பாபுசக்கரியா, கேரளாவின் கொல்லம் நகரின் பிரபல வி.வி.ஐ.பி.க்களில் ஒருவர். 70 வயதுடையவர். கார் விற்பனை மற்றும் ரியல் எஸ்டேட் பிசினஸ் என பன்முகத்தன்மை கொண்ட தொழிலதிபர்.
இந்த வி.வி.ஐ.பி. தொழிலதிபரை, துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சின் உதவியாளர் என்ற பெயரால், தமிழகத்திற்கு வரவழைத்து சித்ரவதைசெய்து பணம் பறித்ததாக, கேரளாவில் புகாராகியிருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
தனக்கு நேர்ந்த சித்ரவதையை நம்மிடம் விவரித்தார் பாபு சக்கரியா.
""ஆரம்பத்தில் பென்ஸ், டொயோட்டா போன்ற முக்கிய வெளிநாட்டுக் கம்பெனிகளின் கார்களை இறக்குமதி பண்ணி, சேல்ஸ் பண்ணினேன். அதோட ரியல்எஸ்டேட் தொழிலும் உண்டு. 40 வருஷமா தொழில் பண்ணிட்டு வர்றேன். இதுவரைக்கும் என்மேல் தொழில் சம்பந்தமா எந்த ஒரு சிறு பிரச்சினையோ, வம்பு வழக்கோ கெடையாது. இந்தத் தொழில்மூலமா, தமிழக துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அவர் பி.ஏ. எம்.எம்.பாபுவைக்கூட நல்லா தெ
பாபுசக்கரியா, கேரளாவின் கொல்லம் நகரின் பிரபல வி.வி.ஐ.பி.க்களில் ஒருவர். 70 வயதுடையவர். கார் விற்பனை மற்றும் ரியல் எஸ்டேட் பிசினஸ் என பன்முகத்தன்மை கொண்ட தொழிலதிபர்.
இந்த வி.வி.ஐ.பி. தொழிலதிபரை, துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சின் உதவியாளர் என்ற பெயரால், தமிழகத்திற்கு வரவழைத்து சித்ரவதைசெய்து பணம் பறித்ததாக, கேரளாவில் புகாராகியிருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
தனக்கு நேர்ந்த சித்ரவதையை நம்மிடம் விவரித்தார் பாபு சக்கரியா.
""ஆரம்பத்தில் பென்ஸ், டொயோட்டா போன்ற முக்கிய வெளிநாட்டுக் கம்பெனிகளின் கார்களை இறக்குமதி பண்ணி, சேல்ஸ் பண்ணினேன். அதோட ரியல்எஸ்டேட் தொழிலும் உண்டு. 40 வருஷமா தொழில் பண்ணிட்டு வர்றேன். இதுவரைக்கும் என்மேல் தொழில் சம்பந்தமா எந்த ஒரு சிறு பிரச்சினையோ, வம்பு வழக்கோ கெடையாது. இந்தத் தொழில்மூலமா, தமிழக துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அவர் பி.ஏ. எம்.எம்.பாபுவைக்கூட நல்லா தெரியும்.
இந்த சமயத்திலே என்னோட ப்ரெண்ட்டோட இடம் ஒண்ணை சேல்ஸ் பண்றதுக்காக, ஏப்.10 அன்னைக்கு கேரளாவிலுள்ள அனைத்து முக்கிய பத்திரிகைகள்லயும் ஆல் எடிசன் விளம்பரம் குடுத்தேன். அன்னைக்கி இரவு போன்ல என்கிட்ட பேசிய ஒருத்தர், "என் பெயர் சந்திரசேகர் என்ற சந்துரு. நான், துணைமுதல்வர் ஐயா ஓ.பி.எஸ்.ஸோட செகண்ட் பி.ஏ.வா இருக்கேன். விளம்பரம் பார்த்தேன். இடம் பிடிச்சிருக்கு, விலையும் பரவாயில்ல... முடிச்சிறலாம்னு ஐயா சொன்னாங்க. நீங்க வந்தா பேசி முடிச்சிறலாம்'னு சொன்னார்.
"எப்ப வரணும்'னு கேட்டப்ப, ""நீங்க புறப்பட்டு குமுளி வந்துருங்கன்னார். ஏப் 13-ல நான் கார்ல கிளம்பி 1.30 மணிக்கு குமுளிக்கு வந்தேன். இடம் தெரியாததால ரெண்டுபேர் வந்து தோட்டத்துக்குள்ள இருக்கும் வீட்டுக்கு என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. உள்ள ஒரு ரூம்லருந்து வெளிய வந்த சந்துரு, "அய்யா, ஒரு பார்ட்டிட்ட பேசிட்டிருக்காங்க. அவங்க போனதும் நாம பிசினஸ் பேசி முடிச்சிறலாம்'னு பேச்சைத் தொடங்கினார். பேசிட்டிருக்கும்போதே கத்தியோட நாலஞ்சு ரவுடிங்க உள்ள வந்தாங்க. உடனே கதவு ஜன்னல்களை அடைச்சிட்டாங்க. அந்த ரவுடிங்க என்னோட கழுத்து, நெஞ்சு, வயித்துப் பகுதியில கத்திய வைச்சு அழுத்தி மிரட்டுனாங்க. சந்துருவும் என்னய ஓங்கி அடிச்சார். எனக்கு ஷாக் ஆகிடுச்சி. என்ன பண்ணன்னு புரியல. என் செல்போன், என்னோட பாக்கெட்லயிருந்த பர்ஸ், பான் கார்டு, ஆதார், ஓட்டர் ஐ.டி., டிரைவிங் லைசென்ஸ், வாட்ச், செயின், மோதிரங்கள், என்கிட்டயிருந்த அம்பத்தைஞ்சாயிரம் பணத்தையும் எடுத்திட் டாங்க. பேண்ட் சட்டையை உருவி ஜட்டியோட நிற்கவச்சு என்னையும், என்னோட டிரைவர் ஆசிக்கையும் அடிச்சாங்க. கடைசியில அஞ்சுலட்ச ரூபா பணம் கேட்டாங்க. கொல்லத்திலிருக்கிற என்னோட நகைக்கடை ப்ரண்ட்கிட்ட சொல்லி, அவங்க சொன்ன நம்பர்ல 5 லட்சம் போடச்சொன்னேன். அத்தோட விடாம மூணு வெற்று பிராமிசரி நோட், ஒரு டைப் பண்ண பேப்பர் எல்லாத்துலயும் என் கையெ ழுத்தை வாங்கிட்டு நைட் ஏழரை மணிக்கு கம்பம் ரோட்டுல கொண்டுவந்து விட்டாங்க. ஊருக்கு வந்ததும், நடந்த விஷயங்களை கேரள டி.ஜி.பி., கொல்லம் போலீஸ் கமிஷனர், போலீஸ் ஏ.சி.பி.ட்டல்லாம் புகார் பண்ணி னேன்''’என்றார் வேதனைக் குரலில்.
சந்துரு குறித்து ஓ.பி.எஸ். தரப்பில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, "அப்படி ஒரு உதவியாளரே அவருக்குக் கிடையாது' என்கிறார்கள் உறுதியாக.
பாபு சக்கரியாவுக்கு நடந்தது குறித்து கொல்லம் மாநகர போலீஸ் அஸிஸ்டண்ட் கமிஷனரான விஜயனைத் தொடர்புகொண்டதில், “""இந்த வழக்கில் பேங்க் அக்கவுண்ட் டிரான்ஸ்பர், வேறு பல எவிடன்ஸ்கள் கிடைச்சிருக்கு. சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருக்கு. கேரள போலீஸ் இந்தக் கேசில் விரிவான விசாரணையை மேற்கொள் ளும்''’என்கிறார்.
புகாருக்கு ஆளான சந்துருவைத் தொடர்பு கொண்டு கேட்டதில், ""நான் ஓ.பி.எஸ். பெயரைச் சொல்லவே இல்லை. ஆள்வைத்து மிரட்டி அடிக்கவும் கிடையாது. எனக்கு வயநாடு பக்கம் உள்ள கூடலூர். நானும் ரியல்எஸ்டேட் பண்றவன்தான். அவரது இன்னோவா காரை விலைபேசி நான் அவரிடம் 5 லட்சம் கொடுத்தேன். அதற்கு கூடுதல் விலைதர வேறு ஒருவர் முன்வந்ததால் அவருக்கு விற்க முயன்றிருக்கிறார். "என்னோட பணத்தைக் கொடுத்துவிட்டுப் போங்கள்' என்றேன். பேங்க் அக்கவுண்ட்டில் பணம்போட்டதும் நான் அவரை, வண்டியை ரிலிஸ் பண்ணிட்டேன். வெற்றுப் பேப்பர் எதிலும் நான் கையெழுத்து வாங்கவில்லை''’என்றார்.
""5 லட்சம் பணம் கொடுத்தது நீங்கள், அதை உங்களின் அக்கவுண்ட்டில் செலுத்தச் சொல்லாமல் இன்னொருவர் அக்கவுண்ட்டில் அதுவும் திருப்பூர் அக்கவுண்டில் போடச்சொன்னது ஏன்?'' என்றதும், ""அது என்னோட ப்ரெண்ட் அக்கவுண்ட்...''’என்று சமாளித்தார்.
கேரள பிரபலம், தமிழகப் புள்ளி இவர்களிடையே நடந்தவை களைப் பற்றிய விரிவான விசாரணை நடக்குமேயானால்... பூதங்கள் வெளிக்கிளம்பலாம்.