Advertisment

சொந்தக் கண் போதும்; இரவல் கண் வேண்டாம்!- தி.மு.க. சீனியர்கள் முணுமுணுப்பு!

dmk

“ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பால், தி.மு.க. அபிமான வாக்குகளோ, ஆட்சி மாற்றத்தை விரும்பும் நடுநிலையாளர்களின் வாக்குகளோ, சொற்பமாகவோ, கணிசமாகவோ திசை திரும்புவதை ஐ-பேக் வியூகம் தடுக்குமா, இருக்கின்ற பலத்தையும் சிதைத்துவிடுமா என்ற கவலை தி.மு.க. சீனியர்களிடம் இருக்கிறது.

Advertisment

dmkசீட்டுகளை ஐ-பேக்கே முடிவு செய்துவிட்டதாக பரவும் செய்திகளால் கட்சிக்காரர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். விருதுநகர் மாவட்ட தொகுதி ஒன்றில் ‘சிட்டிங்’ தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவருக்கு, "வரும் தேர்தலில் சீட் இல்லை' எனத் தகவல் கசிகிறது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஒருவர் உதயநிதியின் மனதில் இடம் பெற்றிருப்பதால் அவருக்கு சீட் என்ற பேச்சும் அடிபடுகிறது.

தி.மு.க.வைப் பொறுத்தவரை, இந்த தொகு

“ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பால், தி.மு.க. அபிமான வாக்குகளோ, ஆட்சி மாற்றத்தை விரும்பும் நடுநிலையாளர்களின் வாக்குகளோ, சொற்பமாகவோ, கணிசமாகவோ திசை திரும்புவதை ஐ-பேக் வியூகம் தடுக்குமா, இருக்கின்ற பலத்தையும் சிதைத்துவிடுமா என்ற கவலை தி.மு.க. சீனியர்களிடம் இருக்கிறது.

Advertisment

dmkசீட்டுகளை ஐ-பேக்கே முடிவு செய்துவிட்டதாக பரவும் செய்திகளால் கட்சிக்காரர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். விருதுநகர் மாவட்ட தொகுதி ஒன்றில் ‘சிட்டிங்’ தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவருக்கு, "வரும் தேர்தலில் சீட் இல்லை' எனத் தகவல் கசிகிறது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஒருவர் உதயநிதியின் மனதில் இடம் பெற்றிருப்பதால் அவருக்கு சீட் என்ற பேச்சும் அடிபடுகிறது.

தி.மு.க.வைப் பொறுத்தவரை, இந்த தொகுதிக்கு இவர்தான் வேட்பாளர் என்ற பிம்பம் பதிந்துவிட்டது. அதை மாற்றவேண்டுமென்றால், 40% வேட் பாளர்களாவது இளைஞரணியைச் சேர்ந்த புதுமுகமாக இருக்கவேண்டும் என்ற பார்வை கட்சியிடம் உள்ளது. இது சீனியர்களிடம் முணுமுணுப்பை உண்டாக்குகிறது.

1977-ல் இருந்து, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக, எட்டாவது முறை சட்டமன்றத்துக்குச் செல்லும் சீனியர் அரசியல்வாதி கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ஐந்து முறை தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றவர். விருதுநகரில் இளைஞ ரணி ஒட்டும் போஸ்டர்களில் அவர் பெயர் -படம் தவிர்க்கப்படுவது வழக்கமாகி விட்டது.

Advertisment

அதே நேரத்தில், சீட்பெற முனைப்பாக இருக்கும் இளைஞரணி புள்ளியோ, மாவட்ட பொறுப்புக்கு வருவதற்கே 2சி வரை அன்பளிப்பு தந்தவராம். ஆட்டோ டிரைவராக ஒரு வீட்டில் அறிமுகமாகி, அந்தக் குடும்பத்தில் புயல் வீசச்செய்து, கோடிகளைச் சுருட்டி வழக்கில் சிக்கியதெல்லாம், உதயநிதிக்கு தெரியாத, உள்ளூர்வாசிகள் மட்டுமே அறிந்த வில்லங்க விவகாரம் என்கிறார்கள் லோக்கலில். அவர்கள் குறிப்பிடுவது, விருதுநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமாரைத்தான்.

dmk

அவரிடமே பேசினோம். ""நான் வடக்கு மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர். அண்ணாச்சியோ, தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர். அதனால், வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு படத்தையும் பெயரையும் மட்டுமே விளம் பரங்களில் போடுகிறேன். கே.கே.எஸ்.எஸ்.ஆர். பெயரை இரண்டாவது இடத்தில் போடுவது நன்றாக இருக்காதே என்றுதான் போடுவதில்லை. கட்சித் தலைமை எனக்கு வாய்ப்பளித்து, விருதுநகர் தொகுதியில் நிற்க வைத்தால், நிச்சயம் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆகமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த குடும்ப வழக்கு விவகாரமெல்லாம் 2017-லிலேயே அமுங்கிவிட்டது. எங்கள் கட்சியி லேயே சிலர், தேவையில்லாமல் அதை இந்த நேரத்தில் கிளப்பி வருகிறார்கள்''’என்று வேதனைப் பட்டார்.

dmk

தி.மு.க.வில் இளைஞர்கள் என்ற பெயரில் உதயநிதி மூலம் திடீர் குபீர் புதுமுகங்கள் லோக்கலில் செல்வாக்கு பெறுவதும், ஐபேக் நிறுவன ஆலோசனைகளும் சீனியர்களுக்கு கவலையளித்து வருகின்றன. "ஒன்றிணைவோம் வா'’ போன்ற ஐடியாக்களையோdmk, இணையத்தை முடிந்த அளவுக்குப் பயன்படுத்த, ஐபேக் பின்பற்றச் சொல்லும் டெக்னிக் கல் சமாச்சாரங் களையோ, குறை சொல்லிவிட முடியாது. காலத்துக்கேற்ற மாற்றம்தான். அதே நேரத்தில், வேட்பாளர் தேர்வு விஷயத்தில், முழுக்க முழுக்க பிரசாந்த் கிஷோரை தி.மு.க. நம்பினால், நிச்சயமாக தேர்தல் வெற்றிக்கு உத்தரவாதமில்லை. 71 ஆண்டுகளாக வலுவான கட்டமைப்புடன் செயல்படும் தி.மு.க. வில், கட்சிக்கு அப்பாற்பட்ட ஒரு தகவல் சேகரிப்பு நிறுவனத்தின் வியூகங்கள் முன்னிறுத்தப் பட்டால், அது கட்சியின் அடித்தளத்தை ஆட்டிப்பார்க்கும் வேலையாகிவிடும். மாவட்ட- ஒன்றிய நிர்வாகிகளை மீறி வேட்பாளரை நிறுத்தினால் ஒத்துழைப்பு எப்படி கிடைக்கும்? கட்சி நிர்வாகிகளையோ, வேட்பாளர்களையோ, தன் சொந்தக் கண்ணால் அளவெடுத்து, தலைமை ஒரு முடிவுக்கு வர வேண்டும். சுவையை அறிந்து கொள்ள சொந்த நாக்குதான் தேவை. இரவல் கண் கொண்டு பார்க்க முடியாது''’ என்கிறார்கள் சீனியர்கள்.

நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டிருக்கும் இவ்விவகாரத்தை கவனத்தில் கொள்ளவேண்டும் தி.மு.க.

-ராம்கி

nkn091220
இதையும் படியுங்கள்
Subscribe