் கொலையில் தொடர்புடைய வர்களால்தான், பாகிஸ்தான் தோட்டாக்கள் வீசப்பட்டிருப் பதாக கேரளா தீவிரவாதத் தடுப்புப்படை உறுதியாக நம்புகிறது. அதிலும் தோட் டாக்கள் சுற்றப்பட்டிருந்த 2019 ஆம் ஆண்டின் கடைசி நாள் மலையாள பத்திரிகை, ஜனவரி 29-ஆம் தேதியிட்ட மலையாள பத்திரிகை ஆகிய வற்றை ஆராய்ந்த குருவிளா, இந்தத் தோட் டாக்களுக்கும் வில்ஸன் கொலையாளிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறார். தங்களைப் பற்றிய செய்திகளை அறிவதற்காகவே அந்தப் பத்திரிகைகளை வாங்கியிருக்கவேண்டும் என்று அவர் நம்புகிறார்.
ஆனால், தோட்டாக்களை ஏன் எளிதில் பார்வையில் படும் சாலையில் வீசிச்செல்ல வேண்டும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்தது. ஒருவேளை தோட்டாக்களின் பார்சலைப் பார்ப் பவர்களின் மூலமாக போலீஸ்வரை தகவல் போய் பத்திரிகைள் மற்றும் கேரளாவில் பர பரப்பைக் கிளப்ப வேண்டும், போலீஸ் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எச்சரிக்கையாக இருக்கலாம் என்றும் போலீஸார் கருதுகிறார்கள்.
ஏனெனில் 2015-16-ஆம் ஆண்டுகளில் மைசூர், சித்தூர், கேரளாவின் கொல்லம் மலப்புரம் என்று 5 ஐந்து இடங்களில் கோர்ட் பகுதிகளில் குண்டு வெடிப்பு நடந்தது. அதன்பிறகு அந்தச் சம்பவம் தொடர்பாக ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற தீவரவாத அமைப்பின் டைரி சிக்கியது. அந்த டைரியில் "இது எங்களின் எச்சரிக்கை' என்று குறிப்பிட்டிருந்தது. அதுபோல, இந்தத் தோட்டா பார்சலும் தீவிரவாதிகளால் மறைமுகமாக விடப்பட்ட எச்சரிக்கை என்று தீர்க்கமாக நம்புகிறார் ஏ.டி.எஸ்.சின். டி.ஐ.ஜி.
அதேசமயம் தோட்டாப் பார்சல் அருகே கிடந்த மின் கட்டண ரசீதுக்கு சொந்தக்காரரை விசாரித்து கண்டுபிடித்தனர். அந்த ரசீதிலிருக்கும் மைதீன் என்பவரை தங்களின் கஸ்டடிக்கு அள்ளிக் கொண்டு வந்த ஏ.டி.எஸ்., அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியது. தென்காசியைப் பூர்வீகமாகக் கொண்ட மைதீன், கேரளாவில் தோட்டாக்கள் சிக்கிய குளத்துப்புழாவில் குடும்பத்துடன் செட்டிலானவர். தோட்டா பார்சல் கிடந்த ஏரியாவில் ப்ராய்லர் கோழிப்பண்ணை வைத் திருப்பதோடு தென்காசி மற்றும் நெல்லையிலும் கோழிப் பண்ணைகள் வைத்திருப்பவர். அவரு டைய தென்காசிப் பண் ணைக்கான மின் கட்டண ரசீதுதான் போலீஸிடம் சிக்கியது. பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய ரசீது எப்படி தோட்டா பார்சலுக்கு அருகே கிடந் தது என்று அனுப் குருவிளா துருவித்துருவி கேட் டார். கோழி ஏற்றிவந்த லாரி டிரைவர் சாலையில் வீசியிருக்கலாம் என்று கூறியிருக்கிறார். அப்படியும் குருவிளாவுக்கு சந்தேகம் நீங்கவில்லையாம்.
இது ஒரு அசாதாரணமான விஷயம் என்கிற கேரள டி.ஜி.பி.யான லோக் நாத்பெக்ரா, தமிழக -கர் நாடகா டி.ஜி.பி.க்களுடன் இணைந்து செயல் படுகிறார். அவர் பார்வையில் இந்த துப் பாக்கிக் குண்டுகள் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப் பட்டதாக கூறுகிறார்.
ஆனால், தோட்டாக்களில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட முத்திரை உள்ளதால்தான், மத்திய உளவு அமைப்புகளுக்குத் தகவல் தரப்பட்டு, எங்களின் தீவிரவாத தடுப்புப் படையின் விசார ணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எப்படியும் தொடர்புடையவர்களை பிடித்து விடுவோம்'' என்கிறார் ஏ.டி.எஸ். அமைப்பின் டி.ஜி.பி.
-பரமசிவன்