நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தி லுள்ள 200க்கும் மேற்பட்ட குவாரிகளிலிருந்து கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் அளவுக்கதிகமாக வெட்டியெடுக்கப்பட்டு கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுகின்றன. இவற்றால் சாலைகள் சிதைவடைவது, சுற்றுப்புறச்சூழல் சீர்கெடுவதென பல்வேறு சிக்கல்களை அப்பகுதி மக்கள் எதிர்கொள்கிறார்கள். சக்திமிக்க வெடிகளால் பாறைகள் பிளக்கப்படுவதால், அதிர்வுகளால் வீடுகளில் கீறல்கள் விழுவது பெரும் அச்சுறுத்த லாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் மட்டத்திற்கு பல முறை கொண்டுசெல்லப்பட்டும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என ஆதங்கப்படுகிறார்கள்.

Advertisment

நெல்லை மாவட்டத்தில் கல் குவாரிகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் மூலமாகவே வெளிப்படுத்தி அதனை ஆவணப்படுத் தும் மக்கள் சந்திப்பு நிகழ்வை, நவம்பர் 02 அன்று நெல்லையிலுள்ள தனியார் மண்டபத்தில் அறப்போர் இயக்கம் நடத்தியது. அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளரான ஜெயராமன் ஒருங்கிணைத்த இக்கூட்டத்தில், மக்கள் சிவில் உரிமைக்கழக தேசிய பொதுச்செயலாளரான வழக்கறிஞர் சுரேஷ், நீரியல் மேலாண்மை நிபுணர் உதயராஜன், தன்னாட்சி ஒருங்கிணைப்பாளர் நந்த குமார், பல்லுயிர்ப்பெருக்கு ஆய்வாளர் தணிகை வேல், சமூக ஆர்வலர் நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்கள் விவசாயிகள் பெருமளவு கலந்துகொண்ட கூட்டத்தினூடே குவாரிகளின் ஆதரவாளர்களும் கலந்திருக்கிறார்கள்.

Advertisment

பொதுமக்களும், விவசாயிகளும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துக்கூற, தொடக்கத்தில் சுமுகமாகப் போய்க்கொண்டிருந்த கருத்துக்கேட்புக் கூட்டம், பின்னர் ரகளை, நாற்காலி வீச்சு, மோதல் என்றாகி, பாதியிலேயே முடித்துக்கொள்ளப்பட்டது.

quary1

இக்கூட்டத்தில் பங்கெடுத்த தூத்துக்குடியைச் சேர்ந்த காந்தி நம்மிடம், "நிகழ்ச்சியின் ஒருங் கிணைப்பாளர் ஜெயராமன் குவாரிகளால் மக்க ளுக்கு ஏற்படும் பாதிப்பை பற்றி பேசுகையில், நெல்லை மாவட்டத்திலுள்ள சுமார் 120க்கும் மேற்பட்ட குவாரிகளிலிருந்து ஆண்டுதோறும் எடுக் கப்படுகிற கனிம வளங்கள் கணக்கிலடங்காது என்றார். மேலும், சக்திவாய்ந்த வெடிகளால் வீடு களில் ஏற்படும் வெடிப்புகள், குவாரி தூசிகளால் ஏற்படும் விவசாயப் பாதிப்புகள் அதிகமிருக்கிறது. இ-பாஸ் நடைமுறை வந்தபிறகு எந்தவித முறை கேடுகளுக்கும் வழியில்லை. நாங்கள் எங்களுடைய பட்டா நிலத்தில்தான் கனிமங்களை வெட்டியெடுக் கிறோமென்று குவாரி உரிமையாளர்கள் தெரிவிக் கிறார்கள். குவாரியி லிருந்து வருகிற லாரி யின் இ-பாஸிலுள்ள தனித்துவமான எண்ணை எடை மேடையிலும் சோதனைச்சாவடியிலும் அதிகாரிகள் பதிவுசெய்து சரிபார்க்க வேண்டும். அப்படி மார்க் செய்தால்தான் ஒரு பாஸை மீண்டும் பயன்படுத்த முடியாது. ஆனால் இந்த கடுமையான நடைமுறைகள் சோதனை அதிகாரி களால் பின்பற்றப்படுவதில்லை என்று அவர் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென கும்பலாகக் கூட்டத்திற்குள் நுழைந்தவர்கள், குவாரி உரிமை யாளர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் செயல்படுவதாகக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்கு போடப்பட்டிருந்த மேஜைகளை சேதப்படுத்தினர். சிலர் சேர்களைத் தூக்கி வீச, சேர்கள் பறந்தன. இதனால் மண்டபத்தில் ரகளையாகி மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இந்த சேர் வீச்சில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் குழுத்தலைவருமான சுரேஷின் பின்மண்டையில் அடிபட்டு காயமேற்பட்டது. வாக்குவாதம் முற்றிய பதற்றமான சூழலில் வந்த பாளை போலீசார், பதற்றத்தை சரிசெய்ததோடு, அனுமதியின்றி ஏன் கூட்டத்தை நடத்தினீர்களென்று அறப்போர் இயக்கத் தினரிடம் கேள்விகளை எழுப்பினர். கல்குவாரி ஆதரவாளர்களோ, கல்குவாரிகள் மீது அவதூறு பரப்பும் வகையில் கருத்து கேட் கும் இந்த இயக்கத்தினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மண்டபத்தில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட, கருத்துக்கேட்புக் கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது'' என்றார் விரிவாக.

Advertisment

இந்த சேர் வீச்சு ரகளையில் காயமடைந்த சென்னை வழக்கறிஞர் சுரேஷ், "குவாரிகளால் பொதுமக்களின் சுகாதாரம், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை நாங்கள் கேட்டுக்கொண்டி ருந்தபோது திடீரென்று குவாரி ஆதரவு தரப்புகள் உள்ளே வந்து; "நீங்கள் எப்படி இங்கே வரலாம், விசாரிக்கலாம்' என்று சொல்லி எங்களிடம் தகராறு செய்தனர். சேர்களை தூக்கி வீசினார்கள். என் தலையில பட்டு காயமாகிருச்சு. வன்முறையா ஆக்ரோஷமா கோஷம் போட்டாங்க. இதையெல்லாம் பொது மக்களும் பார்த்திட்டுதான் இருந்தாங்க. இதுல வெளிப்பட்ட விஷயங்கள் வெளில போயிடக்கூடாது என்பதுதான் அவங்க நோக்கம். ஆனா நாங்களும் எங்க இயக்கத்தினரும் இதப் பெருசுபடுத்த வேண்டாம்னு விட்டுட்டோம். இங்கே நடந்தவைகளை நிச்சயம் அரசு வரைக்கும் கொண்டு செல்வோம்'' என்றார் வேதனையான அழுத்தத்துடன்.

quary2

குவாரி ஆதரவாளர்கள் தரப்போ, "இவர்கள் கேரள குவாரி உரிமையாளர்களின் விருப்பப்படி செயல்படுகின்றனர். நெல்லை மாவட்டத்துல உள்ள குவாரிகள்ல எந்தவிதமான முறைகேடுகளும் நடக்கல. அந்த அமைப்புதான் கல்குவாரி உரிமையாளர்களுக்கு எதிராக பேசிவருகிறது. இதை கேட்ட தால்தான் கூட்டத்தில் வாக்குவாதமானது'' என்கிறார்கள்.

ஆனால் அறப்போர் இயக்கமோ "சட்டவிரோத கல் குவாரிகளால் மக்கள் படும் இன்னல்களை தடுக்கவும், சட்டவிரோத குவாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கிற வகையிலும் எங்களின் முயற்சிகள் இன்னும் வீரியமெடுக்கும்'' என்றது.