ருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை வி.வி.ஐ.பி.யின் பாலியல் தேவைக்காக அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணை கிடைக்காமல் 248 நாட்களாக மதுரை மத்திய சிறையில் அடைபட்டிருக்கிறார் பேராசிரியை நிர்மலாதேவி.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளை நாம் ‘ஸ்மெல்’ செய்தபோது, இத்தனை நாட்கள் உள்ளுக்குள் வைத்து புழுங்கிக்கொண்டிருந்த பழைய சமாச்சாரங்களை எடுத்துவிட்டனர்.

nirmaladevi

“""மனசு உறுத்தத்தான் செய்யுது. அன்னைக்கு இருந்த பிரஷர்ல.. முருகன், கருப்பசாமி பேரைச் சொன்னா போதும்னு இருந்துட்டோம். ஆனா.. தோண்டத்தோண்ட நிறைய வரும்னு தெரிஞ்சும்.. யார் யார்கூட தொடர்பு இருக்குன்னு நிர்மலாதேவி சொன்னாலும், அதையெல்லாம் நாங்க ரெகார்ட் பண்ணல. கலைச்செல்வனைச் சொல்லுச்சு. சின்னையாவ சொல்லுச்சு. அழுத்திக் கேட்டிருந்தா... யாருக்காக ஏற்பாடு நடந்ததுங்கிற விஷயமெல்லாம் வந்திரும். அரெஸ்ட் பண்ணுனப்ப யார் பேசிருந்தா.. என்னை விட்ருப்பீங்க? கட்சியில உள்ளவங்க பேசிருந்தா விட்ருப்பீங்களா? பெரிய ஆபீசர் பேசிருந்தா விடுவீங்களான்னு கேட்டாங்க. அமைச்சர்கள் யாரையாச்சும் அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும். மினிஸ்டர் லெவல்ல பழக்கம் உண்டு. அது நல்லா தெரியுது. அழல; ஃபீல் பண்ணல. அடுத்து எதையாச்சும் ஒரு பிரச்சனைய கிளப்பிவிடுங்க மேடம். அப்பத்தான் இது மாறும். அடுத்து ஏதாச்சும் பரபரப்பா ஒரு இஷ்யூ வந்தா என்னை விட்ருவாங்க. இது மாறும்னாங்க. விசாரணை நடந்தப்ப.. சேலை மாற்ற விடக்கூடாது. குளிச்சு ஃப்ரஷ் ஆயிட்டா அப்புறம் தெளிவாயிருவாங்க. உண்மையைச் சொல்லமாட்டாங்கன்னு, மூணாவது நாள்தான் அவங்க அண்ணனுக்குச் சொல்லி, சேலையை எடுத்துட்டு வரச்சொன்னோம்''’என்ற ஆதங்கம் வெளிப்பட்டது.

Advertisment

நிர்மலாதேவியின் கணவர் சரவணபாண்டி, "மீடியாகிட்ட நான் எதுக்கு பேசணும்?'’என்று தவிர்த்த நிலையில், அவருடைய அண்ணன் ரவியும், அண்ணி வனஜாவும் கொட்டித் தீர்த்துவிட்டனர்.

அண்ணன் ரவியோ, ""பரமசிவம் வாத்தியார்... ஜெயலட்சுமி டீச்சர்னா ஊருக்கே தெரியும். தலை நிமிர்ந்து வாழ்ந்த குடும்பம். எனக்கு ஒரு அக்கா, மூணு தங்கச்சி. நிர்மலாதேவி ரெண்டாவது தங்கச்சி. பொறந்த இடத்துலயும் சரி... கல்யாணம் பண்ணிப் போன இடத்துலயும் சரி... யாரோட உறவும் வேணாம்னு தனியாவே இருந்தா. ஐ.ஏ.எஸ். படிக்க வைக்க வேண்டியது. ஜாதகக்காரன் கெடுத்துட்டான். இப்பகூட எந்த போட்டோவா இருக்கட்டும். வீடியோவா இருக்கட்டும். தலை குனிஞ்சிருந்தாலும், அவ கண்ணு மேலதான் பார்க்கும். இப்ப உள்ள இருக்கா. வெளிய இருந்தான்னா.. இதெல்லாம் அவளுக்கு சாதாரண பிரச்சனை. வெளிய வந்துட்டான்னா.. இதைவிட அடுத்த லெவலுக்குத்தான் போவா. அடிச்சு சொல்லுறேன். ஜெயில்ல பார்க்கிறப்ப என்னை பேசவிடமாட்டா. எனக்கு வேலைதான் சொல்லுவா. மகளைப் பத்தி பேசினப்ப ரெண்டு தடவை அழுதா. பயங்கரமா சாமி கும்பிடுவா. எந்த சாமின்னு கிடையாது. எல்லா சாமியும் கும்பிடுவா. குறி கேட்கிறது எல்லாம் உண்டு.

ஆரம்பத்துல இருந்து எங்க வக்கீல் என்ன சொல்லுறாருன்னா.. "இந்தக் கேஸுல ஒண்ணுமே கிடையாது. இதுல மற்ற தலையீடுகள் இருக்குது. ஆனா.. வெளிப்படையா தெரியல. எனக்கு நெறய கேள்விகள் இருக்கு. யார்ட்ட கேட்டா பதில் கிடைக்கும்னு தெரியல. எதுக்கு இந்த அளவுக்கு இழுத்தடிக்கிறாங்க. ஒண்ணுமே புரியல. கவர்னர் ஃபங்ஷன் போனது. இவ வீடியோ எடுத்ததெல்லாம் உண்மைதான். கவர்னர்னு அவ சொன்னது, தன்னோட இமேஜை கூட்டிக் காமிக்கிறதுக்காக சொன்ன வார்த்தை. சி.பி.சி.ஐ.டி. எவ்வளவு பெரிய டிபார்ட்மென்ட். எத்தனை ஸ்டாஃப் இருக்காங்க. இத்தனை பேரும் சேர்ந்து எத்தனை நாள் விசாரணை விசாரணைன்னு கேஸை இழுத்தாங்க. போன்ல யார் யாருகூட எத்தனை மணி நேரம் பேசினாங்கன்னு.. அந்த விபரத்தை வச்சிக்கிட்டு விசாரிச்சாங்க. விசாரணைக்கு கோடாங்கிங்க எத்தனை பேரு வந்தாங்க தெரியுமா? நான் பார்க்கிறப்பவே, புருஷன்-பொண்டாட்டின்னு ரெண்டு nirmaladeviகோடாங்கிங்க வந்து நாலஞ்சு மணி நேரம் உட்கார்ந்திருந்தாங்க''’என்று குமுறலை வெளிப்படுத்தியபோது, அடிக்கடி அவர் மனைவி வனஜா குறுக்கிட, “""தேவாங்கர் கல்லூரிக்கு 14 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய வேலை. கவர்மென்ட் வேலை... கவர்மென்ட் சம்பளம். கிடைச்ச வேலைய விட்டுட்டாளேங்கிற ஆத்திரம் இவளுக்கு''’என்று மனைவியின் கோபத்தை நியாயப்படுத்தினார்.

Advertisment

வனஜாவின் பேச்சில் அனலடித்தது. ""என்னையோ, என் வீட்டுக்காரரையோ நிர்மலாதேவி மதிக்கமாட்டாங்க. இப்ப யாரு வந்தா உனக்கு? அம்மா வேணாம்னு அவ பெத்த பிள்ளைங்களே சொல்லுது. பொம்பளையா இருந்தா.. அடக்கம் வேணும். நல்வழிப்படுத்துறதுதானே ஒரு டீச்சரோட கடமை? எல்லா அறிவும் திறமையும் இருந்தும், கோட்டை விட்டுட்டாளே! அவளைக் கல்யாணம் பண்ணிக்கொடுத்த இடம் பெரிய இடம். அவங்க வீட்லயே கிட்டத்தட்ட பதினஞ்சு டாக்டருங்க இருக்காங்க. அவங்க வீட்ல அவ்வளவு பணம் கொட்டிக்கிடக்கு. சரவணபாண்டியோட அப்பா சொத்தே அவ்வளவு இருக்கு. 4 கோடி ரூபாய் சொத்தை இப்பத்தான் அவருக்கு பிரிச்சுக் கொடுத்தாங்க. இவ வழக்குல கண்ணுக்குத் தெரியாத வில்லன் ஒருத்தன் இருக்கான்'' என்றார்.

வழக்கில் ஆஜராவதற்காக 19-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் வந்திருந்தார் நிர்மலாதேவி. கிடைத்த சந்தர்ப்பத்தில், சொந்தபந்தங்களின் குமுறலையும், வழக்கு குறித்த கேள்விகளையும் அவர் முன் வைத்தோம்.

""அண்ணன், அண்ணி, என் கணவர் எல்லாரையும் என்னை வந்து பார்க்க சொல்லுங்க. என் கணவர் என் மேல இருக்கிற கோபத்துல பேசாம இருக்கார். அவரை ஜெயிலுக்கு வந்து பார்க்கச் சொல்லுங்க. நான் அவர்ட்ட பேசணும். பழைய டிரஸ் மட்டும்தான் இருக்கு, புது டிரஸ் கொடுக்கக்கூட யாரும் வர்றது இல்ல. திரும்பத் திரும்ப போட்ட டிரஸ்ஸையே போட வேண்டியிருக்கு. ஸ்பைனல் கார்டில் பிரச்சனை இருக்கு. பெயின் ரொம்ப இருக்கு. ஹாஸ்பிடல் போகலியான்னு கேட்காதீங்க. இந்த வழக்குல என்ன நடக்குதுனே தெரியல, என்னென்னமோ நடக்குது. என் தரப்பு நியாயம் இன்னும் வெளியில் யாருக்கும் தெரியல. என் ஹஸ்பென்டுக்கு ஒரு மெசேஜ் போடுங்க. என் மீது பாசமா இருக்கக்கூடியவங்க இந்தமாதிரி நியூஸைப் பார்த்துட்டுத்தான் பேசாம இருக்காங்க.

அப்ப எனக்கு வேலைப் பளு ஜாஸ்தி. அதனால வெளிய வந்து சொந்தக்காரங்க யாரையும் பார்க்க முடியல. வெளில என்ன நியூஸுன்னு தெரியலியே. சார்ஜ் ஷீட் பார்த்திருக்கேன். ஆனா.. ஃபுல்லா ரீட் பண்ணல. மெயினானத மட்டும் படிச்சேன். வழக்கு குறித்து அப்புறம் பேசிக்கலாம் சார். கேஸைப் பத்தி இப்ப எதுவுமே நான் வார்த்தைய விடல. என்னோட வழக்கறிஞர் வரல. அவரு இந்தக் கேஸை விட்டு விலகிட்டாரா இல்லியான்னு தெரியல. ஜெயிலுக்கே அவரு மனு பார்க்க வரமாட்டாரு. என்னோட வக்கீல் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சதுகூட எனக்குத் தெரியல.

அடுத்து நான் ஸ்டெப் எடுக்கணும். அதுக்காக ரிலேஷன் மொதல்ல வரட்டும். கேஸ் பத்தி எல்லாமே அப்புறம் பேசறேன். என் வீட்டுக்காரரை வரச்சொல்லுங்க. அந்த மெசேஜ் (மாணவிகளிடம் பேசிய ஆடியோ) பார்த்துட்டு அவங்க ரொம்ப கோபமா இருக்காங்க. அதனாலதான், உங்க (மீடியா) ஹெல்ப்ப கேட்கிறேன். டைவர்ஸ் நோட்டீஸ் அவரு அனுப்புனது வேற. மொதல்ல அவருக்கு மெசேஜ் கொடுங்க. அதுக்கப்புறம் கேஸ் டீடெய்ல் பத்தி பேசுறேன்''’’ என்று விரக்தியாகச் சிரித்தார்.

வெளியில் தெரியாத, தன் வாயால் சொல்லப்படாத, ஏதோ ஒரு நியாயத்தை, நிர்மலாதேவி இன்னும் வெளிப்படுத்தாமலே இருக்கிறார் என்பதை, அவருடைய பரிதவிப்பான பேச்சிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

-சி.என்.இராமகிருஷ்ணன்

படங்கள்: ராம்குமார்

_______________________

“ஜட்ஜய்யாகிட்ட நியாயம் கேட்கிறேன்!’’-கதறிய கருப்பசாமியின் தந்தை!

sekarமதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருக்கும் கருப்பசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, அவருடைய தந்தை சேகர் சந்தித்தார். கிராமத்து மனிதர் என்பதால், கோர்ட் வளாகத்திலேயே, "“என் மகன் என்ன தப்பு பண்ணுனான்? அவனுக்குப் பதில் என்னை வேணும்னா ஜெயிலில் போடுங்க. தப்பு பண்ணுனவன் வெளிய மதிப்பு மரியாதையோட சுத்திக்கிட்டிருக்கான். இவனைப் போயி ஜெயில்ல போட்டு கொடுமை பண்ணுறாங்க. ஜட்ஜய்யாகிட்ட நான் போயி நியாயம் கேட்கிறேன்' என்று கதறி அழ, தன் தந்தை நீதிமன்றத்துக்குள் நுழைந்து எதுவும் பேசி, வழக்கை மேலும் சிக்கலாக்கிவிடக்கூடாது என்ற பதற்றத்தில் கருப்பசாமி டென்ஷனாக, பெரியவர் சேகரை நீதிமன்றத்துக்கு வெளியே இழுத்துச் சென்றனர் உறவுக்காரர்கள்.