மிழ்நாட்டில் விவசாயிகள் விளைவிக்கும் நெல் மூட்டைகளை அரசே கொள்முதல் செய்யும் வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்துள்ளது. ஆனாலும் பல இடங்களில் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்காததால் மழையில் நனைந்து முளைத்து நாசமாகிக்கொண்டிருக்கின்றன.

Advertisment

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் உற்பத்தியான நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய காலதாமதம் ஏற்பட்டதால் மழையில் நனைந்து நெல்மணிகளை உலர்த்தக்கூட முடியாமல் விவசாயிகள் தவித்துவருகின்றனர். பல இடங்களில் முளைத்து நாசமாகிறது. இதனால் விவசாயத்திற்கு வாங்கிய கடனுக்கு வட்டிகூட கட்டமுடியாமல் விவசாயிகள் தவித்தநிலையில் நெல் கொள்முதலை வேகப்படுத்தக் கோரி சாலைமறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். 

Advertisment

15 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகள் தேங்கியதால் சட்டமன்றத்தில் கேள்வியெழுப்பிய நிலையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் நாளொன்றுக்கு சுமார் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகக் கூறினார். மேலும் "கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டை கள் பாதுகாப்பாக குடோன்களில் வைக்கப்படு கிறது. மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசி கலப்பதற்கு அனுமதிகொடுக்காததால் அரவைக்கு அனுப்பமுடியவில்லை. அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதால் நீங்கள் விரைந்து மத்திய அரசு அனுமதியை பெற்றுக்கொடுங்கள்''’என்றார்.

delta-district2

இந்த நிகழ்விற்கு பிறகும் கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் தேங்கிக் கிடக்கிறது. இதனை உடனே கொள்முதல் செய்யவேண்டும் என்று தஞ்சை மாவட்ட விவசாயி ஜீவகுமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்துள்ளார். 

Advertisment

இந்த தேக்கத்திற்கு காரணம் என்ன என்ற நமது கேள்விக்கு, “"இந்த வருடம் தென்மேற்கு பருவமழையும் சரியாக இருந்தது. போதிய அளவு தண்ணீர் கிடைத்ததால் கடந்த ஆண்டுகளைவிட 3 மடங்கு அதிகமாக குறுவைச் சாகுபடி செய்யப் பட்டது. அதனால் 16ஆம் தேதிக்குள்ளாகவே சுமார் 10 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுவிட்டது. இன்னும் பல லட்சம் டன் நெல் தேங்கியுள்ளது. சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளதை அதிகாரிகள் சரியாகக் கணக்கிட்டு கொள்முதலை வரமுறைப்படுத்தாத தான் இந்த தேக்கத்திற்கும் சேதத்திற்கும் காரணம்''’என்றனர்.

இந்தநிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் கல்லணைக் கால்வாய் கடைமடைப் பாசன பகுதியான அத்தாணி சுற்றியுள்ள கிராமங்களில் விளைந்த குறுவை நெல் மணிகளை அத்தாணி கிராமத்தில் உள்ள கிராம இ-சேவை மையத்தில் இயங்கும் அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் விற்பனை செய் துள்ளனர். கொள்முதல் செய்யப் பட்ட சுமார் 2 ஆயிரம் மூட்டை நெல் மணிகளை அதே பகுதியில் தரை யில் அடுக்கி வைத்துள்ளனர். மேலே யும் சரியான தார்ப்பாய் இல்லை.

கடந்த சில நாட்களாக பெய்த மழையில் அனைத்து நெல்மூட்டை களும் நனைந்து முளைத்து வெளியே வந்துவிட்டது. இப்போது இரவு நேரங்களில் அதை ஏற்றிச் செல்கின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் நனைந்து முளைத்துச் சேதமாகி விட்டது. விவசாயிகள் கொண்டு வரும் நெல்லில் ஈரப்பதம் அதிகம் என்று காரணம் சொல்லும் ஊழியர்கள், இப்ப நனைந்து நாசமான நெல் மூட்டைகளை உலர்த்திக்கொண்டிருக்கிறார்கள். முளைத்த நெல்மணிகளை என்ன செய்வது? அரசுக்கு எவ்வளவு இழப்பு’என்கின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பிள்ளையார் பட்டியில் உள்ள நெல் பாதுகாப்பு குடோனுக்கு அமைச்சர்கள் சக்கரபாணி, கோவி.செழியன், மெய்யநாதன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

delta-district1

"புதுக்கோட்டை  மாவட்டத்தில் பல ஊர்களில் போலி விவசாயிகள் பெயரில் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அதிகாரிகள் கமிசனுக்காக இப்படி செய்கிறார்கள் என்று கடந்த மாதம் 30-ஆம் தேதி கொள்முதல் நிலைய ஊழியர்களே மாவட்ட ஆட்சியரிடம் புகார்கொடுத்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. இதனால் டெல்டாவில் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்''  என்கின்றனர் கொள்முதல் நிலைய ஊழியர்கள்.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த புதன்கிழமை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு சென்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் விவசாயிகளையும் பார்த்துள்ளார். விவசாயிகளைப் பார்த்த பிறகு திருவாரூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, “"கடந்த அ.தி.மு..க ஆட்சியில் ஒரு நாளைக்கு 1000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்தோம் ஆனால் இந்த ஆட்சியில் 800 மூட்டைகள் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளின் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளைக்கூட பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியாத நிலைதான் உள்ளது. விவசாயிகளின் கண்ணீருக்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்? தற்போது சம்பா பயிர்களும் தண்ணீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதையும் இந்த அரசாங்கம் கவனிக்கவேண்டும்''’என்றார்.

"குறுவை நெல் கொள்முதலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை விரைந்து சரிசெய்து குளறுபடிகள் இல்லாமல் கொள்முதல் செய்திட, இப்போதே அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கவேண்டும். அரசும் அதிகாரிகளை துரிதப்படுத்தவேண்டும்'' என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.