அமைச்சர்களில் யார் அவுட், யார் இன் என ஒரு பெரிய பெட்டிங்கே தலைமைச் செயலகத்தில் நடந்துவரு கிறது. விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஊரக உள்ளாட் சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, குடிசை மாற்று வாரிய அமைச் சர் தா.மோ.அன்பரசன், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்து சாமி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வருவாய்த்துறை அமைச் சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். என தலைமைச் செயலக அதிகாரிகள் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் லிஸ்ட் போடுகிறார்கள். எதற்கு என்று கேட்டால், கேபினட் மாற்றம் என்கிறார்கள்.
அமைச்சரவை மாற்றம் எப்போது வரும் எனக் கேட்ட தற்கு, இரண்டு காரணங்கள்தான் தடையாக இருக்கிறது. முதலாவது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், இரண்டாவது உதயநிதி ஸ்டாலின், அமைச்சரவையில் இடம் பெறுவது பற்றிய முடிவு எனச் சொல்கிறார்கள்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் முடிவடைந்து விடும். உதயநிதிக்கு அமைச்சர் பதவி என்பதில் எப்பொழுது தி.மு.க. முடிவெடுக்கும் எனத் தெரியவில்லை. இரண்டும் முடிவானால் அமைச்சரவை மாறும் என்கிறார்கள்.
இதுபற்றி தி.மு.க. வட்டாரங்களில் தொடர்புடைய அதிகாரிகள் சொல்வது என்னவென்றால், தி.மு.க. ஒரு வாரிசு அரசியல் கட்சி என விமர்சிக்கப்படுகிறது. எனவே வாரிசு களுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிட அனுமதிக்காதீர்கள் என பிரசாந்த் கிஷோர் தரப்பு சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தி.மு.க. தலைமையை அறிவுறுத் தியது. அதற்கு முன்னுதாரணமாக ஸ்டாலினின் புதல்வர் உதயநிதிக்கு எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காதீர் கள் என சட்டமன்ற வேட்பாளர்கள் பட்டி யலில் உதயநிதியின் பெயர் இல்லாமல்தான் பிரசாந்த் கிஷோர் லிஸ்ட் தயாரித்துக் கொடுத்தார். உதயநிதியும் "நான் சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடப் போவ தில்லை'' என அறிவித்தார். ஆனால் பிரசாந்த் கிஷோர் சொன்னதை மீறி உதய நிதி சேப்பாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தி.மு.க. தலைமையின் இந்த முடிவு கட்சிக்குள் விவாதிக்கப்பட்ட நிலையில், உதயநிதி தனது தாத்தாவின் பழைய தொகுதியில் பெரும் வெற்றி பெற்றார். மக்கள் பிரச்சினைகளை நேரில் சென்று கவ னித்தார். அதைத் தொடர்ந்து, அவர் அமைச்சரா வார் என்கிற பேச்சு சில மாதங்களாகவே உலாவரு கிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "உதயநிதி அமைச்சராக வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்'' எனப் பேசினார். அமைச்சர் மூர்த்தியும் இதுபற்றி கருத்து தெரிவித்தார். எம்.எல்.ஏ. பரந்தாமன் ட்வீட் செய்தார்.
அதே நேரத்தில் உதயநிதி, "நான் அமைச்சராகமாட்டேன்'' என அறிவித்திருக்கிறார். தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றிருந் தவர் எப்படி களத்திற்கு வந்தாரோ, அதுபோலவே, அவர் அமைச்ச ராகக் கூடாது என நினைப்பவர் களுக்கு தற்காலிக ஆறுதல் தருவதற்காகவே அவர் இப்படி அறிவித்திருக்கிறார் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். உதயநிதி தற் போது, மூன்று திரைப்படங்களில் நடிந்து வருகிறார். அவை இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டன. ஷூட்டிங் முடியும்வரை பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்து வந்த உதயநிதி, தற்பொழுது பொது நிகழ்ச்சிகளுக்கு வருகிறார். கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்திய நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பேரை ஆண், பெண் இளையவர்களை தி.மு.க.வில் புதிய உறுப்பினராகச் சேர்த்தார் என அவரது அசைவுகளைச் சொல்கிறார்கள்.
எம்.எல்.ஏ.வாக எப்படி வந்தாரோ அதுபோல் அவர் அமைச்சராக வருவார். அவருக்கு நேரு, பெரியகருப்பன் இருவரிட மும் உள்ள உள்ளாட்சித்துறை இணைக்கப்பட்டு முழுமையான உள்ளாட்சித்துறை அமைச்சராக ஸ்டாலின் ஸ்டைலில் வருவார். அவரது வருகை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் இருக்கும். அவரது வருகையை எதிர்ப்பவர்களுக்கு தேசிய அரசியலைக் கவனிக்கும் பணி தரப்படும் என்கிற ஆரூடங்கள் பறக்கின்றன. இதுபற்றி தி.மு.க. என்ன சொல்கிறது என அதன் நிர்வாகிகளிடம் கேட்டபோது, "யாரும் இதுபற்றி பேசத் தயாராக இல்லை. எனவே உதயநிதி பற்றி தலைமை எந்த முடிவு எடுத்தாலும் ஏற்கத் தயாராக இருக்கிறோம்'' எனச் சொன்னார்கள்.
இதற்கிடையே பதவி ஆட்டம் காணும் எனச் சொல்லப்படு பவர்கள் முதல்வர் ஸ்டாலின் கவனத்தைக் கவர சில வேலை களைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதில் ஐ.டி. அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான டேவிதார் தலைமையில் முன்பு சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் உருவாக்கி யதைப் போன்ற ஒரு டேஷ்போர்டை (தகவல் பலகை), மாநில அரசு திட்டங்களின் செயல்பாட்டைக் கண்காணிக்க உருவாக்கினார்.
திட்டங்கள் என்ன நிலையில் இருக்கிறது என யாரைக் கேட்டு போர்டில் அறிவிப்பீர்கள் என டேவிதாரை கேட்டதற்கு, "அதிகாரிகளைக் கேட்டுத்தான் அறிவிப்போம்'' என்றார். "அதிகாரி கள் எப்படி திட்டங்களின் உண்மைத் தன்மையை அறிவிப்பார்கள்?“ என்ற கேள்வி வந்தது. இந்தத் திட்டம் முதல்வரின் கவனத்தை ஈர்த்திருப்பதால், அதில் உள்ள நடைமுறை செயல்பாட்டுக் குறைகளை நீக்கி, முழுமையான வடிவத்தில் தருவதற்கு அமைச்சர் தனி அக்கறை செலுத்துகிறார். அமைச்சர் மதிவேந்தன் தமிழக சுற்றுலாத்தலங்களை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதிலும், அமைச்சர் மெய்யநாதன் பொங்கலையொட்டி கிராமப்புறங்கள் வரை விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதிலும் கவனத்தைச் செலுத்தி, முதல்வரை ஈர்ப்பதில் தீவிரம் காட்டுகிறார்கள்.
சீனியர் அமைச்சர்களை இலாகா மாற்றம் செய்வது தி.மு.க.வின் வழக்கம். மற்றபடி கேபினட்டில் அவர்களுக்கு இடம் நிலைத்திருக்கும். ஜுனியர்களில் பலரும் அவரவர் சமூகத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். அதை பேலன்ஸ் செய்யாமல், மாற்றங்களை செய்யமாட்டார் முதல்வர் என்கிறார்கள் நிலவரம் அறிந்தவர்கள்.