தந்தை பெரியாரின் கொள்கைகளையும் சிந்தனைகளையும் ஜனநாயக வழியில் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிறைவேற்றிடும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட தி.மு.க. 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்தநாள் (செப்-15), பெரியார் பிறந்தநாள் (செப்.-17) மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகிய இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக செப்.-17-ல் நடத்துவது வழக்கம். இந்தாண்டு தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதால் அதனைப் பறைசாற்றும் வகையில் பவளவிழா மற்றும் முப்பெரும் விழா மாநாட்டை பிரமாண்டமாக கொண்டாடி முடித்திருக்கிறது தி.மு.க..
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்பை சுகாதாரத்துறை அமைச்சரும் தென்சென்னை தி.மு.க. மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியனிடம் ஒப்படைத் திருந்தார் தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மாநாடாக இருந்தாலும் பொதுக்கூட்டமாக இருந்தாலும் தம்மிடம் ஒப்படைக்கும் பொறுப்பை பிரமாண்டமாக நடத்துவதில் அசத்துபவர் மா.சு. நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய அத்தகைய பிரமாண் டத்தை பவளவிழாவிலும் கவனிக்க முடிந்தது.
மாநாட்டில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலுமிருந்து தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர். சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. காலையிலிருந்தே தொண்டர்கள் குவிந்ததால், மாநாடு நடக்கும் நந்தனம் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. தி.மு.க.வின் இரு வண்ண கொடிகள் பட்டொளி வீசி பறந்துகொண்டிருந்தன. பெரியார் -அண்ணா -கலைஞர் -ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் வண்ண ஒளிவிளக்குகளால் ஒளிர்ந்தன.
மேடையின் பேக்-ட்ராப்பில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழித்தோன்றலாக ஸ்டாலின் செயலாற்றுகிறார் என்பதையும், அவர்களின் வாரிசாக உதயநிதி ஸ்டாலின் உருவாகியிருக் கிறார் என்பதையும் பறைசாற்றும் வகையில் பேனர் அமைக்கப்பட்டி ருந்தது. மாநாட்டு நிகழ்வுகளை அனைவரும் காணும் வகையில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகள் மைதானம் முழுக்க ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. 75 ஆண்டுகால தி.மு.க
தந்தை பெரியாரின் கொள்கைகளையும் சிந்தனைகளையும் ஜனநாயக வழியில் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிறைவேற்றிடும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட தி.மு.க. 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்தநாள் (செப்-15), பெரியார் பிறந்தநாள் (செப்.-17) மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகிய இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக செப்.-17-ல் நடத்துவது வழக்கம். இந்தாண்டு தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதால் அதனைப் பறைசாற்றும் வகையில் பவளவிழா மற்றும் முப்பெரும் விழா மாநாட்டை பிரமாண்டமாக கொண்டாடி முடித்திருக்கிறது தி.மு.க..
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்பை சுகாதாரத்துறை அமைச்சரும் தென்சென்னை தி.மு.க. மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியனிடம் ஒப்படைத் திருந்தார் தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மாநாடாக இருந்தாலும் பொதுக்கூட்டமாக இருந்தாலும் தம்மிடம் ஒப்படைக்கும் பொறுப்பை பிரமாண்டமாக நடத்துவதில் அசத்துபவர் மா.சு. நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய அத்தகைய பிரமாண் டத்தை பவளவிழாவிலும் கவனிக்க முடிந்தது.
மாநாட்டில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலுமிருந்து தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர். சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. காலையிலிருந்தே தொண்டர்கள் குவிந்ததால், மாநாடு நடக்கும் நந்தனம் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. தி.மு.க.வின் இரு வண்ண கொடிகள் பட்டொளி வீசி பறந்துகொண்டிருந்தன. பெரியார் -அண்ணா -கலைஞர் -ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் வண்ண ஒளிவிளக்குகளால் ஒளிர்ந்தன.
மேடையின் பேக்-ட்ராப்பில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழித்தோன்றலாக ஸ்டாலின் செயலாற்றுகிறார் என்பதையும், அவர்களின் வாரிசாக உதயநிதி ஸ்டாலின் உருவாகியிருக் கிறார் என்பதையும் பறைசாற்றும் வகையில் பேனர் அமைக்கப்பட்டி ருந்தது. மாநாட்டு நிகழ்வுகளை அனைவரும் காணும் வகையில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகள் மைதானம் முழுக்க ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. 75 ஆண்டுகால தி.மு.க.வின் வரலாற்றை விளக்கும் வகையில் 100 அடி கட்-அவுட் வைக்கப்பட்டி ருந்தது.
அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் அணித் தலைவர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என அனை வரும் வந்திருந்தனர். மிகச்சரியாக 6 மணிக்கு மாநாட்டு திடலுக்கு வந்தார் முதல்வர் ஸ்டா லின். அவரை வரவேற்று அழைத்து வந்து இருக்கையில் அமரவைத்தார் மா.சுப்பிரமணியன். முதல்வருக்கு மாநில நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். 75 அடி உயர தி.மு.க. கம்பத்தில் இரு வண்ணக்கொடியை ஏற்றி வைத்தார் ஸ்டாலின்.
பவளவிழா மாநாட்டுக்கு தி.மு.க. பொதுச்செய லாளர் துரைமுருகன் தலைமை தாங்க, துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்க, வரவேற்புரையாற்றினார் மா.சுப்பிரமணியன்.
மாநாட்டின் தொடக்க நிகழ்வாக ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வீடியோ ஒளிபரப்பப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இருக்கைக்கு அருகில் மறைந்த தலைவர் கலைஞருக்கு ஒரு இருக்கை போடப்பட்டு அதில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் கலைஞர் அமர்ந்திருந்தார்.
மாநாடு குறித்து பேசிய கலைஞர், "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! தந்தை பெரியார் வடித்த கொள்கையை, பேரறிஞர் அண்ணா வகுத்த பாதையை, என்னால் கட்டிக்காக்கப் பட்ட இனமான முரசத்தை, ஓங்கி ஒலிக்கச் செய்து, கம்பீரமாகக் கழகத்தை ஆட்சிப் பொறுப்பில் அமரச்செய் திருக்கும் தம்பி மு.க.ஸ்டாலினை எண்ணி எண்ணி என் நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது. ஸ்டாலின் என்றாலே உழைப்பு, உழைப்பு, உழைப்பு!
சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி இவற்றின் பாதையில் கழக ஆட்சியை சிறப்பாக நடத்துகிறார். இனமானம், மொழிமானம், சுயமரி யாதையைக் கண்போல் காக்கும் அவ ரது கடமை உணர்வைக் கண்டு வாழ்த்து கிறேன். பாராட்டுகிறேன்'' ’என்று ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பேசிய கலைஞ ரைக் கண்டு உடன்பிறப்புகள் வியந்தனர்; உணர்ச்சி வயப்பட்டனர்.
மாநாட்டில் பெரியார் விருதை பாப்பம்மாளுக்கும், அண்ணா விருதை அறந்தாங்கி ராமநாதனுக்கும், கலைஞர் விருதை டாக்டர் ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கும், பாவேந்தர் விருதை கவிஞர் தமிழ்தாசனுக்கும், பேராசிரியர் விருதை வி.பி.ராஜனுக்கும் ஸ்டாலின் வழங்கி அவர்களை கௌரவித்தார். இந்த ஆண்டு ஸ்டா லின் பெயரில் புதிதாக விருது அறிவிக்கப்பட்டது. அந்த விருதை தஞ்சை பழனிமாணிக்கம் பெற்றார். தலைவர்களின் பெயர்களில் விருது பெற்றவர்களின் சிறப்புகளை விவரித்துப் பேசினார் ஸ்டாலின். மேலும், கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பண முடிப்பும், விருதும் வழங்கப்பட்டது.
விருது பெற்றவர்களின் சார்பில் பேசிய தஞ்சை பழனி மாணிக்கம், "சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று இந்தியாவே வியக்குமளவுக்கு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். மத்திய அரசு சமரசமாக போனால் சமரசம்; யுத்தம் என்றால் யுத்தம் என இந்தியாவின் அனைத்து முதலமைச்சர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கிறீர்கள். சட்டசபை தேர்தல் நெருங்குவதால் இனி ஒவ்வொரு நாளும் முக்கியம். கட்சியில் யாரை முன்னிலைப்படுத்தினால் கவரமுடியுமோ, தொண்டர்கள் வெறியோடு வேலை செய்வார்களோ அவரை முன்னிறுத்த வேண்டும். உதயநிதியை துணை முதல்வராக்க உங்களுக்கும் (ஸ்டாலின்) இங்கே அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கும் இன்னும் என்ன தயக்கம்? இனியும் காலம் தாழ்த்தாதீர்கள்''’என்றார் ஆவேசமாக.
மாநாட்டில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், "நான் கோபாலபுரத்து விசுவாசி. தலைவர் கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் எப்படி மகிழ்ச்சியடைந்திருப்பார் என்பது எனக்குத் தெரியும். நீங்கள்தான் (ஸ்டாலின்) எங்கள் இரட்சகர். நீங்கள்தான் தமிழகத்தின் தலைஎழுத்தை பாதுகாப்பவர். எங்களுக்கு எல்லாமுமாக இருக்கும் உங்களை வாழ்த்த வேண்டுமென்று ஆசை... வாழ்த்துகிறேன்''’என்று உணர்ச்சி வயப்பட்டார்.
மாநாட்டில் சிறப்புரை யாற்றிய ஸ்டாலின், தி.மு.க.வின் கொள்கைப் பாடல்களில் ஒன்றான, கழகம் -நம் கழகம், இது திராவிட முன்னேற்ற கழகம் எனும் பாடலை முழங்கி விட்டுப் பேச்சைத் தொடங்கிய ஸ்டாலின், ‘’"என்னை இப்படி தலைநிமிர்ந்து முழங்க வைத்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தீரர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்களின் உழைப் பாலும், வியர்வையாலும், ரத்தத்தாலும்தான் கழகம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.
நீங்கள் (தொண்டர்கள்) இல்லாமல் கழகம் இல்லை, நானும் இல்லை. அந்த நன்றி உணர்வோடு உங்கள் முன்னால் நிற்கிறேன். என்னுடைய 13 வயதில் தி.மு.க. இளைஞரணி யைத் துவக்கி 53 ஆண்டுகள் தி.மு.க.வுக்கும் தமிழகத்திற்கும் உழைத்ததினால்தான் கட்சியின் தலைவராக உயர்ந்து நிற்கிறேன். கலைஞரின் வழிகாட்டுதலும் தொண்டர்களின் அரவணைப்பும் தான் என்னை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கிறது.
தலைவர் என்ற தகுதியை எனக்கு வழங்கியது தொண் டர்கள்; முதல்வர் தகுதியை வழங்கியது தமிழக மக்கள். இந்த நேரத்தில் நமது கட்சியின் பவளவிழாவைக் கொண்டாடுவதை பெருமையாகக் கருதுகிறேன். ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கம்பீரமாக நிற்பது சாதாரணமான சாதனை கிடையாது. இதற்கு காரணம் நமது அமைப்புதான்.
1977 தேர்தலில் தி.மு.க. தோற்றபோது, இதோடு தி.மு.க. முடிந்துவிட்டது என்றார்கள். அப்போது, "கருணாநிதியின் வாழ்வு முடிந்தாலும் தி.மு.க.வின் வாழ்வு முடியாது' என்றார் கலைஞர். தலைவர் -தொண்டர் என்பதல்லாமல் அண்ணன் -தம்பி என்ற பாச உணர்வோடு தி.மு.க. கட்டமைக்கப்பட்டது. உலகின் எந்த ஒரு அரசியல் இயக்கமும் இப்படி கட்டமைக்கப்பட்டது இல்லை.
இந்த தருணத்தில் முக்கியமான ஒரு செய்தி யை சொல்ல விரும்புகிறேன். வெள்ளிவிழா கொண்டாடியபோது தி.மு.க. ஆட்சியில் இருந்தது; பொன்விழா கொண்டாடும்போதும் ஆட்சியில் தி.மு.க. இருக்கிறது. நூற்றாண்டு விழாவை கொண்டாடும்போதும் ஆட்சியில் தி.மு.க. இருக்கும். அண்ணாவும் கலைஞரும் வலியுறுத்திய மாநில சுயாட்சிதான் நமது உயிர்நாடிக் கொள்கை. மாநில சுயாட்சியை வென்றெடுப்பதுதான் பவளவிழா செய்தி. எல்லா அதிகாரங்களும் கொண்டவைகளாக மாநில அரசுகளை மாற்றும் வகையில், அரசியல மைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முயற்சிக்கும் சட்ட முன்னெடுப்புகளை தி.மு.க. நிச்சயமாக செய்யும்.
நம்முடைய இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தல். இதுவரை இப்படி ஒரு வெற்றியை எந்த கட்சியும் பெறவில்லை என வரலாறு சொல்லவேண்டும்! அந்த வரலாற்றை எழுத நீங்கள் தயாரா? இந்த உணர்வு வெற்றிச் சரிதமாக மாறவேண்டும். அதற்கு இந்த பவளவிழா -முப்பெரும் விழாவில் சபதம் ஏற்போம்''’என்று கர்ஜித்தார் ஸ்டாலின்.
பவளவிழா கொண் டாடும் தி.மு.க.வின் 75 ஆண்டுகால வரலாற்றில் 6 முறை ஆட்சி அதி காரத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு செய்த சாதனைகள், சட்டத் திருத்தங்கள், இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்த திட்டங்கள், புரட்சிகள், மறுமலர்ச்சிகள், இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி என தி.மு.க. செய்தவை எண்ணில் அடங்காதவை! அந்த பெருமிதத்துடன் பீடுநடை போடுகின்றனர் உடன்பிறப்பு கள்.
__________
இறுதிச் சுற்று!
இலங்கை அதிபருக்கான தேர்தல் 22-ந்தேதி நடக்கிறது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் 34 வேட்பாளர்களில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாச, இடதுசாரி சிந்தனை யாளர் அனுராகுமார திசநாயக, ஈழத்தமிழர் கட்சிகளின் பொது வேட்பாளராக அரிய நேத்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள். தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கிய நாளில் இருந்தே, அதிபர் வேட்பாளர்களில் இந்தியாவின் ஆதரவு யாருக்கு இருக்கிறது? என்பதுதான் உலக நாடுகளும் சிங்கள தேசமும் உற்று கவனித்தபடி இருந்தது. ஆரம்பத்தில் ரணிலை இந்தியா ஆதரிக்கிறது என சொல்லப்பட்டது. ஒரு கட்டத்தில், சிங்கள பேரினவாத சக்திகளின் ஆதரவைப் பெற்ற அனுராகுமார திசநாயகவை இந்தியா ஆதரிப்பதாக செய்திகள் பரவியிருந்தது. ஆனால், உண்மையில் இந்தியாவின் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவரான சஜீத் பிரேமதாசாவுக்கே இருந்து வந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 1 நாள் இருக்கும் நிலையில் கடந்த ஒருவாரமாக சஜீத்தின் வெற்றிக்காக மறைமுகமாக இலங்கையில் ரகசியமாக உழைத்து வருகிறது இந்தியா. இந்தியாவின் ஆதரவை சஜீத் பெற்றிருப்பதாக 19-ந் தேதி கொழும்பு முழுக்கப் பரவியது. இலங்கை பத்திரிகையாளர்கள், "சஜீத்தை வெற்றிபெற வைக்க தீவிர சீக்ரெட் முயற்சியில் களமாடுகிறது இந்தியா'' என்கின்றனர். இதனால் இலங்கை அதிபர் தேர்தல் பரபரப்பாகியிருகிறது.
-இளையர்