வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ.க.வுக்கு எதிர்வரிசையில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இருவரும் ஏப்ரல் மாதத்தொடக்கத்திலிருந்தே தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.
கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் ராகுல் காந்தியுடன் நடைபெற்ற சந்திப்புக்குப்பின், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பீகார் தலைவர்களிடம் ஒப்படைத்ததை புத்திசாலித்தனமான நடவடிக்கையாகப் பார்க்க முடிகிறது. காங்கிரஸ் இதனை முன்னெடுத்திருந்தால் மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் ஈகோ காரணமாக ஒருங்கிணைவதற்கு ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள். பா.ஜ.க.வை வெல்வது மட்டுமே தற்போதைய இலக்கு என்பதை மனதில்கொண்ட காங்கிரஸ், எதிர்க்கட்சிகளுக்கு நாட்டாமை பண்ணும் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டது. இதையடுத்து, தூது சென்று பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பில் நிதிஷ்குமாரும் தேஜஸ்வி யாதவும் இணைந்து செயல்படத் தொடங்கினார்கள்.
முதற்கட்டமாக, நிதிஷ்குமாரு

முதற்கட்டமாக, நிதிஷ்குமாரும், தேஜஸ்வி யாதவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து அவரது ஆதரவைக் கோரியிருந்தார்கள். கெஜ்ரிவாலுக்கு ஏற்கெனவே ஒன்றிய அரசின் சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினரால் பல்வேறு நெருக்கடிகள் தரப்பட்டன. துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது பல்வேறு வழக்குகள் புனையப் பட்டு அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் நடைபெற்றன. அடுத்ததாக கெஜ்ரிவால் மீதும் சி.பி.ஐ. ஊழல் குற்றச்சாட்டு வைத்தது. இதனால் வெறுத் துப்போன கெஜ்ரிவாலை, பீகார் இருவர் அணியினர் சந்தித்துப் பேசியது நல்ல பலனைத் தந்தது. எதிர்க்கட்சிகளோடு இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்தது நேர்மறையான தொடக்கமாக அமைந்தது.
நிதிஷ்குமார் - தேஜஸ்வி யாதவ் ஜோடி அடுத்ததாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, ஏப்ரல் 24 திங்களன்று ஹவுரா நகரில் சந்தித் தனர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. சந்திப்புக்கு பின்னர் செய்தி யாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, "எதிர்க்கட்சிகளுக்குள் யார் பெரியவர் என்ற ஈகோ மோதல் இல்லை. எதிர்க்கட்சிகள் ஒருங் கிணைவதன்மூலம், அடுத்த ஆண்டு வரக்கூடிய பாராளுமன்றத் தேர்த லானது, மக்களுக்கும் பா.ஜ.க.வுக்கு மான போட்டியாக நடைபெறும். எங்கள் சந்திப்பில் நிதிஷ்குமாரிடம் நான் கேட்டுக்கொண்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஏற்கெனவே ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கம் பீகாரிலிருந்து தான் தொடங்கியது. அதேபோல் எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து நடத்த வுள்ள அனைத்துக்கட்சிக் கூட்ட மானது, பீகாரிலிருந்து தொடங்கப் பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
அனைத்துக்கட்சிக் கூட்டத்தின் மூலம், நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இதில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லையென்பதை ஏற்கெனவே நான் தெரிவித்திருக்கிறேன். பா.ஜ.க. பூஜ்ஜியமாக வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். இப்போதைய ஒன்றிய அரசானது, ஊடகங்களின் ஆதரவினால் தினம்தினம் தரப்படும் போலிச்செய்திகளால், பெரிய கட்சி போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. இவர்கள் இப்போது பொய் வாக்குறுதி தருவது, ரவுடியிசத்தில் ஈடுபடுவதுமாகவே இருக்கிறார்கள்'' என்று வெளுத்து வாங்கினார்.
மம்தா பானர்ஜிக்குப்பின்னர் பேசிய நிதிஷ்குமார், "அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைவது பற்றி நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி னோம். வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் தயாரித்து வருகிறோம். எங்களுடைய அடுத்தடுத்த நகர்வுகளும் தேச நலனை முன்னிட்டே இருக்கும்'' என்றார்.
அடுத்ததாக அந்த இருவர் அணி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை லக்னோவில் வைத்து சந்தித்தனர். அந்த சந்திப்பும் நன்முறையில் நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்குப்பின் பத்திரிகை யாளர்களைச் சந்தித்து, "நாட்டின் ஜனநாயகச் செயல்பாடுகளை ஒழித் துக்கட்ட பா.ஜ.க. தொடர்ந்து முயற்சித்து வருகிறது. வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், வறுமை உள்ளிட்டவற்றிலிருந்து நம் நாட்டைக் காப்பாற்றுவதற்காக இந்திய மக்களுடன் இணைந்து நாங்கள் போராடவுள்ளோம். பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து ஒழித்துக்கட்டினால் தான் நாட்டைக் காப்பாற்ற முடியும்'' என்றார் அகிலேஷ் யாதவ் அதையடுத்து பேசிய நிதிஷ்குமார், "எங்களுடைய அடுத்தடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டே இருக்கும். அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைப்பது குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதற்கு முன்பாகவே அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்வது குறித்தும் விவாதித்தோம்." என்றார்.
முன்னதாக, கடந்த மாதத்தில் நிதிஷ்குமார் யாதவை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசியிருந்தார். மாநில அரசின் மசோதாக்களை கவர்னர்கள் கிடப்பில் போடுவதற்கெதிராக, அதற்கு காலக்கெடு நிர்ணயிக்க, மாநில முதல்வர்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு கேரள முதல்வர் பினராய் விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இப்படியாக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதில் அடுத்தடுத்த மூவ்கள் நடக்கின்றன. வரவுள்ள கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் வலுவான வெற்றியைப் பெறும்பட்சத்தில் எதிர்க்கட்சிகளின் உற்சாகம் மேலும் அதிகரிக்கும். இதன்மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு மிகப்பெரிய தலைவலியை எதிர்க்கட்சிகள் உருவாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!