பழங்காலத்தில் விலங்குகளை வேட்டையாடி உண்டு வந்த மனிதன், விவசாயம் செய்யத் தொடங்கியதிலிருந்து கால்நடைகளை விவசாயப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தி வந்தான். விவசாயத்திற்கு பெரும்பங்கு வகிக்கும் கால்நடைகளில் மாடு முதன்மையாகக் கருதப்படுகிறது. அறுவடை நாள் முடிந்து, தை ஒன்றாம் தேதி பொங்கல் பண்டிகையும், அடுத்த நாள், மாடுகளைப் பெருமைப்படுத்தும் வகையில் மாட்டுப் பொங்கலும் கொண்டாடப் படுகிறது.
அறுவடைக் காலம் முடிந்ததும் தமிழர்கள் காலங்காலமாக எருதுகளை வைத்து பல விளையாட்டுக்களை நடத்திவருகின்றனர். அதில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் (ரேக்ளா) போன்றவை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முக்கிய விளையாட்டுக் களாகும், தமிழகத்தின் வடக்கு மாவட்டங் களான திருவள்ளூர் மேற்கு பகுதி, ராணிப் பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப் பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங் களில் நடத்தப்படும் எருது விடும்
பழங்காலத்தில் விலங்குகளை வேட்டையாடி உண்டு வந்த மனிதன், விவசாயம் செய்யத் தொடங்கியதிலிருந்து கால்நடைகளை விவசாயப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தி வந்தான். விவசாயத்திற்கு பெரும்பங்கு வகிக்கும் கால்நடைகளில் மாடு முதன்மையாகக் கருதப்படுகிறது. அறுவடை நாள் முடிந்து, தை ஒன்றாம் தேதி பொங்கல் பண்டிகையும், அடுத்த நாள், மாடுகளைப் பெருமைப்படுத்தும் வகையில் மாட்டுப் பொங்கலும் கொண்டாடப் படுகிறது.
அறுவடைக் காலம் முடிந்ததும் தமிழர்கள் காலங்காலமாக எருதுகளை வைத்து பல விளையாட்டுக்களை நடத்திவருகின்றனர். அதில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் (ரேக்ளா) போன்றவை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முக்கிய விளையாட்டுக் களாகும், தமிழகத்தின் வடக்கு மாவட்டங் களான திருவள்ளூர் மேற்கு பகுதி, ராணிப் பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப் பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங் களில் நடத்தப்படும் எருது விடும் திருவிழா மிகவும் பிரபலமானது. இதில் மாடுகளைக் குறிப்பிட்ட இலக்கை நிர்ணயம் செய்து, அந்த இலக்கைக் குறைந்த நேரத்தில் விரைவாகக் கடக் கும் எருதுகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றது. இத்திருவிழாவுக்காகவே எருதுகள் வளர்க்கப்படுகின்றன.
மாட்டுப் பொங்கலன்று தொடங்கி, ஏப்ரல் மாத இறுதிவரை இப்பகுதிகளில் இந்தத் திருவிழா களைகட்டும். வெற்றி பெறும் எருதுகளுக்கு சில லட்சங்கள் வரை பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. அதேபோல், முப்பதிலிருந்து ஐம்பது பரிசு கள் வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாடுபிடி வீரரான பார்த்திபன் நம்மிடம், "எங்கள் பகுதியில் பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக நடத்தப்படும் எருது விடும் திருவிழா என்றாலே மற்ற வேலைகளை மறந்துவிட்டு, மாடு பிடிக்கச் சென்று விடு வோம். குறிப்பாக, பர்கூர், புதுப்பேட்டை, வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம், மேல் மாயல் போன்ற பகுதியில் அதிகமான பரிசுத்தொகை எருதுகளுக்கு வழங்கப்படு கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு இந்த விளையாட்டு ஆர்வத்தை அதிகரித் துள்ளது, வடக்கு மாவட்டங்களில் மட்டு மல்லாது, அவற்றை ஒட்டியுள்ள ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலும் இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது'' என்றார்.
எருது உரிமையாளரும் மாட்டு வியாபாரியுமான சரவணன், "எங்க பகுதி இளைஞர்களுக்கு எருது விடும் திருவிழா வானது, ரத்தத்தில் கலந்த ஒன்றாக உள்ளது. எருதுகளை மாட்டின் சுழிகளைப் பொறுத்து ஒன்று முதல் மூன்று லட்சம் வரை கொடுத்து, கர்நாடகா, மகாராஷ்டிரா பார்டரிலுள்ள ஆவேரி என்னும் ஊரிலிருந்து வாங்கிவந்து, தனியாக அதற்கு பயிற்சியளித்து, அந்த எருதுகளை எருது விடும் திருவிழாக்களில் ஓட விடுவோம், அதில் முதல் மூன்று பரிசுகளை வென்ற எருதுகளை 40 முதல் 50 லட்சம் வரை விலை கொடுத்து வாங்கத் தயாராக உள்ளனர். அதேபோல உள்ளூர் காளை களான காங்கேயம், காவா கெட்டை, மயிலை காளை போன்ற நாட்டு மாட்டு வகை எருதுகளும் மந்தையில் பரிசைத் தட்டிச்செல்லும், . சில போட்டிகளில் எருதுகளைக் காட்டிலும் பசு மாடும் பரிசைத் தட்டிச் சென்றதுண்டு,
அதேபோல, எருதுகளைக் குழந்தைகளைப் போல பராமரிப்போம். அதற்கு உலர் பழங்கள், பாதாம், பிஸ்தா உள்ளிட்ட சத்துள்ள பொருட் களைக் கொடுத்து வளர்ப்போம். எருதுகளின் வீரியத்தை அதிகரிக்க சில மூலிகைகளும் கொடுப் போம். எருதுகளுக்கு நீச்சல் பயிற்சியளிப்போம். எங்கள் பகுதி இளைஞர்கள் இதுபோன்ற பராமரிப் புப் பணிகளுக்கு பணமே வாங்காமல் ஆர்வத்தோடு உதவிக்கு வருவார்கள், எருது விடும் திருவிழாவில் ஒரு எருதை ஓடவிட்டு அதைப் பிடிக்க சுமார் 10 இளைஞர்கள் உடன் நிற்பார்கள், எடுத்துக்காட் டாக, சில ஆண்டுக்கு முன் இந்த பகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத்குமாரின் எருது, விழாவில் முதல் பரிசை தட்டிச்சென்றது, ஆனால் அதன் கெட்ட நேரம், அதனால் ஓட்டத்தை கண்ட்ரோல் செய்ய முடியாமல், கிணற்றில் விழுந்து பரிதாபமாக இறந் தது. அதற்கு, மனிதர் களுக்கு நடத்துவதைப் போல மாலை மரியாதை செலுத்தி இறுதி ஊர்வலத் தை நடத்தி அதைப் புதைத் தனர். இதிலிருந்தே எருது களுக்கும், எங்களுக்கும் எப்படியொரு பிணைப்பான உறவு உள்ளதென் பதைப் புரிந்துகொள்ளலாம். வீட்டில் ஒரு பிள்ளை யாகவே அதை வளர்ப்போம். மந்தையில் ஆக்ரோஷ மாக சீறிப்பாய்ந்து ஓடும் எருது, குறுக்கே எவராவது வந்தால் முட்டித் தூக்கி வீசும். அதே எருது, வீட்டி லுள்ள ஒரு குழந்தையைக்கூட எதுவும் செய்யாமல் பாசமாக இருக்கும். இதுபோன்ற எருதுகளை விவசாயத்துக்கு மட்டுமல்லாமல் மனிதர்கள் போருக்கும் பயன்படுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான சாட்சியமாக கர்நாடக மாநிலம் மைசூர் அரண்மனையில் போர்களில் வெற்றிபெற்று பீரங்கிகளை இழுத்துவரும் ஓவியங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மனிதனின் ஒவ்வொரு பரிணாமத்திலும் மாடு களுக்கு பெரும் பங்கு உள்ளது'' என்றார்.
ஜல்லிக்கட்டு மட்டுமின்றி எருதுவிடும் திருவிழாவும் முக்கியமான தமிழர் பண்பாடு என்பது இதன்மூலம் தெரியவருகிறது.