Advertisment

ஓ.பி.எஸ். குடும்பத்தில் வாரிசு யுத்தம்! -முதல்வரிடம் நெருங்கிய ரவீந்திரநாத்!

dd

முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓ.பி.எஸ். மகன் திடீரென சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மத்திய நிதியுதவித் திட்டங்களைச் செயல்படுத்துவதைக் கண்காணிப்பதற்கான மாநில அளவிலான திசா கமிட்டி கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓ.பி.எஸ். மகனும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் கலந்து கொண்டார். அதன்பின் தனிப்பட்ட முறையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ரவீந்திரநாத், "தமிழக மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறீர்கள்' என்று முதல்வரைப் பாராட்டி பாரதியார் புத்தகத்தையும் வழங்கினார்.

Advertisment

ops-son

அதோடு, பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ உபகரணங்கள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை மனுவையும் கொடுத்திருக்கிறார். ஓ.பி.எஸ்ஸும், எடப்பாடி பழனிச்சாமியும் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் ஆட்சி யைக் கடுமைய

முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓ.பி.எஸ். மகன் திடீரென சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மத்திய நிதியுதவித் திட்டங்களைச் செயல்படுத்துவதைக் கண்காணிப்பதற்கான மாநில அளவிலான திசா கமிட்டி கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓ.பி.எஸ். மகனும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் கலந்து கொண்டார். அதன்பின் தனிப்பட்ட முறையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ரவீந்திரநாத், "தமிழக மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறீர்கள்' என்று முதல்வரைப் பாராட்டி பாரதியார் புத்தகத்தையும் வழங்கினார்.

Advertisment

ops-son

அதோடு, பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ உபகரணங்கள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை மனுவையும் கொடுத்திருக்கிறார். ஓ.பி.எஸ்ஸும், எடப்பாடி பழனிச்சாமியும் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் ஆட்சி யைக் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், ஓ.பி.எஸ். மகனான ரவீந்திரநாத் முதல்வரைத் தனிப்பட்டுச் சந்திப்பதற்கு என்ன காரணம்? என்ற பேச்சு பரவலாக எதிரொலித்து வருகிறது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நன்றி சொன்னதோடு சரி, தொகுதிப் பக்கம் சரிவர ரவீந்திரநாத் போவ தில்லை. ஆனால் ஓ.பி.எஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப், தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்துகொண்டு, தன்னால் முடிந்த உதவிகளை கட்சிக்காரர் களுக்கும், பொதுமக்களுக்கும் செய்து கொடுத்து மக்கள் மத்தியில் நற்பெயரும் எடுத்து வருகிறார். ஏற்கனவே டி.டி.வி. தினகரன் எம்.பி.யாகப் போட்டி யிட்டபோதே ஜெயபிரதீப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன் மூலம் ஓ.பி.எஸ்ஸின் அரசியல் வாரிசு ஜெயபிரதீப் தான் என்ற பேச்சு இருந்து வந்தது. அதற்குள் ரவீந்திரநாத் அரசியலில் நுழைந்து அவரை ஓரங்கட்டிவிட்டார். அதனால் அவர்களின் குடும்பத்துக்குள்ளேயும் தொடர்ந்து பிரச்சனையாக உள்ளது.

dd

Advertisment

ஏற்கனவே அ.தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருக்கக்கூடிய சையது கான் மீது கட்சிக்காரர்களே அதிருப்தியில் இருக்கிறார்கள். தற்போது நடந்த கட்சித் தேர்தலில் நகரம், ஒன்றியம், பேரூர் கிளைப் பொறுப்பாளர்கள் நியமனத்தில் பலரிடம் பணம் வாங்கியிருக் கிறார் என்ற குற்றச்சாட்டு மாவட்ட அளவில் பேசப்பட்டு வருகிறது. அதனால் மாவட்டச் செயலாளர் பதவியை ஜெய பிரதீப்புக்கு கொடுக்க வேண்டும் என்று பெரும்பாலான கட்சிப் பொறுப்பாளர்களே கூறி வருகிறார்கள். இந்த விசயம் தெரிய வந்ததிலிருந்தே ரவீந்திரநாத் ஆடிப்போய்விட்டார். தம்பி அரசிய லுக்குள் நுழைந்தால் நம்மால் நீடிக்கமுடியாதென்று நினைத்தவர், கடந்த மாதம் திடீரென எம்.பி. அலுவலகத்திற்கு வந்து தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். பின்னர் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தார். அதன்பின்பு தான் முதல்வர் ஸ்டாலினை ரவீந்திரநாத் சந்தித்து இருக்கிறார். அனைத்தும் ரவீந்திரநாத்தின் அரசியல் நாடகமே தவிர மக்களின் நலனுக்காக முதல்வரைச் சந்திக்கவில்லை என்றனர் மாவட்டப் பொறுப்பிலுள்ள ர.ர.க்கள்.

இதுகுறித்து தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்கதமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, "கடந்த 30-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தேனிக்கு வந்தபோது அவர் இருக்கைக்கு அருகே எம்.பி.க்கும் இடம் போட்டிருந்தும் ரவீந்திரநாத் வரவில்லை. மக்களுக்காக உழைக்கக் கூடிய ஒரு எம்.பி., கட்சிப் பாகுபாடுகளை மறந்து மேடை ஏறி, தொகுதி மக்களுக்கான கோரிக்கை களை முதல்வரிடம் மனுவாகக் கொடுத்திருக்க வேண்டும். அப்படி யெல்லாம் அவர் செய்யவில்லை. ஆனால் தமிழக முதல்வரோ, சொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்பதை நிரூபிக்கும் வகையில் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு 8 கோடி ரூபாய் ஒதுக்கி, அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்திசெய்ய உத்தரவிட்டு ள்ளார். அங்கு போதுமான அளவுக்கு டாக்டர்கள், நர்சுகள் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு நோயாளிகள் கூட வருவதில்லை. அப்படியிருந்தும்கூட டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறை என்று ஒரு பொய்யான புகாரை முதல்வரிடம் கொடுத்து இருக் கிறார்.

dd

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும்கூட சொந்த ஊரான இந்த பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவ மனைக்கு போனதும் இல்லை, எந்த ஒரு அடிப்படை வசதி களையும் செய்து கொடுக்கவும் இல்லை. இப்படி, அந்த அளவுக்கு பொறுப்பில்லாமல், மக்கள்மீது அக்கறையில்லாமல் ஓபிஎஸ்ஸும் அவருடைய மகனும் இருந்தார்கள். அதையெல்லாம் மறந்துவிட்டு தற்போது முதல்வரைச் சந்தித்து மனு கொடுத்திருப்பது ஒரு பப்ளிசிட்டிக்காக மட்டும்தான்.

tt

ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின் போது, அளவுக்கு அதிகமான சொத்துக்களைக் குவித்து வைத்திருக்கும் ஓ.பி.எஸ்ஸிடமிருந்து சொத்துக்களைக் கைப்பற்றி அரசுடைமை யாக்கப்படும் என்று பகிரங்கமாகவே சொல்லி யிருந்தோம். அதன்மீது முதல்வர் நடவடிக்கை எடுத்துவிடுவார் என்ற பயம் ஓ.பி.எஸ்ஸுக்கும், அவரது மகனுக்கும் இருந்துவந்தது. அந்த பயத்தில்கூட முதல்வரைச் சந்தித்திருக்கலாம். இருந்தாலும் கூடிய விரைவில் ஓ.பி.எஸ். குடும்பத்தின் மீது ரெய்டு நட வடிக்கையை முதல்வர் எடுப்பார்" என்று கூறினார். இந்த குற்றச் சாட்டுகளைப் பற்றி விளக்கம் கேட்க எம்.பி. ரவீந்திரநாத்தை *******333 என்ற எண்ணில் பலமுறை தொடர்புகொண்டும் லைனில் பிடிக்க முடியவில்லை.

nkn250522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe