பழனிச்சாமியை ‘அண்ணன்’ என்று அழைத்தும் கூட ஓ.பி.எஸ்.ஸை அ.தி.மு.க.வில் இணைக்க ஒப்புக்கொள்ளாத நிலையில், அவரது மகன் ரவீந்திரநாத்தும் தனி ஆவர்த்தனம் செய்ய முடிவெடுத் துள்ளதாகக் கசியும் தகவல்கள், ஓ.பி. எஸ்.ஸை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்ப தாகக் கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
தேனி மாவட்டம், பெரியகுளத் தில் தேனீர் கடை உரிமையாளராக இருந்து, தமிழகத்தின் முதல்வர் பதவி வரை உயர்ந்த ஓ.பன்னீர் செல்வம், 1969ஆம் ஆண்டு முதலே தி.மு.க. தொண்டராக தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 1973-ல் தி.மு.க.விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை தொடங்கியபோது அக்கட்சியில் இணைந்தார் ஓ.பி.எஸ். உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டி யிட்டு வெற்றிபெற்று, 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை பெரியகுளம் நகராட்சித் தலைவராக பணியாற்றினார்.
அந்த காலகட்டத்தில், ஜெய லலிதா போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டபோது ஜெயலலிதாவின் வெற்றிக்காக பாடுபட்டதால் டி.டி.வி. தினகரனோடும், ஜெயலலிதாவோடும் நெருக்கமான அவருக்கு, 2011-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதே போடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார் ஜெயலலிதா. அந்த தேர்தலில் அமோக வெற்றி யடைந்த ஓ.பி.எஸ்.ஸின் அரசியல் வாழ்க்கை, ஜெயலலிதா மரணிக்கும் வரையும், அதன் பின்னரும் கூட உச்சத்திலேயே இருந்தது.
தொடர்ந்து 3 முறை போடி நாயக்கனூர், 2 முறை பெரியகுளம் என ஐந்து முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர், முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாகத் திகழ்ந்ததால், தனது முதல்வர் பதவிக்கு சட்டச் சிக்கல்கள் எழுந்தபோது ஓ.பி.எஸ்.ஸை 2 முறை முதல்வர் பதவி யில் அமரவைத்தார் ஜெயலலிதா. அவரது அமைச்சரவையிலும் முக் கிய இலாகாக்களையும் வழங்கிய தால், தமிழ்ந
பழனிச்சாமியை ‘அண்ணன்’ என்று அழைத்தும் கூட ஓ.பி.எஸ்.ஸை அ.தி.மு.க.வில் இணைக்க ஒப்புக்கொள்ளாத நிலையில், அவரது மகன் ரவீந்திரநாத்தும் தனி ஆவர்த்தனம் செய்ய முடிவெடுத் துள்ளதாகக் கசியும் தகவல்கள், ஓ.பி. எஸ்.ஸை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்ப தாகக் கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
தேனி மாவட்டம், பெரியகுளத் தில் தேனீர் கடை உரிமையாளராக இருந்து, தமிழகத்தின் முதல்வர் பதவி வரை உயர்ந்த ஓ.பன்னீர் செல்வம், 1969ஆம் ஆண்டு முதலே தி.மு.க. தொண்டராக தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 1973-ல் தி.மு.க.விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை தொடங்கியபோது அக்கட்சியில் இணைந்தார் ஓ.பி.எஸ். உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டி யிட்டு வெற்றிபெற்று, 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை பெரியகுளம் நகராட்சித் தலைவராக பணியாற்றினார்.
அந்த காலகட்டத்தில், ஜெய லலிதா போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டபோது ஜெயலலிதாவின் வெற்றிக்காக பாடுபட்டதால் டி.டி.வி. தினகரனோடும், ஜெயலலிதாவோடும் நெருக்கமான அவருக்கு, 2011-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதே போடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார் ஜெயலலிதா. அந்த தேர்தலில் அமோக வெற்றி யடைந்த ஓ.பி.எஸ்.ஸின் அரசியல் வாழ்க்கை, ஜெயலலிதா மரணிக்கும் வரையும், அதன் பின்னரும் கூட உச்சத்திலேயே இருந்தது.
தொடர்ந்து 3 முறை போடி நாயக்கனூர், 2 முறை பெரியகுளம் என ஐந்து முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர், முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாகத் திகழ்ந்ததால், தனது முதல்வர் பதவிக்கு சட்டச் சிக்கல்கள் எழுந்தபோது ஓ.பி.எஸ்.ஸை 2 முறை முதல்வர் பதவி யில் அமரவைத்தார் ஜெயலலிதா. அவரது அமைச்சரவையிலும் முக் கிய இலாகாக்களையும் வழங்கிய தால், தமிழ்நாட்டின் முடிசூடா மன்னனாகவே வலம்வந்தார்.
2016-ல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 3வது முறையாக மீண்டும் முதலமைச்சராகத் தேர்ந் தெடுக்கப்பட்டு, 2017 வரை முதல்வர் பொறுப்பில் இருந்தார். அதன்பிறகு அ.தி.மு.க. இரண்டாகப் பிரிந்து, கூவத்தூர் கூத்துகளுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான தும், முதலாவது தர்மயுத்தம் நடத்தி பா.ஜ.க.வின் ஆசியோடு 2017 முதல் 2021 வரை துணை முதல்வராகவும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாள ராகவும் பொறுப்பு வகித்தார். அப் போது, சசிகலா சிறையிலிருக்க, ஓ.பி. எஸ். தந்த அழுத்தத்தால் சசிகலா வோடு சேர்த்து டி.டி.வி.தினகரனும் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, அ.ம. மு.க.வை தொடங்கி தனி டிராக்கில் சென்றுவிட்டார் தினகரன்.
கடந்த 2021-ல் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக் கும், ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஒற்றைத்தலைமை குறித்த அதிகார மோதல் ஏற்பட்டது. 2022, ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவைக் கூட்டி அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே ஓ.பி.எஸ்.ஸை நீக்கிய எடப்பாடி, கட்சியின் பொதுச்செயலாளராகவும் முடிசூட்டிக்கொண்டார். அப்போது, ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளர்களாக இருந்த அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களும், முக்கிய பொறுப் பிலிருந்தவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இதனால், இரண்டாவது முறையாக தர்மயுத்தத்தை துவக்கியதோடு, தனது ஆதரவாளர் களோடு சேர்ந்து அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஒன்றையும் உருவாக்கி, "துரோகி பழனிச்சாமி' எனக்கூறி, அவருக்கு எதிராக இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை துவக்கினார் ஓ.பி.எஸ். 2024, பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட ஓ.பி.எஸ். தோல்வியை தழுவவே, அதுவரை ஆதரவு தந்து கொண்டிருந்த பா.ஜ.க.வின் டெல்லி தலைமையும் ஓ.பி.எஸ்.ஸை கை கழுவத் துவங்கியது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/05/op1-2026-02-05-17-07-03.jpg)
அ.தி.மு.க.வை மீட்டெடுக்க ஓ.பி.எஸ். துவங்கிய சட்டப்போராட்டங்கள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துவந்த நேரத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலும் நெருங்கி வரவே, பா.ஜ.க.வோடு என்.டி.ஏ. கூட்டணி யில் இணைந்த எடப்பாடியாரோ, 'ஓ.பி.எஸ்.ஸை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை' என்பதில் உறுதியாக இருந்தார். அவர் பெரிதும் நம்பியிருந்த பா.ஜ.க.வும் கூட்டணிக்கு அழைக்கவில்லை. இதனால், 'இனிமேலும் ஓ.பி.எஸ்.ஸோடு தொடர்ந்தால் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறிதான்' என்பதால் அவரது தீவிர ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உட்பட சிலர், ‘"தாய்க்கழகத்தில் இணை கிறோம்'’எனக்கூறி தி.மு.க.வில் ஐக்கிய மாகினர். ஜே.சி.டி.பிரபாகர், கு.ப. கிருஷ்ணன் போன்றவர்கள் விஜய்யின் த.வெ.க.வில் சேர்ந்தனர்.
அதுவரை, ஓ.பி.எஸ்.ஸின் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துவந்த டி.டி.வி.தினகரனும் கடந்த மாதம் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பா ளர் பியூஷ் கோயல் முன்னி லையில் என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்து, எடப்பாடியாரோடு இருந்த பங்காளி சண்டைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட் டார். ஆக மொத் தத்தில், தனித்து விடப்பட்டார் ஓ.பி.எஸ். இந் நிலையில்தான், கடந்த மாதம் 23ஆம் தேதி பெரியகுளத் திலுள்ள பண்ணை வீட்டில் தனது ஆதர வாளர்களிடம் கூட் டணி குறித்து கருத் துக்கேட்புக் கூட் டத்தை நடத்தினார் ஓ.பி.எஸ். அதிலும், கூட்டணி குறித்த அவரது நிலைப்பாடு காரணமாக சலசலப்பிலேயே முடிந்தது அந்தக் கூட்டம். அதன் பின்னர்தான், அந்தர் பல்டி அடித்தார் ஓ.பி.எஸ்.
அதாவது, "அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்பதே என் நோக்கம். நான் தனியாக வெற்றிபெற வேண்டும், கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்பது நோக்கமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும். அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றி ணைய நான் தயார். டி.டி.வி.தினகரன் மற்றும் என்னுடைய அருமை அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தயாரா?'' எனச் செய்தியாளர்களை சந்தித்து அ.தி.மு.க. தலைமைக்கு கோரிக்கை வைக்க, அடுத்த சில மணி நேரத்திலேயே, "பொதுக்குழு கூடி நீக்கப்பட்ட அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை'' என உறுதிபடத் தெரிவித் தார் எடப்பாடியார்.
இப்படி, தனது முக்கிய ஆதரவாளர்களும் விலகிப்போய், அ.தி.மு.க.வில் இணைவதற்கான கதவுகளும் முழுமையாக அடைபட்ட நிலையில்தான், ‘ஓ.பி.எஸ்.ஸின் சொந்த மகனே அவரை விட்டு விலகத் தயாராகிவிட்டார்’ என அதிர்ச்சியளிக் கின்றனர் ஓ.பி.எஸ்.ஸுக்கு மிக நெருக்கமான ரத்தத்தின் ரத்தங்கள்.
இதுகுறித்து, ஒரு காலத்தில் ராஜ்ஜியம் ஆண்ட ஓ.பி.எஸ்., இன்று அரசியலில் பூஜ்ஜியமாகி நிற்கிறாரோ என்ற கவலை அனைவருக்குமே இருக்கிறது என்ற பீடிகையோடு நம்மிடம் பேசியவர்கள், "எடப்பாடியாரை அண்ணன் எனச்சொல்லி என்னதான் சரண்டரானாலும், ‘ஓ.பி.எஸ்.ஸின் வரவு கட்சிக்கு சாதகமாக இருக்கிறதோ, இல்லையோ, தங்களுக்கு பாதகமாகி விடும்’ எனக்கருதும் ஆர்.பி.உதயகுமார் போன்ற அவரது சொந்த ஜாதி சனத்தைச் சேர்ந்த முக்கியமான சிலரே ஓ.பி.எஸ்.ஸை கட்சிக்குள் சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல, "இவர்கள் கூறித்தான் இரண்டாம் தர்மயுத்தத்தை துவக்கினேன்'’எனத் தன்னை நம்பிவந்த வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோரை காட்டிக் கொடுத்ததிலிருந்தே அவரை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. காலம் கடந்துவிட்டதால் கட்சியே இல்லாதவரை கூட்டணிக்குள் இணைக்க பா.ஜ.க.வும், த.வெ.க.வும் தயாராக இல்லை. இந்த சூழ்நிலையில்தான், உரிமை மீட்புக்குழுவை கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்துவிடுமாறு ஓ.பி.எஸ். ஸுக்கு அழுத்தம் கொடுத்துவந்தார் அவரது மகனான ஓ.பி. ரவீந்திரநாத். அதற்கு ஓ.பி.எஸ். ஒத்துக்கொள்ளாததால் கடந்த ஒரு மாதமாகவே அவர்கள் இருவருக்கும் முட்டல், மோதல்கள் தொடர்கின்றன. இதனால் இந்த வருடப் பொங்கல் திருவிழா வைக்கூட ஓ.பி.எஸ்.ஸுடன் சேர்ந்து கொண்டாடவில்லை. இந்நிலையில்தான், தன்னுடைய அரசியல் எதிர்காலத்திற்காக பா.ஜ.க.வில் சேர முடிவெடுத்துவிட்டார் ரவீந்திரநாத்.
ஏற்கெனவே, ‘தேனி தொகுதியில் ரவீந்திரநாத் எம்.பி.யாக வெற்றி பெற்றது செல்லாது’ என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும், பாஷ்யம் நிறுவனத்தில் தங்களுடைய மிகப்பெரிய தொகை சிக்கியிருப்பதாலும் கூட்டிக் கழித்துப் பார்த்த ரவீந்திரநாத், ‘மத்தியில் பவராக இருக்கும் பா.ஜ.க.வில் சேர்ந்தால் மட்டுமே தனக்கு நல்லது’ என நம்புகிறார். இது தொடர்பாக தமிழக பா.ஜ.க.வின் சில முக்கிய புள்ளிகளுடன் ரகசியப் பேச்சுவார்த்தையையும் முடித்து விட்டார் ரவீந்திரநாத். அதன் பின்னரே கடந்த முறை சென்னை வந்திருந்த பியூஷ்கோயலை சந்திக்க அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றார் ரவீந்திரநாத். 2 மணி நேரமாகக் காத்திருந்த அவரிடம், "நெக்ஸ்ட் டைம் சந்திக்கலாம்' எனச் சொல்லப்பட்டதால் திரும்பிவிட்டார். விரைவில் காவி வேட்டி, துண்டுடன் அவரை பார்க்கலாம்'' என்றனர் அவர்கள்.
விதைப்பதுதானே முளைக்கும்!
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us