Advertisment

பார்வை!-டாக்டர் கோகுல்

parvai

parvai

1994-ல் பெங்களூருவில் நான் படித்துக் கொண்டிருந்தேன். வீரப்பன் விவகாரம் வெகுண்டு இருந்தபோது ஹாஸ்டலில் இருந்த கன்னட மாணவர்கள் என்னுடன் தங்கியிருந்த மாணவர்களையும், என்னையும் தமிழர்கள் என்பதால் கோபமாகப் பார்ப்பார்கள். அப்போது நக்கீரன் புத்தகம் வாங்க பத்து கிலோ மீட்டர் நாங்கள் நடந்துதான் வர வேண்டும். அப்படி நடக்கும் நாங்கள் ஆளுக்கொரு புத்தகம் வாங்கிக் கொள்வோம். ஹாஸ்டலுக்கு சென்று... கன

parvai

1994-ல் பெங்களூருவில் நான் படித்துக் கொண்டிருந்தேன். வீரப்பன் விவகாரம் வெகுண்டு இருந்தபோது ஹாஸ்டலில் இருந்த கன்னட மாணவர்கள் என்னுடன் தங்கியிருந்த மாணவர்களையும், என்னையும் தமிழர்கள் என்பதால் கோபமாகப் பார்ப்பார்கள். அப்போது நக்கீரன் புத்தகம் வாங்க பத்து கிலோ மீட்டர் நாங்கள் நடந்துதான் வர வேண்டும். அப்படி நடக்கும் நாங்கள் ஆளுக்கொரு புத்தகம் வாங்கிக் கொள்வோம். ஹாஸ்டலுக்கு சென்று... கன்னட மாணவர்களிடம் காட்டி, "நாங்கள்தான் தமிழர்கள்' எனச்சொல்லி அவர்களை வெறுப்பேத்துவோம்.

Advertisment

அதற்குப் பிறகு ஆட்டோ சங்கரை எழுத வைத்து... எங்களுக்குள் ஒரு திகில் ஆட்டோ ஓட்ட வைத்தார் நக்கீரன் கோபாலண்ணன். அதுவரை நக்கீரனை அறிந்திராத என் அப்பாவிற்கு நக்கீரனை காட்டியபின், அவரையும் என்னைப் போலவே குழந்தையாய் வாரி எடுத்துக் கொண்டது நக்கீரன்.

Advertisment

இப்போது நான் டாக்டராய் இருந்தாலும் சமூகத்தின் நோய்களை சரிவர சரி செய்வது நக்கீரன் என்னும் டாக்டரே.

2018, மே 30-ஜூன் 1 இதழ்:

மூக்கை நுழைத்த முன்னாள் டி.ஜி.பி அலெக்சாண்டர் எந்த ஹோட்டலில், எந்த ரூம்களில் தங்கி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளோடு ஆலோசனை செய்தார் என்பதைக் காட்டியிருப்பது நக்கீரன் என்றுமே களத்தில் நின்றுகொண்டிருக்கிறான் என்பதற்குச் சான்று.

கூடவே "சிக்னல்' பகுதியில் திருடனை மடக்கிய நக்கீரன் நிருபரும் நிஜங்களில் கலந்திருக்கிறார்.

நக்கீரன் இளம் பத்திரிகையாளர் படையில் சேர தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் உயரிய விருதை இப்போதே வென்றதாக உணர்வார்கள். அவர்களால் இனி ஒரு விதி செய்யப் படும் என மகாகவி பாரதியின் நம்பிக்கையோடு நம்புகிறேன்.

"திண்ணைக் கச்சேரி'யும், "மிட்நைட் மசாலா'வும் நக்கீரன் வானத்திற்குள் வெடித்திருக்கும் கண் கூசா மின்னல்கள் என்பதை கண்ணைத் திறந்துகொண்டு சொல்லலாம்.

வாசகர் கடிதங்கள்!

எத்தன்-தகிடுதத்தன்!

கர்நாடக காங்கிரஸ் பிரமுகர் டி.கே.சிவக்குமார், மேற்படி நீங்க சொன்ன மாதிரி எத்தனுக்கு எத்தன் -மோடிக்கும் அமித்ஷாவுக்குமே தண்ணிகாட்டிய தகிடுதத்தன்.

-செ.சிவா, குளித்தலை

கேள்விக்கு நெத்தியடி!

"ஒவ்வொரு வினைக்கும்' என்று தொடங்குகிற ஐன்ஸ்டீனின் மூன்றாம் விதியை தமிழிசைக்குப் பதிலடியாக வெளிப்பட்ட "வலை வீச்சு' கமெண்ட் -அவரின் கேள்விக்கு விழுந்த நெத்தியடி.

-து.ஆறுமுகம், காஞ்சிபுரம்.

nkn8.06.18 Parvai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe