தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் பாட நூல்களை அச்சிடும் பணியி லுள்ள தமிழக அச்சக உரிமையாளர்களின் தொழில் வாய்ப்புகள், பிற மாநிலத் தவரால் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தால், தமிழக மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 கோடி பாட நூல்கள் அச்சிடப்படுகின்றன. இதற்கான பிரிண்டிங் ஆர்டருக்கான டெண்டரில் இந்தியாவிலுள்ள அனைத்து மாநில நிறுவனங்களும் பங்கெடுப்பதற்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அனுமதி தரப்பட்டுள்ளது. அதேவேளை, அண்டை மாநிலங் களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில், அவர்களுக்கான பாடநூல் பிரிண்டிங் பணிகளில், அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படுகிறது. மற்ற மாநிலங்களைப்போல தமிழ்நாட்டிலும், தமிழக நிறுவனங்களுக்கு மட்டுமே பிரிண்டிங் ஆர்டரைத் தரவேண்டு மென்று கோரிக்கை வைக்கிறார்கள்.
தமிழ்நாட்டிலுள்ள பிரிண்டிங் நிறுவனங் களில் இந்த பாடநூல்களை அச்சடிக்கும் கட்டமைப்பு இல்லையென்றால் வெளி மாநிலங் களுக்கு வாய்ப்பு வழங்குவதில் ஒரு நியாயம் இருக்கிறது. தற்போதைய நிலையில், தமிழக பிரிண்டிங் நிறுவனங்களால், 5 மாத காலத்துக்குள் 40 ஆயிரம் டன் அளவுக்கு பிரிண்டிங் செய்ய இயலும். பத்து மாதங்களில் 80 ஆயிரம் டன் அளவுக்கு பிரிண்டிங் செய்வது எளிது. தமிழ்நாடு அரசுக்கோ ஓர் ஆண்டுக்கே 75 ஆயிரம் டன் அளவுக்குத்தான் தேவைப்படுகிறது. எனவே வெளி மாநில பிரிண்டிங் நிறுவனங்கள் தேவையே கிடையாது. அவர்களால் நம்முடைய வேலை வாய்ப்புதான் குறைகிறது.
கடந்த 2019-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் டெண்டர் மூலம், தமிழ்நாட்டுப் பாடநூல் தயாரிப்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 99 நிறுவனங்களும், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 30 நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு வெளி மாநில நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. இதற்கு முந்தைய டெண்டரின்போது வெளி மாநில நிறுவனங்களின் பங்களிப்பு சொற்பமாகவே இருந்துள்ளது.
பிரிண்ட் செய்யப்பட்ட நூல்களை சப்ளை செய்வதற்கான கட்டணம், முதல் 30 கி.மீக்கு இலவசம் என்றும், அதற்குமேல் 1 கி.மீ.க்கு 1 டன்னுக்கு 5 ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள் ளது. இதனால் சென்னைக்குள்ளேயே பிரிண்டிங் செய்து சப்ளை செய்பவர்களுக்கு போக்குவரத்துக் கான கட்டணம் பேரிழப்பாக இருக்கும். எனவே இதனையும் மாற்றியமைக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தின் தரப்பில் கேட்டபோது, "தற்போதுள்ள அரசாணைப்படி நாங்கள் செயல்படுகிறோம். அதை மீறிச் செயல்பட்டால், தேவையற்ற சட்டச் சிக்கல்களைச் சந்திக்கவேண்டியிருக்கும். அரசுத் தரப்பில் இந்த அரசாணையில் மாற்றம் கொண்டு வந்தால் நாங்களும் அதன்படி மாற்றிக்கொள் வோம்'' என்று கூறுகின்றனர்.