Advertisment

பச்சையப்பன் அறக்கட்டளை பஞ்சாயத்து! பேராசிரியர் தேர்வில் குளறுபடி!

ss

சென்னையிலுள்ள பச்சை யப்பன் அறக்கட்டளை யின் கீழுள்ள 6 அரசு உதவிபெறும் கல்லூரிகளும், 6 அரசு உதவிபெறும் பள்ளிகளும் மற்றும் பல கோடி மதிப்பிலான சொத்துக்களும், அறக்கட்டளையின் அறங்காவலர் மூலமாக நிர்வகிக்கப்பட்டுவருகிறது. இந்த சூழ்நிலையில், 2013ஆம் ஆண்டு அறக்கட்டளைக்கு நடந்த தேர்தலே இறுதியான தேர்தலாக உள்ளது. அதன்பின் பல்வேறு சிக்கல்களால் இன்றுவரை தேர்தலே நடத்தப்படாமல் அறக்கட்டளையின் செயல்பாடு முடக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

Advertisment

ff

2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று அறங்காவலரான ஜெயச்சந்திர னின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமென்று அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், ஓய்வுபெற்ற நீதிபதி யான சண்முகத்தை இடைக்கால நிர்வாகியாக நியமித்த நீதிமன்றம், 25.04.2019ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்திமுடிக்க வேண்டுமென்று தீர்ப்பளித்தது. ஆனால் தேர்தலை நடத்த காலதாமதமானதால், மேலும் கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம், தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை முன

சென்னையிலுள்ள பச்சை யப்பன் அறக்கட்டளை யின் கீழுள்ள 6 அரசு உதவிபெறும் கல்லூரிகளும், 6 அரசு உதவிபெறும் பள்ளிகளும் மற்றும் பல கோடி மதிப்பிலான சொத்துக்களும், அறக்கட்டளையின் அறங்காவலர் மூலமாக நிர்வகிக்கப்பட்டுவருகிறது. இந்த சூழ்நிலையில், 2013ஆம் ஆண்டு அறக்கட்டளைக்கு நடந்த தேர்தலே இறுதியான தேர்தலாக உள்ளது. அதன்பின் பல்வேறு சிக்கல்களால் இன்றுவரை தேர்தலே நடத்தப்படாமல் அறக்கட்டளையின் செயல்பாடு முடக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

Advertisment

ff

2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று அறங்காவலரான ஜெயச்சந்திர னின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமென்று அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், ஓய்வுபெற்ற நீதிபதி யான சண்முகத்தை இடைக்கால நிர்வாகியாக நியமித்த நீதிமன்றம், 25.04.2019ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்திமுடிக்க வேண்டுமென்று தீர்ப்பளித்தது. ஆனால் தேர்தலை நடத்த காலதாமதமானதால், மேலும் கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம், தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை முன்கூட்டியே எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி 2020ஆம் ஆண்டு தேர்தலுக்கான பணி தொடங்கிய நிலையில், பழைய மாணவரான செங்குட்டுவன், புதிய மாணவர்களையும் உறுப்பினர்களாக்கிய பிறகே தேர்தல் நடத்த வேண்டுமென்று உயர்நீதி மன்றத்தில் தடையாணை பெற்றார்.

இதற்கிடையே இடைக்கால நிர்வாகி பணி விலக, அப் பொறுப்புக்கு ஏ.ஜி.ஓ.டி.யான முருகன் என்ப வரை உயர் நீதி மன்றம் நியமித்தது. இவர் பொறுப்பேற்ற வுடன் அறக்கட்டளை யின் செயலாளராக இருந்த அறச்செல்வியை மாற்றி விட்டு, துரைக்கண்ணன் என்பவரை நியமித்தார். அதன் பிறகு முருகன் பணி மாற்றம் செய்யப்பட்டு ராஜூ என்பவர் நியமிக்கப்பட்டு, அவரும் மாற்றப் பட்டு, ஓய்வுபெற்ற நீதிபதியான ஜெகதீஸ் நியமிக்கப்பட்டு, இறுதியாக, 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பார்த்திபன் என்பவரை நியமித்து தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

இப்படி தேர்தல் தள்ளிப்போவதால் இந்த அறக்கட்டளையின் கீழுள்ள கல்வி நிறுவனங் களின் செயல்பாட்டில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. முக்கியமாக, இந்த அறக் கட்டளையின் கீழ் இயங்கக்கூடிய கல்லூரி களில், பேராசிரியர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில், 132 உதவிப் பேராசிரியர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. நீதிமன்றத்திலும் அறக்கட்டளையின் சார்பில் உத்தரவு பெறப்பட்டு, செப்டம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் உதவிப் பேராசிரியர்களுக்கான நேர்முகத்தேர்வை அறிவித்திருந்தனர். அத்தேர்வு நாள் தள்ளிப்போக, செப்டம்பர் 27, 28, 30 ஆகிய தேதிகளில் நேர்காணலை நடத்தி முடித்தார்கள். ஆனால் இந்த நேர்காணலில், தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லையென்றும், இனச்சுழல் முறையும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் பிரச்சனை எழுந்துள்ளது. உதாரண மாக, வரலாற்றுத்துறையை சேர்ந்த கவிதாஸ் என்பவரை நேர்காணலுக்கு அழைக்காமல், அவரைவிடக் குறைவான மதிப்பெண் எடுத்த கனகராஜ் என்பவரை நேர்காணலுக்கு அழைத் துள்ளார்களாம். தமிழ்த்துறையை சேர்ந்த சீனிவாசன், விலங்கியல் துறையை சேர்ந்த கார்த்திகையாளினி உள்ளிட்ட இன்னும் பலரை எந்த காரணமும் சொல்லாமல் திருப்பி யனுப்பியதால் அவர்கள் அனைவரும் புலம்பிக்கொண்டே சென்றுள்ளனர்.

dd

இது ஒருபுறமிருக்க, 100 மதிப்பெண்களுக் கான நேர்காணலில், அறக்கட்டளை நிர் வாகிகளே 85 மதிப் பெண்களைப் போட்டு விட்டு, மீதமுள்ள 15 மதிப்பெண்களுக்கு மட்டுமே நேர்காணல் நடத்தச் சொல்லியுள்ளனர். இந்த மோசடியைத் தெரிந்து கொண்ட தேர்வுக் குழுவினரில் சிலரோ, 'நாங்கள் தேர்வு நடத்திய 15 மதிப் பெண்களுக்கு மட் டுமே கையெழுத்து போட முடியும். நீங்களாகவே போட்டுள்ள 85 மதிப் பெண்களுக்கு நாங்கள் கையெழுத்திட முடியாது' எனக்கூறிவிட்டு கிளம்பியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய விலங்கியல் துறை பிரபாகரன், "இவர்கள் ரோஸ்ட்டர் முறையைப் பின்பற்றவில்லை. அப்படி பின்பற்றினால் எனக்கும் வாய்ப்பு நிச்சயம் கிடைத்திருக்கும். மதிப்பெண் அடிப்படையில் எடுக்கிறார்கள் என்று பார்த்தாலும், அதிக மதிப்பெண் எடுத்தவரையும் நேர்காணலுக்கு அழைக்கவில்லை. இதை எப்படி எடுத்துக் கொள்வதென்றே தெரியவில்லை'' என மனம்நொந்தார்.

இதுதொடர்பாகப் பேசிய ஓய்வுபெற்ற நீதிபதியும், பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவருமான சுப்புராஜ் கூறுகையில், "அறக்கட்டளை செயலாளருக்கான காலம் முடிந்த நிலையில், 132 துணை பேராசிரியர் களுக்கான நேர்காணல் நடத்துவதே முறை யற்றது. அதேபோல், ரோஸ்ட்டர் முறையின் படி ஒரு துறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்கள் இருக்குமாயின், அதில் சரிபாதியாக எஸ்.சி.(ஏ) பிரிவினருக்கு வழங்கப்பட வேண் டும். ஆனால் இதனைக் கடைப்பிடிக்கவே யில்லை. இதனால் இந்த நேர்காணலையே ரத்து செய்யவேண்டும். உண்மையாகவே அறக் கட்டளை சீராக இயங்க வேண்டுமானால் முதலில் தேர்தலை நடத்தவேண்டும்'' என்றார்.

இடைக்கால நிர்வாகியான ஓய்வுபெற்ற நீதிபதி பார்த்திபனிடம் கேட்டபோது, "நீதி மன்ற ஆணையோடுதான் பணி நியமனங்களை நடத்துகிறோம். நேர்முகத்தேர்வில் எந்த குளறு படியும் இல்லை. ஒரு தரப்பினர் வேண்டு மென்றே இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கட்ட விழ்த்து விடுகிறார்கள். இதற்கு மேல் என்னால் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது'' என்றார். இவை அனைத்திற்குமான ஒரே தீர்வு, ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தி, அறக்கட்டளையைத் தேர்ந்தெடுக்கப் பட்ட அறங்காவலரிடம் ஒப்படைப்பதே யாகும் என்கிறார்கள் பச்சையப்பன் அறக் கட்டளையைச் சேர்ந்த உறுப்பினர்கள்.

-சே

nkn091024
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe