கார்னட் எனப்படுகிற தாதுமணல் கம்பெனியான வி.வி.மினரல்ஸ் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டக் கடலோரப் பகுதிகளில் இயங்கி வருகிறது. பல கம்பெனிகளைக் கொண்ட வி.வி. மினரல் நிறுவனங்களில் வைகுண்ட ராஜன் மேனேஜிங் டைரக்டர். அவரது உடன்பிறந்த தம்பியான ஜெகதீசன் டைரக்டர். வைகுண்ட ராஜன், ஜெகதீசன் இரண்டு குடும்பத்தார்களும் அதன் பங்காளிகள். இந்த நிறுவனங்கள் நெல்லை தூத்துக்குடி மாவட்டக் கடலோரமுள்ள தாது மணல்களை வெட்டியெடுத்து தரம்பிரித்து கார்னட், இல்மினைட், ரூட்டைல், சிர்கான் போன்ற சாண்ட் மினரல்களை ஏற்றுமதி செய்து வந்தன. இவைகளில் யுரேனியமும், தோரியமும் அடங்கிய மோனசைட் ஏற்றுமதிக்குத் தடையும் உள்ளது.

vv

இதனிடையே தாதுப் பொருட்களுடன் தடை செய்யப்பட்ட மோனசைட்டும் ஏற்றுமதி யானது என கண்டறியப்பட்டதும். அவை அளவுக்குமேல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக நீதிமன்றம், மற்றும் மத்திய அரசுக்குப் புகார்கள் போகவே விசாரித்த உயர்நீதிமன்றம் தாதுமணல் ஏற்றுமதி செய்யக்கூடாது என 2013 செப் 17ல் தடைவிதித்துவிட்டது. தொடர்ந்து வந்த ஆட்டானமிக் துறையின் தடை காரணமாக தாதுப் பொருள்கள் வெட்டியெடுக்கவும் முடியாத நிலை. இதனால் வி.வி. உள்பட இதர தாதுமணல்களின் நிறுவனங்கள் செயல்பாடின்றி மூடப்பட்டன.

Advertisment

இந்தச் சூழலில் கம்பெனி மற்றும் சொத்துக்கள் பாகப்பிரிவினை காரணமாக வைகுண்டராஜனுக்கும், அவர் சகோதரர் ஜெகதீசனுக்குமிடையே பிணக்குகள் ஏற்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலிலுள்ள வி.வி.மினரல்ஸ் கோல்ட் ஸ்டோரேஜ் நிறுவனத்தில், ஜெகதீசனுக்கும், வைகுண்டராஜனுக்குமிடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது. அது தொடர்பான வீடியோவும், வைகுண்டராஜன் மற்றும் அவரது மகன்கள் மீதும் ஜெகதீசன் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யிடம் தன்னை மோசடி செய்ததாக கொடுத்த புகார் மனுக்களும் வாட்ஸ் அப்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. வெடித்துப் போன பெரிய இடத்து விவகாரம் அம்பலமேறிக் கொண்டிருக்கிறது.

vv

""வைகுண்டராஜன் மீது ஜெகதீசன் கொடுத்த புகாரை நாங்கள் விசாரித்துக் கொணடிருக்கிறோம். தற்போது ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.யின் விசாரணையிலிருக்கிறது. அதனை நாங்கள் விசாரிக்க மட்டுமே முடியும்'' என்றார் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யான அருண்பால கோபாலன்.

இரண்டு மாவட்ட எஸ்.பி.யிடமும் ஜெகதீசன் கொடுத்த புகாரின் சாராம்சம் இதுதான். வி.வி.மினரல் கம்பெனியில் நானும், வைகுண்டராஜனின் குடும்பத்தார்களும் பங்குதாரர்கள். நாங்கள் கம்பெனியின் நலன் பொருட்டு வருமானவரி, அக்ரீ மெண்ட் ccபோன்றவைகளுக்காக நிரப்பப்படாத அபிடவிட் மற்றும் பாரங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருந்தோம். அதனைக் கம்பெனியிலுள்ள ஒரு சிலரின் கூட்டுச் சதியோடு தனக்குச் சாதகமாக எங்களுக்குள் முறைப்படி பாகப் பிரிவினை நடந்து விட்டதாக ஒரு கைத்தடியை உருவாக்கிய வைகுண்டராஜன் தரப்பு, என்னிடம் காட்டி ஒப்புதலுக்கு வந்த போது நான், அது போலி என்று மறுத்தேன். அவர்கள் மாவட்ட நீதிமன்றம் போனார்கள். முறையான பாகப்பிரிவினை கேட்டதற்கு வைகுண்டராஜன் ஒப்பவில்லை. எனவே நான் உயர் நீதிமன்றம் சென்றேன்.

மறு சீராய்வு மனு விசாரணை முடிய வேண்டும் என்று தெரிவித்து உயர்நீதிமன்றம் எனக்கு சாதகமாக CMP9244 TO 9246 OF 2019ன்படி இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியது. தற்போது என் பொறுப்பிலிருக்கும் புன்னக்காயல் கம்பெனிக்கு ஆட்களுடன் வந்து என்னை வைகுண்டராஜன் மிரட்டு கிறார். என் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என்று மே 22 அன்று கொடுத்த புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் ஜெகதீசன். ஆனால் மினரல் கம்பெனி மற்றும் வைகுண்ட ராஜனின் தொடர்புடைய வட்டாரங்களோ பிரச்சினைக்கு வேறு மாதிரியான கான்சப்ட்களே காரணம் என்கிறார்கள்.

வி.வி.மினரல்ஸ் கம்பெனிகளின் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளிலிருக்கும் கோடவுண்களில் வைக்கப்பட்டிருக்கும் அவர்களின் ஏற்றுமதிக்கான தாதுமணல்கள் வெளியே எடுக்காத வகையில் பூட்டப்பட்டு அரசால் சீல் வைக்கப்பட்டு நீதிமன்றப் பொறுப்பிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அந்த கோடவுண்களிலிருப்பவை வெளியே தெரியாமல் கடத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப் பட்டதாக மத்திய அரசுத் துறைக்குச் சென்ற புகாரையடுத்து கோடவுண் சோதனைக்கு உத்தரவு வந்து தற்போது விவகாரமாகிக் கொண்டிருப்பதால் அதனை திசை திருப்பவே அந்தப் பெரிய குடும்பத்தில் இது போன்ற பாகப்பிரிவினையைக் கிளப்பி விவகாரமாக்கியிருக்கிறார்கள்'' என்கிறார்கள்.

வரையறுக்கப்பட்ட தாதுப் பொருள் தவிர, தடை செய்யப் பட்ட மோனோசைட்டும் தரம் பிரிக்கப்படாமலேயே ராவாக ஏற்றுமதி செய் யப்பட்டிருப்பது அரசுக்கு பல நூறு கோடிகள் இழப்பு. மேலும் அதில் அணு சக்தி உலை, மற்றும் அணு ஆயுதத் தயாரிப் புக்குப் பயன்படும் யுரேனியமும், தோரியமும் அதிலடங்கியது, விலை மதிப்பற்றவை என்றாலும் ஒருவகையில் தேசப்பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் என்று சமூக ஆர்வலர்கள் சென்னை உயர்நீதிமன்றம் செல்ல, 2013 செப் 17 அன்று கம்பெனி செயல்பாடு மற்றும் ஏற்றுமதிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து விட்டது.

dd

அதனை மீறி வேறு வழியில் ஏற்றுமதி செய்தன. அதே சமயம் இப்படி செல்லும் தாதுப் பொருட்களில் மோனசைட்டும் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகிறது என்று மத்திய உளவுப் பிரிவான ஐ.பி.யும் நோட் போட்டிருக்கிறது. அதையடுத்தே மொத்த தாதுப் பொருள்களான மினரல்கள் இந்திய அரசின் அணுசக்தி துறையின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. தாது மணல் 1 கிலோ வெட்டியெடுத் தாலும் சிறை தண்ட னை. ஏற்றுமதியும் கூடாது என்று ஆர் டினன்ஸ் ஒன்றைப் பிறப்பித்துவிட்டது அணுசக்தித்துறை.

அப்போதைய நெல்லை கலெக்டர் கருணாகரன், சத்யபிர தாப் சாகு ஐ.ஏ.எஸ். தலைமையிலான கமிட்டி, தாசில்தாரைக் கொண்ட தாலுகா கமிட்டி, கலெக்டர் மற்றும் எஸ்.பி.க்களைக் கொண்ட மாவட்டக் கமிட்டி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட தமிழக அரசுக் கமிட்டி எனப் பல வகைகளிலும் கிடுக்கிப்பிடி போடப்பட்டு ஏற்றுமதி செய்ய முடியாமல் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் தூத்துக்குடி சிப்காட் முத்தையாபுரம், ஹார்பர் பகுதி, நெல்லை மாவட்டப் பகுதியிலுள்ள அந்தப் பெரிய கம்பெனியின் பல குடோண்களின் இருப்புச் சரக்குகள் வெளியேற்றப்படுவதையும், சில மினரல்களைக் கொண்டு சிப்காட்டிலுள்ள வி.வி.பெயிண்ட் கம்பெனியில் டைட்டானியம் தயாரிக்கப்படுவது பற்றியும் தொடர் புகார்கள் தமிழக தலைமைச் செயலாளர், மத்திய அரசின் செயலாளர், கனிம மற்றும் அணுசக்தி துறையின் செயலாளர்களுக்குச் சமூக ஆர்வலர்கள் சார்பில் போயிருக்கின்றன. மேலும், திசையன்விளை, மன்னார்புரம் போன்ற பகுதிகளிலிருந்து கார்னட் கடத்தப்பட்டது, பிடிபட்டது போன்ற புகார்களும் முறைப்படி விசாரிக்கப்படவில்லை என்றும் அந்தப் புகார்களில் குறிப்பிட்டதின் விளைவே, மத்திய அரசின், தொடர்புடைய துறையின் செயலாளர்கள் தூத்துக்குடி மாவட்டக் கலெக்டரிடம் கோடவுண் பற்றிய ரிப்போர்ட்டுகளைக் கேட்டிருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டக் கலெக்டரான சந்தீப் நந்தூரி ஆர்.டி.ஓ. தலைமையிலான குழுவை ஆய்வுக்காகப் பணித்திருக்கிறார். இந்த ஆய்வு நடந்து கொண்டிருக்கும் சமயம் தான் பொருத்தமாக வைகுண்டராஜன் அவர் சகோதரர் ஜெகதீசனின் பாகப் பிரிவினை மோதல் விவகாரம் பெரிய அளவில் கொண்டுவரப்பட்டு திசை திருப்பப்படுகிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இந்த விவகாரம் குறித்து நாம் தூத்துக்குடி மாவட்டக் கலெக்டரான சந்தீப் நந்தூரியிடம் பேசியதில், ""கடந்த வாரம் ஆர்.டி.ஓ. தலைமையிலான குழு ஒன்று அனைத்து கார்னட் குடோண் களையும் ஆய்வு செய்தது. அதனடிப்படையில் விரிவான ஆய்வறிக்கை தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது'' என்கிறார்.

வைகுண்டராஜன் மீது கொடுத்த புகார் மற்றும் தொடர்புடைய பிற விஷயங்களையும் அவரது சகோதரர் ஜெகதீசனைத் தொடர்பு கொண்டு பேசியதில், ""எங்களுக்குள் பாகப்பிரி வினை பிரச்சினை இருந்தது. போலீஸ்வரை போக வேண்டியதாயிற்று. பேச்சு வார்த்தை நடக்கிறது. இரண்டு மூன்று நாளில் செட்டிலாகிவிடும். பின்பு பேசுகிறேன் என்று மென்மையாகச் சொன்னவரிடம், கோடவுணிலிருந்து தாது மணல் வெளியேற்றம் விவகாரத்தை மறைக்க பாகப்பிரிவினை விவகாரம் ஒரு தோற்றம் என்கிறார்களே என்பது பற்றியும் கேட்டோம்.

எங்களுக்குள் ஏற்கனவே பிரச்சினை இருக்கிறது. கோடவுண் விவகாரம் என்றால் நானும் பொறுப்புதானே. நான் குடோண்களைக் கண் காணிக்கவும் செய்கிறேன் அப்படி அங்கிருந்து எடுத்த தாகவும் தெரியவில்லை. ஆனால் அவர்களின் பெயின்ட் பேக்டரியில் டைட்டானியம் தயார் செய்வ தற்கு தாதுமினரல் எப்படி வந்தது என்றும் தெரிய வில்லை. அவர் தான், ஆட்களோடு என் நிறுவனத்திற்குள் வந்து தகராறு செய்தார் என்றார் கம்மிய குரலில் எல்லாம் பெரிய இடத்து விவகாரம்.

-பரமசிவன்

படங்கள் : ப.இராம்குமார்