Advertisment

ராங்கால்- சபரீசனுடன் ஓ.பி.எஸ்! ரகசிய பேச்சு! கடுக்காய் கொடுத்த கமல்! கடுப்பான ராகுல் விஜயபாஸ்கரின் டபுள்கேம்! -எரிச்சலான எடப்பாடி!

d

"ஹலோ தலைவரே, ஊடகங்களின் எதிர்பார்ப்பை எல்லாம் புஸ்வாணம் ஆக்கியிருக்கு சபரீசனின் பாரின் ரிட்டர்ன்''”

Advertisment

"ஆமாம்பா, ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ரெய்டு நடந்த நேரத்தில், முதல்வர் ஸ்டாலின் மருமகனான சபரீசன் மூலம் தி.மு.க.வுக்கு சிக்கல் வரப்போகுதுன்னு ஆளாளுக்கு எழுதிய ஜோசியம் பலிக்கலையே?''”

Advertisment

ops

"ஆமாங்க தலைவரே, ஜி ஸ்கொயரில் சபரீசன் மூலம் அமைச்சர்களின் முதலீடுகள் இருப்பதாகவும், அதனால் அங்கே நடந்த ரெய்டால் அவர் கைதாகிவிடுவார் என்றும், அதற்கு பயந்து அவர் வெளிநாட்டில் தலைமறை வாக இருக்கிறார் என்றும், அவர் நண்பர் லண்டன் வெங்கட்டும் சிக்குகிறார் என்றும் பா.ஜ.க. தரப்பும், சில ஊடகங்களும் தகவல் பரப்பிக் கொண்டிருந்த போதும், 6 ஆம் தேதி காலை தனது லண்டன் ட்ரிப்பை முடித்துக்கொண்டு சபரீசன் சென்னை திரும்பி இருக்கிறார். அங்கிருந்து வந்தவுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 30 நிமிடம் அவர் பேசியிருக்கிறார். பயண நிகழ்வுகளை முதல்வரிடம் பகிர்ந்துகொண்ட சபரீசன், டெல்லியின் நட வடிக்கைகள் தொடர்பாக விவாதித்தாராம். அப்போது டெல்லிக்கும் நமக்கும் எந்தவிதமான பெரிய சிக்கலும் இல்லை. எந்தத் தவறான ஆவணமும் நம் தரப்பில் இருந்து அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதேபோல் ரெய்டு நடந்த ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் நம் தரப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனாலும் இனியும் எந்தத் தவறும் நம் பக்கம் ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறாராம் சபரீசன்.''”

"அதனால்தான் அமைச்சர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கினாரா ஸ்டாலின்?''”

"ஆமாங்க தலைவரே, பி.டி.ஆர். வாய்ஸ் ஆடியோ ரிலீஸ் ஆனதில் இருந்து, நாம இப்படி யாரிடமாவது லூஸ் டாக் செய்திருக்கிறோமா? அப்படி இருந்து அதுவும் சிக்கலாகி விடுமோ? என்று அமைச் சர்கள் பலரும் கவலையில் தான் இருக்கிறார்கள். இது முதல்வர் ஸ்டாலின் கவனத் துக்கும் போயிருக்கு. இந்த நிலையில் இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் எதையும் பேசாத அவர், தனித்தனியே ஒவ்வொரு அமைச்சரையும் அழைத்து, நீங்க எல்லோருமே இனி கவனமாக இருந்தாகணும். ஒன்றிய அரசு நமக்கு எதிரான துருப்புகளைக் கையில் எடுக்கத்தான் செய்யும். அர சியல் ரீதியாக நாம் ஒன்றிய அரசை எதிர்த்தாலும், நிர்வாக ரீதியாக அதோடு நாம் இணக்கமாகத் தான் செல்ல வேண்டி இருக்கிறது. எனினும் எந்த சிக்கலிலும் சிக்கி விடாதபடி எச்சரிக்கையாக, மனசாட்சிக்கு உண்மையாக இருங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார். இந்த நிலையில

"ஹலோ தலைவரே, ஊடகங்களின் எதிர்பார்ப்பை எல்லாம் புஸ்வாணம் ஆக்கியிருக்கு சபரீசனின் பாரின் ரிட்டர்ன்''”

Advertisment

"ஆமாம்பா, ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ரெய்டு நடந்த நேரத்தில், முதல்வர் ஸ்டாலின் மருமகனான சபரீசன் மூலம் தி.மு.க.வுக்கு சிக்கல் வரப்போகுதுன்னு ஆளாளுக்கு எழுதிய ஜோசியம் பலிக்கலையே?''”

Advertisment

ops

"ஆமாங்க தலைவரே, ஜி ஸ்கொயரில் சபரீசன் மூலம் அமைச்சர்களின் முதலீடுகள் இருப்பதாகவும், அதனால் அங்கே நடந்த ரெய்டால் அவர் கைதாகிவிடுவார் என்றும், அதற்கு பயந்து அவர் வெளிநாட்டில் தலைமறை வாக இருக்கிறார் என்றும், அவர் நண்பர் லண்டன் வெங்கட்டும் சிக்குகிறார் என்றும் பா.ஜ.க. தரப்பும், சில ஊடகங்களும் தகவல் பரப்பிக் கொண்டிருந்த போதும், 6 ஆம் தேதி காலை தனது லண்டன் ட்ரிப்பை முடித்துக்கொண்டு சபரீசன் சென்னை திரும்பி இருக்கிறார். அங்கிருந்து வந்தவுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 30 நிமிடம் அவர் பேசியிருக்கிறார். பயண நிகழ்வுகளை முதல்வரிடம் பகிர்ந்துகொண்ட சபரீசன், டெல்லியின் நட வடிக்கைகள் தொடர்பாக விவாதித்தாராம். அப்போது டெல்லிக்கும் நமக்கும் எந்தவிதமான பெரிய சிக்கலும் இல்லை. எந்தத் தவறான ஆவணமும் நம் தரப்பில் இருந்து அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதேபோல் ரெய்டு நடந்த ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் நம் தரப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனாலும் இனியும் எந்தத் தவறும் நம் பக்கம் ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறாராம் சபரீசன்.''”

"அதனால்தான் அமைச்சர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கினாரா ஸ்டாலின்?''”

"ஆமாங்க தலைவரே, பி.டி.ஆர். வாய்ஸ் ஆடியோ ரிலீஸ் ஆனதில் இருந்து, நாம இப்படி யாரிடமாவது லூஸ் டாக் செய்திருக்கிறோமா? அப்படி இருந்து அதுவும் சிக்கலாகி விடுமோ? என்று அமைச் சர்கள் பலரும் கவலையில் தான் இருக்கிறார்கள். இது முதல்வர் ஸ்டாலின் கவனத் துக்கும் போயிருக்கு. இந்த நிலையில் இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் எதையும் பேசாத அவர், தனித்தனியே ஒவ்வொரு அமைச்சரையும் அழைத்து, நீங்க எல்லோருமே இனி கவனமாக இருந்தாகணும். ஒன்றிய அரசு நமக்கு எதிரான துருப்புகளைக் கையில் எடுக்கத்தான் செய்யும். அர சியல் ரீதியாக நாம் ஒன்றிய அரசை எதிர்த்தாலும், நிர்வாக ரீதியாக அதோடு நாம் இணக்கமாகத் தான் செல்ல வேண்டி இருக்கிறது. எனினும் எந்த சிக்கலிலும் சிக்கி விடாதபடி எச்சரிக்கையாக, மனசாட்சிக்கு உண்மையாக இருங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார். இந்த நிலையில், மே 7-ல் தி.மு.க. அரசு தன் இரண்டாம் ஆண்டை கடந்த தால், அமைச்சர்களின் இதுவரையிலான செயல் பாடுகள் குறித்து ரிப்போர்ட் எடுக்கப்பட்டு, அது முதல்வர் ஸ்டாலின் கைக்குப் போயிருக்கிறதாம்.''”

"சபரீசனை ஓ.பி.எஸ். சந்தித்த நிகழ்வு அரசியலில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, சபரீசன், லண்டனில் இருந்து சென்னை திரும்பிய சனிக்கிழமை மாலை யே, சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இண்டியன்ஸ் இடையிலான கிரிக்கெட் போட்டியைப் பார்க்க, சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு உதயநிதியுடன் சென்றார். இதேபோல் கிரிக்கெட் பார்க்க ஓ.பி.எஸ்.சும் அங்கே வந்தார். அப்போது, "உங்களை சந்திக்க சபரீசன் விரும்புகிறார். போட்டி முடிந்ததும் சந்திப்பார்'’ என்று ஓ.பி.எஸ்.ஸுக்கு சபரீசன் தரப்பில் இருந்து தகவல் தரப்பட்டது. இதையொட்டி இருவரும் அங்கே சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின்போது தலைகாட் டாமல் கொஞ்சம் ஒதுங்கி இருந்துகொண்டாராம் உதயநிதி. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கருதப்பட்டாலும், அவர்கள் சுடச்சுட அரசியலும் பேசினார்களாம். குறிப்பாக, அ.தி.மு.க. விவகாரம், வழக்குகளின் நிலவரம், மத்திய அரசின் நிலை என அப்போது பலவற்றையும் ஓ.பி.எஸ்.ஸிடம் கேட்டறிந்திருக்கிறார் சபரீசன். சமீப காலமாக தொடர் சோதனைகளைச் சந்தித்துவரும் ஓ.பி.எஸ்.ஸும், ஆறுதலாகப் பேசிய சபரீசனிடம், மனம்விட்டுப் பேசினார் என்கிறார்கள்.''”

"இதனால் ஓ.பி.எஸ். தி.மு.க.வில் ஐக்கியமாகப் போகிறார்னு ஒரு தகவல் பத்திக்கிச்சே?''”

"இப்படி ஒரு தகவலைப் பற்ற வைத்தது, அ.தி.மு.க. மாஜி மந்திரியான ஜெயக்குமார்தான். சபரீசனும், ஓ.பி.எஸ்.ஸும் தேவையில்லாமல் அரசியல் பரபரப்பு வந்துடக்கூடாதேன்னு ரகசிய மாகத்தான் சந்தித்துக்கொண்டனராம். ஆனாலும் இந்த சந்திப்புத் தகவலும், அது தொடர்பான புகைப்படங்களும், அவங்க ரெண்டுபேரும் ஸ்டேடியத்தை விட்டு வெளியே வருவதற்கு முன்பாகவே, பரபரப்பா வெளியே வந்துடுச்சு. இதைப் பார்த்த மாஜி மந்திரி ஜெயக்குமார், செய்தியாளர்களிடம், "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. தி.மு.க.வின் பிலிடீமாக ஓ.பி.எஸ். இருக்கிறார் என்று நாங்கள் சொன்னது இப்போது நிரூபணம் ஆகிவிட்டது' என்று விமர்சனம் செய்ய... இதுதான் ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராகப் பற்றிக்கொண்டது. இது ஓ.பி.எஸ். ஆதரவாளர் களுக்கு மத்தியில் திகைப்பை ஏற்படுத்த, அவர் களை எப்படி சமாளிப்பது என்று குழம்பிப்போயி ருக்கும் அவர், "அந்தப் புகைப்படம் எப்படி வெளியே வந்தது? அதை யார் ரிலீஸ் செய்தது?' என்றெல்லாம் கவலையோடு விசாரித்தாராம்.''”

"அரசுத்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் சிலர் கவர்னரின் விசுவாசிகளாக இருக்கிறார்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்னு எடுத்துக்கிட்டா, டெல்லியின் கருணைப் பார்வையை விரும்பும் சிலரும், ஆர்.எஸ். எஸ். சித்தாந்தம் கொண்ட சிலரும், டெல்லி பிரதி நிதியான கவர்னரிடமும் விசுவாசம் காட்டிவரு கிறார்கள். குறிப்பாக, ஒரு நிகழ்ச்சியைச் சொல்றேன். கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், அரசு கலைக் கல்லூரிகளில் ஒற்றைச்சாளர முறையைக் கொண்டு வரத் துடிக்கிறார். இந்த நிலையில் அவரது செயலாளர் ஆனந்தராவ் பட்டேல் விடுமுறையில் போனதால், அவர் இடத்திற்கு தற்காலிகமாக, தனது விசுவாசிகளில் ஒருவரும் ஜூனியர் அதிகாரியுமான உயர்கல்வித்துறை செய லாளர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.ஸை நியமித்திருக் கிறார். இவர், கோட்டையின் மூவ்களை ராஜ்பவன் கவனத்துக்கு எடுத்துச்செல்லும் அதிகாரிகளில் ஒருவர் என்பதால்தான், கவர்னருக்கு இவர் மீது கரிசனமாம். கார்த்திகேயனும் கவர்னரின் உத்தரவை ஏற்றுக்கொண்டு அவருக்கு பிடித்த மாதிரி செயல்பட்டுவருகிறார். அந்த வகையில்...''”

ff

"எதுக்கு சஸ்பென்ஸ் பிரேக்?''”

"சஸ்பென்ஸ் எல்லாம் இல்லைங்க தலைவரே, பத்தி பெரிதாக இருப்பதால் ஒரு சின்ன கேப், அவ்வளவுதான். அரசு கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்பட இருக்கும் நிலையில், பொறியல் கல்லூரியில் இருப்பதைப் போலவே, கலைக் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை கொண்டுவருவதற்கான கோப்பை, உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடியிடம் கொண்டுபோயிருக்கிறார் கார்த்திகேயன். அதைப் புரட்டிப் பார்த்து டென்ஷனாக அமைச்சர், "இது ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை முன் மொழிகிற வகையில் இருக்கிற திட்டம் என்பதால், இது இங்கே வேண்டாம்னு சொல்லி இருந்தேனே. அப்படி இருக்க இதையே என்னிடம் ஏன் எடுத் துக்கிட்டு வர்றீங்க?'ன்னு எரிச்சலோடு கேட்ட தோடு, அதில் கையெழுத்துப் போடவும் மறுத்து விட்டார். எனினும், "அமைச்சருக்கு முக்கிய விசயங் களில் அணைபோட முயன்றுகொண்டே இருக் கிறார் கார்த்திகேயன்' என்கிறது கோட்டைத் தரப்பு.''

"ஓ.பி.எஸ்.ஸை பலவீனப்படுத்தும் முயற்சியில் எடப்பாடி இறங்கிவிட்டாராமே?''”

"தங்களுக்குத் தொடர் குடைச்சல் கொடுத்து வரும் ஓ.பி.எஸ்.ஸின் கொஞ்சநஞ்ச பலத்தையும் குறைக்க, அவர் தரப்பினரை இழுக்கும் முயற்சியில் எடப்பாடி ஜரூராக இறங்கியிருக்கிறார். அதேபோல் தினகரனின் அ.ம.மு.க. பிரமுகர்களுக்கும் அவர் தரப்பு வலைவீசி வருகிறது. இந்த நிலையில், எடப் பாடி அணியில் இருக்கும் மாஜி மந்திரி விஜயபாஸ்கர், குட்கா வழக்கில் தனக்கு கண்டம் நெருங்கி வரு வதை உணர்ந்து, ஓ.பி.எஸ். மூலம் டெல்லியின் சலு கையை பெறத் துடிக்கிறார். அதனால் ஓ.பி.எஸ். நடத்திய மாநாட்டுக்கு நிறைய அள்ளிக் கொடுத்த தோடு, அடுத்து அவர் கூட்ட இருக்கும் மாநாட்டுக்கும் கணிசமாக நிதிகொடுத்து, அவர் மனதையும் தொட் டிருக்கிறார். விஜயபாஸ்கரின் இப்படிப்பட்ட டபுள் கேம், எடப்பாடியை எரிச்சல்படுத்தி வருகிறதாம்.''”

"சரிப்பா, ராகுல்காந்திக்கு தண்டனை விதித்த நீதிபதிக்கு பா.ஜ.க. கொடுத்த பதவி உயர்வு சர்ச்சை யைக் கிளப்பி இருக்கே?''”

rang

"உண்மைதாங்க தலைவரே, மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 வருட சிறைத் தண்டனை கொடுத்து, அவரது பதவி பறிப்பிற்கு வழிவகுத்தவர் சூரத் நீதிமன்ற நீதிபதி ஹரீஷ்வர்மா ஆவார். இவருக்கு அதே சூட்டோடு மாவட்ட கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வைக் கொடுத்திருக்கிறது குஜராத்தில் உள்ள பா.ஜ.க. அரசு. இவரோடு சேர்த்து, 67 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் சீனியாரிட்டி கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும் இது அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் கூறி, உச்சநீதி மன்றத்தில் குஜ ராத் நீதித்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்திருக் கிறார்கள். இவர்களின் மனுவை ஏற்றுக்கொண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், அவசர கதியில் இந்த பதவி உயர்வை வழங்கியது ஏன்? என்ற கேள்வியை எழுப்பியதுடன், இதுகுறித்து குஜராத் மாநில தலைமைச் செயலாளர் கோர்ட் டில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பி, முறைகேட்டில் ஈடு பட்ட குஜராத் பா.ஜ.க. அரசுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.''

"நடிகர் கமல் மீது ராகுல் தரப்பு எரிச்சலில் இருக்கிறதே?''”

"மே 10ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடப்பதால், கடைசிக் கட்டப் பிரச்சாரத்துக்கு மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமலை அழைத்திருந்தது அங்குள்ள காங்கிரஸ் கட்சி. கமலுடன் நட்பு பாராட்டிவரும் ராகுல்காந்தி யும், இதுகுறித்து கமலுடன் பேசிய தால், அழைப்புக்கு அவர் சம்மதம் சொல்லி இருந்தாராம். பிரச்சாரத் துக்கு வருவதாகச் சொன்ன கமல், கடைசி நேரத்தில், கர்நாடக காங் கிரஸ் பிரமுகர்கள், பலமுறை முயன் றும் அவர்களின் லைனில் சிக்காமல் கடுக்காய் கொடுத்துவிட்டார். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மூலமாக முயற்சி எடுக்கப்பட்டும் கூட ஒன்றும் நடக்கவில்லை. இந்த விபரம் ராகுலுக்கு சொல்லப்பட... ராகுலோ, இனி கமலை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என கட்சிப் பிரமுகர்களுக்கு உத்தரவு பிறப்பித்து விட்டாராம். எனினும், கடைசி நேரத்தில் கமலுக்கு என்ன ஆச்சு? ஏன் அவர் எஸ்கேப் ஆனார்? என கர்நாடக காங்கிரஸ் பிரமுகர்கள் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டே இருந்தனர்.''”

"காவல்துறை எழுதும் ஆள் மாறாட்டக் கதைகள் இன்னும் முடியலையேப்பா?''”

rr

"ஆமாங்க தலைவரே, குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமலோ, அல்லது பிடிக்க விரும்பாமலோ காவல்துறை இருக்கும்போது, சம்பந்தமே இல்லாத நபர்களைக் குற்றவாளியாக்கி, புனை கதைகளை எழுதுவதில், காவல்துறையினரை அடிச்சிக்க முடியாது. அப்படி ஒரு சம்பவம் தேவ கோட்டை அருகே நடந்துக்கிட்டு இருக்கு. இந்தப் பகுதியில் இருக் கும் கன்னங்கோட் டை கிராமத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு இரவில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாயும் மகளு மான கனகமும் வேலுமதியும் படு கொலை செய்யப்பட்டு, அவர்கள் வீட்டில் இருந்த நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டன. அவர்களோடு உறங் கிய 13 வயது சிறுவன் மூவரசனும் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தான். இந்த வழக்கை விரைந்து முடிக்கும் படி ஏ.டி.ஜி.பி. சங்கர், டி.ஐ.ஜி. துரை உள்ளிட்ட மேலதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தால், இதில் சம்பந்த மில்லாத ஒரு நபரைப் பிடித்து, புனை கதை ஜோடிக்கப்பட்டு வருகிறதாம். காவல்துறையின் இந்த செயலை உயர்நீதிமன்றத்தின் கவ னத்துக்கு எடுத்துச்செல்லும் முயற்சி யும் ஜரூராக நடந்துவருகிறது.''”

"நானும் ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்துக்கறேன். தமிழ் நாடு ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சரான ஐ.பெரியசாமியின் கீழ், துறைச் செயலாளராக இருப்பவர் அமுதா ஐ.ஏ.எஸ். இவர் அமைச்சரை ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லையாம். துறையில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகளைக் கூட அவர் அமைச்சரின் கவனத் துக்குக் கொண்டு செல்வதில்லை யாம். பதவி உயர்வுகள், பணி நியமனங்கள் பற்றிகூட அமைச்சரிடம் அவர் விவாதிக்காததோடு, துறையின் நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைப்பதையும் அவர் விரும்புவதில்லையாம். இதனால் சமீபகாலமாக அமைச்சருக்கும் அமுதா வுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இதனையடுத்து, ஊரக வளர்ச் சித் துறையை கவனிக்கும் முதல்வரின் மூன்றாவது செயலாளரான சண்முகத் திடம், அமுதாவைப் பற்றி புகார் தெரிவித் திருக்கும் அமைச்சர் ஐ.பி. "துறையிலிருந்து அமுதாவை மாற்றுங்கள்; இல்லை யெனில் என்னை மாற்றிவிடுங்கள்' என முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவிக்க இருக்கிறாராம்.''

nkn100523
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe