சுதந்திரப் போராட்ட காலத்திலேயே, பெண்கள் அதிகமாகப் பங்கேற்று, சிறை சென்ற தெல்லாம் வரலாறு. பெண்கள் இடஒதுக்கீடு வரைவுச் சட்டம், 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வழிவகை செய்திருக்கும் இந்தக் காலத்திலும், அரசியலில் பெண்கள் ஈடுபடலாமா? வேண்டாமா? என்பது குறித்த விமர்சனங்கள் எழுவதுண்டு.
பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பல மாநிலங்களில் பெண் முதலமைச்சர்களை நம் தேசம் சந்தித்துள்ளது. ஆனாலும், காலம்காலமாக பெண்கள் ஒடுக்கப்பட்டு வரும் கொடுமை, அரசியலில் இன்றுவரையிலும் நீடிப்பது வெட்கக்கேடானது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆவதற்காக, வார்டுகள்தோறும் மக்களைச் சந்தித்து உழைப்பைச் சிந்திய மகளிரணியைச் சேர்ந்த ஒருவர், அந்த எம்.எல்.ஏ.வை பிளாக் மெயில் செய்யும் அளவுக்கு மன உளைச்சல் அடைந்து வெளிப்படுத்திய குமுறல், அவருடைய குரலிலேயே நக்கீரன் இணையதளம் மூலம் வைரலானது.
யார் அந்த எம்.எல்.ஏ? வில்லங்க விவகாரமா?
விருதுநகர் மாவட்டத்தில் ஒரேயொரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதி மக்கள் தேர்ந்தெடுத்த மான்ராஜ். கடந்த சில மாதங்களாக ரீட்டா என்பவரால் குற்றம்சாட்டப்பட்டு, ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கும் அளவுக்கு, கடும் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார். ஏன் தெரியுமா?
மான்ராஜ் எம்.எல்.ஏ., "மகளிரணி' இன்னாசியம்மாவுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறார். அந்த உரிமையில், அந்தரங்கத்
சுதந்திரப் போராட்ட காலத்திலேயே, பெண்கள் அதிகமாகப் பங்கேற்று, சிறை சென்ற தெல்லாம் வரலாறு. பெண்கள் இடஒதுக்கீடு வரைவுச் சட்டம், 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வழிவகை செய்திருக்கும் இந்தக் காலத்திலும், அரசியலில் பெண்கள் ஈடுபடலாமா? வேண்டாமா? என்பது குறித்த விமர்சனங்கள் எழுவதுண்டு.
பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பல மாநிலங்களில் பெண் முதலமைச்சர்களை நம் தேசம் சந்தித்துள்ளது. ஆனாலும், காலம்காலமாக பெண்கள் ஒடுக்கப்பட்டு வரும் கொடுமை, அரசியலில் இன்றுவரையிலும் நீடிப்பது வெட்கக்கேடானது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆவதற்காக, வார்டுகள்தோறும் மக்களைச் சந்தித்து உழைப்பைச் சிந்திய மகளிரணியைச் சேர்ந்த ஒருவர், அந்த எம்.எல்.ஏ.வை பிளாக் மெயில் செய்யும் அளவுக்கு மன உளைச்சல் அடைந்து வெளிப்படுத்திய குமுறல், அவருடைய குரலிலேயே நக்கீரன் இணையதளம் மூலம் வைரலானது.
யார் அந்த எம்.எல்.ஏ? வில்லங்க விவகாரமா?
விருதுநகர் மாவட்டத்தில் ஒரேயொரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதி மக்கள் தேர்ந்தெடுத்த மான்ராஜ். கடந்த சில மாதங்களாக ரீட்டா என்பவரால் குற்றம்சாட்டப்பட்டு, ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கும் அளவுக்கு, கடும் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார். ஏன் தெரியுமா?
மான்ராஜ் எம்.எல்.ஏ., "மகளிரணி' இன்னாசியம்மாவுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறார். அந்த உரிமையில், அந்தரங்கத் தேவைக்கான கோரிக்கை ஒன்றை முன்வைக்கிறார். இந்த விவகாரத்தில்தான் ரீட்டா தலை உருட்டப்படுகிறது. அப்போது, ஆபாசமான வார்த்தை ஒன்றை உதிர்க்கிறார், மான்ராஜ். கைபேசியில் இன்னாசியம்மாவுடன் அவர் பேசி ‘ரெக்கார்ட்’ செய்யப்பட்டது ரீட்டா காதில் விழ... கொந்தளிக்கிறாள்.
எம்.எல்.ஏ. மான்ராஜுக்காக பரிந்து பேசிய மீடியேட்டர் ஒருவரிடம் ரீட்டா வெளிப்படுத் திய ஆவேச ஆடியோவில் ஒருசில துளிகள்..
"தன்னை ஜெயிக்க வைத்த ஒரு பொம்பளைய (ரீட்டா) மனிதாபிமானம் இல்லாம அசிங்கமா பேசுறவரு ஏன் எம்.எல்.ஏ.வா இருக்கணும்? அந்த ஆடியோவ நல்லா கேட்டுப் பாருங்க. அவருக்கு 20 வயசுல மூணு பொம்பளைங்க வேணுமாம். அவகிட்ட (இன்னாசியம்மாள்) சொல்லி வரச்சொல்லிருக் காரு. அவளும் உனக்கு (மான்ராஜ்) ரீட்டா வேணுமான்னு கேட்கிறா. வசந்தி அக்காகிட்ட (மான்ராஜ் மனைவி) நானும் ஒரு மனிதாபிமான அடிப்படைல சொன்னேன். அவங்க ஒரு நல்ல பொம்பளையா இருந்தாங்கன்னா, பேசி ஸ்டெப் எடுத்திருக்கணும். அதைச் செய்யல. 20 வயசு புள்ள வேணும்னு கேட்கிறான்... இவன்லாம் ஒரு எம்.எல்.ஏ.
சென்னைக்கு எதுக்கு போயிருக்கான்னு கேட்கிறான். என்னையும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பெயரையும் சம்பந்தப்படுத்தி அசிங்கமா பேசிருக்கான். எல்லாரையும் அசிங்க அசிங்கமா பேசுறாங்க. பொம்பளைய மதிக்கிறதே கிடையாது. கட்சிக்காக வேலை பார்த்த பொம்பளைய மதிக்கத் தெரியாதவன், வேற எந்த பொம்பளைய மதிப்பான்? என்னை அசிங்கமா பேசினதுக்கு, தரக்குறைவா பேசினதுக்கு தண்டனையாத்தான் ரூவா கேட்டுட்டு இருக்கேன். நான் ஓபனாவே சொல்லுறேன். எனக்கு வாழ்வாதாரத்துக்கு கண்டிப்பா வேணும். இவ்ளோ அசிங்கப்பட்டு, அவமானப் பட்டுட்டேன். எனக்கு அமவுண்ட் தர்றதா இருந்தா 25 லட்சம் வேணும். இல்லைன்னா, பிரஸ்மீட் கொடுத்திருவேன்.
வசந்தி அக்காகிட்ட கேட்டுப் பாருங்க. மான்ராஜை அண்ணன்னுதானே சொல்லிட்டு இருக்கேன். மகளிரணி எதுக்கு வச்சிருக்காங்க? கூட்டத்துக்கு கூட்டிட்டு வான்னாங்க. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டிட்டு வான்னாங்க. அப்படி கூட்டிட்டு வர்ற பொம்பளைகளை, நீ இருவது வயசு பொம்பளைய கூட்டிட்டு வா, 30 வயசு பொம்பளைய கூட்டிட்டு வான்னு சொல்லுறாங்க. எங்கள கூட்டிக் கொடுக்கச் சொல்லுறாங்கன்னா.. அந்த வேலையத்தான் பார்த்துட்டு இருந்தாங்களா? அதனால்தான் இப்படி பேசுறாங்களா? ஒரு வயசானவரு இப்படி பேசிட்டிருக்காரு. கட்சில ஒருத்தரு கூட கண்ணியமா இப்ப வரைக்கும் பேசல.
ரெண்டு நாளா நான் சாப்பிடல; தூங்கல. பேசாம, எழுதி வச்சிட்டு செத்து போயிறலாம்னு நினைச்சேன். என் மானம் இத்தனை லட்சத்துக்கு பெறாது. என்னை வல்கரா பேசினதுக்கு, மோசமா அசிங்கமா பேசினதுக்கு தண்டனை கொடுத்துட்டு இருக்கேன். அவன் கடன் வாங்குறான்; வாங்காம போறான். எதிர்க்கட்சியா (அ.தி.மு.க.) இருக்கான். அதெல்லாம் பார்க்க முடியாது. எனக்கு இந்த அமவுண்ட்ட (ரூ.25 லட்சம்) கண்டிப்பான முறைல குறைக்கக்கூடாது. இது என் மானத்துக்கு கிடையாது. என்னை பேசினதுக்கு தண்டனை. அதுவும் நான் மானத்தை வித்தேன்னு ஆகக்கூடாது. என் மானத்த பத்தி பேச யாருக்கும் எந்தத் தகுதியும் இல்ல''” என்றெல்லாம் வெடித்திருக்கிறார் ரீட்டா.
நாம் ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மான்ராஜை தொடர்புகொண்டோம்.
"பணம் பறிக்கும் நோக்கத்துல என்கிட்டயும் சிலர் பேசினாங்க. நான் கஷ்டப்பட்ட குடும்பத் துல இருந்து வந்தவன். நாங்க பாரம்பரியமா அ.தி.மு.க. குடும்பம். என் மனைவி சேர்மனாயிருக்காங்க. நான் எம்.எல்.ஏ.வா இருக்கேன். என்னடா, தேவையில்லாம நம்மகிட்ட பணம் கேட்கிறாங்களேன்னு பார்க்கும்போது, இதுக்கு முழுக்க முழுக்க முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரபிரபாவும் அவங்க கணவர் முத்தையாவும்தான் காரணம். அவங்க எம்.எல்.ஏ.வா இருக்கும்போது டி.டி.வி. தினகரன்கிட்டயும் கோடிக்கணக்குல ரூபாய் வாங்கினாரு. மாற்று கட்சிங்ககிட்ட பணம் வாங்குற குறிக்கோள்லயே எம்.எல்.ஏ.வா இருந்து அந்த வேலைய பார்த்தாங்க. இது தலைமைக்கு பிடிக்கல. அதனால, அவருக்கு (சந்திரபிரபா) சீட் கொடுக்காம, எனக்கு சீட் கொடுத்தாங்க. என்னைத் தோற்கடிக்கிறதுக்கே ஒரு கோடி ரூபா செலவழிச்சாங்க. ஆனா.. தொகுதி மக்கள் ஒத்துழைப்புல நான் ஜெயிச்சிட்டேன். அது பொறுக்கல. எனக்கு எதிரா வேலை பார்த்தாங்கன்னு முத்தையாவ ஒன்றிய செயலாளர் பொறுப்புல இருந்து தலைமை எடுத்துட்டாங்க. நமக்கு போட்டியா இவ்வளவு தூரத்துக்கு அரசியல் பண்ணிக்கிட்டிருக் கானேங்கிற காழ்ப்புணர்ச்சியில, நான் பெண்கள்கூட பேசுற மாதிரி ஆடியோவ செட்டப் பண்ணுறாங்க. இது ஒரு கூட்டுச்சதி. முத்தையாகூட சேர்ந்து சதி பண்ணுன ஒருசில நபர்கள் இருக்காங்க. பணம் பறிக்கிற நோக்கத்துல எல்லா வேலையும் பார்க்கிறாங்க. அதை தெரிவிக்க வேண்டிய இடத்துல தெரிவிப்பேன். தலைமைகிட்ட கொண்டுபோவேன். நான் பெண்களை தெய்வமா நினைக்கிறேன். தாய்மார்கள்கிட்ட அக்கா, தங்கச்சியா பழகிட்டு இருக்கேன். எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. நான் தாயா புள்ளையாத்தான் பேசிருக்கேன். ரூ.25 லட்சம் கேட்டு தூண்டிவிட்டு பிரச்சினைய கிளப்பணும்னு நினைக்கிறாங்க. என் பெயரையும் புகழையும் களங்கப்படுத்துற நோக்கத்துல இதைச் செய்யு றாங்க''’என "நான் அவனில்லை...'’ பாணியில் மறுத் தார்.
"இங்கே 10 கோடி; அங்கே 5 கோடி என ஐந்து வருடங்களில் ரூ.40 கோடி வரை சம்பாதித்துவிட்டார், முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரபிரபா...'’ என அ.தி.மு.க. தரப்பில் பலரும் புகார் வாசிக்க... நாம் தொடர்புகொண்டபோது லைனில் வந்தார், சந்திரபிரபாவின் கணவர் முத்தையா.
"நாங்க விவசாயம், தொழில், கட்சின்னு இருக்கோம். அடுத்தவங்க விஷயத்தை பேசுறதே எனக்கு பிடிக்காது. பொய் சொன்னாலும், பொருத்தமா சொல்ல வேணாமா? பொம்பளைகிட்ட அவன் (மான்ராஜ்) பேசினதுக்கு நான் எப்படி ஆளாக முடியும்?''’என்று ஒரே போடாகப் போட்டார்.
அரசியலை சாக்கடை என விமர்சித்து பலரும் ஒதுங்கிவரும் நிலையில், அதில் பெண்களையும் புரட்டியெடுத்து நாற வைத்துவிடுகின்றனர் சில அரசியல்வாதிகள்!