ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க் கட்சியாக இருந்தாலும் நீதிமன்றம் மூலம் வரலாற்று வெற்றிகளை தி.மு.க.வுக்குப் பெற்றுத்தருவதில் அக்கட்சியின் வழக்கறிஞர்கள் அணிக்கு பெரும்பங்கு உண்டு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே பலமான சட்ட அறிஞர்கள் கொண்ட வழக்கறிஞர் அணியை மாநில கட்சியான தி.மு.க. வைத்துள்ளது என்பதை எல்லா கட்சிகளும் ஒப்புக்கொள்கின்றன. அப்படிப்பட்ட அணியில் சோககீதமும், புலம்பலும் கேட்கின்றன.
தி.மு.க. வழக்கறிஞர் அணி கழக மாவட்டங் களை 7 மண்டலமாகப் பிரித்து, வழக்கறிஞர் அணி சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்திருவருகிறது. வடக்கு மண்டலம் 1, 2-க்கு உட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, ராமநாதபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களின் கூட்டம் கடந்த வாரம் நடந்துள்ளது. மே 27 முதல் 31 வரை கோவை மண்டலம் மற்றும் டெல்டா மண்டலத்துக்கான கூட்டம் நடைபெறவுள்ளது.
வடக்கு மண்டலக் கூட்டத்தில் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, வடக்கு மண்ட

வடக்கு மண்டலக் கூட்டத்தில் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, வடக்கு மண்டல பொறுப்பாளர்கள் சட்டத்துறை இணைச் செயலாளர் தாமரைச்செல்வன், சட்டத்துறை துணைச்செயலாளர் மருதுகணேஷ் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், தேர்தலை எதிர்கொள்ள ZLC - மண்டல ஒருங்கிணைப்பாளர், DLC- மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ULC- ஒன்றிய ஒருங்கிணைப்பாளர், TLC- நகரம்/ பேரூர் ஒருங்கிணைப்பாளர், DivLC- பகுதி ஒருங் கிணைப்பாளர், FLC - முதல்நிலை ஒருங்கிணைப் பாளர், காவல்நிலைய எல்லைக்குட்பட்டவர் எனப் புதியதாக நியமனம் செய்யப்பட்ட வழக்கறிஞர் களுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ளவேண்டும், களத்தில் வழக்கறிஞர் அணிக்கு முன்னுள்ள சவால்கள் என்ன என்பது குறித்து ஆலோசனை கூறியுள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆளும் கட்சியைச் சேர்ந்த வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர்கள் சிலர், “"எங்கள் ஆட்சியமைந்து 4 ஆண்டுகள் முடிந்து ஐந்தாவது ஆண்டு ஆட்சி நடைபெறுகிறது. ஆளும்கட்சியாக நாங்கள் இருந்தாலும் நீதிமன்றத்தில் ஆளும்கட்சி வழக்கறிஞர் எனச்சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. எதிர்க்கட்சி வழக்கறிஞர்கள்போல்தான் இருக்கிறோம். பொறுப்புகள் தருகிறோம், இந்த வேலை செய், அந்த வேலை செய் என ஆசை மட்டும் காட்டுகிறார்கள். இப்போதுவரை பெரும்பாலான மாவட்டங்களில் போக்கு வரத்துத்துறை, கூட்டுறவுத் துறையின் வழக்குகளை அ.தி.மு.க. ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட வழக் கறிஞர்கள்தான் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இப்படி இன்னும் சில துறைகளின் வழக்குகளில் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் ஆஜராகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு கட்சியின் ஐவரணி, கழகத்திலுள்ள அணிகளின் நிர்வாகிகளை அழைத்துப் பேசும்போது, சட்டத்துறை மாநில நிர்வாகிகளிடம், நமது கட்சிக்காரர்கள் மீது எத்தனை வழக்கு இருக்குன்னு உங்களுக்கு தெரியல? அவுங்க வழக்குகள்ள நம்ம வழக்கறிஞர் அணியே ஆஜராகறதில்ல? கட்சிக்காக தேர்தல் வழக்குகளைக்கூட நீங்க சரியா கையாளலைன்னா என்ன அர்த்தம்? அ.தி.மு.க. ஆட்சியில் கட்சிக்காரர் கள் மீது பொய்யாக போடப்பட்ட வழக்குகளை எம்.எப்.கூட செய்ய வைக்கல, வழக்குகளை க்ளோஸ் செய்ய வைக்க முடியலன்னா என்ன அர்த்தம் அப்படின்னு கேட்டு தேர்தல் பணி எப்படி செய்யப்போறீங்க? அப்படின்னு கேட்டு, ஆலோசனைகூறி அனுப்புனாங்க. உடனே கட்சிக்காரர்கள் மீது எத்தனை வழக்குகள் உள்ளன என பட்டியல் கேட்டார்கள், பட்டியல் அனுப்பி வைத்தால் அடுத்த மீட்டிங்கில் அனுப்பிட்டிங்களா அப்படியான்னு கேட்கறாங்க, திரும்பவும் அனுப்பச்சொல்றாங்க. ஒவ்வொரு நீதிமன்றத்துக்கும் கட்சி நிர்வாக அமைப்பாளர்கள் குழு கடந்த மாதம்தான் 50% அறிவிச்சாங்க. கழக வழக்கறிஞர் களுக்கு கட்சியிலிருந்து ஐ.டி. கார்டு தர்றோம்னு ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்பு தகவல் வாங்கனவங்க இந்த கூட்டத்தில்தான் தந்தாங்க.
கடந்த அ.தி.மு.க. ஆட்சி இறுதியில் 2,000 பேரை நோட்டரி வழக்கறிஞர்களாக எடப்பாடி அரசு அறிவித்தது, அதில் 90% அ.தி.மு.க. வழக்கறி ஞர்கள். தி.மு.க. ஆட்சியமைந்ததும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 பேருக்கு நோட்டரி வழக்கறிஞர்கள் அனுமதி தரப்படும்னு தேர்தலுக்கு முன்பே வாக்குறுதி தரப்பட்டது. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்துவிட்டது, இப்போதுவரை போடவில்லை. மாவட்ட அளவிலான வழக்கறிஞர்கள் அணி கூட்டம் நடத்தும்போதெல்லாம் வழக்கறிஞர்கள் கேட் கிறார்கள், நாங்கள் என்ன பதில் சொல்றதுன்னே தெரியல. பலமுறை இதுகுறித்து சட்டத்துறை மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் முறையிட்டார்கள். சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதியிடம் முறையிட்டோம், அரசிடம் புள்ளி விவரப் பட்டியல் இல்லை எனச்சொல்கிறார் எனப் பதில் சொன்னார்கள். இப்போது சட்டத்துறை அமைச்சராக பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதையெல்லாம் கண்டுகொள்வாரா எனத் தெரியவில்லை. தலைமைப் பொறுப்பில் இருக்கறவங்க சிலர், பல தகவல்களைச் சொல்லாமல் மறைக்கிறார்கள், அதனால்தான் ஆளும்கட்சியாக நாம் இருக்கும்போதும் எதிர்க்கட்சிகள் அதிகாரம் செலுத்துகிறார்கள்'' எனக் கவலையுடன் தெரி வித்தனர்.
சட்டத்துறை மாநில நிர்வாகிகளோ, “சில மாவட்டங்களில் மா.செ.க்கள் தரவேண்டிய சிபாரிசுப் பட்டியலை தராததால் சில துறைகளில் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள். எம்.பி. தேர்தலுக்கு முன்பே கட்சி நிர்வாகிகள் நியமனம் தொடங்கியது, தேர்தலால் நிறுத்தப்பட் டது மீண்டும் தொடங்கியுள்ளது என்கிறார்கள்.
படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்