சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஆறு கல்லூரிகளுக்கும் ஆறு அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் 2018--ருந்து தேர்தலே நடைபெறாத காரணத்தால் பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகமே சீர்குலைந்து போயுள்ளது என்கிறார்கள் அங்கே பணிபுரியும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள்.
பச்சையப்பன் அறக்கட்டளை தேர்தல் இறுதியாக 2013-ல் நடைபெற்றது. அறங்காவலராக ஜெயச்சந்திரனின் கீழ் 2018 வரையிலும் செயல்பட்டது. இவர்களது பதவிக்காலம் முடிவதற்குள் மீண்டும் தேர்தலை நடத்தி, அறங்காவலரை நியமனம் செய்திருக்கவேண்டும். நியமனம் செய்யாத காரணத்தால் முன்னாள் மாணவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என வழக்குப் பதிவு செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பச்சையப்பன் அறங்காவலர் நியமன தேர்தலை நடத்திமுடிக்க, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியான சண்முகத்தை இடைக்கால நிர்வாகியாக நியமனம் செய்தது. ஆனாலும் அவர் உயர்நீதிமன்ற ஆணைப்படி தேர்தலை நடத்தாமல் காலதாமதம் செய்துவந்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pachaiappancollege.jpg)
ஆறு மாதத்திற்குள் தேர்தலை நடத்தவில்லை என்று பிரச்சனை வெடிக்கவே, மீண்டும் உயர்நீதிமன்றம் செல்ல, நீதிமன்றமும் தேர்தல் நடத்தப்படுவதற்கான அட்டவணையை இடைக்கால நிர்வாகியிடம் கேட்டுப்பெற்று, இந்த நாட்களுக்குள் தேர்தல் நடத்தும்படி உத்தரவு பிறப்பித்தது. 13.02.2019-ல் செய்தித்தாள்களில் அதற்கான உத்தரவு இடைக்கால நிர்வாகியால் வெளியிடப்பட்டது.
தேர்தல் வேலை தொடங்கிய சூழ்நிலையில், பழைய மாணவரான செங்குட்டுவன் என்பவர், இன்னும் புதிதாக மாணவர்களைச் சேர்க்கவேண்டி யுள்ளது, சில மாற்றங்களைச் செய்தபிறகே, தேர்தல் நடத்தவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஸ்டே கேட்டதால், மீண்டும் தேர்தல் நிறுத்திவைக்கப் பட்டது. மீண்டும் வழக்கு நடத்தப்பட்டதில் அறங் காவலர் தேர்தல் நடத்த, இடைக்கால நிர்வாகியாக நியமிக்கப்பட்டவரையே, அறக்கட்டளையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டதாக நீதிமன் றம் அறிவித்தது. 9 அறங்காவலர் எனும் எண்ணிக் கையை 10 என மாற்றி, அந்த பத்தாவது நபர் உயர்நீதிமன்றத்தில் பணி ஓய்வுபெற்ற நீதிபதியே, தலைவர் பதவி வகிக்கவேண்டும் எனவும் உத்தர விட்டது. இந்த தீர்ப்பு அறக்கட்டளை விதிக்குப் புறம்பானது என பழைய அறங்காவலர்கள் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் முதன்மை அமர்வு, தனி நீதிபதியால் போடப்பட்ட ஆர்டரை ரத்துசெய்தது. இந்த சூழ்நிலையில், முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி தன்னுடைய பதவியை ‘ரிசைன்’ செய்து விட்ட காரணத்தால், "மீண்டும் தேர்தல் நடத்தப்படவேண்டும்' என உயர்நீதிமன்றம், அரசு சொத்து ஆட்சியரை (ஏ.ஜி. ஓ.டி.) நியமித்தது. மேலும் அந்த வழக்கு வேறொரு தனி நீதிபதியிடம் கொண்டுவரப்பட்டு, தேர்தல் மற்றும் அறக் கட்டளை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்படி உத்தரவிட்டது. அந்த தனி நீதிபதி, மூன்று மாதத்திற்குள் தேர்தலை நடத்தவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இப்படி நீதிமன்றம் பலமுறை உத்தரவு பிறப்பித்தும் இதுவரையிலும் தேர்தல் நடத்தாமல், காலதாமதம் செய்யப்பட்டு வருவதால்., அடிமட்ட பணியாளர்களில் தொடங்கி உயர்மட்ட நிர்வாகிகள்வரை பலர் இன்னல்களுக் குத் தள்ளப்பட்டுள்ளார்கள். தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச்சட்ட விதிகளைப் பின்பற்றாமல் தங்களின் விருப்பம்போல் ஆட்சி மன்றக்குழுவை நியமித்துகொண்டு, ஆசிரியர்களையும், ஆசிரியரல் லாத பணியாளர்களையும், மாறுதல் என்ற பெயரில் பந்தாடுவதனால், முறைப்படியான மாத ஊதியம் கிடைக்காமல் 6 மாத காலத்திற்கு மேலாக அல்லல்பட்டு வருகிறார்கள்.
இந்த மாறுதலை எதிர்த்து கேள்வி கேட்பவர் களை அச்சுறுத்தும் வகையில் அவர்களுக்கும் பணிமாற்றம், பணி இடைநீக்கம், பணிநீக்கம் என பல்வேறு வகையில் மன அழுத்தத்தை தற்போதைய அறக்கட்டளை செயலாளர் துரைக்கண்ணன் ஏற்படுத்துகிறார். சிலர் இந்த பணியிட மாறுதலுக்கு உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை ஆணை யும் பெற்றிருக்கிறார்கள். 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை, கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு அனுப்பிவைக்காமல் காலதாமதம் செய்ததன் விளைவாக 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணி மேம்பாடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pachaiappancollege1.jpg)
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பேராசிரியர் திருநாவுக்கரச ரிடம் கேட்டபோது, "அதிகார துஷ்பிரயோகம் மூலம் தேர்தலுக்கான பணியைப் பார்க்காமல் இவர்களை யார் எல்லாம் கேள்வி கேட்கிறார்களோ அவர்களின்மீது துறைரீதி யான நடவடிக்கை எடுப்பது, அறக்கட்டளை யில் பணியாற்றும் நபர் களுக்கு மாத ஊதியம் கொடுக்காமல் காலதாமதம் செய்து அவர்களின் வாழ்வா தாரத்தை கேள்விக்குறி யாக்குவது என செயல் படுகிறார்கள். தேர்தல் நடத்தும் வரையிலும் தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டம் 1976 விதி 14-ஏ வின் படி அரசு ஒரு தனி அலுவலரை நியமித்தால் இதுபோன்ற விதிமீறல்கள் நடக்காமல் தடுக்கமுடியும். இதை உடனே அரசு செய்ய வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை''’என்றார்.
இதுகுறித்து பச்சையப்பன் அறக்கட்டளை செயலர் துரைக்கண்ணனிடம் கேட்டபோது, “"இதுகுறித்து நான் பேசக்கூடாது. எதுவாக இருந் தாலும் ஏ.ஜி.ஓ.டி. ராஜு சார்தான் சொல்லணும்'' என்றார். அரசு சொத்து ஆட்சியர் ராஜுவை 044 25லலலல78 என்ற அலுவலக எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேச முயன்றபோது, இதைப் பற்றி பேசவோ, இது சம்பந்தமாக பார்க்கவோ முடியாதென மறுத்துவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t112301567z-arun-2026-02-07-16-52-57.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-04/pachaiappancollege-t.jpg)