Advertisment

உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை மோசடி!  தமிழக அரசு அதிரடி!

dhalakshmicollege

 

ருத்துவ மாஃபியா வின் பல்வேறு முகங்களில் ஒன்று தான் சட்டவிரோத உடல் உறுப்புகள் விற்பனை. இன்னும் பல தனியார் மருத்துவ மனைகளில், வெளி உலகுக்கு தெரியாமல் உடல் உறுப்புகள் விற்பனை நடந்துகொண்டே தான் இருக்கிறது. சமீபத்தில் கூட நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் சட்டவிரோத மாக சிறுநீரகம் விற்றதாக பரபரப்பு செய்தி வந்தது. அதனையடுத்து, அவ்விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழு வின் முதற்கட்ட விசாரணை அறிக் கையின் மீது எடுக்கப்பட்ட நட வடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

Advertisment

அதில், பிரபல தனலட்சுமி சீனி வாசன் மருத்துவமனைக்கு திருச்சி தில்லை நகரில் இயங்கிவரும் சிதார் மருத்துவனைக்கும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமம் தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஏழை விசைத்தறி தொழிலாளர்களை குறி வைத்து கிட்னி திருட

 

ருத்துவ மாஃபியா வின் பல்வேறு முகங்களில் ஒன்று தான் சட்டவிரோத உடல் உறுப்புகள் விற்பனை. இன்னும் பல தனியார் மருத்துவ மனைகளில், வெளி உலகுக்கு தெரியாமல் உடல் உறுப்புகள் விற்பனை நடந்துகொண்டே தான் இருக்கிறது. சமீபத்தில் கூட நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் சட்டவிரோத மாக சிறுநீரகம் விற்றதாக பரபரப்பு செய்தி வந்தது. அதனையடுத்து, அவ்விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழு வின் முதற்கட்ட விசாரணை அறிக் கையின் மீது எடுக்கப்பட்ட நட வடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

Advertisment

அதில், பிரபல தனலட்சுமி சீனி வாசன் மருத்துவமனைக்கு திருச்சி தில்லை நகரில் இயங்கிவரும் சிதார் மருத்துவனைக்கும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமம் தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஏழை விசைத்தறி தொழிலாளர்களை குறி வைத்து கிட்னி திருடும் கும்பல் நடமாடி வருகிறது. பள்ளிப் பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு "கிட்னி பாளையம்' என கோட் வேர்டு வைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. 

இந்த கிட்னி திருட்டுக்கு சிண்டிகேட் அமைத்து செயல் படும் புரோக்கர் கும்பல், நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிப் பாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதி களில் வசித்துவரும் விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து, ஏழ்மையான பின்னணி கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்து, பண ஆசையை தூண்டி, அவர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப் படுவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. 

Advertisment

தொழிலாளர்களை சந்திக்கும் புரோக்கர்கள், அவர்களது சிறுநீரகத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் வரை பணம் தருவதாக கூறி ஒரு லட்சம் ரூபாய் வரை அட்வான்ஸ் கொடுக்கின்றனர். பின்பு அவர்களை கோவை, சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்று அவர்களது சிறுநீரகம் எடுக்கப்படுகிறது.

dhalakshmicollege1

பின்பு அவை ஆந்திரா, கர்நாடகா, தெலுங் கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கு 50 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுவது தெரிய வந்திருக்கிறது. இதுதொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விசாரணைக் குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், "தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை செய்திகளில் வரப்பெற்ற முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத் நியமிக்கப்பட்டு, கடந்த 18.07.2025 அன்று ஆணை வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத், மீனாட்சி சுந்தரி (இணை இயக்குநர் (சட்டம்), மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், சென்னை), ராஜ்மோகன் (இணை இயக்குநர் நலப்பணிகள் நாமக்கல்), மரு.கே. மாரிமுத்து (இணை இயக்குநர், நலப்பணிகள், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டம்), சீத்தாராமன், காவல் துணை கண்காணிப்பாளர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், சென்னை ஆகியோர் அடங்கிய குழு தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவனை, திருச்சி சிதார் மருத்துவமனை, மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரிவான விசாரணை மேற்கொண்டனர். இவ்விசாரணையின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை அறிக்கையினை வினீத், அரசுக்கு அனுப்பி யுள்ளார். 

அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கை யின் அடிப்படையில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவனை, மற்றும் திருச்சி சிதார் மருத்துவனை ஆகிய மருத்துவமனைகளுக்கு மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் 1994 பிரிவு 16 உட்பிரிவு (2) ன்படி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமத்தை, பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் ஆணை வழங்கியுள் ளது. நாமக்கல் அபிராமி மருத்துவ மனைக்கும் ஏற்கெனவே தடை அறிவிப்பு விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதில், மணச்சநல்லூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கதிரவனின் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி சிக்காது. ஏனென்றால், நாங்கள் மருத்துவக் கல்லூரியை மட்டுமே நிர்வாகித்து வருகிறோம் எனக்கூறிவிட்டு, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கோ-ஆர்டினேட்டர் கதிரவனை மட்டும் இங்குள்ள மருத்துவர்கள் காட்டிக்கொடுத்து, அவர்மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள் எனக்கூறி, அங்குள்ள மற்ற மருத்துவர்களும், நிர்வாகமும்  தப்பித்துக் கொள்ளும். ஆனால் மற்ற இரண்டு மருத்துவமனைகளின் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சீல் வைப்பது உறுதி என தெரிகிறது.

இந்நிலையில், "ஏழைகளை குறிவைத்து சிறுநீரகம் விற்பனையில் ஈடுபடும் இடைத் தரகர்கள், மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மருத்துவ மற்றும் ஊரக நலப்பணி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத் துள்ளது. 

 

nkn300725
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe