புதிய வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமாகத் தொடர்கிறது. மத்திய அரசு தன் நிலையிலிருந்து இறங்கி வர மறுக்கிறது. பெண்களும் போராட்டத்தில் களமிறங்கியுள்ள நிலையில், பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் அவர்களிடம் கேள்விகளை முன்வைத்தோம்.
குறைந்தபட்ச ஆதார விலை உள்பட பலவும் பாதிக்கப்படும் என்கிற விவசாயிகளின் அச்சம் நியாய மாகத்தானே இருக்கும்?
"மன் கீ பாத்'தில் பிரதமர் விளக்கம் அளித்திருக்கிறார். விவசாயிகள் போராட்டம் தொடங்கியதில் இருந்து மத்திய அரசு மத்திய அமைச்சர்கள் வாயிலாக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அவர்களுக்கான அச்சம், சந்தேகத்திற் கெல்லாம் பதில் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. போராட்ட களத்திலேயே ஒரு சில நக்சல் பின்னணி கொண்ட நபர்கள், தேச பிரிவினையை ஆதரிக்கக்கூடிய நபர்கள் நுழைந்திருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக மத்திய அரசு வெளிப்படுத்தியிருக்கிறது. விவசாயிகளுடைய போராட்டம் என்பது அவர்களுடைய நன்மையை, பாதுகாப்பை
புதிய வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமாகத் தொடர்கிறது. மத்திய அரசு தன் நிலையிலிருந்து இறங்கி வர மறுக்கிறது. பெண்களும் போராட்டத்தில் களமிறங்கியுள்ள நிலையில், பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் அவர்களிடம் கேள்விகளை முன்வைத்தோம்.
குறைந்தபட்ச ஆதார விலை உள்பட பலவும் பாதிக்கப்படும் என்கிற விவசாயிகளின் அச்சம் நியாய மாகத்தானே இருக்கும்?
"மன் கீ பாத்'தில் பிரதமர் விளக்கம் அளித்திருக்கிறார். விவசாயிகள் போராட்டம் தொடங்கியதில் இருந்து மத்திய அரசு மத்திய அமைச்சர்கள் வாயிலாக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அவர்களுக்கான அச்சம், சந்தேகத்திற் கெல்லாம் பதில் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. போராட்ட களத்திலேயே ஒரு சில நக்சல் பின்னணி கொண்ட நபர்கள், தேச பிரிவினையை ஆதரிக்கக்கூடிய நபர்கள் நுழைந்திருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக மத்திய அரசு வெளிப்படுத்தியிருக்கிறது. விவசாயிகளுடைய போராட்டம் என்பது அவர்களுடைய நன்மையை, பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய விதத்தில் இருக்கவேண்டுமென்றால் இம்மாதிரியான தலைவர்கள், பிரிவினைவாத சக்திகள் உள்ளே நுழைவதை விவசாயிகள் போராட்டத்தில் அனுமதிக்கக்கூடாது. விவசாயிகளுடைய நியாயமான பிரச்சனைகளுக்கு செவி சாய்க்க எப்போதும் மத்திய அரசு தயாராக இருக்கிறது.
சரத்பவார் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் அவர் அமைச்சராக இருந்தபோதுதான் "பட்டேல் கமிட்டி' என அமைக்கப்பட்டு விவசாய விளைப்பொருட் களுக்கான சந்தைகளை விரிவாக் கம் செய்வது, சீர்திருத்தம் செய்வது தொடர்பான அறிக்கை பெறப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயம், இங்கு தமிழகத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது, இன்று சட்டமாக நிறைவேற்றப் பட்டு விவசாயிகளுக்கு அந்த பலன் கிடைக்கும்போது, அர சியல் காரணங்களுக்காக எதிர்க் கட்சிகள் இந்த போராட்டங் களை தூண்டிவிடுகிறார்கள். விவசாயிகளை குழப்புகிறார்கள்.
எந்தப் போராட்டம் நடந்தாலும் நக்சல் பின்னணி என பா.ஜ.க. குற்றம் சாட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கிறதே?
அதற்கான ஆதாரத்தை, துண்டு பிரசுரங்களை வைத்து தான் மத்திய அரசு சொல்கிறது.
கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசு விலை நிர்ணயம் செய்கிறது. அரசே விலை நிர்ணயம் செய்தும் கூட்டுறவு ஆலைகள் தர மறுக்கும்போது, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒப்பந்தத்தின்படி தருவார்களா என்ற சந்தேகம், அச்சம் வரத்தான் செய்யும்?
சர்க்கரை ஆலை பிரச்சினைகள் தொடர்பாக இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரதமரை சந்தித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. அதற்கு பின்பாக தமிழகத்தில் அவர்களுக்கு வறட்சி என்று மாநில அரசு அறிவிக்கும்போது சலுகைகள் வழங்கப்படும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். மத்திய அரசின் ரிசர்வ் வங்கி மூலமாகவும் நிதித்துறை செயலாளர்கள் வாயி லாகவும் சர்க்கரை ஆலைகள் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண்பதற்காக பல்வேறு உதவி கள் வழங்கப்பட்டு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒருசில சர்க்கரை ஆலைகளின் நிர்வாக சீர்கேட்டினால் அவர்கள் வங்கிகள் மூலமான நடவடிக் கைக்குகூட உள்ளாக்கப்பட்டி ருக்கிறார்கள். எப்படி இருந் தாலும் விவசாயிகளுடைய நலன் என்பதுதான் பிரதானம் என மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் அல்லது தனியார்கள் விவசாயி களிடம் ஒப்பந்தம்போட்டுவிட்டு, அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வில்லை என்றால் அவர்களுக்கு 90 நாட்களுக்கு உள்ளாக மாவட்ட கலெக்டர் வாயிலாக தீர்வும், கூடுதலாக அந்த தொகையைவிட ஒன்றரை மடங்கு அந்த ஒப்பந்தத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. இது புதிய சட்டம் அல்ல. தமிழகத்தில் ஏற்கனவே காண்ராக்ட் ஃபார்மிங் சட்டம் அமலில் இருக்கிறது. அந்தச் சட்டத்தில் ஏற்கனவே விவசாயிகள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது அந்த சட்டத்தின் இன்னொரு சீர்திருத்த மாக காலக்கெடுவையும், மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரத்தையும், அதற்கான அபராதத் தொகை யையும் இந்தச் சட்டம் புதிதாக விவசாயிகளுக்கு வழங்குகிறது.
மத்திய அரசின் விளக்கத்தை விவசாயிகளும், விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும் ஏற்கவில்லை என்கிறபோது பா.ஜ.க.வின் பதில் என்ன?
இத்தனை வருடங்களாக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னீர்களோ அதைத்தான் விவசாயி களுக்காக இப்போது பிரதமர் செய்திருக்கிறார். ஏனென்றால் உரம், நீர், மின்சாரம் இவற்றை யெல்லாம் தாண்டி விவசாயிகளுக் கான விளைபொருள் என்பது தான் இத்தனை வருட காலத்தில் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக விளங்கிவந்தது. ஆக இடைத் தரகர்களை நீக்குவது மட்டுமல்ல விவசாயிகள் தங்களது விளை பொருளை நாடு முழுவதும் எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அங்கு விற்கமுடியும் என்கிற மிகப்பெரிய மாற்றத்தை இந்த சட்டம் கொண்டுவருகிறது. இத்தனை காலம் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுப்பதாக, நன்மையை காப்பதாக கூறிக்கொண்டிருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் இப்போது தயவுசெய்து விவசாயிகளை தூண்டிவிட வேண்டாம். அவர்களுக்கு ஒரு பலன் கிடைக்கிறது. சுதந்திரம் அடைந்த இத்தனை வருட காலத்தில் விவசாயிகளுக்கான மிகப்பெரிய மாற்றம் நிகழ இருக்கிற இந்தச்சூழலில் நீங்கள் விவசாயிகளை திசை திருப்பாதீர்கள்.
-ராஜவேல்